உள்ளத்தில் ஏதோ ஒன்று...
சரியா தவறா என்று கூட புரியவில்லை
ஆழ் மனதிலிருந்து எச்சில் படுத்த
ஆசை கொள்கிறேன்...
விரைந்து வரைகிறேன் உள்ளத்தில்
சிக்கியதை காகிதங்களில்...
மறு நாள் உரிமையாளன் வேறு ஒருத்தனாக இருக்க
என் உள்ளக் குமுறல்களைக் காண்கிறேன்
பத்திரிகைகளில்...
இது எப்படி சாத்தியமானது...
குழம்பிப் போகிறேன் தெளிவுக்கு
பல மணி நேரம் தனியாக சிந்திக்கிறேன்
எனக்கு நண்பர்களுமில்லை உறவுகளும் இல்லை
அவைதான் உள்ளத்தில் ஏதோ ஒன்று
தோன்றுவதுக்கும் அடிப்படையாகியது அப்படியிருக்க
என் உளத் தோன்றுதல்களை திருடியது யாராகவிருக்கும்
கவிஞர்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்
அவர்கள் மிகப் பெரிய சூனியக் காரர்களாமே...
அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர்
கொடுக்க யுத்தம் கூட செய்வார்களாம்
பெருமைப் பட்டேன் யாரோ எப்பவோ
என் எழுத்தைப் பார்த்து கவிதை என்று
கூறியதைக் கேட்டு நானும்
கவிஞனாய் இருப்பதையெண்ணி
அவமானப் படுகிறேன் ஒரு
இடத்தில் திருட்டு கவிஞர்களும்
இருப்பதாக சிலர் பேசிக்கொண்டது என் செவிகளுக்குள்...
நிச்சயமாக இவர்கள் தான் என் தோன்றுதல்களை
திருடியிருக்க வேண்டும்...
இல்லாவிட்டால் என் தோன்றுதல்களும்
அவர்களது எழுத்தும் எப்படி
ஒன்றாகவிருக்கும்..
34 Comments
கவிதை நல்ல இருக்கு அதை விட தலைப்பு ரொம்ப டேரராக இருக்கு
ReplyDeleteஅட அது தானே !
ReplyDeleteஇதயத்தைத் திருடுவதை ஒப்புக் கொள்ளலாம் ...
ஆனால் அதன் ஆழத்தில் இருந்து வரும் கவிதையை .. !!!???
திருடி , காதலியிடம் சொன்னால் சரி,
ஏதோ நம்மால் முடிந்த உதவி அவர்கள்
இணைய என்று விட்டுக் கொடுக்க வேண்டியது தான் ...
நிச்சயமாக இவர்கள் தான் என் தோன்றுதல்களை
ReplyDeleteதிருடியிருக்க வேண்டும்...
இல்லாவிட்டால் என் தோன்றுதல்களும்
அவர்களது எழுத்தும் எப்படி
ஒன்றாகவிருக்கும்..///////
அதானே? அருமையான கவிதை! சிறப்பான ஃபினிஷிங்!
நல்ல வரிகள்...
ReplyDeleteஇது உண்மை என்றால் எதற்கும் இங்கு சென்று பார்க்கவும்... உதவக் கூடும்...
1. http://tamilcomputercollege.blogspot.in/2012/08/jquery-methord.html
2. http://tamilcomputercollege.blogspot.in/2012/09/google-analytic-6.html
//இல்லாவிட்டால் என் தோன்றுதல்களும்
ReplyDeleteஅவர்களது எழுத்தும் எப்படி
ஒன்றாகவிருக்கும்..// ஹா ஹா ஹா அருமை நண்பா
சில சமயம் அது தானே உண்மை நாம் நினைத்த வரிகளுக்கு எங்கோ ஒருவர் எப்போதோ உயிர் கொடுத்து இருப்பார்
நைஸ் வெரி நைஸ் குருவி - கலக்குறீங்க
ReplyDeleteகுருவி இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? :P
ReplyDeletenice! thank you for sharing!
ReplyDeleteசி்ட்டுக்குருவி....
