Looking For Anything Specific?

ads header

நட்பு

ச்சே...
வெளியாகும் போது வானத்த ஒரு முறை பார்த்திருந்தால் இப்படி கண்ட இடத்துல ஒதுங்கிற அவசியம் ஏற்பட்டிருக்காது என்று மனதுக்குள் தன்னைத்தானே நொந்துகொண்டு அருகிலிருந்த பெட்டிக்கடை வாசலில் ஒதுங்கிக் கொண்டார் சகாயம் வாத்தியார்.

சகாயம் வாத்தியார் மாங்குடி பிரதேசத்தில் மிகவும் மரியாதை மிக்கவர் எந்த பிரச்சனைகளுக்கும் செல்வதுமில்லை தன் தொழில் காலத்தில் யாரையும் காயப்படுத்துமளவு செயற்பட்டதுமில்லை. பல முறை முயற்சி செய்தும் தோற்றுப் போன புகைப்பிடித்தலைத் தவிர வேறு கெட்டபழக்கங்கள் எதுவுமில்லாதவர். முப்பது வருஷம் ஆசிரியர் தொழிலில் அனுபவம் உள்ள சகாயம் வாத்தியாருக்கு அந்த முப்பது வருஷத்திலும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் படிப்பு தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லை. 

மூத்தவன் சர்மிளனை அவரைப் போல வாத்தியாராக்கிவிட்டார், இளையவன் அனோஜன் இப்போதுதான் பல்கலைக்கழகத்தில் முன்றாவது வருடத்தில் இருக்கிறான், கடைசி கஸ்தூரி சகாயம் வாத்தியாரின் ஒரே ஒரு பெண் பிள்ளை. பார்ப்பதற்கு இப்போ இருக்கிற நயந்தாரா மாதிரி அழகானவள். அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவள். உயர்தரக் கல்வியை முடித்துவிட்டு மேலதிக படிப்புக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள். ஆண் பிள்ளைகள் இருவரும் வீட்டிலிருப்பது குறைவென்பதாலும் ஒரே ஒரு பெண் பிள்ளை கஸ்தூரி என்பதாலும் சகாயம் வாத்தியார் கஸ்தூரியிடமே அதிகமான நேரத்தையும் அன்பையும் பகிர்ந்து கொண்டார்.

மூன்று மாதத்திற்கு முதல் தான் ஆசிரியர் தொழிலிருந்து ஓய்வு பெற்ற சகாயம் வாத்தியார், தன் பென்சன் பணத்தைக் கொண்டும் மூத்தவன் சர்மிளன் பேரில் வங்கியில் ஒரு கடனெடுத்தும் கஸ்தூரிக்கு ஒரு வீட்டைக் கட்டி எப்படியாவது அவளது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்றெண்ணி வங்கி அதிகாரியை சந்திக்க வெளியானவர்தான் அரை மணி நேரத்துக்கு முதல் இருட்டிவந்த கருமேகத்தை  கவனிக்க தவறிவிட்டார் அதனால் தான் இந்தப் புலம்பல்.

மழை மெல்ல மெல்ல அதிகரிக்க அதிகரிக்க, பெட்டிக்கடை கூறை வழியாக வந்த மழைநீர் தன் மேல் படாமல் இருக்க மேலும் கடையின் சுவரோடு ஒட்டிக் கொண்டார் வாத்தியார். இரண்டு நிமிட கணதியான மழையின் பின்னர் சின்னதாய் ஒரு இடைவெளியைத் தந்தது காலநிலை ஆனாலும் குடையில்லாமல் வெளியில் செல்ல முடியாதவாறு இலேசாக மழை பெய்து கொண்டிருந்தது. தலையில் ஒரு பொலித்தீன் பையைப் போட்டவாறு சற்றுத் தொலைவில் சிறுவனொருவன் விரைவாக வாத்தியார் நின்றிருக்கும் பெட்டிக்கடை நோக்கி வந்துகொண்டிருந்தான். சிறுவன் கடையை அண்மிக்கவும் மழை மீண்டும் கணமாக பொழியவும் சரியாக இருந்தது.

