Looking For Anything Specific?

ads header

பிட் அடிக்கலாம் வாங்க....

நான் சின்ன வயசில இருக்கும் போது என்னையக் கொண்டு போய் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாரு எங்கப்பா... (நாங்கெல்லாம் பெரிசாகிய பின்னா ஸ்கூல் போனோம் என்றெல்லாம் கேட்கப்படாது ஓK). சேர்த்துவிட்டது தான் விட்டார் பெரிய வகுப்பா பார்த்து சேர்த்து விட்டுரிக்கலாமில்ல... நேராவே ஒன்னாம் வகுப்புல கொண்டு போய் விட்டுட்டாரு

எனக்கு ஒன்னாம் வகுப்பில இருந்து படிக்கிறதுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்ல. ஒரு அஞ்சாம் ஆறாம் வகுப்புல கொண்டு போய் விட்டுறிக்க அந்த வருசத்தோட படிப்பை முடிச்சிருக்கலாம் ( நாங்க ஆறாம் வகுப்புத்தான் படிச்சமாக்கும்) ஜெஸ்டு மிஸ்ஸு என்னும் சொல்லிக்க ஏலாது... ஒன்னாம் வகுப்பில இருந்து சேர்த்தத்தால ஆறு வருஷம் வேஸ்ட்டு...

அப்பா ஏதும் செய்தா அது நம்ம நல்லதுக்குத்தான் இருக்கும் என்னு எனக்கு அஞ்சி வயசிலே தெரிஞ்சு போச்சு அதனால போனாப் போகுது  ஒன்னாம் வகுப்புல இருந்தே படிப்போம் என்னு அடுத்த நிமிசமே முடிவெடுத்திட்டேன்.

எதிர்காலத்துல ஒரு விஞ்ஞானியா இல்ல ஒரு வைத்தியனா இல்ல சமூகத்தில நல்ல அந்தஸ்துல வரப்போகிறேவன் எண்டு அட சி அதுவும் வேணாம் பிரபலமான பிகருகளையெல்லம் வச்சிருக்கிற பிரபல தாதாவா வருவானெண்டு ஒரு மருவாதை வேணாம் இந்த வாத்திகளுக்கு...

ஸ்கூல்ல சேர்ந்த அன்னைக்கே பாவி வாத்தி (நல்லா இருக்கனும்) பெரம்பால சாத்து சாத்தன்ன சாத்திப்போட்டான்...

பிகரொன்னு நல்லா இருக்கேன்னு கிட்ட போய் கிஸ்ஸு ஒன்னு கெடைக்குமா என்னுதாங்க கேட்டேன் அதுக்குப் போயி சாத்திப்பொட்டான்...

சாத்தாமலா விடுவான் கிஸ்ஸு கேட்டது அவன் பொண்டாட்டிக்கிட்ட இல்ல...
(நாங்கெல்லாம் அப்பவே அப்பிடின்னு இதத்தான் சொல்லுறது)

இந்த அதிர்ச்சியில இருந்து நான் மீளுறத்துக்குள்ள அடுத்த அதிர்ச்சி தலை மேல இடியா விழுந்திச்சுங்க...(பிரபல எழுத்தாளரெல்லாம் இப்பிடித்தான் சொல்லுவாய்ங்க.... :P )

பாவிப் பயலுகள் நம்ம திறமையை சோதிக்கனுமாம் என்னுட்டு எக்ஸாம் வைக்கப் போறதா ஸ்கூல்ல சேர்ந்து இரண்டாவது மாசத்துலே அறிவிச்சுப் போட்டானுகள்......

இங்க தாங்க விதி கன்னம் ஸ்டைல்ல டான்ஸ் ஆட ஆரம்பிச்சது.... :(

இந்த ரெண்டு மாசமும் நான் அதிர்ச்சியில இருந்ததால வகுப்புல என்ன நடந்ததெண்டே தெரியல்ல... அதிர்ச்சியில இருக்கும் போதே அடுத்த அதிர்ச்சி தகவல் கிடைச்சிச்சா அதனால நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயிட்டேன்.

