கொஞ்சம் கிறுக்கு ரொம்பவே இருக்கு ...

யாரும் எதிர்பாராத அசாதாரண நிகழ்வாக அச் சம்பவம் நடந்துவிடுகிறது. மிகச் சிறந்த ஜோசியக் காரர்களால் கூட துளியளவும் சிந்திக்க முடியாததாக அச் சம்பவம் அமைந்துவிட்டது. இனிமேல் போலி சாமியார்களுக்கு இப் பூமியில் வாழப்பிடிக்குமோ தெரியவில்லை.பல தசாப்தங்களின் பின் சாதனை ஒன்று பதியபடும் யாரோ ஒரு மாணவன் பரீட்சையில் பெற்ற குறைந்த மதிப்பெண்கள். தெருவோர மரநிழலில் சலூன் கடை வைத்திருந்தவர்கள் சொந்தமாக வாங்கிய நிலங்களில் குளிரூட்டிய அறைகளில் முடிவெட்டி முகச்சவரமும் செய்துவிடுவார்கள். ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தினதும் வருவாயீட்டும் பிரதான மூலமாக சலூன் தொழில் மாறிவிடும்.
 
அன்பின் அடையாளமான பரிசுப் பொருட்கள் வியாபாரத்தில் முதலீடு செய்தவர்கள் மூலைகளில் குந்திக்கொண்டு வயிற்றுப் பசியார வழிதேடி சிந்திப்பார்கள். காக்காய் கலரில் இருப்பவர்களை கத்தரினா கைFப் ரேஞ்சுக்கு கொண்டுபோய்விடும் அழகுசாதன நிலையங்கள் ஆள் அரவமற்றுக் கிடக்கும் ஆடையகங்களும் அமைதியாகக் கிடக்கும், போன் கடைகளும் ரீசார்ஜ் கடைகளும் ஆளாளுக்கு முகத்தை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருப்பார்கள், குடும்பங்களில் யாராலும் மாற்ற முடியாத வரலாற்று நிகழ்வாயிருந்த மாமியார் மருமகள் சண்டை இனிமேல் கிடையவே கிடையாது.

குழந்தைகள் பாவம், அழுமூஞ்சியாய் எப்போதுமே திரியும். வழமையில் சின்னதாய் ஒரு சண்டையின் பின் பாடசாலை செல்லும் குழந்தைகள் இனிமேல் உலக மகா யுத்தமொன்றை புரிந்துவிட்டுத்தான் பாடசாலைக்குப் போவார்கள். யுத்தம் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது இனிமேல் ISIS அமைப்பு யாதொரு பெண்னையும் சீண்டவில்லை, பாதுகாப்பாக அப் பெண்ணின் தாய் தேசம் அனுப்பி வைத்துள்ளோம் என்று அறிக்கையிட முடியாது. டெல்லி பேரூந்துகளில் இனிமேல் எந்தப் பெண்களும் பலாத்காரப்படுத்தப்பட மாட்டார்கள்.  நித்தியானந்தாவும், கடாபியும் பாக்கியம் பெற்றவர்களாக இனிவரும் காலங்களில் இளைஞர்களால் நோக்கப்படுவார்கள்.

சினிமாவையே நம்பியிருந்தவர்கள் சீனீ மூட்டை தூக்கும் நிலமைக்கு வந்துவிடுவார்கள், கவிஞர்கள் கருப்பொருள் தேடி செவ்வாய் கிரகம் சென்றும் வெரும்கையும் வீசிய கையுமாக திரும்பிவருவார்கள், தன் பத்தினித் தனத்தை நிரூபிக்க இனி எந்தவொரு பெண்ணும் எந்தவொரு நகரத்தையும் எரிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது, ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் அவசியம் எனும் கோரிக்கைகளும் பதாகைகளும் திடீரென குறைந்துவிடும், ஜேசுதாஸ் இனிமேல் கவலையில்லாமல் தன் எண்ணப்பாடுகளை வெளியிடலாம் எந்தவொரு எதிர்ப்பும் இராது, ஆண்களின் வாழ்வைச் சீரழிக்கும் மது, மாது , சூது எனும் வரிசையிலிருந்து மாது தூக்கப்பட்டுவிடும், மாது தூக்கப்பட்டால் ஏனைய இரண்டும் நீடிக்க வாய்ப்பில்லை, ஆகவே எல்லா ஆண்களும் தூய்மையானவர்களாக மாறிவிடுவார்கள்.