ReplyDeleteஇது.. இது.. நீங்கள்.. நீங்களே..தான் எழுதியதா?
என் மனத்தில் இருந்ததை எப்படி நீங்கள் திருடினீர்கள்?
உண்மைதான்! எனக்கும் இப்படி நேர்ந்துள்ளது!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html
@ asa asath
ReplyDeleteகவிதை நல்ல இருக்கு அதை விட தலைப்பு ரொம்ப டேரராக இருக்கு
////////////////////////////////
சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா
@ ஸ்ரவாணி
ReplyDeleteஅட அது தானே !
இதயத்தைத் திருடுவதை ஒப்புக் கொள்ளலாம் ...
ஆனால் அதன் ஆழத்தில் இருந்து வரும் கவிதையை .. !!!???
திருடி , காதலியிடம் சொன்னால் சரி,
ஏதோ நம்மால் முடிந்த உதவி அவர்கள்
இணைய என்று விட்டுக் கொடுக்க வேண்டியது தான் ...
///////////////////////////////////////
அழகான உற்சாகமளிக்கும் பின்னூட்டமிட்டுச் சென்றமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி
@ மாத்தியோசி - மணி
ReplyDeleteஅதானே? அருமையான கவிதை! சிறப்பான ஃபினிஷிங்!
///////////////////////////////////////////
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மணியண்ணே
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteநல்ல வரிகள்...
/////////////////////////////////
வருகைக்கும் எண்ணத்தைப் பதிந்து செண்றமைக்கும் மிக்க நன்றி சார்
கண்டிப்பாக நீங்கள் தந்த லிங்குகளுக்கு செல்கிறேன்
@ சீனு
ReplyDeleteசில சமயம் அது தானே உண்மை நாம் நினைத்த வரிகளுக்கு எங்கோ ஒருவர் எப்போதோ உயிர் கொடுத்து இருப்பார்
/////////////////////////////////////
உண்மைதான் நண்பா...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ மனசாட்சி™
ReplyDeleteநைஸ் வெரி நைஸ் குருவி - கலக்குறீங்க
////////////////////////////////
வருகைக்கும் அழகான பின்னூட்தத்துக்கும் மிக்க நன்றி பாஸ்
@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி
ReplyDeleteகுருவி இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? :P
/////////////////////////////////////////
ஐயோ ரொம்ப ஓவரா சொல்லிட்டேனோ..
அடுத்த முறை கொஞ்சம் போல குறைச்சிக்கிறேன்
வருகைக்கும் எண்ணத்தைப் பதிந்து சென்றமைக்கும் மிக்க நன்றி
@ krishna ravi
ReplyDeletenice! thank you for sharing!
//////////////////////////////
உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
@ AROUNA SELVAME
ReplyDeleteசி்ட்டுக்குருவி....
இது.. இது.. நீங்கள்.. நீங்களே..தான் எழுதியதா?
என் மனத்தில் இருந்ததை எப்படி நீங்கள் திருடினீர்கள்?
/////////////////////////////////////////
ஆஹா இப்பிடி எத்தின பேர் கிளம்பியிருக்கிறீங்க...
விடமாட்டாய்ங்க போலிருக்கே
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ s suresh
ReplyDeleteஉண்மைதான்! எனக்கும் இப்படி நேர்ந்துள்ளது!
///////////////////////////////
வருகைக்கும் அனுபவத்தைப் பதிந்து சென்றமைக்கும் மிக்க நன்றி சார்
அருமையான `முடிவு சகோ கவிதையில்!ம்ம் கலக்குங்க கவிதையாள்!
ReplyDeleteஏய் குருவி...சிட்டுக்குருவி...கலக்குறீங்க...இந்த களவாணிப்பயலுவள சும்மா விடக்கூடாது.அவனன் எழுதுவானாம்.இவங்க ஆட்டயபோடுவாங்களாம்...ம்ம்ம்.அண்ணே ஆனாலும் சில சமயங்களில் சிந்தனைகள் ஒத்துப்போவதுண்டு...!வாழ்த்துக்கள்.
