Looking For Anything Specific?

ads header

இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் அற்புதமே....

இறைவனின் படைப்புக்களில் அனைத்துமே பிரம்மிக்கத் தக்கவைதான் அவற்றில் சிறிது கூட பிழைகள் இல்லாமல் மிக அழகாக நேர்த்தியான தோற்றத்தில் ஒவ்வொன்றையும் படைத்துள்ளான்.
இறைவனின் படைப்புக்களில் மிகவும் அழகான படைப்பாக மனிதன் இருந்து கொண்டிருக்கிறான். எம்மை மிகவும் அழகாக படைத்த இறைவனுக்கு நன்றி  தெரிவிப்பதற்குக் கூட நாம் கஞ்சத்தனக் காட்டுகிறோம்.

உலகித்திலே மிகப்பெரிய கஞ்சன் யாரென்று எனைக் கேட்டால் செய்த உதவிக்கும் படைத்த இறைவனுக்கும் நன்றி சொல்லாதவையே கூறுவேன்.

சரி இறைவனுக்கு நன்றி தெரிவித்தல் என்றால் எவ்வாறு என அலசுவோமேயானால் நாளாந்தம் நாம் செய்யும் செயற்பாடுகளில் அதிகமான செயற்பாடுகளை நன்மையான செயற்பாடுகளாக செய்தோமேயானல் அவை நன்றி செலுத்தலுக்குள் அடங்கிவிடும்.

நன்மையான செயற்பாடுகள் இதில் எதனை கருத்தில் கொள்ளவேண்டும் சிலரின் தவறான புரிதல்கள் என்னவெனில் நன்மையான செயற்பாடுகள் எனும் போது அதனை மிகவும் பெரிய செயற்பாடாக கருதுவதாகும். சிலர் பல கூட்டங்களைக் கூட்டி பல நன்மையான செயற்பாடுகளை செய்துவிட்டு பெருமைப் படுகின்றனர், இன்னும் சிலர் தன்னுடைய செயற்பாடுகளில் பல குடும்பங்கள் நன்மை பெற வேண்டும் என்று நினைப்பது சொல்லப் போனால் இவைகளும் நன்மையான செயற்பாடுகளில் ஒன்றுதான். இதற்கென்று  அதிகளவான பணத்தையும் நேரத்தியும் செலவிட வேண்டியுமுள்ளது.

ஆனால் இங்கு நான் சொல்லப் போவது பணமோ நேரமோ அதிகம் செலவு செய்யப்படாத ஆனால் மிகவும் அதிகளவான நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய நல்ல செயல்களைப் பற்றி இவற்றை நாம் நம் நாளாந்த செயற்பாடுகளில் செய்தோமேயானால் இதுவே மிகப் பெரிய நன்றி செலுத்துதலுக்கு வித்திட்டுவிடும்.

அடிக்கடி நாம் மறக்கும் புன்னகைத்தல் என்பது இங்கு பிறரைப் பார்த்து புன்னகைப்பதும் நன்மையானதே....பாதையில் கிடக்கும் பிறருக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய பொருட்களை அகற்றுவதும் நன்மையே ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உதவுவதும் நன்மையே... மேலும் தமது பக்கத்து வீட்டார்களுக்கு தொல்லை கொடுக்காமலிருப்பதுவும் நன்மையானதே...தினமும் நாம் சமைக்கும் உணவுகளில் சிறிதை பக்கத்து வீட்டாருடன் பகிர்ந்து கொள்வதும் நன்மையானதே

தம்முடைய தேவையை பிற்படுத்தி பிறருடைய (சகோதரன் தாய் தந்தை இன்னும் உறவுகள் ) தேவையை முற்படுத்தி செய்வதுவும் நன்மையானதே சிறுவர்களிடத்தில் அன்பாக பழகுவதும் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவதும் நன்மையானதே இன்னும் எவ்வளவோ சின்னச் சின்ன விடயங்கள் இருக்கின்றன நான் மீண்டும் சொல்கிறேன் இவற்றுக்கெல்லாம் அதிக பணமோ அதிகளவான நேரமோ செலவாகுவதில்லை கிடைக்கக் கூடிய சொற்ப நேரங்களில் இவற்றை செய்துமுடிக்கலாம். அதுவுமில்லாமல் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அவசியமாக மனம் விரும்பியும் செய்து கொடுக்க வேண்டும்.