மழை விடும்வரை பூட்டப்பட்டிருந்த பெட்டிக்கடையருகே வாத்தியாரும் சிறுவனும் ஒதுங்கவேண்டியதாயிற்று. பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் மழை குறைவதாகத் தெரியவில்லை. மழை ஆரம்பித்ததிலிருந்து மழை எப்போது விடும், மழை விட்டு நாம் போகும் போது அதிகாரி வீட்டிலிருப்பாரா , லோன் எப்ப கிடைக்கும், பென்சன் பணம் சீக்கிரமாகக் கிடைக்குமா என்றெல்லாம் பலதையும் சிந்தித்துக் கொண்டிருந்த வாத்தியாரின் கவனம் திடீரென சிறுவனின் பக்கம் திரும்பியது.

ஒரு பதின்னான்கு அல்லது பதினைந்து வயதுதானிருக்கும் அச் சிறுவனுக்கு. வாத்தியாரை வெறித்துப் பார்ப்பதும் பின் தன் இடுப்பை தடவிக் கொள்வதுமாக செயற்பட்டதுதான் வாத்தியாருக்கு சிறுவன் மேல் கவனம் திரும்ப காரணமாகவிருந்தது.வயதுக்கும் உடலுக்கும் சற்றும் பொறுத்தமில்லாத ஆடையுடுத்தியிருந்தான். கழுத்திலும் ஒரு பெரிய சங்கிலி தொங்கியது வலது கைகயில் கைக்குட்டயைச் சுற்றிக் கொண்டும் ஒரு முரடனைப் போல காட்சியளித்தான். முகத்திலிருந்த அரும்பு மீசை சற்றுப் பெரிதாக இருந்தால் அசல் முரடன் தான்.

பார்ப்பத்ற்கு வெளியூர்க்காரன் போலத் தெரிந்தாலும் போனவருடம் தன்னிடம் ஒன்பதாவது படித்த ஒரு மாணவனின் முகத்தோற்றத்தை போலிருந்தது வாத்தியாருக்கு அவனின் முகம் . சிறுவன் மீண்டும் தன் இடுப்பை ஒரு முறை தடவி வாத்தியாரையும் பார்த்தான். வாத்தியாரின் பார்வை சிறுவனின் இடுப்பை நோக்கிச் செல்ல இடுப்பிலிருப்பது ஏதோ ஒரு ஆயுதம் போல தென்படவும் வாத்தியாருக்குப் பயம் தொற்றிக் கொண்டது. தன் சேவைக் காலத்தில் யார் யாருக்கெல்லாம் அடித்திருக்கிறோம், யாரோடெல்லாம் கோபமாக பேசியிருக்கிறோம் என்றெல்லாம் வாத்தியார் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். இடையில் இடைவிடாது பெய்யும் மழையையும் வைதுகொண்டார்.

எதுக்கும் இரண்டடி தள்ளி நிற்போம் என்றெண்ணி நகர்ந்தவரால் ஒரு அடிக்கும் குறைவான தூரம்தான் நகர முடிந்தது. இன்னும் ஒரு இன்ச் நகர்ந்தாலும் கொட்டோ கொட்டனக் கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்துவிடுவார். ஏற்கனவே இடையிடையே வீசிய குளிர்ந்த காற்றின் மூலம் ஏற்பட்ட மழைச்சாரலினால் வேட்டி நனைந்திருந்தது.சிறுவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும் பின் வானத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தி எப்போது மழை விடும் என்று பார்ப்பதுமாகவிருந்த வாத்தியாரின் கையடக்கத் தொலைபேசி சினுங்கியது. இடுப்பில் பத்திரமாக வைத்திருந்த கைபேசியை எடுத்து அழைப்பது யாரென்று பார்த்து அழைப்பு வீட்டிலிருந்து வருகிறதென அறிந்தவுடன் பேச்சுத் தொடுத்தார். மறுமுனையில் கஸ்தூரி, குடையெடுத்துச் செல்ல மறந்ததையும் இப்போது இருக்குமிடம், குடை எடுத்து வரவா என்றெல்லாம் கேட்ட கஸ்தூரியிடம் இல்லம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல மழை விட்டுடும் நான் வந்துடுவேன் என்று சொல்லித் அழைப்பைத் துண்டித்தவரின் கண்கள் மறுபடியும் சிறுவனைத் தேடின.

