ரோட்டுல கிடக்குற சிறிய கல்லினால் மற்றவர்கள் துன்பப்படக் கூடாது என்று கல்லைத்தூக்கி ஓரமாகப் போட்டுச் செல்பவன் நான்........ எதுக்கு இவன் சம்பந்தமே இல்லாம இத சொல்லுறான் என்று யோசிக்கிறீங்களா...?அப்பிடியே யோசிச்சிட்டி இருங்க பக்கத்துல இருக்குறவங்க உங்களப் பார்த்து வேற மாதிரி பீல் பண்ணப் போறாங்க....
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசையிருக்கும் எனக்கும் தான் ஆசையிருக்கு ஏன்னா நானும் மனிசன் என்னு என் பிறண்டு ஒருத்தன் எப்பவோ சொன்னான். அப்படிப்பட்ட ஆசையில ஒன்னுதாங்க இந்த வலையுலக பிரவேசமும்.
அமைதி என்றால் ரொம்பப்பிடிக்கும் அந்த அமைதியில் கேட்கும் குழந்தையின் அழுகுரல் ரொம்ப ரொம்ப வெறிய கிளப்பும் உண்மைதாங்க குழந்தைகள் அழும் சத்தம் பிடிக்கவே பிடிக்காது.இப்போது பழக்கப்படுத்திக் கொண்டன் எப்பிடி என்னு பார்க்கிறீங்களா...? வீட்டுல அக்கா , அண்ணா குழந்தைகள் என ஒரு குட்டி பாராளுமன்றமே இருக்கு.
இப்ப அமைதிய விட குழந்தைகளை அழ வைப்பதே பொழுதுபோக்காகப் போச்சு.அவர்களை வேனுமென்றே அழவைத்து ரசிப்பது என்றால்....அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அடிக்கடி சின்ன சின்னதா கதைகள் நாடகங்கள் எழுதுவதும் நடிப்பதும் புத்தகங்கள் சஞ்சிகைகள் வெளியிடுவதும் வழக்கமாக இருக்கிறது.
யாரையும் எதிரி அல்லது கெட்டவன் என்னு பார்க்கமாட்டேன்.அவனிடத்தில் இருக்கிற நல்ல பழக்க வழக்கங்களை அவனுக்குத்தெரியாமலே கொப்பி பன்னிக்குவன்.
கவிதை எழுத ரொம்ப பிடிக்கும் ஆனால் எவ்வளவுதான் பீல் பன்னி யோசிச்சாலும் கவிதையே வராது.ஏதாவது வரும் அதனைக் கிறுக்குவேன் நிறையப் பேர் கேளிபன்னினாலும் ஒருத்தனாவது பாராட்ட வருவான் என காத்துக்கிடப்பேன்.ஏன்னா அவன் பாரட்டும் போது அவன நான் கலாய்க்கிறத்துக்குத்தான்.
படிக்கும் போதும் நிறைய நாடகங்கள் எழுதியும் நடிச்சும் இருக்கிறேன்.கணக்கு பாடம் எண்டா ஒரு மன்னும் புரியாது.இப்ப கூட அல்ஜீப்ரா பற்றி கதையக் கிளப்பினாலே...அந்த இடத்துக்கு ஒரு ஓ போட்டிட்டு போயிடுவன்.
ஊரப் பற்றி சொல்லனும்னா....
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில் நிறைந்த ஊர். பேரின சக்திகள் ஆட்டையப் போடப் பார்க்குறாங்க அந்த அளவுக்கு அழகானது.அது தான் பொத்துவில் எனும் சிற்றூர்.
விடுமுறை தினங்களில் உல்லாசப் பயணிகளின் வருகையால் நிறம்பிவழியும் எனது ஊரில் மேலைத்தேய நாட்டவர்கள் வாடிக்கையாக விடுதிகளில் தங்கியுள்ளது இலங்கைக்கான சுற்றுலாத்துறை வருமானத்தில் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது...
கடல்சறுக்கல் விளையாட்டில் ஆசியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எனது ஊர் காணப்படுகிறது. உங்களுக்கும் கடல்ல விழுந்து சாகனும் என்னு தோனிச்சென்னா என் ஊர் பக்கம் வாங்க...
நிறைய கலைஞர்கள்,கல்விமான்களை உருவாக்கி வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் தத்துப் பிள்ளையாக கொடுத்துவிட்டு, தத்துக் கொண்டு போனவன் பிள்ளையை ஒரு நாளாவது கொண்டுவருவான் என வாயில விரல் வைத்துக் கொண்டு கதவோரமாக சாய்ந்து கொண்டிருக்கும் ஒரு தாயைப் போல் இருக்கிறது எனது ஊர்.போனவனுகளுக்கு தத்துத் தாய்தான் பெத்ததாயாய் மாறிவிட்டாள். இதுதான் என் ஊரின் நிலைப்பாடு
இன்னும் என்னப்பத்தி தெரிய வேனும்னா எங்க ஊரு போலீஸ் ஸ்டேசன்ல வந்து கேளுங்க.....இப்டி ஒருத்தன் ஊர்ல இருக்கானா என்றே தெரியாது என்னு சொல்லுவானுகள் ஏன்னா..........நான் ஒரு பிரச்சனைக்கும் (வம்புக்கும் ) போறது கிடையாது,......
என்னப்பத்தி நான் சொன்னது போதும் நீங்க என்னப்பத்தி என்ன சொல்லுறீங்க??? கீழ சொல்லிட்டு போங்க...
