இப்பிடித்தான் ஒரு தடவை என்னுடைய காரியாலயத்தில (.....ஹி....ஹி....ஹி....நாம தொழில் புரியும் எடத்ததான் காரியாலயம் என்னு சொல்லுறது...) நான் இருக்கும் போது என்னுடைய
தொண்டர்கள்ல ஒருவன் வந்து சார்...... என்று ( அழுத்தமாத்தான் ) கூப்பிட்டான்
தொண்டர்கள்ல ஒருவன் வந்து சார்...... என்று ( அழுத்தமாத்தான் ) கூப்பிட்டான்
என்னப்பா இந்த இழுவ இழுக்கிற என்ன மேட்டர் ஆகவேண்டியிருக்கு என்னு கேட்டேன்....
ஒன்னுமில்ல நாளைக்கு கண்காட்சி ஸ்டார்ட் ஆகப்போகுது நான் என்னுடைய பொருட்களையெல்லாம் ரெடி பண்ணிட்டன் ஆனா..... என்று இழுத்தான்.
சொல்லு என்ன ஆனா...என்றேன்
இல்ல சேர் வித்தியாசமான ஒரு பொருள் செஞ்சிருக்கிறேன் நாளைக்கு கண்காட்சிலதான் அத காட்டுவேன்.
சரி நாளைக்குப் பார்ப்போம் என்றேன்.
அது இல்ல சார் கண்காட்சிக்கு நிறைய வெள்ளக்காரங்க எல்லாம் வருவாங்க...அந்த பொருள்ட பெயர கொஞ்சம் இங்கிலீசில போட்டு வச்சா நல்லா இருக்கும் எண்டு நினைக்கிறேன்.
ஆ...நல்ல விசியம்தான் போட்டு வை என்றேன்.
போட்டு வை என்னு நீங்க சொல்லிப்புட்டீங்க..... இங்கிலீசுல அந்த பொருள எப்பிடி கூப்பிடுற என்றத்த ஆறு சொல்லித்தார....எண்டுப்புட்டு போட்டான் பாரு ஒரு அணுகுண்டு......
பூக்கனா நெட்டிக்கு இங்கிலீசுல எப்பிடி சார் சொல்லுற என்னு நம்மட இங்கிலீசு அறிவுக்கே விட்டான் சவால் ஒன்னு... எனக்கு தூக்கி குத்திச்சு....
இவடத்த கொஞ்சம் நீங்க உஷாரா இருக்கனும்...எனக்கு இங்கிலீசு தெரியும் என்னு நீங்க நினைச்சீங்கன்னா அது நல்ல விசயம்தான்.(எனக்கும் பெருமை தானப்பா...)
ஆனா உண்மையிலே நமக்கு இங்கிலீசு வராது...ஏதோ அவனுக்கிட்ட இவனுக்கிட்ட கடனவாங்கி கையால காலால போட்டுத் தான் இவ்வளவு நாளும் ஓட்டிக்கொண்டு இருந்தேன்.
இந்த ரகசியத்த எல்லோருக்கிட்டயும் சொல்லலாமா....உங்ககிட்டே இப்பதான் சொல்லுறன் எண்டா பார்த்துக்கோங்கவன்....:)
அவனும் நம்ம கதைக்கிற இங்கிலீச பார்த்து எனக்கு நல்லா இங்கிலீசு தெரியும் என்னு நினைச்சி இந்த கேள்விய கேட்டுப்புட்டான்.
சரி எப்பிடியோ சமாளிச்சுத்தான் ஆகனுமே, இல்லாட்டி மானம்.... போயிடுமே ( அது நமக்கு இல்லவே இல்லயே...அப்புறமென்ன போறது)
மறுபடியும் கொஞ்சம் பொருங்க.... இவடத்த பூக்கனா நெட்டி எண்டா என்னவெண்டு நான் சொல்லியேயாகனும்..:)
இத சில பேரு பூக்க நெட்டி என்னும் சொல்லுவாங்க....தென்ன மரத்துல தேங்காயெல்லாம் தொங்கிக்கொண்டு இருக்குமே ஒரு நெட்டி.... அந்த நெட்டியத்தான் பூக்கனா நெட்டி எண்டு சொல்லுறது....இன்னும் வெளக்கமா சொல்லனுமா... ( வேணா விட்டுடுவோம் அழுதுடுவாங்க....:)
சரி இப்ப மேட்டருக்கு வருவோம்....