ReplyDelete@ தனிமரம்
ReplyDeleteஅருமையான `முடிவு சகோ கவிதையில்!ம்ம் கலக்குங்க கவிதையாள்!
///////////////////////////////////////
வருகைக்கும் அழகான உற்சாகமூட்டலுக்கும் மிக்க நன்றி சகோ
@ Athisaya
ReplyDeleteஏய் குருவி...சிட்டுக்குருவி...கலக்குறீங்க...இந்த களவாணிப்பயலுவள சும்மா விடக்கூடாது.அவனன் எழுதுவானாம்.இவங்க ஆட்டயபோடுவாங்களாம்...ம்ம்ம்.அண்ணே ஆனாலும் சில சமயங்களில் சிந்தனைகள் ஒத்துப்போவதுண்டு...!வாழ்த்துக்கள்.
///////////////////////////////////
ஐயோ நான் யாரையும் நினைத்து எழுதல்லிங்க... நீங்கள் கூறுவது போன்று சிந்தனைகள் சில நேரங்களில் ஒத்துப் போகின்றன அதைப் பற்றித்தான் சற்று சிந்தித்தேன்....
ஏதோ கொஞ்சம் போல வந்திச்சு அதத்தான் பதிந்தே உங்ககிட்ட பகிந்து கிட்டேன்
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி..
எண்ணங்கள் ஒத்திருக்கும்போது எழுத்துக்கள் திருடியதுபோலத் தெரியும்.அழகான எண்ணம் கவிதையில் !
ReplyDelete@ ஹேமா
ReplyDeleteஎண்ணங்கள் ஒத்திருக்கும்போது எழுத்துக்கள் திருடியதுபோலத் தெரியும்.அழகான எண்ணம் கவிதையில் !
//////////////////////////////////////////////
நிச்சயமாக எம் பலரது எண்ணங்கள் ஒரே மாதிரி இருப்பதுவும் புதுமைதான்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா
நம் எண்ணங்களை எல்லாருமே திருடுறாங்க பாஸ். அவுங்கள என்ன செய்யலாம்...!!!
ReplyDeleteஅருமை பாஸ்,,,
இது ஒரு கவிதையா?தமிழை நன்றாக கற்று அதன்பின் கவிதை எழுத வாரும்.நின் கவிதை கவிதைக்கே இழுக்கு
ReplyDeleteகலைமகன் பைரூஸ்
@ இரவின் புன்னகை
ReplyDeleteநம் எண்ணங்களை எல்லாருமே திருடுறாங்க பாஸ். அவுங்கள என்ன செய்யலாம்...!!!
அருமை பாஸ்,,,
////////////////////////////////////////////
அவங்கள ஒன்னுமே செய்ய முடியாது அது இயற்கையின் திரு விளையாடல் பாஸ்..
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
@ kalaimahan fairooz
ReplyDeleteஇது ஒரு கவிதையா?தமிழை நன்றாக கற்று அதன்பின் கவிதை எழுத வாரும்.நின் கவிதை கவிதைக்கே இழுக்கு
கலைமகன் பைரூஸ்
///////////////////////////////////////////
சார் உங்க அனுபவம் என் வயசுமில்ல சார்.......
வருகைக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி
pochu....
ReplyDeleteungal kavithai kumural...
அழகாகச் சொன்னீர்கள் நண்பரே... நானுன் எனது பலகவிதைகளை மற்றவர் பெயரில் வலைதளத்தில் பார்க்கையில் மிகவும் வருந்தி இருக்கிறேன்..
ReplyDeleteவணக்கம், உங்களுடைய வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வாழ்த்துகள். மேலும் விவரங்களுக்கு .
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/08/3.html
எல்லோருக்கும் கோபம் வருகிறது ,கூடவே காதலும் வருகிறது ஆக மனித உணர்வுகள் ஒன்றுதான் அதை வெளிபடுத்தும் விதத்தில் எங்கோ ஒரு இடத்தில நம் சாயலை இனம் காண்கிறோம் ..........
ReplyDeleteஅருமையாக சொல்லிய விதம் பிடித்திருக்கு சிட்டுகுருவிக்கு பாராட்டுகள்