நண்பன் ஒருத்தந்தான் தந்த மூனு பாட்டல் பீரைக் குடிச்சத்துக்கப்புறமாத்தான் சுய நெனவுக்கே வந்தேனெண்டா எப்படிப்பட்ட அதிர்ச்சியா இருக்கும்.
எக்ஸாமெண்டா என்ன கருமமென்றே எனக்குத் தெரியா... எப்பிடி எழுதுற எண்டு கூட தெரியாதுங்க. முதலாவது எக்ஸாம் தானே நான் யெல்பு பண்ணுரேண்டா மச்சி என்னு பீரு வாங்கித் தந்த நண்பன் சொன்னான். நமெக்கென்னு ஒரு கௌரவம் இருக்கில்ல அதனால நான் உடனே ஒத்துக்கெல்ல... பின்னாடி நண்பந்தானே சொல்லுறான் கடைசி வரைக்கும் தோல் கொடுக்கப் போறவன் அவந்தானே என்கிறதால ஒத்துக் கொண்டேன். 
எப்பிடியோ நண்பன் தயவுல மொதலாவது எக்சாமுல 4 சப்ஜெக்டுலயும் மொத்தமா 83 மார்க்கு எடுத்துட்டேன். ஸ்க்கூல் வாழ்க்கையில் இது ஒன்னுந்தான் எக்ஸாம் இனிமே எக்ஸாமேஇல்ல எண்டு நான் நினைச்சிருந்தேன். இது வருசக் கடைசி  எக்ஸாமில்ல எங்கிறதால இந்த  மார்குகளை பத்தி நீங்க கவலைப்படாம அடுத்த எக்ஸாமில எல்லோரும் நல்லா மார்க் வாங்கனும் அப்பதான் நீங்க இரண்டாம் வகுப்புக்குப் போவீங்க என்னு இன்னொரு அணு குண்டைத் தூக்கிப் போட்டாரு வாத்தி... 
அன்னைக்கு நானும் என் பீரு நண்பனுமா சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம். அந்த முடிவுலதான் ஆறாம் வகுப்பு வரைக்கும் படிச்சி  இன்னைக்கு மக்கள் நிமிந்து பார்க்கிற அளவுக்குப் பெரிய உத்தியோகத்தில இருக்கிறோமிங்க...
ஓK நானும் என் நண்பனும் என்ன முடிவு எடுத்தோமெண்டு யோசிக்கிறீங்களா ? அத சொல்லாமப் போயிடுவேனா என்ன... கீழுக்கு கொஞ்ச படம் சேர்த்திருக்கேன் அதைப் பார்த்து தெரிஞ்சிக்கோங்க :P








இந்த வருஷத்தின் கடைசிப் பதிவு... 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் புதிய வருடத்தில் புதிய பதிவுகளுடன் உறவுகளை சந்திக்கிறேன் 

Post a Comment

42 Comments

  1. ஆத்தி பிட்டு பிட்டு எப்படியெல்லாம் அடிக்குறாங்கா......நமக்கு இதுவெல்லாம் தெரியாமலேயே புடிச்சே....

    ReplyDelete
    Replies
    1. தெஞ்சா மட்டும் என்ன பன்னியிருப்பீங்க...
      பிட்டுக்கே பிட்டு வைச்ச பார்ட்டி இல்லோ நீங்க...
      பி பி சியில சொன்னாங்க...:P

      Delete
  2. 2012 கட்சி பதிவு கலக்கலுங்கோ....

    ReplyDelete
  3. இப்படியெல்லாமா ?

    சரியா போச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆமா இப்படியெல்லாம்தான் கவிதாயினி..
      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  4. பிட் ஆடிக்க இத்தனை வழிகளா ? மிஸ் பண்ணிட்டோமே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகை + பின்னூட்டம் கண்டதில் ரொம்ப சந்தோஷம்..
      உங்கள் வருகை தொடருந்தால் இன்னும் சந்தோஷமே
      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  5. இப்படி பிட் அடிச்சு கட்டுற பேஸ்மண்டில பில்டிங் ஸ்றோங்கப்பற்றி சொல்லவே வேணாம்...:)

