நாம் உறவாடியதற்கு சாட்சியே மூங்கில்கள் தான்
ஒவ்வொரு பௌர்ணமியிரவிலும் நான் உறங்கியது கிடையாது
நீயில்லாமல் அருந்தும் தேநீர் கூட விஷமாகவே தோன்றியது
விடியலைக் தேடும் சேவல்கள் கூட விடைபெற்றிடும்
நீ தந்த வலிகள் விடைபெறும் பொழுதறியாது... நான்கரையான்களைப் பார்க்கும் போதெல்லாம் - உன் கண்களில்
ஒரு வித பயத்தை உணர்கிறேன் - பாழாய்ப் போன கரையான்கள்
நம் காதலையும் கரைத்துவிடுமோ என அஞ்சுகிறாய்
நம் காதலின் ஆழத்தையெண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன் பௌர்ணமியில்தான் பைத்தியம், எனக்கோ அமாவாசையில்...
இருளின் இருப்பிடமான அவ்விரவு என் வாழ்வினில்
வராமலிருக்க ஆயிரம் பகல்களை விலை கொடுத்து வாங்கினேன்...
அவ்விரவில் தான் அந்த கொடூரம் நடந்தது...
பல கோடி உடுக்களில் ஒன்று மட்டும் உனை காதலிப்பதை உணர்ந்தேன்
மூங்கில்களிடம் முறையிட்டேன் உடு பற்றி...
மூங்கில்கள் ஆலோசனை செய்து வித்தியாசமான வாகணத்துடன் விஷ
ஆயுதங்களையும் தயார் செய்து எனை அனுப்பியது வின்வெளிக்கு
பல உடுக்களை பழியெடுத்து திரும்பினேன் பூமிக்கு
என் உடம்பில் இரத்தக் கறைகண்டு சம்பவம் கேட்டாய் - சொன்னேன்
உடுக்களின் மீது பரிதாபப் பட்டு ஆறுதல் சொல்லிவிருவதாக
விண்வெளிக்குச் சென்றாய்
உன் அழகில் மயங்கிய உடுக்கள் சிறைப்பிடித்து விட்டன உனை...
உன் அழகின் ஒளி அவைகளுக்கு தேவைப்பட்டது...
பாழடைந்த அவைகளின் உலகுக்கு நீயே வெளிச்சமூட்டினாய்
உடுக்களும் உனக்கு மரியாதை கொடுத்தது...
உனை உடுக்கள் சிறைப்பிடித்து பல யுகங்களாகிவிட்டன
நான் இன்னும் பூமியில் உன் நினைவுகளுடன் மூங்கில்களும் கூட
பூமியில் உள்ளோர் உனை நிலாவென்றும்
அம்புலியென்றும் அழைக்கின்றனர்
ஆனால் எனக்கோ நீ என் காதலிதான்...
31 Comments
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteஉங்கள் புதிய முயற்சி தொடர வாழ்த்துகிறேன்
Deletenalla kavithai!
ReplyDelete"udu" entraal enna?
thayavu seythu sollungal..
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..
Deleteஆமா பிழையா கிறுக்கிட்டேனோ..
உடு என்றால் நட்சத்திரங்கள் தானே...
appudiyaa!?
Deleteputhu visayam enakku!
nantri!
// உடுக்கள் // என்றால் என்ன பாஸ். நான் கூட இவ்வளவு உருகி எழுதினத பார்த்துட்டு உண்மையோன்னு நினைச்சேன்.
ReplyDeleteபார்த்த அம்புலி காதல் பட் சூப்பர்
படித்துப் பாருங்கள்
தல போல வருமா (டூ) பில்லா டூ
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html
அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாஸ்...
Deleteஉடு என்றால் நட்சத்திரங்கள் தானே..
பதிவினைப் படித்தேன் நன்றாக இருக்கிறது
மிக அழகிய நிலா கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சார்
Deletenice என்ற ஒற்றைச் சொல்லில் அழகாக கருத்திட்டு சென்ற உங்களுக்கு மிக்க நன்றி சார்
ReplyDeleteமுதல் வருகை என நினைக்கிறேன் தொடருங்கள் உங்கள் வருகையை
அழகு...ரசித்தேன்...உங்கள் மற்ற கவிதைகளை தேட வைத்தது சகோ...
