ஜாலியா ஜல்சா பண்ணி கன நாளாப் போச்சுப்பா...

ஹையோ ஹையோ...
என்னத்தைய சொல்லுறது ஒரு மண்ணும் புரியமாட்டேங்குது...
புரிஞ்சா மட்டும் என்ன பண்ணிடுவ என்னு மட்டும் கேட்டுடாதீங்கோ...
அப்புறமா என ஜாவுக்கு நீங்கதான் மூலகர்த்தா என்னு எழுதிச் தொலைச்சிட்டு நெலாவுக்கு எஸ் ஆவிடுவேன்......பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சும்மா ஒரு தமாசுக்கு பதிவொன்னு போடுவோம் என்னு நெனைக்கிறச்சே நெனைக்கிறச்சே......... ஒரு மண்ணும் வரல்லீங்க அததான் மொதல்லே ஜொல்லிப்புட்டேன் ஒரு மண்ணும் புரியுது இல்லீங்க என்னு.....

எங்காத்தா அடிக்கடி என்கிட்ட சொல்லுவா பேராண்டி பேராண்டி....
எங்காத்தாவுக்கு நான் ஒருத்தன் தான் பேராண்டி என்னையத்தான் இரண்டு முறை எங்காத்தா கூப்பிட்டா ... பயப்புள்ளையலுக்கு எல்லாத்தையுமே வெவரமாச் சொல்லவேண்டியிருக்குது..... :(

நீ சின்ன வயசில இருக்கும் போது ஒனக்கு நெலாவக் காட்டி சோறு ஊட்டுவேனா அப்பெவெல்லாம் நீ அந்த நெலாவுல இருக்கிறது யாராத்தா என்னு ரொம்பப் பாசமாக கேப்பே.....

அப்பவெல்லாம் ஒனக்குச் சோறு ஊட்டனுமே எங்கிறத்துக்காக அண்டப் பொய், பச்சைப் பொய்யெல்லாம் சொல்லி...........

விடாத்தா நீ சொன்னது அண்டப் பொய்யின்னு எனக்கு அப்பவே தெரியும் இப்ப எதுக்கு அந்த புராணத்தைத் தூக்கிற.... பேசாம போறியா.......

யெப்பிடி ராசா நான் அப்ப சொன்னது அண்டப் பொய்யின்னு நோக்குத் தெரிஞ்சுது....

நெலாவுல இருக்கிறது நீயும் நானும் என்னு சொன்னியே....பக்கத்துல இருக்கிற பாய் கடைக்கே கூட்டிட்டுப் போக துப்பில்லாத நீ நெலாவுக்கா என்னைய கூட்டிட்டுப் போயிருப்பே..... ஏதோ நீ கொடுக்கிற சோத்துக்காக நீ சொன்னதையெல்லாம் நம்பினேன்..... எங்கப்பன் அப்பவே எனக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்திருந்தான்னா  அப்பவே உன்ன சுட்டுக் கொண்டிருப்பேன்.... விடு வியித்தெரிச்சல கெளப்பிக் கொண்டு......

ஆத்தாவ அப்பிடியெல்லாம் சொல்லப்படாது ராசா...

சரி சரி மேட்டர சொல்லு ....

ஒனக்கு நெலாவா நான் காட்டும் போதெல்லாம் அந்த நெலாவ அப்பிடியே ஒரு ரொமாண்டிக் லுக்கு விடுவியே..... யப்பா.....பா ஆஆஆஆ அத வர்ணிக்க வார்த்தையேயில்லை......

ஆத்தா அதையெல்லாம் நீ பார்த்தியா.....
ஆமா ராசா அந்த லுக்கப் பார்க்கிறத்துக்காகவே ஒனக்கு சோறு ஊட்டிக்கின்னே இருப்பேன். நீயும்  அப்பிடியே கனவுலகத்துல நிலாவோட ஒரு டூயட் பாடிக்கிட்டு எதியோப்பியா சோமாலியா உகண்டா நைஜீரியா என்னு சுத்திக்கிட்டு வருவே ......


ஆத்தா நான் கனவுல எதியோப்பியாதான் போனேன்னு நோக்கு எப்பிடித் தெரிஞ்சுது....

அதுவா அதுவா....... விடு ராசா அத நெனைக்கிறச்சே நேக்கு வெக்கமா வருகுது

சரி விடு அப்பவே எதையோ வச்சி என்னைய உஷார் பண்ணியிருக்கே ...