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமா சொல்லவே தேவையில்ல ஏன்னா அது பற்றி எனக்கு நல்லாவே தெரியும்..
      உங்களுக்கு, உங்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  6. அட இப்படியெல்லாம் கூட பிட் அடிக்கிறாங்களா? இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் இப்படியெல்லாமில்ல இதவிடை அசிங்கமாவும்...
      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  7. புது வருடத்தில் தோல்வி மேகங்கள் விலக வெற்றிச்சூரியன் சுடர்விட வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை கண்டதில் சந்தோஷம்
      உங்களுக்குன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  8. அட மேலிருந்து கீழ் .நாலாவது படத்தில நீங்க கடைசிக்கு முதல் லைன்ல
    இருக்குறீங்க சரிதானே :) ,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ !.......

    ReplyDelete
    Replies
    1. அட எப்பிடிங்க கண்டுபிடிச்சீங்க :P
      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  9. அன்பரே. வணக்கம்
    எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதிவா இருக்கே வாழ்த்துக்கள்.

      Delete

  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete

  12. வணக்கம்!

    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    எல்லா வளங்களும் எற்று மகி்ழ்ந்திடுக!
    அல்லா அருளொளியில் ஆழ்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  13. ஒரு சின்ன பிட்டுக்கு எவ்ளோ பெரிய பதிவு.. ரசித்தேன் நண்பரே :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  14. ///சேர்த்துவிட்டது தான் விட்டார் பெரிய வகுப்பா பார்த்து சேர்த்து விட்டுரிக்கலாமில்ல... நேராவே ஒன்னாம் வகுப்புல கொண்டு போய் விட்டுட்டாரு
    ///

    ஹா..ஹா..ஹா.. அதானே?:) ஆனா அப்ப அப்படிச் சேர்த்திருந்தால் இப்போ சிட்டுவுக்கு குடும்பம் குட்டடீஸ்:) என்றெல்லாம் வந்திருக்குமாக்கும்..க்கும்..க்கும்.. சே.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:)

    ReplyDelete
    Replies
    1. ஒரு குடும்பம் குட்டியைப் பார்க்காம விடமாட்டீங்க போலிருக்கே...
      எனக்கு குடும்பம் குட்டி எல்லாத்தோடஒயும் இருக்கிற பீலிங்குதான் :P

      Delete
  15. //அதனால போனாப் போகுது ஒன்னாம் வகுப்புல இருந்தே படிப்போம் என்னு அடுத்த நிமிசமே முடிவெடுத்திட்டேன்.// ஆவ்வ்வ் மாத்தி ஓசிச்சிட்டீங்க:)

    ReplyDelete
  16. கீழே பல படங்கள் போட்டமைக்கு நன்றி சிட்டு:)).. நாங்களும்.. கடைப்பிடிக்கலாமெல்லோ அதை:)

    ReplyDelete
    Replies
    1. ஆமா மாத்தி ஓசிச்சோம் அதனாலதான் இப்பவும் ஓசிக்கிறோம்..:)

      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி பூஸாரே

      Delete
  17. ஊஹும்!உருப்படற வழியா இல்ல!

    ReplyDelete
    Replies
    1. உருப்படத்தான் பல வழிகளில் யோசிச்சி கடைசியா இதில் இறங்கினோமில்ல,
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி குட்

      Delete
  18. எங்கட தலைமுறை உங்கட பதிவைப் பாக்கவேணுமே ஒருக்கா.நல்லா வந்திடுவினம் !

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..
      இப்பவேவா... நல்லா வருவாங்க....
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

      Delete
  19. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ

      Delete


  20. பிட்டு பதிவு அருமை. இதெல்லாம் எனக்குத் தெரியாம போயிடுச்சி.
    தெரிஞ்சிருந்தா.... அப்பவும் எதுவும் செய்ய முடியாது.
    நம்ம வாத்திகள் ரொம்ப ஷ்டிரிட்டு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    என் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் சிட்டு.

    ReplyDelete
    Replies
    1. வாத்திகள்ள மண்டையப் பொழக்கனும் முதல்ல... அப்பிடித்தானே..:)

      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  21. அடேயப்பா பிட்டில் இத்தனை வகைகளா?கலக்கிட்டீங்க போங்க!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete