Looking For Anything Specific?

ads header

" வன்புணர்வு " குற்றமல்ல

உலகத்தில் எங்கு பார்த்தாலும் இன்றைக்குப் பெரும் பிரச்சனையாக இருப்பது பாலியல் பலாத்காரங்கள். அண்மைய சில தினங்களாகவே நாம் பார்த்திருப்போம் வன்புணர்வு சம்பவங்கள்  மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பீதியையும் கோபத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது என்பதனை.
 
சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் ஒரு சில கொடியவர்கள் தங்கள் இச்சைகளை முறையற்ற விதமாக பூர்த்திசெய்து கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை அவர்கள் சிறிதும் சிந்திப்பதற்கு மறக்கிறார்கள். சிந்திப்பதற்கு அவர்கள் மறக்கவில்லை அவர்கள் அடிமைப்பட்டிருக்கும் போதை வஸ்துக்கள் அவர்களை மறக்கடிக்கச் செய்கின்றது என்பது தான் உண்மை.
சில வேளை வன்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுபவர்கள் கூட போதைக்கு அடிமையாகும் போது தங்கள் நிலையை மறந்தும் கருத்துக்களை மறந்தும் செயற்படலாம். அண்மையில் நடந்த குற்றங்களில்  இப்படிப்பட்டவர்கள் கூட தொடர்பு பட்டிருக்கலாம்.

ஆகவே பெரும்பாலான குற்றங்களுக்கு விதையிடுவது போதைவஸ்த்துக்களை பாவிப்பதேயாகும். வன்புணர்வு குற்றமென்று பாராளுமன்றம் வரையில்  பேசுபவர்கள் ஏன் இந்தப் போதைப் பாவனையைக் குறைப்பதற்கும் அதனை அடியோடு அழிப்பதற்கும் முயற்சிக்கவில்லை. முழு மனதுடன் சிலர் முயற்சித்தாலும் முயற்சிக்கும் இவர்களை ஊக்குவிக்க சமூகம் துணைபோவது கேள்விக்குறியதே. 


பெரும்பாலான இளைஞர்கள் யுவதிகளின் பொழுதுபோக்கும் சாதனமாக இணையம் சினிமா தொடர் நாடகங்கள் போன்றன காணப்படுகின்றன. ஹாலிவூட் சினிமாவைத் தவிர்த்தாலும் இன்றைய தென்னிந்திய சினிமாக்களில் போதைபொருட்களின் பாவணையையும் வன்புணர்வு காட்சிகளையும் இன்றும் கூட தவிர்க்காமல் இருப்பது கவலைக்குறியதே.

எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்துக்களை கருத்தில் கொள்லாமல் வெளிப்படையில் கிடைக்கக் கூடிய அற்ப பணத்துக்காக இப்படியான அருவருக்கத் தக்க காட்சிகளைத் தவிர்க்க இயலாமல் இருக்கிறது இன்றைய சினிமா உலகு. சமூகத்துக்கு பலன் தரக்கூடிய செய்திகளை சுமந்து வரும் திரைப்படங்களில் கூட இப்படியான (ஆபாச) காட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆபாச காட்சிகள் உள்ளடங்கலான சினிமாவினை இன்றைய சமூகம் குடும்பத்துடன் சேர்ந்து பார்ப்பதையும் வழக்கப்படுத்திவிட்டார்கள். தன் உறவினர்களுடனேயே சேர்ந்து தகாத காட்சிகளைப் பார்ப்பவருக்கு நாளைக்குத் தெருவில் செல்லுபவர்களை வன்புணர்வது குற்றமாக தெரியாது.

பெண்களுக்கு தங்களின் உரிமை மீதான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகத்தான் தொடர் நாடகங்களைத் தயாரிக்கிறோம் என்று பலர் கூறுகிறார்கள் இவர்களின் இக் கூற்றுக்கு  பொது மக்கள் கூட ஆதரவு தெரிவிப்பதாகவும் சொல்கிறார்கள். சமூகத்துக்கு பயன்படும் சில செய்திகள் தொடர்நாடகங்களில் இருந்தாலும் அதிகமானவை சுயநல  இழுப்படிப்புக்களாகவே இருக்கின்றன. இந்த தொடர் நாடகங்களில் கூட வன்புணர்வு காட்சிகளை சேர்ப்பதற்கு தயங்குவது கிடையாது சின்னத்திரை உலகு.

