நினைவுகள் சுகமானவை....அகவை 2...

கடந்த வருடம் இதே திகதியில் முக நூலில் உலாவிக் கொண்டிருந்தேன் அப்போது என்னுடைய கண்களில் தென்பட்ட ஒரு கானொளி தான் இந்த வலையுலக பிரவேசத்துக்கு அடிப்படையாக அமைந்தது. என்னுடைய முக நூல் நண்பரான நிப்ராஸ் பின் இப்ராஹிம் உடைய இலவசமாக எப்படி இணையத்தளம் உருவாக்குவது என்பதுதான் அந்த கானொளி.

ஆரம்பத்தில் கானொளியின் உதவியுடன் எனக்கான தளத்தினை வடிவமைத்துக் கொண்டேன். பின்னர் இணையத்தளங்களில் கிடைத்த எனக்கு பிடித்தமான தகவல்களை தளத்தில் பதிவிட்டுக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் சிறிது காலம் வரை தளத்தின் பக்கம் வரவேயில்லை....

மண்டையில் மீண்டும் ஒரு உதிப்பு ஏற்பட்டு இணையத்தில் உலாவும் போதுதான் என் கண்களில் பலே பிரபு எனும் பெயரில் ஒரு தளத்தினுடைய பதிவுகளை உறிஞ்சக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இவருடைய பல பதிவுகள் எனக்கு மிகவும் பிரயோசனமாக இருந்தன. இவரின் ஒரு பதிவினை பார்த்துவிட்டு இவரிற்கு ஒரு ஈமெயில் அனுப்பிவைத்தேன் அதன் பயனாக எனக்குக் கிடைத்தது நான் மேலே வைத்திருக்கும் சிட்டுக் குருவி லோகோ... இந்த லோகோவினை எனக்கு செய்து தந்தவர் பலே பிரபு தளத்தின் உரிமையாளர்தான் அவரின் ஞாபகமாகத்தான் இன்னமும் அந்த லோகோவினை மாற்றாமல் வைத்துள்ளேன்.

பின்னர் என் கண்களில் சிக்கியது வந்தேமாதரம். இத்தளத்தினுடைய ஏறாளமான பதிவுகள் இன்னமும் எனக்குப் பிரயோசனாகவே இருக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் திரட்டிகள் பற்றிய அறிமுகத்தையும் தெளிவான விளக்கங்களையும் இவருடைய பதிவுகள் எனக்கு சொல்லித்தந்தன.

அதன் பின்னர் வைரை சதீஷ் , நிலவைத் தேடி போன்ற தளங்களும் பெரிதும் உதவின. குறிப்பாக போட்டோஷாப் தெளிவுகளை வேலன் மற்றும் தமிழ் கொம்பியூட்டர் தகவல்கள் போன்ற தளங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு சென்றவருடம் இத் திகதிவரை இணையத்தளம் மற்றும் போட்டோஷாப் பற்றிய அடிப்படை அறிவுகூட இருக்கவில்லை. ஆனால் இன்று இவைகளில் பூரண அறிவு பெறவில்லையென்றாலும் ஓரளவுக்கான அறிவினைப் பெற்றுள்ளேன். இந்தக் காலப்பகுதியில் நான் இணையத்தில் செலவிட்ட நேரமோ மிக அதிகம் அதற்கான செலவும் கூட...

என்னுடைய தளத்தினை விரும்பி முதலில் பின்பற்றுனராக இணைந்து கொண்டவர் கோவை நேரம். முதல் பின்னூட்டமிட்டவரும் இவர் தான் அதுவும் ஒரு கொப்பி பேஸ்ட் பதிவுக்கு. அதன் பின்னரான கருத்து புதிய உலகம் தளத்திலிருந்து வந்தது அவர்களுடைய பதிவினை நான் பதிவிட்டுள்ளதாக உரிமை போராடினார்கள் அதன் பின் தான் எனக்குப் புரிந்தது கொப்பி பேஸ்ட் என்பது மிகவும் தவறான பிழையான செயலென்று பின் வந்த நாட்களில் அப்பதிவுகளை தளத்திலிருந்து நீக்கிவிட்டேன்.

முதலில் பின்பற்றுனராக இணைந்தவர் கோவை நேரம் என்றாலும், அடுத்ததாக இணைந்துக் கொண்ட சிலரில் ஆமினா முகம்மட்டின் தொடர்பும் அவருடைய உற்சாகமளிக்கும் கருத்துக்களும் எனக்கு புத்துணர்சியை அளித்தது. அதன் பின்னர்தான் நான் சுயமாக பதிவு எழுத என்னைப் பழக்கப் படுத்திக் கொண்டேன்...