23 Comments
நீ ரொம்ம்ம்ம்ப நல்ல புள்ளைப்பா.
ReplyDeleteஓவரா சொல்லிப்புட்டனோ....:(
Delete//ஓவரா சொல்லிப்புட்டனோ....:(///
ReplyDeleteஇதில சந்தேகம் வேறையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது ரொம்ப ஓவர் சிட்டுக்குருவி:))
..............:))))
Deleteunmajava???summa viladathiga???sollavae ella????entha kirukalkalum allaku..
ReplyDeleteஅடியாத்தி யாருப்பா இது இவ்வளவு கேள்வியோட...? 5 கிளாசில கேள்வி கேட்ட வாத்திர மண்டய பொளந்தவய்ங்க நாங்க..
Deleteகொல கார கிறாதகா........ஆள விடு சாமி..
ReplyDeleteஐயோடா போலிஸ் ஸ்டேஷனில் போய் கேட்கனுமாமே... ஹஹஹ
ReplyDeleteஏன் போலிஸ் ஸ்டேசன் வீதியால போனது கூட இல்லியா,,,, அப்ப நீங்க ரொம்ப பாவம்.:)
Deleteமுகத்தைப் பர்க்கவே அப்பிராணி போல இருக்கு. நானெல்லாம் பொலிஸ் ஸ்டேசன் போய்க் கேட்க மாட்டேன். போகப் போகப் புரிந்திடலாமே!. நல்லது. வாழ்க! வளர்க!
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
உங்கள் அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...... நாங்க பார்க்கிறத்துக்குத்தான் அப்பிராணி கொஞ்சம் போல உசுப்பி பார்த்தீங்க... அட என்னடா சும்மா சவுண்டு விட்டுகிட்டு உசுப்பி பார்க்கட்டுமே....
Deleteஎவ்வளவு அழகா உயர்தரம் கலைப் பிரிவில் படித்தவன் மாதிரி கலைமிக்க ரசனையுடன் இந்த பிளக்க உருவாக்கி வெற்றிகரமாக நடாத்தி வருகிறார் அல்லவா. ஆனால் இவரது கலை ஆர்வத்திற்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை என்பது எனக்கும் இன்னும் சிலபேருக்குமே தெரியும். இவர் படித்தது உயர்தர வர்த்தகப் பிரிவு. ஆனால் இன்று இவன் இயக்குனர் இன்றிப் போன ஒரு திரைப்படம்.
ReplyDeleteநண்பனின் பின்னூட்டம் கண்டு நெஞ்சத்தில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்...
Deleteநண்பா இரகசியங்கள ஸ்பீக்கர் போட்டு சத்தமா சொல்லப்படாது மீ பாவம் இல்லியா.......
ஆமி அங்கிளும் சுத்தி திரியிராங்களாம் சோ.....சத்தமா எதையுமே சொல்லப்படாது
நண்பா உறுதுணையாக இருக்க உன் உறவு கிட்டியதில் மிக்க சந்தோஷம்
வாழ்த்துக்கள் உன்னுடைய தளமும் சிறப்பாக தொடர்ந்து இயங்குவதற்கு
கொஞ்சும் தமிழில்....ஹா....ஹா....இப்படியெல்லாம் சத்தம் போட்டு சொல்லப்படாது!.....
ReplyDeletehttp://www.krishnaalaya.com
http://www.krishnalaya.net
@ krishna ravi
ReplyDeleteகொஞ்சும் தமிழில்....ஹா....ஹா....இப்படியெல்லாம் சத்தம் போட்டு சொல்லப்படாது!.....
http://www.krishnaalaya.com
http://www.krishnalaya.net
/////////////////////
முதல் வருகைக்கும் என்னைப் பற்றி புரிந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்
நண்பனுக்கு என்னுடைய தளங்களில் தொடர் பின்னூட்டம் இடும் மதிப்பிற்குரிய சிட்டுகுருவி ..உங்கள் தளத்தை பார்த்து கருது பதிவிட நினைத்து முடியாமல் போன நாட்கள் பல இன்றுதான் அதற்க்கு நேரம் வந்தது உங்கள் அறிமுகம் உங்கள் ஆத்மாவை வெளிபடுத்தியது அழகியல் நகை உணர்வு இன்னும் அழகு சேர்க்கிறது நல்ல வருவீங்க ...
ReplyDeleteஉங்கள் தளத்தில் பல்வேறு விசயங்களை பகிர்ந்து இருக்கிறீர்கள் தொடர்ந்து படிக்கிறேன் இன்னும் நல்ல பல ஆக்கங்களை கொடுக்க என் வாழ்த்துக்கள்
உங்கள் வருகை கண்டதில் சந்தோஷம்
Deleteஅழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவிதாயினி
நண்பரே உங்கள் ஊருக்கு வரலாமா?
ReplyDeleteஆமா தாரளமா வரலாம்.....
Deleteஎதிர்பார்க்கிறேன் வரவேற்புத்தர
நல்ல எண்ணங்கள் சந்தோசமாக வாழ வேண்டுகிறேன்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஅன்பின் சிட்டுக்குருவி - பொய்கள் அல்ல - அனைத்துமே உண்மைகள் தான் - சுய அறிமுகம் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களைப் போன்றவர்களின் வருகை இந்தச் சிறுவனுக்கு சந்தோஷமளிக்கிறது ஐயா
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி