விசாலமான புல் வெளி...
கருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது. தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த அழுது தீர்க்கிறது பனித்துளிகளை.
சிந்திய பனித்துளிகளை தன் நுனி உடம்பில் வைத்திருந்தன பச்சை நிறப் புற்கள்
சில வேளைகளில் பச்சைநிற புற்களுக்கு பனிமேகத்தின் மீது காதல் வரவில்லை போலும்.
பனிமேகம் கருமைநிறத்தினால் இருப்பதனால் பிடிக்கவில்லையோ
பச்சை நிற புற்களின் பிடிப்பில்லா செயல் கண்டு கருமைமேகம் கவலை கொள்கிறது.தன் காதலை வெளிப்படுத்த வேறு ஏதும் மார்க்கமுண்டோ சிந்திக்கிறது.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததனால் தன் பயணப் பாதை பிழைத்து விடுகிறது. தன் ஆசை அம்மா காலை உணவுடன் தனக்காக காத்திருப்பாள். தன்னைக் காணாமல் தம்பி கூட உணவருந்தாமல் அடம்பிடிப்பான். எழுபதாயிரம் படைகளுடன் என்னைத்தேடி என் அப்பா ஆகாயம் முழுவதும் இப்போது அலைந்து கொண்டிருப்பார். தன் குடும்ப சிந்தனை நாலா புறமும் சூழ்ந்துகொள்ள கருமை மேகம் அழுகையை வெளிப்படுத்துகிறது மழைத்துளிகளாய்...
தன் ஆசைக் காதலியுடன் சேவல் கூவும் பொழுதுவரை அலைபேசியில் அளவலாவிவிட்டு அம்மாவின் சேலையினை போர்வையாய் கொண்டு பொழுது விடிந்ததும் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கிறான் வாலிபன் ஒருத்தன்.
கூரையின் ஓட்டைவழியே விழுந்த பனிமேகத்தின் கண்ணீர்த்துளியில் திடுக்கிட்டவனாய் எழுந்தவன் பொழுது புலர்ந்திருப்பதை உணர்கிறான். தன் அறையைவிட்டு அகன்று முற்றத்திற்கு வருகிறான் பனிமேகத்தின் கண்ணீர்த்துளிகள் முற்றத்தை நனைத்திருப்பதைப் பார்த்தவன் உள்ளத்தில் ஒருவித இனம்புரியாத உணர்ச்சி எழுகிறது.
இந்த உணர்ச்சியை ஒரு பொழுதில் அவனும் உணர்ந்ததாய் ஞாபகம். சிந்திக்கிறான் இன்னும் ஆழமாய் சிந்திக்கிறான். காதலியிடம் முதன்முதலில் தன் காதலை வெளிப்படுத்தும் போது காதலி அதனை பொடுபோக்காக எடுத்துக் கொண்டதனால் அவனுள் எழுந்த உணர்ச்சிதான் அது.
முற்றத்தை நனைத்திருப்பது மழைத்துளியல்ல மேகத்தின் கண்ணீர்த் துளி என்பதை உணர்கிறான்.தன் தலையை உயர்த்தி மேகத்தை நோக்குகிறான். மேகம் தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதாய் உணர்கிறான். நம்பிக்கையில்லாமல் மேகத்தினை கீழே வருமாறு சைகை செய்கிறான். என்ன ஆச்சரியம் மேகம் கீழிறங்கி அவன் முன்னால் நிற்கிறது.
மேகத்தின் நிலை பற்றி தெரிந்துகொள்ள பேச்சுத் தொடுக்கிறான். மேகமும் தன்னுடைய காதல் பற்றியும் தான் தற்பொழுது இடம் மாறி வந்திருப்பது பற்றியும் கூறி தன் கவலையை வெளிப்படுத்துகிறது.
மேகத்திற்கு ஆறுதல் வார்த்தைகள் மொழிந்துவிட்டு தனக்கு அந்த புல்வெளி அமைந்திருக்கும் இடம் தெரியுமென்றும் மாலைப் பொழுதில் தன் காதலியுடம் அங்கே தான் அவன் இருப்பதாகவும் கூறிவிட்டு மேகத்தை அவ்விடம் அழைத்துச் செல்வதாகவும் உறுதியளிக்கிறான் வாலிபன்.
பின்னும் மேகத்திடம் அனுமதியளித்தால் உன் காதல் பற்றி புல் வெளியிடம் நான் பேசுகிறேன் என்றும் அனுமதி வாங்கிக் கொள்கிறான்.
மேகமும் வாலிபனும் புல்வெளி நோக்கி பயணிக்கின்றனர். காற்றுக்கு திசை சொல்லும் மேகத்திற்கு வழி சொல்லிச் செல்கிறான் வாலிபன். காதல் வந்தால் காணுமிடமெல்லாம் காக்காய் போன்று குந்தித் திரியனுமோ என எண்ணுகிறது கன்னிக் கருமை மேகம்.
புல்வெளியை இருவரும் அடைகின்றனர்
புல்வெளியை அடைந்தவன் உள்ளத்தில் ஒருவித புத்துணர்ச்சி இதுவரை அவன் தன் காதலியுடன் புல்வெளியில் இருக்கும் போது உணராத ஒருவித இன்பத்தையும் வித்தியாசத்தையும் உணர்கிறான்.
காலையில் ஒருபோதும் அவன் புல்வெளிக்கு வந்தது கிடையாது. அதனால் காலைவேளையில் வந்தால் இப்படித்தான் புத்துணர்ச்சியாய் இருக்குமோ என எண்ணிக் கொள்கிறான்.
மேகத்தைத் திரும்பிப் பார்க்கிறான். புல்வெளியிடம் செல்ல வெட்கப்பட்ட மேகம் அவனை செல்லுமாறு சைகை செய்கிறது. புரிந்தவனாய் புன்னகையோடு புல்வெளி மீது கால் பதிக்கிறான்.
அவனுடைய கால் புல்வெளி மீது பட்டவுடன் அவனுடைய உரோமங்கள் அனைத்தும் நிமிர்ந்து கொள்கின்றன. அவன் அனிந்திருந்த ஆடை முழுவதும் புற்களின் நிறத்திற்கு மாற்றமடைகின்றன. இது அவனுக்கு புது அனுபமாய் என்றும் உணராததாய் இருந்தது.
புல்வெளியினுள் நுழைந்தவன் தான் வந்த நோக்கத்தை மறந்து இன்பத்தில் மூழ்கிவிடுகிறான். புல்வெளியினுள் அவன் மட்டுமே இருப்பதாய் உணர்கிறான். காலையில் புலரும் பூக்களுடனும் வண்ணத்துப் பூச்சிகளோடும் உறையாடிக் கொள்கிறான். புத்தம் புதிய தேனை வண்டுகள் அவனுக்கு சுவைக்கக் கொடுத்தன.
இந்த மாயயை எங்கிருந்துதான் பெற்றுக் கொண்டனவோ புல்வெளிகள். இவற்றையெல்லாம் சிந்திக்க மறந்து புல்வெளியின் இன்பத் தோற்றத்தில் மூழ்கிவிடுகிறான்.
தேனை சுவைத்தவனை மயக்கம் அழைத்துக் கொள்கிறது.
கருமை மேகமோ தான் அனுப்பிய தூதுவன் சாதகமான செய்தியுடன் வாருவான் என எண்ணிக்கொண்டிருந்தது.கருமை மேகத்தின் மனதில் எதிர்கால வாழ்வுபற்றிய எண்ண ஒட்டம் பல மணி நேர திரைப்படமாய். அங்கே நாயகனாய் கருமை மேகமும் நாகயகியாய் புல்வெளியும்தான். படமுழுவதும் இருவரும்தான்.
தன் கடமையினை நேரந்தவராது செய்யும் கதிரவன் அடிவானிலிருந்து சமூகளிக்கிறான் . கதிரவனைக் கண்டதும் புல்வெளி தன் வினோதங்களை மறைக்கிறது ஏனோ தெரியவில்லை. முன்பொருமுறை புல்வெளிக்கும் கதிரவனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைதான் காரணமாக இருக்கலாமோ தெரியாது.
