இன்று உலகமே கதிகலங்கியிருப்பது புதிதாக தோன்றம் பெற்றிருக்கும் உயிர்கொல்லியான கொரோனா வைரஸினால் என்றால் மிகையாகாது, இந்த உயிர்கொல்லி பலரது உயிர்களைக் காவுகொண்டாலும் பல நல்லவிடயங்களை இந்த மானிடர் சமூகத்தில் விதைத்துள்ளது என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். இந்த உயிர்கொல்லி வைரஸ் நம்மிடம் தொற்றாமலும் தொற்றியவர்களிடமிருந்து ஏனையவர்கலுக்கு பரவாமலும் இருக்க சில் ஆலோசனைகளை முன்வைக்கிறேன்
01. கொரோனாவை நாம் நிறுத்த முடியாது
எதிர்வரும் வருடத்திற்குள் இது எங்களில் பொரும்பாலானோருடன் பழகியிருக்கும், இதனைக் குறைப்பதற்கு மருத்துவத் துறையில் உள்ளவர்கள் தங்களால் இயலுமான முயற்சிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றனர், இடைப்பட்ட காலங்களில் வரும் இழப்புக்கள் ஈடுசெய்ய இயலாதவை, மருத்துவ சமூகத்தினர் அவர்களால் இயலுமான முயற்சிகளை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர் இதில் ஈடுசெய்ய முடியாத அளவு அனுபத்திலும், திறமையிலும் சிறப்புத்தேர்ச்சி கொண்ட மருத்துவ சமூகத்தினரின் இழப்புக்களும் இடம்பெறத்தான் செய்கின்றன
02. இந்த புதிய நண்பரான கொரோனா வைரசின் உறவினைக் குறைக்க முடியும்
வைரசிஸ் யாருடன் ஒட்டி உறவாடி இருக்கின்றதோ அந்த நபருடனான நமது உறவினைத் துண்டிப்பதன் மூலம் இந்த வைரஸ் நம்முடன் நண்பராவதினை தடுத்துக்கொள்ளலாம்/ குறைத்துக்கொள்ளலாம். கட்டித் தழுவுதல், கை குழுக்குதல், முத்தமிடல் , கைகளைக் கொண்டு முகத்தைத் தடவுதல், உடல் உறுப்புக்களைத் தொடுதல் போன்ற செயல்களைத் தவிர்ப்போமாக இருந்தால் இந்த வைரஸ் நண்பரின் தொடர்பிலிருந்து எம்மை பாதுகாத்திடலாம்
03. வைரஸ் நண்பரை அளவோடு ஆதரிக்க முற்கூட்டிய தயாரிப்புகள்
வைரஸ் நண்பர் எப்போது எம் தேசத்துக்கு வந்துவிட்டார் என்று நாம் அறிந்த காலப்பகுதியிலிருந்து எமது உடல் ஆரோக்கியத்தில் நாம் அதிக அக்கரை செலுத்தும் போது வைரஸ் நண்பரை வாசற்கதவிற்கப்பால் வைத்து அனுப்பிவிட முடியும் , நல்ல தூக்கம், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளின் நுகர்வு, ஓய்வு, உடற்பயிற்சி என நம்மை நாம் பழக்கப்படுத்திக்கொள்ளும் போது வைரஸ் நண்பர் தானாகவே எம்மிடம் வருவதற்கு வெட்கப்படுவார், இவைகளுக்கு நாம் அதிக பணம் செலுத்த வேண்டிய அவசியமும் கிடையாது.
04. நண்பரை உயிர் நண்பராகக் கொள்ளல்
வைரஸ் நண்பர் யாருடன் ஒட்டி உறவாடி இருக்கின்ராறோ அவர், குறித்த கொரோனா வைரஸ் நண்பரை தன் உயிர் நண்பனாகக் கருதி அவரை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல், பாதுகாத்து வருவாராக இருந்தால் இந்த புதிய கொரோனா வைரஸ் நண்பர் எம் சமூகத்தில் ஏனையவர்களிடம் ஊடுருவாமல் இருப்பார்.
