இதயக் கல்லறை...!சிறுகச் சிறுக சேகரிக்கிறேன் பனித்துளிகளை
அதிகாலை தேநீருக்கு ஈடாக
நீ அருந்துவது பனித்துளிகளை என்பதனால்...
சுவைக்காக பனித்துளிகளுடன்
கண்னீர் துளிகளையும் சேர்க்கிறாய்
 தினமும் காலை வேளையில் 
அழுகிறேன் உனக்காக
உன் சுவைமிகு தேநீருக்காக ...

துயில் கழைந்ததும் ருசிப்பது தேநீரைத்தான்
துயில் கழையும் வரை காத்திருக்கிறேன்
கையில் தேநீர் கோப்பையுடன்...

உன் விழிகள் அசையும் பொழுதுக்காய்
என் விழிகளை அசைக்காமல் நான்...
தூக்கம் பிடிக்கும்
என்ற ஒரு வார்த்தைக்காய்
அந்த ஒற்றை வார்த்தைக்காய்
உன் தூக்கம் கழைக்க மனதின்றி காத்திருக்கிறேன்
நீ மட்டும் நிம்மதியாக தூங்குகிறாய்
கல்லறையில்...

கல்லறைதான் உனக்கு பிடிக்குமென
நீ சொல்லியிருந்தால்
செதுக்கியிருப்பேனே என் இதயத்திலல்லவா
எம் இருவருக்குமான கல்லறையை...


29 கருத்துரைகள்

செமத்தனமா இருக்கு குரிவியாரே (TM 1)

Reply

சிறப்பானதொரு படைப்பு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

Reply

அருமையான கவிதை
படங்களுடன் படிக்கையில்
கூடுதலாக கவிதையில்
கரைய முடிந்தது
தொடர வாழ்த்துக்கள்

Reply

சோக சுகம் வழிந்தோடுகிறது வரிகளில் நெஞ்சின் வலிகளால் ...
உண்மையில் எண்ணங்களின் சிறந்த வடிகால் கவிதைகளே ...

Reply

கல்லறைதான் உனக்கு பிடிக்குமென
நீ சொல்லியிருந்தால்
செதுக்கியிருப்பேனே என் இதயத்திலல்லவா
எம் இருவருக்குமான கல்லறையை...

அடடடா... சூப்பர்ங்க சிட்டுக்குருவி.

Reply

அருமையான சிந்தனை வரிகள்...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)

Reply

மனதிற்குள் காதலறை கட்டி வைத்திருக்க கல்லறைக்குள் தூங்குவதும் ஏனோ.....அருமையான கற்பனையும் கவிதையும் சிட்டு !

Reply

கவிதை கல்லறை என்று நெஞ்சறை பேசுகின்றது சுகமாக.

Reply

வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்கு ஜிட்டு.. உங்கள் கல்லறை:).. ஐ மீன் ... கவிதை.

Reply

செம்ம செம்ம நண்பா கவிதை

Reply

@ வரலாற்று சுவடுகள்

செமத்தனமா இருக்கு குரிவியாரே (TM 1)
/////////////////////////

சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ s suresh

சிறப்பானதொரு படைப்பு! வாழ்த்துக்கள்!
/////////////////////

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

அழகான ஆழமான வரிகள், மனதை எங்கோ தொடுகிறது..வாழ்த்துக்கள்

Reply

@ Seeni

ada daaa....
///////////////////////

வாங்க ஆசிரியரே ஒரு வாரம் ரொம்ப பிஸியா இருந்தீங்க போல....
இறுதியாகவும் வாழ்த்துகிறேன்...

Reply

@ Ramani

அருமையான கவிதை
படங்களுடன் படிக்கையில்
கூடுதலாக கவிதையில்
கரைய முடிந்தது
தொடர வாழ்த்துக்கள்
//////////////////////////////

அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ ஸ்ரவாணி

சோக சுகம் வழிந்தோடுகிறது வரிகளில் நெஞ்சின் வலிகளால் ...
உண்மையில் எண்ணங்களின் சிறந்த வடிகால் கவிதைகளே ..
/////////////////////////////////

முதல் வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தொடருங்கள் உங்கள் ஆதரவை....

Reply

@ AROUNA SELVAME

கல்லறைதான் உனக்கு பிடிக்குமென
நீ சொல்லியிருந்தால்
செதுக்கியிருப்பேனே என் இதயத்திலல்லவா
எம் இருவருக்குமான கல்லறையை...

அடடடா... சூப்பர்ங்க சிட்டுக்குருவி.
//////////////////////////////////////

அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க..

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

அருமையான சிந்தனை வரிகள்...

பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)
/////////////////////////////////

அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க சார்..

Reply

@ ஹேமா

மனதிற்குள் காதலறை கட்டி வைத்திருக்க கல்லறைக்குள் தூங்குவதும் ஏனோ.....அருமையான கற்பனையும் கவிதையும் சிட்டு !
////////////////////////

அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க அக்கா

Reply

@ தனிமரம்

கவிதை கல்லறை என்று நெஞ்சறை பேசுகின்றது சுகமாக.
/////////////////////////////

ஒற்றை வரியில் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ athira

வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்கு ஜிட்டு.. உங்கள் கல்லறை:).. ஐ மீன் ... கவிதை.
/////////////////////////////////////////

வாங்க பிறந்த நாள் ஸ்பெஸலிஸ்ட்...
அழகான உற்சாகமூட்டும் கருத்திட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி...

அப்புறம் எனக்கு ஐற மீனெல்லாம் வேணாம் அத நீங்களே வச்சிக்கோங்க

Reply

@ asa asath

செம்ம செம்ம நண்பா கவிதை
/////////////////////////////////

வாங்க பாஸ் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறீங்க...இருந்து டீ குடிச்சிட்டு போங்க...

Reply

@ Fathima Inshaff

அழகான ஆழமான வரிகள், மனதை எங்கோ தொடுகிறது..வாழ்த்துக்கள்
////////////////////////////////////

அட நீங்களும் ரொம்ப நாலைக்குப்புறம் நம்ம பக்கம் வந்து அழகான ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்....

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

நீ மட்டும் நிம்மதியாக தூங்குகிறாய்
(கல்லறையில்...)
காதலின் பிரிவின் வலிக்கு இந்தவார்த்தை
அருமை தலைவா வாழ்த்துக்கள் இன்னும் உச்சம் தொட

Reply

@ நெற்கொழுதாசன்

நீ மட்டும் நிம்மதியாக தூங்குகிறாய்
(கல்லறையில்...)
காதலின் பிரிவின் வலிக்கு இந்தவார்த்தை
அருமை தலைவா வாழ்த்துக்கள் இன்னும் உச்சம் தொட

////////////////////////////////

அழகான வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தலைவா..

Reply

@ கவி அழகன்

Asathirinka kuruviyare
////////////////////////

மிக்க நன்றி சார்...வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கூட

Reply

Post a Comment