கதிரவனைக் கண்ட கருமை மேகமும் தன் எதிரியைப் பார்த்தது பயந்தது போல் இனிமேலும் தூதுவன் நல்ல செய்தியுடன் வருவான் என்ற எதிர்பார்ப்பையும் விட்டுவிட்டு அவசர அவசரமாக தன் வீடு செல்ல தயாராகிறது மனதில் வலிகளுடன்.
இவற்றையெல்லாம் அறியாத கதிரவன் திடீரென அடிவானிலிருந்து ஈட்டியளவு உயரத்திற்கு வந்துவிட்டான். தன் உடம்பில் கதிரவன் வெப்பம் கண்டு வாலிபன் மயக்கம் தெளிகிறான். நடந்தது எவையும் நினைவில் வரவில்லை. தான் புல்வெளிக்கு எப்படி வந்ததென ஆழமாக சிந்திக்கிறான்.
யாரோ ஒருவரோடு உரையாடிய ஞாபகம் மட்டும் அவன் மனதில் நின்றிருந்தது. அது காதல் தொடர்பானதுதான் என்பதையும் அவன் மறக்கவில்லை.
சிந்தித்துக் கொண்டிருந்தவன் நெற்றியில் மழைத்துளியின் ஒரு சொட்டு விழுகிறது. திடுக்கிட்டவன் அச் சொட்டு மழைநீர் கண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்கிறான்.
அவன் கருமை மேகத்திற்கு செய்த துரோகம் அவன் நினைவுக்கு வருகிறது. சில வேளை கருமை மேகம்தான் அழுகிறதோ என்றெண்ணி அவனும் அழுகிறான்.
தன் காதல் தோல்வியால் இன்றும் அடிக்கடி அழுது தீர்க்கிறது கருமை மேகம். அவனும் சேர்ந்து அழுகிறான். ஒரு வேளை இவனும் தோற்றுவிட்டானோ காதலில்...
மேட்டர் அது ஒன்னுமில்லப்பா இப்ப எங்க ஊர்ல மழை சீசன் ஆரம்பமாகிச்சா...அதுதான் இப்படி குதர்க்கமா யோசிச்சேன் இனிமேலும் இப்படி சில யோசனைகள் வெளிப்படும். ஆகவே இன்றிலிருந்தே ரெடியாகுங்கோ நம்மட மொக்கைகளைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும்...
( இதுக்கு முதல் இவர் நல்ல பதிவுதானாக்கும் போட்டார்...:P)
35 Comments
நல்ல வர்ணனைக் கதை இருப்பினும் இறுதில் வந்த்ததே ஒரு பல்டி..ஹஹ
ReplyDelete
ReplyDeleteநல்ல வர்ணனைக் கதை!நீளம் அதிகம் உருவகம் சற்று சுருக்கமாய் அமைதல் நலம்.
மிக அழகான, அற்புதமான கற்பனை வளம் நண்பரே! கவிதையாய் வடித்திருப்பின் இதன் அழகோ தனி!
ReplyDeleteஅடுத்தமுறை விருப்பமிருந்தால் முயற்சித்து பாருங்கள்! நன்றி!
குருவி, ம்..நல்லாத்தாம்யா இருக்க்கு
ReplyDeleteமொக்கை மொக்கையா போட்டு தாக்குங்க
சிட்டுக்குருவி.... மழை வருவதற்கு
ReplyDeleteஇப்படியெல்லாம் காரணம் கற்பிப்பீரோ...?
இருந்தாலும் வித்தியாசமான சிந்தனை.
தொடருங்கள். வாழ்த்துக்கள் சிட்டு.
மழைக்காலக் கற்பனை அழகிய வர்ணனைகளுடன்.
ReplyDeleteஆமாங்க கவிதையாக சொல்லியிருந்தால் 100 மார்க் உண்டு.
ReplyDeleteநல்லா இருக்குங்க...
ReplyDeleteஅருமையான வர்ணனை... தொடருங்கள். மழை மேக கலக்கத்தையும் புல்வெளியின் அழகையும் அழகாக கூறியுள்ளீர்கள்...