சரி இவற்றையெல்லாம் செய்யும் போது அது எப்படி இறைவனுக்கு நன்றி செலுத்துதலாகின்றன என்ற சந்தேகம் வரலாம் ...இது ஒன்றும் பெரிய விடயமல்ல நாம் ஒவ்வொரு செயற்பாட்டை செய்யும் போது அதனை பிறர் காண வேண்டும் தன்னைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என்றோ அல்லது வேறு ஏதாவது நோக்கத்துக்காகவோ செய்யாமல் இதனை இறைவனுக்காக செய்தேன் என்று மனதில் நினைத்துக் கொண்டால் மட்டுமே அது இறைவனுக்கு நன்றி செலுத்துதலுக்கு ஒப்பானதாக மாறிவிடும். நோக்கம் இறைவனைத் திருப்திப் படுத்துவதாக இருந்தால் மட்டுமே இது முழுப் பிரயோசனமாக அமையும்.




Post a Comment

42 Comments

  1. நல்ல கருத்துக்களை அருமையா சொல்லி உள்ளீர்கள் நண்பா... பாராட்டுக்கள்.... விரும்பிப் படித்தேன்...
    (த.ம. 1)

    ReplyDelete
    Replies
    1. சூடான வருகைக்கும் அழகான உற்சாக மூட்டும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  2. அற்புதம்...


    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்கும் பின்னான உங்கள் வருவு மிகவும் சந்தோஷமளிக்கிறது சார்...
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  3. சிறுவர்களிடத்தில் அன்பாக பழகுவதும் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவதும் நன்மையானதே இன்னும் எவ்வளவோ சின்னச் சின்ன விடயங்கள் இருக்கின்றன நான் மீண்டும் சொல்கிறேன் இவற்றுக்கெல்லாம் அதிக பணமோ அதிகளவான நேரமோ செலவாகுவதில்லை கிடைக்கக் கூடிய சொற்ப நேரங்களில் இவற்றை செய்துமுடிக்கலாம். அதுவுமில்லாமல் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அவசியமாக மனம் விரும்பியும் செய்து கொடுக்க வேண்டும்.
    வாழ்வியலுக்கு அவசியமானதை அழகா சொல்லீட்டீங்க . படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்குப் பின்னான உங்கள் வரவு சந்தோஷமளிக்கிறது சகோதரி...

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  4. அழகான அருமையான அவசியம் அனைவராலும்
    பணம் காசு செலவில்லாமல்
    செய்யக்கூடிய விஷயங்க்களை
    மிக அழகாக்ப் பதிவு செய்துள்ளீர்கள்
    அந்த அழகிய மயிலகளைப்போலவே
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நீங்கள் சொன்னது போல் நடந்தால் இறைவனின் மனத்தைத் திருப்தி படுத்துகிறோமோ இல்லையோ... நம் மனம் நிச்சயம் திருப்தி அடையும் சிட்டுக்குருவி.

    (சிட்டுக்குருவிகளுக்கு ரெண்டு நெல்லு போட்டாக் கூட எனக்கு சந்தோசமாக இருக்கும்)

    நல்ல கருத்து. வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக எமது திருப்தியில் இறைவனின் பொருத்தமும் கிடைக்கலாம் அதனால் நல்ல விடயங்கள் செய்ய சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஆசையுடனும் ஆர்வத்துடனும் செய்ய வேண்டும்........

      உங்களுடைய நெல்லுக்கும் நெல்லுப் போடும் மனதுக்கும் என் பாராட்டுக்களும் நன்றிகளும்

      Delete
  6. சிந்திக்க வேண்டிய அருமையான கருத்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அழகாகச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே....
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  7. மிகவும் தேவையான கருத்துக்கள்! மயில் படங்கள் அழகு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
    http: thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்தைச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே....
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. நல்ல கருத்துக்கள். :)

    அந்தக் கடைசி மயில்...சூப்பர் ஷாட்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளியின் பின்னர் பின்னூட்டம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி ரசிகா,,,,
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  9. அழகு படங்களும் கருத்துகளும்...

    ReplyDelete
    Replies
    1. அழகான ஒற்றை வரியிலான கருத்துக்கும் நீண்ட இடைவெளியின் பின்னரான வரவுக்கும் மிக்க நன்றியை சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன் சகோ

      Delete
  10. அழகான கருத்தை சொல்லியுள்ளீர்கள் சார்.....மனதுக்கு சந்தோஷமாக இருக்குறது உங்களைப் போன்றவர்களின் இப்படியான உற்சாகமளிக்கும் கருத்துக்களைப் பார்க்கும் போது........

    வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  11. அருமையான பதிவு நண்பா!!

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  12. வணக்கம் சொந்தமே.இனிமையான விடயங்கள் எளிமையான நடையில் வாழ்த்துக்கள் பாஸ்.படங்கள் அருமை.மயிலுக்கு பல்லு விளக்கப்போறேன்னு பக்கத்துவீட்டுப்பையனுக்கு பொய் தானே சொன்னீங்க...பாருங்க பல்லையெ காணம்.....மன்னிப்பு கேளுங்க மறக்காம....:)

    ReplyDelete
    Replies
    1. அடியாத்தி படம் கொஞ்சம் நல்லா இருக்கே என்னு போட்டே கடைசில அது நமெக்கே ஆப்பா வருகுது என்னா ஒலகம் டா இது......