இவன் திடீரெண்டு இப்பிடி கேட்டதால எனக்கு என்ன செய்றதெண்டே புரியல்ல பக்கத்துல யாராச்சுமிருந்தா அவங்களுக்கிட்டயாவது கேட்டு சமாளிச்சிருக்கலாம்.
கொஞ்ச நேரம் யோசிச்சுப்போட்டு இல்ல பூக்கனா நெட்டில அப்பிடி என்னத்தடா செஞ்சி வச்சிருக்கிற என்னு கேட்டேன்...
இல்ல சேர்...ஒரு வித்தியாசத்துக்கு பூக்கனா நெட்டில கொஞ்சம் சுகாதார செய்திகள தொங்க விட்டு காட்சிப்படுத்தலாமே என்னுதான் அதுல செஞ்சிருக்கிறன்... என்றான்.
அது சரி... நம்மட தொண்டனாச்சே ப்ரோஜெக்ட சரியா புரிஞ்சு வச்சிருக்கிறான் ....( சூழல்ல கிடைக்கிற பொருள வச்சித்தான் அந்த கண்காட்சிய நாங்க செஞ்சிக்கிட்டு இருக்கிறோம்)
கொஞ்ச நேரம் யோசிச்சுப் போட்டு மேசைய பார்த்தேன் அதுல லைட்டர் கிடந்திச்சு உடனே லைட்டம்பர் (lytemper) என்னு சொன்னன்....
அவனும் ஓகே சொல்லிட்டு கெளம்பிட்டான்.
சரி நம்ம சொன்ன சொல்லுக்கு ஏதவது அர்த்தம் இருக்கத்தானே வேணும் என்னுப்புட்டு போன்ல இருக்கிற டிக்சனரில தேடிப்பார்த்தேன் அப்பிடி ஒரு சொல் இல்லவே இல்ல என்னு அது முகத்துல காரி துப்பாத குறைய சொல்லிப்புட்டு.
அடுத்த நாள் காலையில அந்த தொண்டன் வந்தான் என்னப்பா பூக்கனா நெட்டி எல்லாம் ரெடியா என்னு கேட்டேன். ஆமா சார்....என்னுப்புட்டு இன்னுமொன்னு சொன்னான் பாருங்க...
சார் இரவு நீங்க சொன்ன வார்த்தை சரியா என்னு ஒரு இங்கிலீசு பாட வாத்திக்கிட்ட கேட்டேன் அவர் சொன்னார்.............................................................அந்த சொல் சரிதான் ஆனா இஸ்பெல்லிங் தான் கொஞ்சம் வித்தியாசம் என்னு சொல்லி சரியான சொல்ல தந்தார் அததான் நான் எழுதி அதுல போட்டிருக்கிறேன் என்றான்.
எனக்கு என்ன செய்றதெண்டே புரியல்ல பேசாம கண்காட்சிக்கு போயிட்டேன்.....எப்பிடியோ பின்னேரம் ஐந்து மணியப்போல கண்காட்சி முடிவடைஞ்சிட்டு...வந்தவெங்க எல்லோரும் நல்லா இருக்கு என்னு சொல்லிட்டு போக மறக்கல்ல.....வெள்ளக்காரங்களும் கூட.
இது தான் அந்த லைட்டம்பர்...lytemper |
அப்புறமா கடைசி நேரத்துல நான் எங்கட டீம் அவ்வளவு பேரையும் கூப்பிட்டேன் காரணம் கண்காட்சி பற்றி எங்கட பொஸ்... (இவவும் வெளிநாட்டு காரிதான்) ஒரு சில நல்ல வார்த்தைகளை சொல்லுறத்துக்கு ஆசைப்பட்டதால...
