எனக்கு யாரோ பில்லி சூனியம் செய்துவிட்டார்கள்.....:(

எனக்கு வாழவே பிடிக்கல்ல.... என்ன செய்கிறது என்றே புரியல்ல...நான் இந்த உலகத்துல வாழத்தான் வேணுமா....:((.....எத பார்த்தாலும் வெறுப்பாத்தான் இருக்குது....தூக்கமும் வருகுது
இல்ல மனசிலே ஒரே குழப்பமான ஒரு உணர்வு...எங்கால பக்கம் பார்த்தாலும் பயமாத்தான் இருக்கு.


எப்பிடியோ கஷ்டப்பட்டு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சேன் .... அதுல பதிவு போடுறத்துக்கு எண்ட மரமண்டைக்கு ஒரு மேட்டரும் சிக்கல்ல எப்பிடியோ ஒரு சில விசயங்கள் மண்டையில் இருந்தா.........ப் போல தோணும் அத ப்ளாக்ல பதிவிட்டு கொண்டு இருந்தேன்...அதுக்கும் யாரோ நாதாரிப்பயலுகள் ஆப்பு வச்சிட்டானுகள் போலிருக்கு....:((( எனக்கு என்ன செய்யிறதெண்டே புரியல்ல..

பின்ன என்னங்க நேத்தைக்கு பதிவர்களிடம் ஒரு சவால் என்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். நேத்து அதை படிக்காதவங்க யாராச்சும் இப்ப இங்க இருந்தீங்கன்னா முதல்ல அத படிச்சிட்டு வாங்க படிக்க இந்த லிங்கில கிளிக் பண்ணுங்க 

நேத்தைய என்னோடய பதிவுக்கு சில பல நல்ல உள்ளங்கள் அவர்களோட தாராள மனச காட்டுறத்துக்காக பதிவு தொடர்பாக கருத்து சொல்லியிருந்தாங்க.
அதுவும் நல்ல விசயம் தானே...எவ்வளவு நாளைக்குத்தான் நல்ல மனச நமக்குள்ளேயே வச்சிருக்கிற மத்தவங்களுக்கும் காட்டத்தானே வேண்டும் என்னு நினைச்சிருப்பாங்க போல.....

நேத்து கமண்ட் போட்டிருக்குறாங்க என்றத்த காட்டுறத்துக்கு போட்ட போட்டோ தான் இது:(
ஆனா எனக்கு நடந்த அநியாயத்த யாரும் கேக்க மாட்டீங்களா...? நீங்க கேக்காட்டி என்ன நானே சொல்லிக்கிறேன். நேத்தைய என்னோட பதிவுக்கு நிறையப் பேர் கமண்ட் போட்டிருக்கிறதாக என்னோட மெயிலுக்கு செய்திகள் வந்திருச்சு ஆனா என்னோட பதிவுல போய் அத பார்த்தா அங்க அந்த கமண்ட்கள காணல்ல யாரோ எனக்குத் தெரியாம ஆட்டயப் போட்டிருக்கிறானுகளா என்னு பார்த்தா....அதுக்கும் சாத்தியப்பாடுகள் இல்ல ஏன்னா...கம்பியூட்டர ஸ்லீப்ல போட்டுட்டு ராத்திரி பூரா நான் முழிச்சிக்கொண்டுதானே இருந்தேன்...

என்னோட மெயிலுக்கு வந்த செய்தி... இதுல இரண்டு பேரோட கமண்ட் தான் என்னோட பதிவுக்கு கீழ தெரிஞ்சிது...:(((


அப்ப இது எப்பிடி சாத்தியமாகும் என்னு மூளையக் கொடைஞ்சு யோசிச்சுக் கொண்டிருக்கும் போதுதான் சூனியம் செஞ்சிருப்பானுகள் மச்சி என்னு என் நண்பன் ஒருத்தன் சொன்னான். நானும் அது உண்மையா இருக்குமோ என்னு நம்பிட்டேன்.

ஏன்னா நல்ல உள்ளங்கள் இந்த பாவிப்பயல் பொளச்சி போகட்டும் என்னு போடுற கமண்ட்கள யாரோ ஒருத்தன் சூனியம் செஞ்சி தானாகவே ஸ்பேம் கமண்ட்டுக்குள்ள போறமாதிரி செஞ்சிப்புட்டான். அதனால தான் எனக்கு வாழவும் பிடிக்கல்ல....சாகவும் பிடிக்கல்ல....செத்து செத்து வாழ்த்து கொண்டிருக்கிறேன் நேத்தையில இருந்து...