ReplyDelete// இதுக்கு முதல் இவர் நல்ல பதிவுதானாக்கும் போட்டார்...// ஆனா உண்மையிலேயே நல்ல பதிவு தல, ரசிச்சுப் படிச்சேன்,ம அது ஏன் நீங்க காதல் தொளிவ் கவிதை கட்டுரைகளாவே எழுதுறீங்க
ReplyDelete@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
ReplyDeleteநல்ல வர்ணனைக் கதை இருப்பினும் இறுதில் வந்த்ததே ஒரு பல்டி..ஹஹ
_________________________________________________
சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteநல்ல வர்ணனைக் கதை!நீளம் அதிகம் உருவகம் சற்று சுருக்கமாய் அமைதல் நலம்.
________________________________________________
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் ஐயா
நிச்சயமான உங்கள் ஆலோசனைப்படி செய்ய முயற்சிக்கிறேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா
வே.சுப்ரமணியன்.
ReplyDeleteமிக அழகான, அற்புதமான கற்பனை வளம் நண்பரே! கவிதையாய் வடித்திருப்பின் இதன் அழகோ தனி!
அடுத்தமுறை விருப்பமிருந்தால் முயற்சித்து பாருங்கள்! நன்றி!
_______________________________________________
வாங்க நண்பரே உங்கள் வருகை கண்டதில் மிக்க மகிழ்ச்சி
நிச்சயமாக உங்கள் ஆலோசனைப்படி செய்ய முயற்சிக்கிறேன் உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
நண்பரே உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்
@ முத்தரசு
ReplyDeleteகுருவி, ம்..நல்லாத்தாம்யா இருக்க்கு
மொக்கை மொக்கையா போட்டு தாக்குங்க
___________________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்
@ அருணா செல்வம்
ReplyDeleteசிட்டுக்குருவி.... மழை வருவதற்கு
இப்படியெல்லாம் காரணம் கற்பிப்பீரோ...?
இருந்தாலும் வித்தியாசமான சிந்தனை.
தொடருங்கள். வாழ்த்துக்கள் சிட்டு.
__________________________________________
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி
இல்லங்க மூனுநாளா ஒரே மழையா இருந்திச்சா அதுதான் இப்பிடி யோசிச்சேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க
@ மாதேவி
ReplyDeleteமழைக்காலக் கற்பனை அழகிய வர்ணனைகளுடன்.
________________________________________________
அடிக்கடியான உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது
வருகைகும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ Sasi Kala
ReplyDeleteஆமாங்க கவிதையாக சொல்லியிருந்தால் 100 மார்க் உண்ட
_______________________________________
ஆமாங்க முன்னரும் இப்படி சில கவிகள் சொல்லியிருந்தேன் இது சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என்றுதான்
இனிமேலும் கவிதையாக தந்து உங்கள் கழுத்தை அறுப்பதாய் முடிவு பண்ணிவிட்டேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteநல்லா இருக்குங்க...
__________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்
@ இரவின் புன்னகை
ReplyDeleteஅருமையான வர்ணனை... தொடருங்கள். மழை மேக கலக்கத்தையும் புல்வெளியின் அழகையும் அழகாக கூறியுள்ளீர்கள்...
_________________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ சீனு
ReplyDelete// இதுக்கு முதல் இவர் நல்ல பதிவுதானாக்கும் போட்டார்...// ஆனா உண்மையிலேயே நல்ல பதிவு தல, ரசிச்சுப் படிச்சேன்,ம அது ஏன் நீங்க காதல் தொளிவ் கவிதை கட்டுரைகளாவே எழுதுறீங்க
__________________________________________________
என்னாது காதல் கவிதை கட்டுரையா
நமக்கு அதெல்லாம் வராதுப்பா ஏது முடிஞ்சது கொஞ்சம் அவ்வளவுதான்
னிமேலு வேற வெறைட்டில தர முயற்சிக்கிறேன் நண்பா
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
எது எப்படியோ?வர்ணனைகள் சிறப்பாக வந்தன.படிக்கச் சுவை!
ReplyDeleteகவிதை/கதை கலக்கல்...ரசித்தேன்...
ReplyDeleteமழையும் புல்வெளியும் அருமையாக உருவகம் கொடுத்து சிறப்பாக உணர்வைத்தூண்டிய பதிவு சகோ! தொடருங்கள் இது மொக்கை அல்ல சிலிர்ப்பு மிக்க பதிவு!நிஜமாக!