அவாவும் என்னுடைய டீம பாரட்டினா இறுதியில நான் அந்த lytemper பேனர காட்டி அத அவாகிட்ட விளங்க படுத்தினேன் அவாவும் ஓ அப்படியா பூக்கனா நெட்டிர இங்கிலீசு வார்த்தை இதுதானா என்னு வாயப் பொளந்தா....:0
அதுக்கப்புறமா நான் அந்த சொல் எப்பிடி எடுக்கப் பட்டது என்ற விதத்த சொன்னன் அதுக்கப்புறம் அவடத்துல ஒரே சிரிப்பு வெடிதான்....எங்களால முடியுமட்டும் சிரிச்சோம்...அந்த தொண்டனோட மூஞ்சில ஈ ஆடாததுதான் குறை அவன் என்னோட கோவிச்சுட்டு அவ்விடத்துல இருந்து போயிட்டான்.
பிறகு...என்ன நான் மறுபடியும் பூக்கனா நெட்டிட இங்கிலீசு சொல் என்ன எண்டு எண்ட பொஸ்சிக்கிட்டயும் கேட்டேன்....அவாவும் முழிச்சுக் கொண்டுதான் நிண்டாவு....(அவாவுக்கும் தெரியாது)
ஆக அந்த இங்கிலீசு பாட வாத்தி....அந்த வெளிநட்டு என்னோட பொஸ்.... என்னோட மெனேஜர்ஸ்...இப்பிடி ஒருத்தருக்கும் தெரியாத அந்த பூக்கனா நெட்டிட இங்கிலீசு வார்த்தை உங்களுக்காச்சும் தெரியுமா...? தெரிஞ்சா கொஞ்ம் போல சொல்லிட்டு போங்க...
இன்னும் ஒரு விசயம் இந்த lytemper சொல்லுக்கும் என்ன அர்த்தமென்னு கொஞ்சம்போல சொல்லிடுங்கப்பா இந்த சொல்லுக்கு அர்த்தம் தேடி அலையாத இடமே இல்ல இறுதியா நம்ம பதிவர்களுட்ட இத விட்டுட்டேன் அவங்க என்னா சொல்லுறாங்க என்னு பார்த்துடுவேமே.....:))))
30 Comments
சிட்டுக்குருவியாரே எனக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை... ஆனால் இந்த lytemper வார்த்தைக்கு மட்டும் என்னால் அர்த்தம் காண இயலவில்லை... இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் நிச்சயல் பகிர்கிறேன்...
ReplyDeletehttp://tamilvetrivel.blogspot.in/
சூடான வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ...
Deleteசிட்டு குருவி அவர்களே...
ReplyDeleteபூக்கனா நெட்டி க்கு, flower net நு சொல்லலாமா...
எதோ எனக்கு தெரிஞ்சது.
அட முதல் வருகையிலே கலக்கல் பெயர் ஒன்னு சொல்லியிருக்கிறீங்க.....தொடருங்கள் உங்கள் வருகையை
Deleteரொம்ப ஈஸின்னே lytemper அப்டின்னா பொய் கோவம்... :D
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு அம்புட்டுதேன்..!!
ஆமா பொய் கோவம் என்று சொல்லுறதும் சரிதான் ஏன்னா அந்த தொண்டன் என்னோட பொய்யாத்தானே கோவிச்சவன்
Deleteசிட்டுக்குகுருவி... பதிவு செம தாமாஸ்ங்க....
ReplyDeleteஆமா... அவளிநாட்டுக் காரங்க நம்ம நாட்டு “இட்லி“ யை இட்லின்னு தானே சொல்லுறாங்க. ஏன் தெரியுமா....?
ஏன்னா... இட்லி நம் நாட்டுல கண்டுபிடிச்சது. நம்ம நாட்டு பண்டம். அதன் பெயர் எந்த நாட்டிலேயும் “இட்லி“ தான்.
அதே போல தான் நீங்கள் சொன்ன “புக்கனா நெட்“ யும். அதைத் தமிழிலேயே எழுதியிருந்தால் யார் கேட்டாலும் அதன் பெயர் இதுதான் என்று நீங்கள் தலைநிமிர்ந்து சொல்லலாம். யாரும் தவறாக நினைத்துக்கொள்ளப் போவதில்லை. நம்ம நாட்டில் நாங்கள் இதை இப்படித்தான் அழைப்போம் என்றும் தைரியமாகச் சொல்லலாம்.