சுயமான பதிவுகள் என்பது குறைவுதான் சில புகைப்படம் தொடர்பான பதிவுகள் எல்லாம் நான் இணைத்தில் பெற்று அதனை மொழிமாற்றம் செய்து பதிவிடுவதுதான். இதனை யாரும் திருட்டுப் பதிவு என்று சொல்ல முடியாது என நான் என் சிந்தனையில் வைத்துக் கொண்டேன். காரணம் என்னுடைய தளத்தில் எனக்கு பிடித்தமான விடயங்களைத்தான் நான் பகிர்கிறேன் என்பதினை ஆரம்பத்தில் நான் சொல்லத் தவறவில்லை. இதற்கு மேலும் நிறைய பதிவர்கள் புகைப்படம் தொடர்பான பதிவுகளை இப்படித்தான் பதிவிடுகிறார்கள் என்பதனையும் புரிந்து கொண்டேன்.

என்னமோ கடந்த வருடம் இந்த மாதத்தில் தளத்தினை ஆரம்பித்தாலும் முறையாக பதிவிட்டது என்னமோ இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்துதான்.இக் காலப்பகுதிக்குள் பெரும் சாதனை புரிந்ததாகவே நான் கருதுகிறேன் என்னுடைய தளத்தின் நாளாந்த வருகைகளையும் அலெஸ்கா தமிழ் மணம் போன்றவற்றின் தரவரிசையில் நாளுக்கு நாள் முன்னேறி வருவதனையும் பார்க்கும் போது...இது எனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது...


பின்னாளில் எனக்கு நிறைய உறவுகள் கிட்டிவிட்டன இவர்களுடனான தொடர்பு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல மாற்றங்களை உண்டு பன்னியிருக்கிறது என்பதினையும் இவ்விடம் கூற ஆசை கொள்கிறேன்...

நிறைய நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தளம் பற்றிய கருத்துக்களையும் சொல்லி என்னை உற்சாகப் படுத்தினார்கள் நிறையப் பேர் இணைப்புக் கொடுப்பதற்கான அனுமதியினையும் கேட்டனர் இவர்களின் இப்படியான உற்சாகமளிக்கும் செயற்பாடுகள் எனக்கு மேலும் மேலும் வலுவூட்டியது...
 

பத்திரிகை என்பது எனக்குப் புதிதல்ல பாடசாலை நாட்களின் போது வியஜ பத்திரிகை நிறுவனத்தின் விஜய் எனும் மாணவர்களிற்கான வாராந்த பத்திரிகையின் செய்தியாளர் போட்டியில் பங்கு பற்றி அதில் வெற்றி கொண்டு சிறிது காலம் அதன் செய்தியாளராகவும் இருந்தேன் இந்தக் காலப் பகுதியில் நிறையப் பதிவுகள் அப் பத்திரிகையில் வெளிவந்தன பின்னும் நான் வெளியிட்ட என்னுடைய மாதாந்த இதழ் (ரெயின்போ) தொடர்பாகவும் இப்பத்திரிகையிலே வெளிவந்தது...

பின் வந்த காலத்தில் என்னை பத்திரிகைக்கு மீண்டும் அறிமுகப்படுத்தியது நான் என் தளத்தில் பதிவிட்ட தற்கொலைகளைத் தூண்டும் தமிழ் இணையத்தளங்கள் எனும் பதிவு ஈழத்தில் வெளிவரும் சுடர் ஒளி எனும் பத்திரிகையில் இப்பதிவு வெளிவந்தது இதனை நான் என்னுடைய எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். இப்பதிவு பத்திரிகையில் வெளிவர முன் நின்று செயற்பட்ட அந்த முகம்தெரியாத உறவுக்கும் இவ்விடத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.அதன் பின்னர் கிடைத்த அங்கீகாரமாக  ஜூன் 6 2012 இல்9 (இன்று கோர்த்த சரம் 3) வலைச்சரத்தில் என்னை அறீமுகப் படுத்தியிருந்தார்கள் இவ்வாற ஆசிரியராக பணியேற்றிய T N  முரளிதரன் சார். இப்பதிவில் என்னோடு சேர்த்து எனது தோழன் இப்போது நான் படத்தின் மூலம் தென்னிந்தியாவில் கால் பதிக்கும் ஈழத்துக் கவிஞன் அஸ்மின் மற்றும் எனக்கு மிகவும் சுவாரஷ்யமான பின்னூட்டங்களையளித்து மேலும் மேலும் பதிவிடுவதில் பல நுணுக்கங்களையும் அவ்வப் போது எழுத்துப் பிழைகளையும் சுட்டிக்காட்டிய என் பக்கம் (அதிரா அக்கா) தளத்தினையும் அறிமுகப்படுத்தியிருந்தார் ஆசிரியர்.