ReplyDelete//மேட்டர் அது ஒன்னுமில்லப்பா இப்ப எங்க ஊர்ல மழை சீசன் ஆரம்பமாகிச்சா...அதுதான் இப்படி குதர்க்கமா யோசிச்சேன் இனிமேலும் இப்படி சில யோசனைகள் வெளிப்படும். ஆகவே இன்றிலிருந்தே ரெடியாகுங்கோ நம்மட மொக்கைகளைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும்...//
ReplyDeleteஇது ரொம்பப் புய்ச்சிருக்கு:)
இப்ப கொஞ்ச நாட்களாக ரொம்ப சீரியசாக சிந்திச்சு, காதல், கவிதை எனக் கலக்குறீங்க... நகைச்சுவை குறைந்தமாதிரி ஒரு உணர்வு:)..
ReplyDeleteஇதுவும் சூப்பர்... நல்ல கற்பனை.. மழை வந்தாலே எல்லோருக்கும் கற்பனை வந்திடுது:)
கருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது.
ReplyDeleteஎனக்கு பிடித்த வரிகள்..நல்லயிருக்கு பதிவு
ஓ..கவிதையை இப்படிக் கூட எழுதலாமோ..... நல்லாருக்கு...ரொம்ப ரசித்து வாசித்தேன்...:))
ReplyDelete@ குட்டன்
ReplyDeleteஎது எப்படியோ?வர்ணனைகள் சிறப்பாக வந்தன.படிக்கச் சுவை!
______________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி குட்டரே
@ ரெவெரி
ReplyDeleteகவிதை/கதை கலக்கல்...ரசித்தேன்...
_________________________________________________
நீண்ட இடைவெளிக்குப் பின்னான வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ தனிமரம்
ReplyDeleteமழையும் புல்வெளியும் அருமையாக உருவகம் கொடுத்து சிறப்பாக உணர்வைத்தூண்டிய பதிவு சகோ! தொடருங்கள் இது மொக்கை அல்ல சிலிர்ப்பு மிக்க பதிவு!நிஜமாக!
________________________________________________
யப்பா நெஞ்சில பால வார்த்தீங்க....
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
@ athira
ReplyDeleteஇது ரொம்பப் புய்ச்சிருக்கு:)
_______________________________________________
கவணம் நாக்குல் புய்ச்சிக்கும்.:)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்ப கொஞ்ச நாட்களாக ரொம்ப சீரியசாக சிந்திச்சு, காதல், கவிதை எனக் கலக்குறீங்க... நகைச்சுவை குறைந்தமாதிரி ஒரு உணர்வு:)..
இதுவும் சூப்பர்... நல்ல கற்பனை.. மழை வந்தாலே எல்லோருக்கும் கற்பனை வந்திடுது:)
__________________________________________________
ஐயோ அது முடியாத காரியமாச்சே நமக்கு நகை + சுவை தான் வாடிக்கை...... இருந்தாப் போல இப்பிடி பதிவுகளும் போட்டு நம்ம பவர உலகத்துக்குக் காட்டிக்கனுமே என்னு உள்ளுணர்வு சொல்லிச்சு அதுதான் இப்பிடி...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸ்
@ indrayavanam.blogspot.com
ReplyDeleteகருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது.
எனக்கு பிடித்த வரிகள்..நல்லயிருக்கு பதிவு
_______________________________________________
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
@ enrenrum16
ReplyDeleteஓ..கவிதையை இப்படிக் கூட எழுதலாமோ..... நல்லாருக்கு...ரொம்ப ரசித்து வாசித்தேன்...:))
_________________________________________________
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
முற்றிலும் மாறுபட்ட கற்பனை வளம் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் பதிவுகளை எதிர்பார்த்திருக்கின்றேன் ஆசையுடன் படிப்பதற்கு
ReplyDelete@ பிரியமான தோழி ஷியா
ReplyDeleteமுற்றிலும் மாறுபட்ட கற்பனை வளம் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் பதிவுகளை எதிர்பார்த்திருக்கின்றேன் ஆசையுடன் படிப்பதற்கு
______________________________________________
மிக்க நன்றி தோழி வாழ்த்துக்கு
உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் கூடவே நன்றி சொல்லிக்கிறேன்