ReplyDeleteஅழகான உற்சாகமூட்டும் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ
Deleteவிடியலைக் தேடும் சேவல்கள் கூட விடைபெற்றிடும்
ReplyDeleteநீ தந்த வலிகள் விடைபெறும் பொழுதறியாது... நான்////வலிக்குது பாஸ்!!
கலக்றிரிங்க!
வலிக்குதா..? ஏதாவது மருந்து கொடுத்தனுப்புரன் பூசிக்கோங்க...:)
Deleteஅழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
நண்பா நன்றாக இருக்கிறது.. ஆங்காங்கே எழுத்து பிழை இருக்கிறது.. கவிதைகளில் எழுத்து பிழைகள் கருத்து பிழைகளை கொண்டு வரும்.. வாழ்த்துக்கள் நண்பா..
ReplyDeleteதவறுகளை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி
Deleteசிறியதொரு வேண்டுகோள் எழுத்து பிழைகள் இடம்பெற்றுள்ள வசனங்களையும் சுட்டியிருந்தால் நன்றாகவிருக்கும்
ஏனெனில் என்னால் அப் பிழைகளை உணரமுடியாமலிருக்கிறது
அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்...
உடுக்கள் எனக்குப் புதிது!
ReplyDeleteநல்ல கவிதை
வருகைக்கும் உங்கள் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா உங்களைப் போன்ற அனுபவசாலிகளின் வருகை எனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது
Deleteநிலாவைக்காதலிக்கும் கரையான் காதல் ரசனையானது !உடு மறந்து போன பழமைத்தமிழ்!
ReplyDeleteஅழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ...
Deleteகலக்கறீங்க......என்ன ஒரு காதல் காதலி... ம் ம்
ReplyDeleteமிக்க நன்றி பாஸ் அழகான கருத்துக்கும் வருகைக்கும்....
Deleteசிட்டுக்குருவி....
ReplyDeleteகவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.... :)
Deleteகரையான்களைப் பார்க்கும் போதெல்லாம் - உன் கண்களில்
ReplyDeleteஒரு வித பயத்தை உணர்கிறேன் - பாழாய்ப் போன கரையான்கள்
நம் காதலையும் கரைத்துவிடுமோ என அஞ்சுகிறாய்
நம் காதலின் ஆழத்தையெண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன் ***************************************இந்த வரி எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு பாஸ்
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்
Deleteகவிதையில் காதலின் ஆழத்தினை மிக துல்லியமாக
ReplyDeleteவடித்துள்ள விதம் அருமை!....தொடர வாழ்த்துக்கள் சகோ .
பெரியவங்களெல்லாம் நம்ம பக்கம் வந்திருக்கிறிங்க பெருமையா இருக்கு உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்......
Deleteஅழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ..
உடுக்கள் செய்த வடுக்கள்..! என தலைப்பு வைத்திருக்கலாம்..
ReplyDeleteகவிதையின் ஆழம் புரிந்தது.. சென்னைப் பித்தன் அய்யா சொன்னது போல உடுக்கள் என்ற வார்த்தை எனக்கும் புதியது. வலைத்தளத்திற்கு வந்து கவிதைப் படித்ததோடு அழகான வார்த்தையையும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி..வாழ்த்துகள்.. இனி சிட்டுக்குருவியின் வலைப் பக்கத்தை விடுவதாக இல்லை...!!!
வலையுலக அனுபவசாலிகள் இந்த சிறியவனின் வலையை சிரமப்படாமல் பிண்ணுவதற்கு உதவி உரமிட்டமைக்கு மிக்க நன்றி
Deleteஅழகானதொரு தலைப்பை செல்லித்தந்துள்ளீர்கள் இன்னுமொரு கவிதைக்கு இதனை இட்டுக்கொள்கிறேன்..
வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்....
இந்த பதிவை வலைச்சரத்தில் -
ReplyDeleteஅறிமுகம் செய்துள்ளேன்!
வருகை தாருங்கள்!
http://blogintamil.blogspot.sg/