ஆகவே என்னுடைய பதிவுகளுக்கு இன்றுவரை ஆதரவளித்து உற்சாகமளிக்கக் கூடிய கருத்துக்களைக் கூறும் ஒவ்வொரு பதிவரியும் நான் இவ்விடத்தில் விழிக்க வேண்டும் பதிவின் நீளம் கருதி அதனை இன்னுமஒரு பதிவாக வெளியிடவுள்ளேன்.இதனை நான் ஒரு ஞாபக மீட்டல் பதிவாகத்தான் பதிவிடுகிறேன் மேலும் மேலும் இதனை நீட்டிக்கொண்டு உங்களை சலிப்படையச் செய்ய நான் விரும்பவில்லை...
 
இன்றுவரை என்னுடைய பதிவுகளுக்கு ஆதரவு தரும் அனைத்து உள்ளங்களுக்கும் உறவுகளுக்கும் இவ்விடத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை ஆசையாசையாக தெரிவித்துக் கொள்வதில் விருப்பம் கொள்கிறேன்.
 
நான் மேலே சுட்டிக்காட்டிய அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னமும் என்னுடய பதிவுகளுக்கு உற்சாக மளிக்கக் கூடிய கருத்துக்களை சொல்லி என்னை மேலும் ஊக்கம் படுத்துமாறும் இச் சந்தர்ப்பத்தில் உறவுகளாகிய உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
 
இப்பதிவினை காலையில் பதிவிடலாமென நினைத்திருந்தேன் முடியவில்லை காரணம் மின்சாரமில்லை இப்போதும் இப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் போதும் மின்சாரம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது... எழுத்துப் பிழைகளை சரி பார்க்காமல் பதிவிடுகிறேன் பிழைகள் இருப்பின் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும் 

மீண்டும் சந்திப்போம்....

42 கருத்துரைகள்

நல்லதொரு தொகுப்பு நண்பரே.... (அகவை 2)

உண்மையாக நடந்த சிலவற்றை சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

தொடருங்கள்...நன்றி... (த.ம. 1)


அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

Reply

நல்ல விரிவான விளக்கம் - வாழ்த்துக்கள் தொடருங்கள்

Reply

வாழ்த்துக்கள் நண்பா! மேலும் பல சாதனைகள் தொடரட்டும்!

இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

Reply

கடந்தவைகளை மீட்டெடுப்பதும் ஒரு சுகம்தான்.வாழ்த்துகள்.உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள் !

Reply

சொல்லக் கூடிய நிலையை அடைந்ததும்
அதற்காக உதவியவர்களை நினைவு கூர்ந்தது
மனம் கவர்ந்தது
தொடரவும் உச்சம் தொடவும்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

Reply

ஆம் நண்பா முதலில் உங்க வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

//புகைப்படம் தொடர்பான பதிவுக//
எனக்கு கூட புகைப்படம் அது தொடர்பான பதிவுகள் என்றால் பிடிக்கும்..

Reply

வணக்கம் சிட்டு!மீண்டுமொருமுறை இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பனே...!.இதுவரை அறிந்திராத பல விடயங்களை அறிந்தது மிக்க மகிழ்ச்சி.அதிகம் அறிந்து கொண்ட திருப்தி.உண்மையில் நான் பதிவரான நாட்களில் தானோ நீங்களும் பதிவலானீர்கள் என்று கூட எண்ணினேன்.பின்னாளில் சற்று புரிந்து கொண்டேன்.இப்போது தெளிவு.மிக்க மகிழ்ச்சி அன்பு சொந்தமே!தொடாந்தும் எழுதுங்கள்.பி.கு.நான் முதலில் பார்த்த தங்கள் பதிவில் அழகான ஒரு நகைச்சுவை நழட தெரிந்தது.மிகவும் ஈர்த்தது.இப்போ சில நாட்களாக சீரியஸ் பதிவுகள் தென்படுகின்றன போல தெரிகிறது.தங்களுக்கு வாய்த்த இந்த நகைச்சுவை கலந்த எழுத்தும் ஒரு வரமே.சில பதிவுகளை அப்படீம் தாருங்கள்.எதிர்பார்த்திருக்கிறேன்.சிறியவள் என் கருத்தில் இடக்கு இருப்பின் பொறுத்தருள்ளக.வாழ்த்துக்கள் சொந்தமே!!!!சந்திப்போம்.