முன் வீட்டு பார்வதி மாமி மகள் நிலாவோட வந்து நின்னியே ஒரு நாள்..... அப்பதாண்டா புரிஞ்சுகின்னேன் நீ லுக்கு விட்டது அந்த நெலாவுக்கு இல்ல இந்த நிலாவுக்கு என்னு.....

நீ உங்க தாத்தா மாதிரி என்னு உங்க அம்மாக்கிட்ட  அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பேன். அவாள் நோக்கு ஏசுவாள் அந்தாள என் புள்ளைக்கு ஒப்பிடாதேன்னு நான் அழகை வச்சித்தான் ஒன் தாத்தாவுக்கு ஒப்பிட்டேன் நீ நிலாவ கூட்டிவந்து அழகுல மட்டுமில்ல கில்மா வேலைகள் எல்லாத்திலயுமே  ஒன் தாத்தா மாதிரிதான் என்னு நிரூபிச்சிட்டியே....

இப்ப எதுக்கு இந்த சிவாஜி சார் டயலொக் எல்லாம் என்னு கேக்குறீங்களா...
நான் ஒரு வயசில இருந்தே நிலாவுக்கு லுக்கு விட்டு இப்போ ஒரு வயசுப் பையனானதுக்கப்புறம் பக்கத்து வீட்டு நிலாவ கூட்டிட்டு வந்தது ஒலகம் பூராவும் தெரிஞ்சு போயி எல்லா  டி வீ சேனல்ஸ்லயிருந்தும் இன்ரெவியூ பண்ண வரப்போறதா அந்த நெலாவுல இருந்து தந்தி வந்திருக்கு...

நான் இதுக்கு முன்னாடி எந்த இன்ரெவியூலயும் கலந்துகொண்டது இல்லை உண்மையச் சொல்லப் போனா எனக்கு இன்ரெவியூ என்றா என்னவென்றே தெரியாது. மேட்டரை யாரிட்டையும் சொல்லி மானத்தை வாங்கிடாதீங்கோ

ஆமா இந்த இன்ரெவியூ என்றா என்னேன்னு ஆத்தாவுக்கிட்ட கேட்டேன் அது சாப்பாட்டு வகையில ஒன்னு ராசா ஒனக்கு பரிசா தாரத்துக்கு வரப் போறாங்க போல என்னு சொல்லிச்சு... எனக்கு ஆத்தா சொன்னதுல திருப்தியில்லை அதனாலதான் உங்ககிட்ட கேக்குறேன் ......
இன்ரெவியூ எண்டா என்னப்பா.......

எதோ எனக்கு எல்லா நாளுமே ப்ரீரீரீரீ..... இன்னைக்கு மட்டும் வேலை இருந்திச்சா அதுதான் இப்பிடி எழுதிப் பார்ப்போமே என்னு யோசிச்சேன்....


27 கருத்துரைகள்

ஆத்தா என்னவெலாம் சொல்லி புள்ளய ஏமாத்தியிருக்குப்பா...... அடடா ஆமா அது என்ன பா இன்ரவியூ.. சரி சரி நல்லா நெறைய படிச்சா மக்கா யாராவது வந்து சொல்வாக கேட்குக்கலாம்.

Reply

அடடா எல்லாத்துக்கும் ஆத்தா தா காரணமா?அப்போ வளப்பில தா ஏதோ தப்பிருக்கு.மூசா மாமா உங்க பிள்ளைக்கு நிலாவ காட்டுவீங்க?????இண“டா்வியு னா பெட்டி கீறி கல்லு அடுக்கி விளாடுற விளாட்டு ராசா.

Reply

ஆத்தா நல்லாருக்கட்டும், உங்களுக்கு இப்படில்லாம் சொல்லிகொடுக்கவில்லை என்றால் இன்னைக்கு இப்படி பதிவு எழுதி இருக்கமாட்டீங்க..:-)))))))))))))))

Reply

இன்னைக்கு மட்டும் வேலை இருந்திச்சா அதுதான் இப்பிடி எழுதிப் பார்ப்போமே என்னு யோசிச்சேன்....//விளாட்டு ராசா.

Reply

ஜாலியான பதிவுதான்! வாழ்த்துக்கள்!