இன்றைக்கு கையடக்கத் தொலைபேசிகளிலும் பார்க்கக் கூடிய வசதிகளுடன் ஆபாசப் படங்கள் வெளிவருகின்றன. ஆபாசப் பட இயக்குனர்கள் நடிகை நடிகர்களும் இன்று சமூகத்தில் சாதாரணமாகவே கருதப்படுகிறார்கள். சொல்லப் போனால் ஆபாசம் என்பது மலிந்து சர்வ சாதாரணமாக மாறிவிட்ட இந்நிலையில் இந்த ஆபாசத் திரைப்படங்களின்  சாதக பாதகங்களை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கு சமூகவியலாளர்களும் அரசாங்கமும் எடுத்த முடிவுகளைப் பார்க்கப் போனால் பூச்சியமே. ஆபாசம் திரைப்படங்களின் எண்ணிக்கையும் குறைந்ததாக தெரியவில்லை. 

பெண் பிள்ளைகள் விடயத்தில் சிரத்தை எடுத்துக் கொள்ளும் பெற்றோர்கள் எத்தனை சதவீதத்தினர் இருக்கிறார்கள்  ? குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பெண்பிள்ளையை அவள் போக்குக்கு விட்டுவிடுவது இன்றைய புதிய கலாச்சாரமாக மாறிவருகிறது. இப்படி பெண்பிள்ளைகளை அவர்கள் போக்குக்கு விட்டுவிடும் பெற்றோர்கள் அப்பிள்ளையின் பாதுகாப்பு விடயத்தில் எந்தளவுக்கு கவணமெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே கிடைப்பார்கள்.

பள்ளிச் சிறுவர்களை வாகணங்களில் அனுப்பும் பெற்றோர் அந்த வாகண சாரதிகளின் விபரங்கள் அவர் எப்படிப்பட்ட பண்பு கொண்டவர் என்பதை அறிந்திருப்பது மிக முக்கியம். விபரங்கள் கிடைக்கவில்லையென்றாலும் அச் சிறுவர்களிடம் தினமும் அல்லது வாரமொரு முறையாவது சாரதிகள் பற்றியும் அவர்கள் தங்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டுக் கொள்வதால் சாரதி எப்படியான நடத்தை கொண்டவர் என்பதனை அறிந்து அதற்குகந்த நடவடிக்கை எடுக்கலாம்.


வெறுமெனே பணம் உழைப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதில் எந்தப் பிரயோசனமும் கிடையாது. தன் பிள்ளைக்கு ஏதாவது ஆபத்தின் மூலம் உயிர் சென்றுவிட்டால் அந்த ஆபத்துக்கு காரணம் தன்னுடைய கவணமின்மையே என்று தனக்கு நூறுவீதம் தெரிந்திருந்தால் அந்தக் கவணமின்மைக்கான காரணம் என்னவென்று அறியவேண்டும். சாதாரணமாக தன் பிள்ளைகள் மீதான கவணமின்மைக்கு பெற்றொர்களின் பணமீட்டும் முயற்சியே காரணமாக அமைகிறது. ஆகவே அந்தப் பணத்தைக் கொண்டு தன் பிள்ளைக்கு நிகழ்ந்த அவமானத்தை அல்லது பிரிந்த உயிரை ஈடு செய்யலாம் தானே.

இப்படிச் செய்ய முடியுமென்றால் ஏன் ஊடகங்களில் தன் பிள்ளைக்கு கெடுதி இழைத்தவன் தண்டிக்கப் பட வேண்டும் என்று புலம்ப வேண்டும் ஏனையவர்களின் அனுதாபத்தைப் பெற வேண்டும்.