Reply

உங்களின் ஒரு பதிவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி எழுதியிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது வந்து படியுங்கள். முகவரி கீழே..

http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_13.html

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

நல்லதொரு தொகுப்பு நண்பரே.... (அகவை 2)
///////////
சூடான உங்கள் வருகைக்கும் அழகான எண்ணப் பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ மனசாட்சி

நல்ல விரிவான விளக்கம் - வாழ்த்துக்கள் தொடருங்கள்
////////

ஹா ஹா...என்ன இன்னைக்கு நம்ம பிரச்ச்னை சரியாகிட்டு போல ஸ்பேம் கமண்ட் ட சொன்னன்...

வருகைக்கும் அழகான எண்ணப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாஸ்

Reply

@ s suresh

வாழ்த்துக்கள் நண்பா! மேலும் பல சாதனைகள் தொடரட்டும்!
///////////

வருகைக்கும் வாழ்த்துக்கும் எண்ணப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்,,,,

Reply

@ ஹேமா

கடந்தவைகளை மீட்டெடுப்பதும் ஒரு சுகம்தான்.வாழ்த்துகள்.உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள் !
//////////////

ஆஹா...அழகான ஒரு அறிவுறை நிச்சயமாக நம் திறமையில் நாம் நம்பிக்கை வைத்தால் முன்னேற்றம் உறுதி...

வருகைக்கும் எண்ணப் பகிர்விற்கும் மிக்க நன்றி

Reply

@ Ramani

சொல்லக் கூடிய நிலையை அடைந்ததும்
அதற்காக உதவியவர்களை நினைவு கூர்ந்தது
மனம் கவர்ந்தது
தொடரவும் உச்சம் தொடவும்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
////////////

நன்றி மறப்பது நன்றன்று என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள் இல்லையா அப்படித்தான் நானும் எப்படித்தான் உச்சத்துக்குப் போனாலும் பழமை என்ற ஒன்றை மறுபடியும் பார்த்தால் தான் உச்சத்தின் உறுதித் தன்மை நிலையாக வைத்திருக்கலாம்...

வருகைக்குக் அழகான எண்னப் பகிர்விற்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ Athisaya

வணக்கம் சிட்டு!மீண்டுமொருமுறை இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
/////////

மீண்டுமொரு முறை வாழ்த்தியமைக்கு நன்றி வாழ்த்துச் சொல்ல தனி மனது வேண்டும் அப்படிப் பட்டவர்கள் நண்பர்களாக அமைந்ததில் மிக்க சந்தோஷம்...

இதுவரை அறிந்திராத பல விடயங்களை அறிந்தது மிக்க மகிழ்ச்சி
///////////////

ஆஹா அப்படி என்ன தகவல சொல்லிப்புட்டேனோ.... எல்லாம் நல்லபடி நடந்தா சரிதான்.

பி.கு.நான் முதலில் பார்த்த தங்கள் பதிவில் அழகான ஒரு நகைச்சுவை நழட தெரிந்தது.மிகவும் ஈர்த்தது.
/////////////

சில பல தேவைகளின் பொருட்டு இப்படியான பதிவுகளையும் வெளியிட்டேன் ஆனால் நமக்கு வாடிக்கை நகைச்சுவைதான் அது தொடர்ந்து அது பாட்டுக்கு வந்துகொண்டேயிருக்கும் பொருத்திருங்கள்...


Reply

@ நாடோடி

உங்களின் ஒரு பதிவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி எழுதியிருக்கிறேன்.

நேரம் இருக்கும் போது வந்து படியுங்கள். முகவரி கீழே..

http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_13.html
//////////

ஆஹா மறுபடியும் வலைச்சரம் என்னுடைய கவிதைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நிச்சயமாக வருகிறேன் சார்.....