இதனால என்னோட இமேஜ் டெமேஜ் ஆகிடுச்சு .....பின் ஆகாதா என்ன கமண்ட் போட்ட நல்ல உள்ளங்கள் என்னப்பத்தி கேவலமா நினச்சிப்பாங்களா இல்லையா.....:((( நினச்சிட்டாங்களே... நான் என்ன பண்ணுவன் என்னப்பத்தி கேவலமா நினச்சவங்களுக்கிட்ட போய் நான் எப்பிடி முகம் கொடுத்து பேசுவேன் எனக்கு ஒன்னுமே புரியல்லியே.....
இது மனசாட்சி போட்ட கமண்ட் இதுவும் தெரியல்ல...:((

யப்பா...கருத்து போட்டு உங்க நல்ல மனச வெளிச்சம் போட்டு கட்டின நீங்கெல்லாம் இந்த பில்லி சூனியத்தை முறையடிக்க ஐடியா சொல்ல மாட்டீங்களா என்ன..... இதுக்கு முன்னாடியும் இப்படி ஒரு தடவ நடந்திருக்கு என்னு நினைக்கிறேன்...

இதில இருந்து எனக்கு ஒரு மேட்டர் மட்டும் புரியுது....எனக்கும் இப்ப எதிரிங்க இருக்குறாங்கப்போ....அப்ப நானும் ரவுடியா....???

வழக்கம் போல படங்களின் மீது கிளிக் பண்ணி பெரிசாக்கி பாத்துக்கோங்க...அப்பிடியும் வராட்டி ஏதாவது குறுக்கு வழி வச்சிருப்பீங்க அதுல போயாவது பெரிதாக்கி பாருங்க....ஏதாவது செஞ்சி என்னோட பிரச்சனைக்கு முடிவ சொல்லுங்கப்பா....மீ பாவம்...


48 கருத்துரைகள்

This comment has been removed by the author.

குருவியாரே,
உண்மையிலேயே உமக்கு நடந்தது ஸ்பேம் தான் - அதுக்கு இம்புட்டு விளக்கம் கொடுத்து ஒரு பதிவு, மனசாட்சி உள்ள குருவி - ஆனா பாரு குருவி, சில ஜந்துக்கள் மெய்யாலுமே கமாண்டை டிலிட் பண்ணிடுசுங்கோ...ஹே ஹே ஹே..இப்படி பட்ட ஜந்துக்கள் எதுக்கு பதிவு போடுதுங்கலோ.

Reply

வித்தியாசமான பிரச்சனையா இருக்கு.!

Reply

யாருப்பா அது சொல்ல வந்தத தைரியமா சொல்லிட்டு போப்பா...

Reply

நிசமாவே இப்பிடி நடக்குதா...பாவிப்பயலுகள் கமண்ட்டோட பெறுமதி தெரியாம அப்பிடி செய்யிரானுகள் போல மன்னிச்சு விட்டுடுப்பா...உனக்குத்தான் மனசாட்சி அதிகமா இருக்கே...:)

Reply

ஆமா வித்தியாசமான பிரச்ச்னை தான் சார்...யாரும் தீர்வு சொல்லுவதா தெரியல்லியே....

Reply

he he he..... வாங்கோ......வாங்கோ.....வாங்கோ....மத்தியாணம் சாப்பிட்டுட்டு போங்க...

Reply

எனக்கும் இப்படி நடந்துள்ளது! சா இராமாநுசம்

Reply

உங்கள் வருகைக்கும் வலுவான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

கலாசலா,காமெடியா கலக்கிருக்கீங்க..அருமை

Reply

4 நாள் ஸ்பாம் ல இருந்து எடுத்து விட்டீங்கன்னா அதாவே சரியாயிடும்...

இப்படியும் யோசிக்கலாம்...மட்டமான கமண்டுன்னு அதே ஸ்பாம்ல போய் உட்கார்ந்திருச்சோ...அவ்வ்வ்வ்

Reply

இப்படியெல்லாம் வேற நடக்குதா ?

Reply

எனக்கு யாரோ பில்லி சூனியம் செய்துவிட்டார்கள்.....:(///

நல்ல விஷயம் தானே? இதுக்குப் போய் இப்பூடி ஊரைக்கூட்டி அழலாமோ கர்ர்:)))))) ஹப்பியா இருங்கோ:).

