என்ன நடந்தது என்றே தெரியல்லீங்க ப்ளாக் பக்கம் வருகிறத்துக்கு மனசு வரமாட்டேனெங்குது.... நான் நினைக்கிறேன் யாரோ எனக்கும் என் ப்ளாக்குமா சேர்த்து பில்லி சூனியம் செஞ்சிட்டாங்களோ என்னு...
அலோ... பில்லி சூனியம் செஞ்சவங்களே...இன்னமும் நீங்க பில்லி சூனியம் செய்யிற முடிவோட இருந்தால், இனிமே உங்க பில்லி சூனியமெல்லாம் எங்கிட்ட வேலைக்காவாது என்கிறதை சந்தோஷமா சொல்லிக்கிறேன். ஏன்னா இப்போதான் முறிஞ்சான் கிறிஞ்சான் சாமியாரைப் பார்த்துட்டு வந்திருக்கிறேன். அவர் இடுப்புல இருந்து முறிச்சித் தந்த தாயத்தை என் கொம்பியூட்டர்ல பத்திரமா கட்டிவச்சிருக்கேன். தாயத்துக்கு காவலுக்கு என் போலிஸ் அங்கிளையும் வச்சிருக்கேன். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி நீங்க பில்லி சூனியம் செய்யிற முடிவ மாற்றல்லையென்றா அதுக்குப் பிறகு வரும் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பாகாது... ஓK...
சரி இப்போ மேட்டருக்கு வருவோம்.... ரொம்பப் பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் பதிவூடாக சொந்தங்களை சந்திக்கப் போகிறேன் என்பதை நினைக்கும் போது மனசிற்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னோட டேஷ்போர்ட்டைப் பார்க்கும் போது நான் மட்டும்தான் ப்ளாக்குக்கு லீவு விட்டதாக தெரிகிறது. நிறையப்பேருடைய சுவாரஷ்யமான விவாதங்கள், கட்டுரைகள்,கவிதைகள், குறுந்தொடர் கதைகள், தொடர் கவிதைகள் + கதைகள் எல்லாவற்றையும் மிஸ் பண்ணிட்டேன் என்று நினைக்கிறேன் அதற்காக எல்லோரும் என்னை மனதார வாழ்த்தி...... அட ச் சீ மன்னிச்சுக்கோங்க....
நான் இடையில காணாப்போனதையிட்டு நலம் விசாரணை செய்த அனைத்து சொந்தங்களுக்கும் இவ்விடத்துல நன்றியைச் சொல்லிக்கிறேன். இழவு வீட்டுல விஜயகாந்து சொன்ன நன்றி என்று மட்டும் இதை எடுத்துக்காதீங்கோ... இது அடி மனசில இருந்த வந்த நன்றி எங்கிறதையும் ஸ்பீக்கர் போட்டுச் சொல்லிக்கிறேன்.
அடுத்து எனக்கு என்ன ஆச்சு என்று ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்த சொந்தங்களுக்கு ம்ம்ம்ம்ம்ம் இனிமே அவங்க சொந்தம் கிடையாது. இன்னையோட அவங்க உறவை முறிச்சிக்கிறேன். (அவங்க மறுபடியும் என்னோட உறவு கொண்டாட வேண்டுமென்றால் என் அக்கவுண்ட்டுக்கு 100 டொலர் அனுப்பிடனும் யாருக்கும் தெரியாம நமக்குள்ளேயே மேட்டர முடிச்சிக்கலாம்.) அத்தோட அவர்களுக்கு என் வலுவான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இது கைப்புள்ள எடுத்த தீர்மானம் இதுல எந்த மாற்றமும் கிடையாது.
டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்
என்னாது மணி அடிக்கிறது என்று யோசிக்கிறீங்களா ? இந்தப் போஸ்ட் எழுதிட்டு இருக்கும்போதே. (நேரத்தையும் சொல்லிக்கிறேன் காலையில 05.15 மணி) அடுத்த வேலை வந்துவிட்டது, என்ன செய்யிறது வேலையை முடிச்சிட்டு வந்து சேர்ந்துக்கிறேன். இந்த வருசம் முடியிறத்துக்கு முன்னாடி எப்படியாவது இந்த பதிவை பப்ளிஸ் பண்ணிடனும் எங்கிறதுல மட்டும் நான் தெளிவா இருக்கேன்.
டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்
என்னாது மணி அடிக்கிறது என்று யோசிக்கிறீங்களா ? இந்தப் போஸ்ட் எழுதிட்டு இருக்கும்போதே. (நேரத்தையும் சொல்லிக்கிறேன் காலையில 05.15 மணி) அடுத்த வேலை வந்துவிட்டது, என்ன செய்யிறது வேலையை முடிச்சிட்டு வந்து சேர்ந்துக்கிறேன். இந்த வருசம் முடியிறத்துக்கு முன்னாடி எப்படியாவது இந்த பதிவை பப்ளிஸ் பண்ணிடனும் எங்கிறதுல மட்டும் நான் தெளிவா இருக்கேன்.
பல விடயங்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து என்னைப் பதிவிட முடியாமல் செய்துவிட்டன. குறிப்பாக புதிதாக முதலீடு செய்த வியாபாரத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தியமையைச் சொல்லலாம். என்னதான் காசு பணம் துட்டு Money Money என்றிருந்தாலும் நம்ம ப்ளாக்கில நாலு மொக்குத்தனமான விடயத்தை பதிவிட்டு அதுக்கு கிடைக்கும் கமண்ட்ஸ்களைப் பார்த்து ரசிப்பதைப் போல இருக்குமா என்ன... :)
சுனாமி அடிச்சாலும் இல்ல உலகம்தான் அழியப்போகுது என்று புரளியக் கிளப்பினாலும் என்னோட பதிவு மாசத்துக்கு ஒருமுறையாவது வந்து சேரும் எங்கிறதையும் சொல்லிக்கிறேன் .
சரி இனி அடுத்த பதிவில் சந்திப்போம் அதுவர இந்த வீடியோவைப் பாருங்கள்
22 Comments
வாங்க வாங்க...
ReplyDeleteரொம்ப நேரம் கழிச்சுத்தான் தெரிஞ்சது மற்ற ரெண்டும் பொம்மைன்னு...
வாங்க ஸ்கூல் பையா....
Deleteரொம்பநாளைக்கப்புறம் வந்திருக்கேன் தேடி வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
புதிய வியாபாரம் என்றால் கவனம் அதிகம் தான் தேவை... இனி தொடரவும்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும் அழகான ஆலோசனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குருவே...
Deleteசொந்த விஷயங்கள் பொதுவானவற்றில் கவனம் செலுத்த வைக்க மறுத்து விடுகிறதுதான்,நல்ல வீடியோ டான்ஸ்/
ReplyDeleteம்ம்ம் உண்மைதான் குருவே...
Deleteவருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி
வீடியோ காட்சி ரசிக்கவைத்தது ..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநீண்ட இடைவெளியின் பின் கருத்திட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி உறவே
Deleteஎன்னது சுனாமி மாசத்துக்கு ஒருதபா தான் வருமா... அப்புறம் அந்த நூறு டாலர் எந்த முருகன் கோவில்ல வாங்கி அனுபனும்னு சொன்னா நம்ம உறவ இன்னும் கொஞ்சம் ஸ்ட்றாங்க வலுப் படுத்திக்கலாம்.... என்ன நாஞ் சொல்றது...
ReplyDeleteங்ங்ங்ங்ங்.....இன்னாப்பா நீயி...
Deleteமெயின் ரோட்டுல மரத்துக்குக் கீழே இருக்குமே முருகன் கோயில் அங்கே போயி வாங்கி அனுப்பு மாப்ளே...
வாங்க சகோ நீண்ண்.....ட காலத்தின் பின் வலையில் இப்படி ஒரு காட்சியோடு வந்து ரசிக்கவைத்துவிட்டீர்கள் மீண்டும் தொடர்ந்து எழுதுங்க அப்படியே வியாபாரத்தையும் கவனமாக கவனியுங்க சொந்தங்கள் எப்போதும் காத்திருப்பார்கள்!
ReplyDeleteவாங்க அண்ணா.....
Deleteநீண்ட காலம்தான் என்ன செய்வது நிலமை அப்படி
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி அண்ணா
மீண்டும் வலைப்பதிவிற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்! புதிய தொழில் சிறப்புற நடைபெற இறைவனை வேண்டுகிறேன்! நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கும் அழகான பிரார்த்தனைக்கும் மிக்க நன்ரி குருவே.....
Deleteவாருங்கள் மகிழ்ச்சி. தொழில் சிறப்புற வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி உறவே :)
Deleteவாங்க வாங்க.
ReplyDeleteமறக்காமல் வரவேற்றமைக்கு மிக்க நன்றி உறவே
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/3.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மீள் வருகைக்கும் தகவல் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சார்
Deleteமீண்டும் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து வாருங்கள்...
ReplyDeleteவருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
Delete