Reply

அப்பு உங்களை மட்டுமில்ல நிறைய பேரை நிலவுல பாட்டி வடை சுடுது பாருன்னு சொல்லியே உள்ளே திணிப்பாங்க நம்ம நல்லதுக்குத்தானே அப்படி செய்தாங்க

Reply

யோவ் ஏனய்யா ஏன் ,.. இப்படி ...
படிச்சி கொஞ்சம் இல்ல நெறையவே மெர்சலாகிட்டேன் ...
(நல்லா வருது, அப்ப அப்ப இப்படி ஒன்னு எடுத்து விடு .. )

Reply

//அப்பிடியே கனவுலகத்துல நிலாவோட ஒரு டூயட் பாடிக்கிட்டு எதியோப்பியா சோமாலியா உகண்டா நைஜீரியா என்னு சுத்திக்கிட்டு வருவே ......//

மெய்யாலுமாவா?
4 கன்றிஸ்
ஓசி கோயிங்..
OMG

Reply

முன் வீட்டு பார்வதி மாமி மகள் நிலாவோட வந்து நின்னியே ஒரு நாள்..... அப்பதாண்டா புரிஞ்சுகின்னேன் நீ லுக்கு விட்டது அந்த நெலாவுக்கு இல்ல இந்த நிலாவுக்கு என்னு.....

அப்பவே அப்பிடியா...? பேஷ் பேஷ்...

Reply

ungalukku puriyalaya...

ada ponga yenakkum puriyala...

Reply

எப்புடிங்க இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க.. நல்ல பதிவு

Reply

நடத்து ராசா நடத்து.

Reply

Sasi KalaDecember 10, 2012 11:50 AM

சரி சரி நல்லா நெறைய படிச்சா மக்கா யாராவது வந்து சொல்வாக கேட்குக்கலாம்.
/////////////////////////////

ஆமா கவிதாயினி இங்கனே நிறைய படிச்சவங்க இருக்காங்களாமே வரட்டும் வரட்டும்...:)

Reply

Raja RojaDecember 11, 2012 9:03 AM

ungalukku puriyalaya...

ada ponga yenakkum puriyala...
/////////////////////

ரொம்பக் குசும்புதான் உங்களுக்கு..... :)
முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

ராக்கோழி வாங்கோ.....
கன நாளாப் போச்சே உங்கள கண்டு நம்மளை மாமாவே ஆக்கிட்டீங்களா..... அவ்வ்வ்வ்வ்
அந்த மாதிரி மாமா இல்லியே...

அடடா விளையாட்டா அது பெட்டியில இலக்கமெல்லாம் போட்டு விளையாடுவாங்களே அதுவா அச்சச்சோ இப்பதான் புரியுது அப்போ சின்ன வயசிலே நான் நிறைய இன்ரெவியூ பார்த்திருக்கேனே......

ரொம்ப நாளின் பின்னான வருகையில் சந்தோஷம்

Reply

ஹா ஹா ஹா......
எல்லாம் ஆத்தா ஆசீர்வாதம் எங்கிறீங்க...
மிக்க நன்றி சகோ

Reply

ஹா ஹா ஹா.....
நெசமாலுமே விளாட்டுதானாக்கும்....
மிக்க நன்றி சகோ

Reply

மிக்க நன்றி சார் :)

Reply

ஆமா அய்யா நல்லதுக்குத்தான் செய்தாங்க...
சாப்பாட்டே திணிக்கும் போது உதரிவிட்டா விழுமே ஒரு அடி யப்பா இப்ப நினைச்சாலும் நடுங்குது....
பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் ஐயா

Reply

ரொம்ப பிஸியோ அடிக்கடி லீவு விட்டுடுறீங்க.......
மிக்க நன்றி இடைவெளியின் பின் பின்னூட்டம் கண்டதில்

Reply

வாங்க சார் வாங்க......
அப்பப்ப ஒன்னு எடுத்துவிடயா....... இங்க பார்ரா அட மறுபடியும் பார்ரா....
மிக்க நன்றி சார்

Reply

4 கன்றீஸ்
ஹையோ ஹையோ...இன்னமும் சின்னப்பிள்ளைத்தனமாவே....
நோ ஒன்லி ஓசி கோயிங்...
ஓசி பிளஸ் ஏசி கோயிங்..

Reply

பலே பலே.....

மறுபடியும் சொல்லுறேன் நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி
மிக்க நன்றி

Reply

ரொம்ப நாளைக்குப் பின் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்...
எல்லாமே மூக்கு கொஞ்சம் பொடைப்பா இருக்கிறதாலதான்...

மிக்க நன்றிங்க ரொம்ப நாளின் பின் நம்ம பக்கம் வந்ததுக்கு

Reply

வாங்க ஐயா....
ஆசிர்வாதமோ :)

மிக்க நன்றி ஐயா

Reply

இன்ரவியூவுக்காக நல்லாத்தயார் பண்ணிக்குங்க!:):)

Reply

Post a Comment