Reply

//இதனால என்னோட இமேஜ் டெமேஜ் ஆகிடுச்சு //

இப்பத்தான் ஆச்சோ? ஐ மீன் இதுக்கு முன்பு ஆகல்லியோ என்றேன்:)

Reply

வழக்கம் போல படங்களின் மீது கிளிக் பண்ணி பெரிசாக்கி பாத்துக்கோங்க...அப்பிடியும் வராட்டி ஏதாவது குறுக்கு வழி வச்சிருப்பீங்க அதுல போயாவது பெரிதாக்கி பாருங்க....ஏதாவது செஞ்சி என்னோட பிரச்சனைக்கு முடிவ சொல்லுங்கப்பா....மீ பாவம்...
///

ஹா..ஹா..ஹா... கவலைப்படாதீங்க.. நான் பருந்திடம் சொல்லிவிடுறேன்ன்ன்ன்:)))

Reply

இதில இருந்து எனக்கு ஒரு மேட்டர் மட்டும் புரியுது....எனக்கும் இப்ப எதிரிங்க இருக்குறாங்கப்போ....அப்ப நானும் ரவுடியா....???///

ஹா..ஹா..ஹா.. உப்பூடியெல்லாம் சிம்பிளாச் சொல்லாதீங்க.. ரவுடி இல்லமலா என் பக்கம் ஒரே பின்னூட்டத்தை ரிப்பீட் பண்ணினனீங்க? கர்ர்ர்ர்ர்ர்:)) அதை எல்லாம் நாங்க மறந்திட மாட்டோம்ம்:).. மகா ரவுடி அப்பூடிப் புரொமோஷன் குடுத்திடுங்கோ நீங்களே:)))

Reply

// நான் என்ன பண்ணுவன் என்னப்பத்தி கேவலமா நினச்சவங்களுக்கிட்ட போய் நான் எப்பிடி முகம் கொடுத்து பேசுவேன் எனக்கு ஒன்னுமே புரியல்லியே.....///


ச்ச்ச்சோஒ சிம்பிள், ஒரு சூப்பமான் முகமூடி வாங்கிப் போட்டிடுங்க:))

Reply

//அதனால தான் எனக்கு வாழவும் பிடிக்கல்ல....சாகவும் பிடிக்கல்ல....செத்து செத்து வாழ்த்து கொண்டிருக்கிறேன் நேத்தையில இருந்து...//////

செத்தபின் வாழ முடியுமோ? பிளீஸ்ஸ்ஸ் எனக்கும் அந்த வித்தையைக் கொஞ்சம் சொல்லித் தாங்களான், டிஷம்பரோடு உலகம் அழியுதாமே...:)

Reply

சரி சரி என் 15 கொமெண்ட்ஸ்க்கும் பதில் போட்டு வையுங்க காலையில் வருவேன், ஒன்று மிஸ்ஸானாலும் இருக்கு பிரச்சனை சொல்லிட்டேன்ன்ன்:))

Reply

ஐயோ முதலாவது வருகைக்கும் தரமான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி....

Reply

இப்ப தான் ஒருத்தர் ஒரு ஐடியா சொல்லியிருக்கிறார்....தம்பி சாருக்கு ஒரு வடயோட டீ சொல்லு....காச அவருக்கிட்டே வாங்கிக்கோ...

Reply

உங்களுக்கு இன்னமும் நடக்கெல்லியா.....பொறுமையா இருங்கோ...விரைவில நடக்கும்

Reply

அட சந்தோஷமான விசயமா............நேத்தையில இருந்து தூக்க மில்ல பசிக்குது ஏதாவது குடுங்க என்னு கேட்டா நீ எடுத்து சாப்பிட மாட்டியா என்னு பதில் வருகுது...இதெல்லாம் சந்தோஷமான விசயமா...:(

Reply

இதுக்கு முன்னாடி 99 சத வீதம் தான் டேமேஜ் ஆகியிருந்துச்சு இப்போ 100 வீதம் ஆகிட்டு அதுதான் ரெம்ப பீலிங்கா இருக்கு....

Reply

அடியாத்தி இவடத்த எதுக்கு பருந்து....அது வாரத்தும் பில்லி சூனியமே பெட்டர்..............மீ எஸ்கேப்...:(

Reply

நோ இத ஒத்துக்க மாட்டேன்..........அது ஏதோ வயசு கோளாறுல செஞ்சிப்புட்டேன் அத மனசில வச்சிக்கொண்டு இப்படி புரொமோஷன் தந்து என்ன பழிவாங்கப்படாது...அப்பாத்தாவுக்கு தெரிஞ்சா கொன்னுபுடுவா....உங்களத்தான்...

எதுக்கும் ஜாக்கிறதையா இருங்கோ...

Reply

ஐயோ முடியல்லடா சாமி.......இன்னும் மூனு கமண்ட் இருக்கே எப்பிடிடா பதில் போடுவேன்....

சூப்பர் ஐடியா நீங்கதானே ரொம்ப பயங்கரமான முகம் கொண்ட முகமூடியெல்லாம் பூஸாருக்கு செய்து கொடுத்தீங்க அதில ஒன்ன அனுப்பி வச்சிடுங்க....

Reply

இதுல வித்தை எல்லாம் ஒன்னும் இல்ல..........பூஸாருக்கிட்ட கேளுங்க ஐடியாவ அல்லி வீசும்...

ஆமா நெசமாத்தன் சொல்லுரீங்கலா டிசம்பரோட உலகம் அழியுதா....?
இல்ல சில பல வேலைகள் இருக்கு அதுக்கு தான் கேட்டேன்
யாரிட்டயும் சொல்லிடாதேயுங்கோ....

Reply

அம்மா.............ஒரு கிளாஸ் தண்ணி குடுங்க பெரிய சாதனை ஒன்ன உன் புள்ள செஞ்சிருக்கிறான்............

அட சீக்கிரமா கொடும்மா...அடுத்த கமண்ட் வாரத்துக்குள்ள எஸ்கேப் ஆகிடனும்...:000000

Reply

சிட்டு அழாதப்பா...மருந்து அனுப்பி வைக்கிறேன்...!விடு பாஸ்..பெரியவங்க கருத்து சொல்லிருக்காங்க..சரி பண'ணிடுங்க..!

Reply

//இதில இருந்து எனக்கு ஒரு மேட்டர் மட்டும் புரியுது....எனக்கும் இப்ப எதிரிங்க இருக்குறாங்கப்போ....அப்ப நானும் ரவுடியா....???//

ஆமாம் பதிவுலகத்துல காலடி எடுத்து வெச்சாலே எல்லாரும் ரவுடிதான்!! நானெல்லாம் பழைய ரவுடியாக்கும் :-)

இப்ப சிட்டுக்குருவி வேகமா பறக்குதே.. பறக்கட்டும்! பறக்கட்டும்!

Reply

ippadiyumaa nadakkuthu!?

Reply

sako!

naan
potta commentsaiyum KAAAAnom!

Reply

சிட்டுக் குருவியாரே...
எனது கருத்துரையை தாங்கள் ஒரு பதிவாகவே வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. எனது பெயரை நான் tamilvetrivel.blogspot.com இலிருந்து http://iravinpunnagai.blogspot.in/ என்று மாற்றி விட்டேன்.நல்ல பெயரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்... இன்னும் மாற்றங்கள் வரலாம்.
பில்லி சூனியத்தை சரி பண்ண, உங்கள் ஊரில் தான் நல்ல புத்த பிக்குகள் இருப்பார்களே. மந்திரித்துப் பாருங்கள்...

Reply

இப்படி ஏதாவது நடந்தா ஒரு பதிவுக்கும் செய்தி ஆச்சு!

Reply

சீக்கிரமா மருந்த அனுப்பி வச்சிடுங்க.....சரக்கடிச்சி ரொம்ப நாளாப் போச்சு...
அப்பிடியே சைட்டீசுக்கு ஏதாவது....:))

Reply

ஆமாம் பதிவுலகத்துல காலடி எடுத்து வெச்சாலே எல்லாரும் ரவுடிதான்!! நானெல்லாம் பழைய ரவுடியாக்கும் :-)///////////

பீமா படம் ஞாபகத்துக்கு வருகுது நண்பா....நீங்க சீனியர் ரவுடி..பிரகாஷ்ராஜ்...நான் ஜூனியர் ரவுடி....விக்ரம் இப்ப சந்தோஷமா...:))))

Reply

ஆமா நடக்குத நண்பா உஷரா இருந்துக்கோ...

Reply

பொய்தானே சொல்லுரீங்க..........:(((

வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

புத்த பிக்கு எல்லாம் வெந்த பிக்குகளாப் போச்சு...அதனால தான் இங்க கொண்டுவந்தன் பாஸ்...

இரவின் புன்னை நல்லாத்தான் இருக்கு

Reply

ஐயோ பெரியவங்க எல்லாம் நம்ம பக்கம்.............
நாங்களே பதிவு போட மேட்டர் சிக்காத என்னு ஒத்த கால்ல நின்னு யோசிச்சு கொண்டு இருக்கிறோம் எங்ககிட்டேவா....

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

மிக்க நன்றி சிட்டுக்குருவியாரே...

Reply

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப்
பிடிச்சிட்ட்டீங்களே
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Reply

ஆஹா......

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்...தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்

Reply

சிட்டுக்குருவி.... பதிவு அருமைங்க.

Reply

நல்ல க்அருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.......

Reply

Post a Comment