நம் தமிழில் வார்த்தைகளுக்குப் பஞ்சமா...? யோசியுங்கள்.
எதையுமே ஆங்கிலத்தில் சொன்னால் தான் கௌரவம் என்ற எண்ணம் நம்மிடையே ஒழிந்தால் தான் நம் தமிழ் வாழும்.
ஆமா ஆமா....நல்லாத்தான் சொல்லுரீங்க....:)
Deleteகுருவியாரே, செம காமடி போங்க - நல்லா கண்டு புடிக்கீறு
ReplyDeleteஆஹா....இவர் அவரா.....
Deleteஎன்னாது சவாலா?
ReplyDeleteஉடு ஜூட்
என்னாது ஜெட்டு விடப்போறீங்களா....:(
Deleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
பூக்கனா நெட்டி... நல்ல பேரா இருக்கு... இதையே சொல்லியிருக்கலாம்.
ReplyDeleteமுதலாவது வருகை என்றே நினைக்கிறேன் அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ...உங்கள் வருகை தொடரட்டும்...
Deleteஐயா ... சாமீ ... நான் இந்த விளையாட்டுக்கு வரலே ... ஹி ஹி ஹி
ReplyDeleteஎன்னமா எஸ்கேப் ஆகிறாங்க......ரொம்ப உஷாரா இரு சிட்டு...உஷாரா இரு...
Deleteபதிவர்களிடம் ஒரு சவால்......! //
ReplyDeleteDoubledare You bro...
ஆஹா.................ஆகட்டும் ஆகட்டும்
Deleteநல்ல விளையாட்டு இது.பெரியவர்களாக சேர்ந்து நடத்திய,,,,,,,,,,நல்லாயிருக்கு/வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னாது......விளையாட்டா....இது எப்ப ஆடினோம்
Deleteநமக்கு தெரியாமலா விளையாடுறாங்க...
நமக்கு தமிழில்லையே அதுக்கு என்னா பேருன்னு தெரியாது இதுல இங்லிபீசுல வேறையா :)
ReplyDeleteஹா............ஹா...........ஹா.......
Deleteஅதுதானே பார்த்தேன் ஏதாவது உண்மையச் சொல்லிடப் போறீங்களோ என்னு பயந்துட்டேன்...
அதிகமா சிரிச்ச இப்படிதான் ஒன்னும் தெரியாதாம் .
ReplyDeleteஉண்மையாவா....:( இனி அதிகமா சிரிக்கப் படாது...:( கவணமா இருக்கனும் சிட்டு...
Deleteஎதுவும் புரியலே! சா இராமாநுசம்
ReplyDeleteபுரிய மாட்டாதுதான்.ஏன்னா நீங்க தமிழிலை வித்துவான் உங்க தமிழுக்கும் எங்க டமிழுக்கும் ரொம்ப வித்தியாசம்...வருகைக்கும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஐயா
Deleteஇந்த ரகசியத்த எல்லோருக்கிட்டயும் சொல்லலாமா....உங்ககிட்டே இப்பதான் சொல்லுறன் எண்டா பார்த்துக்கோங்கவன்....:)...சொல்டீங்களே.....................!இப்டி தப்பு பன்டியேப்பா,ஃ????
ReplyDeleteஅட ஆமயில்ல.............:);;;;((
Deleteஇந்த ஆங்கிலமெல்லாம் எனக்கு ஆவாதய்யா.. எனக்கு தெர்ஞ்சதெல்லாம் தமிழும் தமிங்கிலீசும்தான்,,, சிரிச்சி சிரிச்சி வயிற்று வலி வந்திட்டது. இனிமே பூக்கனா நெட்டிய தென்னமரத்துல பார்த்தாலே இந்த காமெடிதான் நினைவுக்குவரும்.. இப்படியே நகைச்சுவை உணர்வுள்ள பதிவுகளை தொடருங்கள்.
ReplyDeleteமுதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்....:)
Delete