      மன்னிப்பு தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை...எப்புடி
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சந்திப்போம்

      Delete
    2. :)...கலக்கிட்டப்பா...சாரி...மழுப்பிட்டப்பா

      Delete
  13. நல்ல விடயத்தைச் சொல்லும் பதிவு அந்த மயில் படங்கள் எல்லாம் அருமை சகோ!

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு சந்தோஷமான கருத்து சகோ...
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  14. நல்ல படங்கள்.நல்ல் கட்டுரை,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளியின் பின்னான உங்கள் கருத்து கண்டு மிக்க சந்தோஷம் சார்.....
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  15. படங்கள் அனைத்தும் அழகோ அழகு.

    எந்த விட சுயநலமும் இல்லாமல் செய்யும் எந்த செயலுமே இறைவனையே சேரும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கருத்து.....மிக முக்கியம் சுய நலம் என்பது இல்லாமல் இருக்க வேண்டுமென்பது......
      அழகாக ஞாபமூட்டிச் சென்ற கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சார்

      Delete
  16. அருமையான சிந்தனை

    படங்கள் அழகு - ரசித்தேன் - பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. அழகை ரசிப்பதற்கு வருகை தந்தமைக்கும்
      நல்லதொரு கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  17. sako!
    nalla kootru!

    nalla padangal!

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு கருத்தை சொல்லிச் சென்றமைக்கு மிக்க நன்றி நண்பா

      Delete
  18. #உலகித்திலே மிகப்பெரிய கஞ்சன் யாரென்று எனைக் கேட்டால் செய்த உதவிக்கும் படைத்த இறைவனுக்கும் நன்றி சொல்லாதவையே கூறுவேன்.#


    நூறு சதவீதம் உண்மை....

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா.
      வருகை தொடர்வதில் இன்னும் சந்தோஷம்...:)

      Delete
  19. அழகிய மயில் படங்கள் நண்பரே..
    மழைமேகம் இல்லாமலேயே என் மனம்
    நடமாட தொடங்கிவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்திட்டு சென்றமைக்கு மிக்க நன்றி சார்....
      ம்ம்ம்ம்ம்ம்ம் மழைமேகம் கண்டு மயில்கள் நடனமாடுவது பாரம்பரிய மழைக்கான அறிகுறிகளில் இன்னும் குன்றிப்போகாத ஒன்றுதான்

      Delete
  20. என்ன ஒரு அழகு.இறைவன் படைப்பே அதிசய அழகுதான் !

    கஞ்சனைப்பற்றிய விளக்கம்....உண்மை !

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்தினை செதுக்கிச் சென்றமைக்கு மிக்க நன்றி அக்கா.....

      Delete
  21. நண்பரின் அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி....

    ReplyDelete
  22. உலகித்திலே மிகப்பெரிய கஞ்சன் யாரென்று எனைக் கேட்டால் செய்த உதவிக்கும் படைத்த இறைவனுக்கும் நன்றி சொல்லாதவையே கூறுவேன்.


    வாழும் போது நேருக்கு நேர் ஒருவன் செய்த உதவியையே மறந்துட்டு போற காலமிது, கடவுளுக்கா நன்றி சொல்லிடப்போரோம் ஆனாலும் அழுத்தமான வரிகளால் பதிவை பின்னியிருக்கேங்க ரொம்ப அழகான பதிவு அதவிட தோகை விரித்தாடும் இந்த வண்ண மயில்கள் கூடுதல் அழகு சேர்க்கிறது என்றே சொல்லலாம் :)

    ReplyDelete
  23. @ ரேவா

    வாழும் போது நேருக்கு நேர் ஒருவன் செய்த உதவியையே மறந்துட்டு போற காலமிது, கடவுளுக்கா நன்றி சொல்லிடப்போரோம் ஆனாலும் அழுத்தமான வரிகளால் பதிவை பின்னியிருக்கேங்க ரொம்ப அழகான பதிவு அதவிட தோகை விரித்தாடும் இந்த வண்ண மயில்கள் கூடுதல் அழகு சேர்க்கிறது என்றே சொல்லலாம் :)

    ////////////////////////////////

    ம்ம்ம்ம்ம் அதனால் தான் சொல்கிறேன் நன்றி சொல்ல மறந்தவர்கள் மிகவும் கஞ்சனுகள் என்று..... ரொம்ப நாளைக்கப்புறமான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி....
    சந்திப்போம்

    ReplyDelete