Reply

@ ஹாரி பாட்டர்

ஆம் நண்பா முதலில் உங்க வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

//புகைப்படம் தொடர்பான பதிவுக//
எனக்கு கூட புகைப்படம் அது தொடர்பான பதிவுகள் என்றால் பிடிக்கும்.
/////////

வாழ்த்துக்கும் வருகைக்கும் அழகான எண்ணப் பகிர்விற்கும் மிக்க நன்றி நண்பா...ம்ம்ம்ம்ம்ம் புகைப்படம் யாருக்குத்தான் பிடிக்காமலில்லை

Reply

alexa rank நல்ல அளவில் இருக்கிறது நண்பரே, தொடர்ந்து முன்னேறி ஒரு லட்சத்திற்கு கீழ் வர எனது வாழ்த்துக்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்!

Reply

இனிய வாழ்த்துகள் ...

Reply

@ வரலாற்று சுவடுகள்

alexa rank நல்ல அளவில் இருக்கிறது நண்பரே, தொடர்ந்து முன்னேறி ஒரு லட்சத்திற்கு கீழ் வர எனது வாழ்த்துக்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்!
///////////

அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே....

Reply

@ Seeni

nalla thokuppu!
///////////
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ இராஜராஜேஸ்வரி

இனிய வாழ்த்துகள் ...
/////////////
மிக நீண்ட இடைவெளியின் பின் உங்கள் பின்னூட்டம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி...... அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Reply

அகவையிரண்டிற்கு அன்பான வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Reply

சிறகடித்டுப் பறந்து புதிய உயரங்களைத் தொட வாழ்த்துகள்.

Reply

சிட்டுக்குருவி இன்னும் சிறகடித்து பறக்கட்டும்.
வாழ்த்துக்கள் மூஸா!

Reply

கொமொன்ஸ் கட்டுப்பாடுகள் இல்லாமல் எல்லோர் கருத்தையும் பதிவிட அனுமதிக்கும் உங்கள் செயல் பாராட்டுக்குரியது.

Reply

@ Sasi Kala

அகவையிரண்டிற்கு அன்பான வாழ்த்துக்கள். தொடருங்கள்.
///////////
அன்பான வாழ்த்துக்குக் கூறும் அழகான உள்ளத்துக்கு மிக்க நன்றி

Reply

@ சென்னை பித்தன்

சிறகடித்டுப் பறந்து புதிய உயரங்களைத் தொட வாழ்த்துகள்.
/////////////
பெரியவர்கள் உங்கள் வாழ்த்துக்களில் நிச்சயம் பலன் கிடைக்கும் வாழ்த்துச் சொல்லும் அழகிய மனதுக்கு மிக்க நன்றி ஐயா

Reply

வாழ்த்துகள். தொடரட்டும் வெற்றிகள்.

Reply

வாழ்த்துகள், தொடருங்கள். சரியான நேரத்தில் அனைவரையும் நினைவுகூர்ந்துள்ளீர்கள். நல்லது...

Reply

உதவியவர்களை எல்லாம் இப்போது நினைவில் கொண்டுவந்து தனி பதிவிட்டு பெருமைப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது... சிட்டுகுருவி சிறகடித்து சாதனை படைக்க வாழ்த்துகள்...

Reply

வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி. இன்னும் நிறைய எழுதி புகழடையுங்கள்.

Reply

வாழ்த்துக்கள் நண்பா,இன்னும் பல உயரங்களை தொட்டு நிற்க வாழ்த்துகிறேன்.

Reply

@ மாதேவி

வாழ்த்துகள். தொடரட்டும் வெற்றிகள்
//////////////////////

வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ..
வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

@ இரவின் புன்னகை

வாழ்த்துகள், தொடருங்கள். சரியான நேரத்தில் அனைவரையும் நினைவுகூர்ந்துள்ளீர்கள். நல்லது...
///////////////////////

வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ HOTLINKSIN.COM திரட்டி

உதவியவர்களை எல்லாம் இப்போது நினைவில் கொண்டுவந்து தனி பதிவிட்டு பெருமைப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது... சிட்டுகுருவி சிறகடித்து சாதனை படைக்க வாழ்த்துகள்...
//////////////////////
வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ AROUNA SELVAME

வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி. இன்னும் நிறைய எழுதி புகழடையுங்கள்.
//////////////////////
வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ..

Reply

@ நெற்கொழுவான்

வாழ்த்துக்கள் நண்பா,இன்னும் பல உயரங்களை தொட்டு நிற்க வாழ்த்துகிறேன்.
////////////////////
அழகான வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா.....
முதல் வருகை இன்னும் தொடர்ந்தால் மிக்க சந்தோஷம்.......

Reply

தொடருங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.

Reply

@ Rasan

தொடருங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.
//////////////////

அழகான வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

Reply

Post a Comment