கிளியோபற்றா முதல் கிளியோசியக்காரன் பொன்டாட்டி வரை பெண்களையும் பெண்களின் அழகையும் பெண்டியம் கொம்பியூட்டரில் பாதுகாப்பாக வைப்பதிலேயே இளைஞர்களது பொழுது கழிந்துவிடும், அசினோ, நயனோ ஏன் தெருமுனையின் செருப்புத்தைக்கும் முனியம்மாவின் புகைப்படமும் அதிகூடிய தொகைக்கு ஏலம்விடப்படும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஏன் பல வருடங்களுக்குப் பிறகு கைக்குட்டைகள் கழுவப்படலாம், சரவணன் மீனாட்சி, கஸ்தூரி, சிந்து பைரவி வடிவில் வரும் கண்ணீருக்கு இனி சக்தி கிடையாது அழுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.

பேஸ்புக்கில் கமண்டுகளும் லைக்குகளும் திடீரென குறைந்துவிடும், ஃபேக் ஐடிகளில் இனி எவரும் வலம் வர மாட்டார்கள்,  யூடியூப் தன் பெயருடன் சேர்த்து ஆபாசமான வார்த்தையையோ அல்லது தன் லோகோவில் ஆபாசமான படமொன்றையோ இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கும் அந்த அளவிற்கு யூடியூபில் ஆபாசமான வீடியோக்களுக்கு ஹிட்ஸ் அள்ளிக் கிடைக்கும், இரவு முழுக்க போனிலும் , சமூக தளங்களிலும் கடலை போடுவது இல்லாமல் போனாலும் ஆண்கள் அலுவலகங்களுக்கு நேரத்தோடு செல்வது குறைந்துவிடும். ஆனாலும் எந்தவித டென்சனும் இல்லாமல் அலுவலகங்களில் ஆண்கள் தன் கடமையில் சிந்தனையைக் குவிப்பார்கள்.

ஐயோ சம்பவம் என்னவென்று சொல்லாமல் இப்படியே சொல்லிக் கொண்டு போன எப்பூடி என்று கல்லைத் தூக்காதீங்க, இவ்வளவு சொல்லியும் அச்சம்பவம் என்னவென்று கொஞ்சமேனும் அனுமானிக்க முடியாதவர்களாக என் நட்புகள் இருக்கமாட்டார்கள், இருந்தும் அச் சம்பவம் என்னவென்று சொல்லிவிடுகிறேன்.

உலகத்தில திடீரென பெண்களனைவரும் மறைக்கப்பட்டோ, அழிக்கப்பட்டோ விட்டார்கள். பெண்கள் இனி பலநூற்றாண்டுகளுக்கு உலகத்தில் தோன்ற வாய்ப்பில்லையென்று தலைசிறந்த அறிவியலாளர்கள், ஞானிகள், மதகுருக்கள் எல்லோரும் ஒருமித்துச் சொல்லிவிட்டார்கள். அதனால் தான் நான் மேலே சொன்ன மாற்றங்கள் ஏற்பட்டு உலகம் ஒரு சீரான நிலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் போது,

சுமார் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு சம்பவம் நடக்கின்றது, உலகின் எங்கோ யாருமே கேள்விப்படாத எந்த வித தொழில் நுட்ப வசதிகளுமற்ற ஒரு சேரிப் பிரதசேத்தில் சாதாரண வனப்புக் கொண்ட ஒரு பெண் வசிப்பதாக உலகமக்கள் கேள்விப்படுறார்கள். இந் நிலையில் உலகின் நிலை ? அப் பெண்ணின் நிலை ?

கொஞ்சம் கிறுக்கு ரொம்பவே இருக்கு ...

8 கருத்துரைகள்

emba puriyamathireya ezutha mateengala Kadavula

Reply

வணக்கம் சகோ ஒரு சிறிய இடைவேளையின் பின் வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி மீண்டும் ஆத்மா வீறுநடை போடுவது கண்டு மகிழ்ச்சி! பதிவில் பெண் இல்லாத நிலை பற்றி ஒரு புதிய பார்வை விசித்திரமாக இருக்கு ஆனாலும் சூப்பர் சிங்கர்.மூக்கு சிந்தும் நாடகஉலகம் எல்லாம் நான் அறியேன் !ஹீ நீங்க பொறுமைசாலி எங்கேயோ போயிட்டீங்க தலைவரே!ஹீ

Reply

இதில் சிலது நடந்து விடும் போலிருக்கு...!

Reply

இந்த சமூகம் நமக்கிட்ட வேற எதையோ எதிர்பார்க்குது :)

Reply

வாங்கோ நேசன் அண்ணா ரொம்ப நாளைக்குப் பிறகு சந்திக்கிறதுல மகிழ்ச்சி
சும்மா முசுப்பாத்திக்கு சூப்பர் சிங்கர் பக்கம் போறதண்ணா

Reply

நடந்தாலும் நல்லதுதானே ஸார் :)

Reply

நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது!

Reply

ஹா ஹா.... மிக்க நன்றி ஐயா

Reply

Post a Comment