போராளிகளே புறப்படுங்கள்... புரியாத புதிர்போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இறைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது


அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது

உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக.

நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள்

இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும், வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்
நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை
இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்

தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை
உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?


அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்

இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்
கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்

இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்
வேண்டுமெனில் எனது “இஹ்ராம்''
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்

எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்

எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்

சில வேலைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்

குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது

கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்
ஹுர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுனக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்

வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி
 
கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்


வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்


ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் - அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்


எனது பனி இனிது மடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்


அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.


விக்கி அழுது
வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்


மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் 
1948.10.23 ஆம் திகதி பிறந்து 2000. 09. 16 ஆம் திகதி உலங்கு வானூர்தி விபத்தினால் இறையடி சேர்ந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப் அவர்களினால் எழுதப்பட்ட கவிதையிது. இக் கவிதை அவருடைய மரணத்தோடு  100 வீதம் பொருந்தியிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இன்று அவர் இறையடி சேர்ந்து சரியாக 12 வருடங்கள் கடந்துவிட்ட போதும் அவர் நினைவலைகள் எம் நெஞ்சத்தை விட்டு நீங்காமல் இருப்பதுவே அவர் ஒரு சிறந்த தலைவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. 

 

23 கருத்துரைகள்

allahu akbar!

enna oru veera kavithai!

thinari vitten!

moochu vidaamal!
padiththu!

kuruvi!
ungalukku
mika nantri!

oru nalla aathmaavin-
kavithaiyai naan padikkavum-
vazhi seythida vaiththa ellaam valla-
allaavukku nantri seluththukiren!

melum avarkaludaya kavithai irunthaal-
pakirungalen....

Reply

நல்லதொரு நாளில் நல்ல மனிதர் எழுதிய அழகான வரிகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.

வாழ்த்துகள் நண்பா தொடருங்கள்...

வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்

அருமை

Reply

மிக சிறப்பான வீரத்தை தூண்டும் உணர்ச்சிமிக்க கவிதை! பகிர்வுக்கு நன்றி!

Reply

இலங்கையில் நாம் பெரிதும் மதிக்கும் தலைவர்களுள் ஒருவர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப். இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களீப்புக்கள் அளப்பரியவை. அத்தோடு தேசிய இனங்களின் ஒற்றுமைக்காகவும் அவர் பாடுபட்டார்! அவரது மறைவுநாளில் அவரை பெருமையுடன் நினைவுகூருகிறோம்!

Reply

நல்ல மனிதர்களை மீள நினைக்கும்போது நாமும் உற்சாகப்படுகிறோம் !

Reply

உண்மையில் நான் மிகவும் மதிக்கும் தலைவராக மதிப்புக்குரிய அஷ்ரப் இருக்கிறார்.இனம் சார்ந்த அவரின் நடவெடிக்கைகள்.சாணக்கியமான முடிவுகள் என ஒவ்வொன்றும் இனப்பற்றுக்கு எடுத்துக்காட்டு.காலத்தால் நிலைத்து நிற்கும் தலைவர் பண்புகளை இன்றையை தலைமைகள் இவரிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

Reply

அருமையான கவிதை..

போற்றப்படவேண்டிய மனிதரை மறக்காமல் பதிவிட்டதுக்கு நன்றி நண்பா!!

Reply

அருமையான பகிர்வு மக்கள் சேவையில் மாணிக்கம் அஷ்ரப் அவர்கள்§ இப்போது அவர் பெயரில் நடப்பது எல்லாம் சுயநல அரசியல்.

Reply

உணர்ச்சி மிகு கவிதை!

Reply

சூப்பர் கவிதை நண்பா

Reply

எண்ணங்களைப் அழகான முறையில் பதிந்து சென்றமைக்கும் வருகைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி...

@ Seeni

@ இரவின் புன்னகை

@ s suresh

@ மாத்தியோசி - மணி

@ ஹேமா

@ நெற்கொழுதாசன்

@ Riyas

@ தனிமரம்

@ வரலாற்று சுவடுகள்

@ asa asath

Reply

வீரமிகு வரிகள்... மிகவும் போற்றப்பட வேண்டியவர்... அறிந்து கொள்ள வைத்தமைக்கு மிக்க நன்றி...

Reply

இப்பொழுது இலங்கயில் நடக்கும் அரசியல் ஆட்டத்தைப் பார்க்கும் போதுதான், இவரின் இழப்பு நமக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு என்று விளங்குகிறது.

Reply

மிகவும் நல்ல பகிர்வு சிட்டுக்குருவி.

நான் அறியாத நல்ல ஒரு மனிதரைக் கண்டு கொண்டேன்.
மிக்க நன்றி.

Reply

நல்ல நினைவு கூறலும், அழகிய கவிதையும். முத்திரையும் அழகு.

Reply

உணர்ச்சி மிக்க கவிதை

Reply

அறியாத விசய்த்தை தெரிந்து கொண்டேன். நன்றி

Reply

வணக்கம்

சிட்டுக் குருவி தான்என்று
சிரித்த வண்ணம் உள்வந்தேன்!
கட்டுக் கட்டாய்ச் சரவெடிகள்
காக்கும் வலையின் திறம்கண்டேன்!
முட்டும் பகையைத் துாளாக்கி
முன்னைத் தமிழா முன்னேறு!
விட்டுப் போக மனமின்றி
விரும்பி விருத்தம் படைக்கின்றேன்

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

Reply

இதுவரை இவரைப் பற்றி அறிந்ததில்லை.இப்போது அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தன்னலம் கருதாத தலைவைர்களை நினைவு கூறுதல் நன்று.
எழுச்சி மிக்க கவிதை.

Reply

இதுவரை இவரைப் பற்றி அறிந்ததில்லை.இப்போது அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தன்னலம் கருதாத தலைவைர்களை நினைவு கூறுதல் நன்று.
எழுச்சி மிக்க கவிதை.

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

@ அருணா செல்வம்

@ athira

@ குட்டன்

@ T.N.MURALIDHARAN

எண்ணங்களை அழகாக பதிந்து சென்றமைக்கும் வருகைக்கும் நட்புகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி....

Reply

@ Ahamed Jatheer

@ ராஜி

@ Student Drawings

@ கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்

முதல் முறையாக உங்களுடைய எண்ணப்பதிதல்கள் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்தேன்...
உங்களின் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்..

உங்களின் உற்சாகப்படுத்தும் பின்னூட்டங்களுக்கும் வருகைக்கும் கோடான கோடி நன்றிகள்

Reply

Post a Comment