குற்றச் செயல்கள் நடைபெறுவதற்குறிய அனைத்து ஏற்பாடுகளையும் சமூகம் செய்துவிட்டு அக் குற்றம் நடபெற்ற பிறகு குற்றம் புரிந்தவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று கூறுவது நகைச்சுவைக்குறியதே. குற்றம் புரிந்தவருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் குற்றம் செய்வதற்குறிய சூழலை உருவாக்கியவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்.


Post a Comment

16 Comments

  1. சமூககேடுகளை கலைந்தாலே குற்றங்கள் தடுக்கப்பட்டுவிடும்.ஒவ்வொருவரும் பொறுப்பு கொண்டு வளர்த்தலே பிரச்சனைகளை கட்டு படுத்த முடியும்.அருமையான கட்டுரை. இதையும் படித்து பாருங்கள். http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. இப்போதுள்ள சூழ்நிலையில் குற்றம் புரிந்தவரை தண்டிப்பதுதான் சாத்தியமானது.சமூக மாற்றம் எற்பட காலம் பல பிடிக்கும்.அத்ற்கான விழிப்புணர்வு செயல்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா..
      ஆனாலும் இது காலப்போக்கில் மாற்றப்பட வேண்டும்
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  3. விழிப்புணர்வை எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்த வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நேசன் அண்ணா
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete
  4. உங்கள் கருத்தும் கவனிக்கத் தக்கதே! நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை கண்டதில் சந்தோஷம் ஐயா
      வருகைக்கும் அழகான கருத்ட்துக்கும் மிக்க நன்றி :)

      Delete
  5. விழிப்புணர்வு பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் அவசியமானதே.

    ஆனால் வெளிநாட்டில் வளரும் நம் பிள்ளைகள் எதிர்காலம் மிக மிக ஆபத்தானது. அவர்களை தடம் மாற்ற தடம் புரட்ட எண்ணிலடங்கா வாய்ப்புகள் இருக்கின்றது.

    என்னைப் பொறுத்தவரையில் நல்ல வழியில் போகக்கூடிய பிள்ளை சந்தற்ப வசத்தால் தன்னிலை மறந்து மாறிவிட்டாலும் ஏதோ ஒரு கட்டத்தில் தவறை உணரும் சமயம் திருந்திவிட வாய்ப்பு உண்டு. ஆனால் கெடுகிறேன் பிடி சபதம் என்கிற மாதிரி சில பிள்ளைகள் .... அவர்கள் தாமே பட்டுணராதவரை அப்படியே தான்ன்ன்ன்...:(

    ReplyDelete
    Replies
    1. பொற்றோரால் முடியாதது எதுவுமில்லை...
      பட்டுணர வேண்டிய பிள்ளையினையும் பெற்றோர் கொஞ்சம் சிரத்தை எடுத்தால் மாற்றிவிடலாம். பிள்ளையின் குடும்பத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்..

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete
  6. நாகரீக வளர்ச்சி.இங்கே யாரில் குற்றமென்று சொல்வதில் பெரும் தடுமாற்றம் !

    ReplyDelete
    Replies
    1. நாகரீகம் தான் அனைத்துக்கும் அடிப்படை...:)
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete

  7. கட்டுரையின் தலைப்பு இட்டதில் உள் நோக்கம் ஏதாவது இருக்கிறதா.?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..
      அப்படியெதுவுமில்லை ஐயா...
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்

      Delete
  8. குற்றச் செயல்கள் நடைபெறுவதற்குறிய அனைத்து ஏற்பாடுகளையும் சமூகம் செய்துவிட்டு அக் குற்றம் நடபெற்ற பிறகு குற்றம் புரிந்தவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று கூறுவது நகைச்சுவைக்குறியதே.
    >>
    சரியான வாதம். உங்க பிளாக் பேரும் கனவுகள்ன்னு முடிய போகுதா? இல்ல காணாமல்ன்னு ஆரம்பிக்க போகுதா?!

    ReplyDelete
    Replies
    1. வருகை கண்டதில் மிக்க சந்தோஷம் அக்கா..
      ஆனால் நீங்கள் நினைப்பது மாதிரி இது நடக்காது. இது நகைச்சுவைக்குறியது உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் விடயத்தை எத்திவைக்பேன்

      Delete