05. இரகசியத்தை வெளிப்படுத்தலும் தைரியப்படலும்
குறித்த வெளிநாட்டு நண்பர் தன் இல்லம் வந்துள்ளார் என்பதனை அயலவர்களுக்கும் ஏனைய நண்பர்களுக்கும் வெளிப்படுத்துவதன் மூலம் நண்பர் என்ன நோக்கத்துக்காக வந்துள்ளார் என்பதனை கண்டறிய முடியும்,
மேலும் இவ் இரகசியத்தை வெளிப்படுத்தும் நபருக்கு ஏனையவர்கள் அவருக்கான தைரியத்தையும் பொருளாதார பலத்தையும் வழங்குவதன் மூலம் இக் குறிப்பிட்ட நண்பர் வேறு யாருடைய இல்லங்களுக்கு வந்திருந்தாலும் அவர்கள் மறைக்காமல் வெளிநாட்டு நண்பர் பற்றி தெரியப்படுத்துவார்கள்
06. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல்
சரி வெளிநாட்டு நண்பர் பற்றி ஏனையவர்களுக்கு தெரியப்படுத்தியாச்சு, ஆகவே நாம் நம் நண்பரோடு மட்டும் உறவினைப் பேணிக்கொள்வதுடன், ஏனைய உறவுகளுடன் உடல் தொடர்பற்று குரல் தொடர்புகளைப் பேணிவருவது சிறந்தது, மேலும் சமூக தளங்களில் வெளிநாட்டு நண்பர் தொடர்பாக ஆராய்ந்து மனதிற்கும் உடலிற்கும் தைரியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், குளிர்பானப் பிரியராக நாம் இருந்தால் நம் நண்பரின் நிலை கருதி குளிர்பானத்தை தவிர்ப்பது நல்லது அதற்குப் பகரமாக அதிகமாக இளஞ்சூடு / சூடான நீரினை நாம் அருந்துவதுன் மூலம் நண்பரைத் திருப்திப்படுத்த முடியும்
07. எங்களுக்கு வேண்டும் என்பதை விட எனக்கு வேண்டும் என்று சிந்திப்பது
இங்கு நாம் சுயநலவாதியாக இருப்பது நல்லது, வெளிநாட்டு நண்பர் அழைப்பில்லாமல் வந்து போன இல்லங்கள் தவிர்த்து ஏனையவர்கள் எனக்கு உயிர் வேண்டும் எனும் எண்ணப்பாட்டுடன் செயல்படுவது நன்று, எல்லோரும் என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிடுவதை விட என்னை நான் காப்பாற்றிவிட்டேன் என்று சொல்வதில் தான் இந்த நண்பரின் திருவிளையாடல் தோற்றுப்போய்விட்டது என்பது புலப்படும்.
08. அச்சம் தேவையில்லை
வெளிநாட்டு நண்பர் தொடர்பில் உலகளவில் பேசப்பட்டாலும் நாம் அவர் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை, அச்சம் மிகப்பெரிய கொலைகாரன் ஆகவே நாம் குறித்த முன்னேற்பாட்டுகளுடன் வெளிநாட்டு நண்பரை வரவேற்வேற்கத் தயாராக இருப்போமேயானால் தேவையில்லாத அச்சங்களைத் தவிர்த்து தைரியத்தையும் மன அமைதியையும் பெறலாம்.
விதி என்ற ஒன்று எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே நடக்கும்
5 Comments
ஆஹா சிட்டு நலமோ? எப்படி இருக்கிறீங்க.. ஆத்மா என்பதை மறந்தே விட்டேன்.. பின்பு சிட்டு பார்த்துத்தான் நினைவு வந்துது.. பறவாயில்லையே கொரொனா உங்களை இங்கு கூட்டி வந்திருக்குது.
ReplyDeleteஐயோ.... கவனிக்க தவறிவிட்டேனே...
ReplyDeleteவழமை போல் ஓடிவந்துள்ளீர்களே மியாவ்..
நான் நலமாக இருக்கின்றேன்
தாங்கள் நலமாக இருக்கின்றீர்களா
சொற்பொழிவாளராக ப்ரோமோசன் கிடைத்துள்ளதாக அறிந்தேன்
தொடருவோம் பல சுவாரஷ்யங்களுடன்
கொர்னா பதட்டமாகத்தான் இருக்கு!
ReplyDeleteவலையை தூசுதட்டிவிட்டீங்கள் போல![[[[[
ReplyDelete// விதி என்ற ஒன்று எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே நடக்கும் //
ReplyDeleteஎழுதியது யார்...? அதைப் பற்றிய சிறு ஆய்வில் உள்ளேன்...