இப்போது சிறுவன் இடுப்பினில் எதுவுமில்லாமலிருக்க, கைகளில் ஏதோ ஒரு சிறிய பொட்டலமொன்றை சிறுவன் பிரித்துக் கொண்டிருப்பதை வாத்தியார் கண்டுவிட்டார். வாத்தியார் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல்  அவசர அவசரமாக பொட்டலத்தை பிரிப்பதிலேயே சிறுவன் குறியாக இருந்தான். பொட்டலம் சிறிதாக பிரிபட பொட்டலட்தினுள் இருப்பது என்னவென்று ஓரளவுக்குத் தெரிந்ததும் வாத்தியார் திகைத்துப் போய்விட்டார். ஒரு சின்னப் பயள் எப்படி இப்படியான பொருட்களையெல்லாம் கைகளில் வைத்துக் கொள்ள முடியும் , காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு, இவனுக்கு அப்பா அம்மா இல்லையா, இவனைப் இப் போக்கில் இன்னும் கொஞ்ச காலம் விட்டுவிட்டால் இவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடுமே என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்த வாத்தியாருக்கு சிறுவனின் அடுத்த நடவடிக்கை வியப்பையும் பயத்தையும் கொடுத்தது.   சிறுவன் தான் கைகளில் வைத்திருந்ததை வாத்தியாரின் கழுத்துக்கு நேரே நீட்டிவிட்டான். சிறுவனின் உயரத்திற்கு வாத்தியாரின் கழுத்தளவுக்குத்தான் நீட்ட முடிந்தது இல்லாவிட்டால் முகத்துக்கு நேராகவே நீட்டியிருப்பான்.

சிறுவனின் திடீரென்ற இச் செயற்பாடு வாத்தியாரை நிலைகுழையச் செய்ததுடன் கோபத்தையும் அதிகப்படுத்தியது. ஆனாலும் வெளியில் பெய்து கொண்டிருக்கும் கணத்த மழை, மழையுடன் கூடிய குளிர்ந்த காற்று யாருமற்ற தனிமையான பெட்டிக் கடைச் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு தனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி சிறுவன் நீட்டியதை வாங்கிக் கொண்ட வாத்தியார் சிறுவனிடமே தீப்பெட்டியையும் வாங்கி சிறுவன் நீட்டிய சிகரடை பத்தவைத்துக் கொண்டு சிறுவன் பற்றி தெரிந்துகொள்ள அவனிடம் பேச்சுத் தொடுத்தார்.


---- நட்புக்கு வயது வித்தியாசம் கிடையாதாம், அப்படி வயது வித்தியாசம் கிடையாத நட்பு வேர்விடுவது புகைவிடுவதில் தானாமே ----

Post a Comment

15 Comments

  1. Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  2. //நட்புக்கு வயது வித்தியாசம் கிடையாதாம், அப்படி வயது வித்தியாசம் கிடையாத நட்பு வேர்விடுவது புகைவிடுவதில் தானாமே ---- //
    இணைய நட்பும் அவ்வாறே!
    அருமை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  3. Replies
    1. உண்மையிலேயே கொடுமையான விசயம் தான். இது என் தந்தைக்கு நடந்த சம்பவம் அதனை மிகவும் கவலைப்பட்டு கதைத்தான் அதனையே கற்பனை வடிவாக்கியுள்ளேன்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  4. என்னத்த சொல்றது...? காலக் கொடுமை...!

    ReplyDelete
    Replies
    1. எனது தந்தை தனக்கு நடந்த இச் சம்பவத்தைச் மனவேதனையோடு சொன்னார் அதனையே கற்பனையாக்கியுள்ளேன் சார்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  5. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இருப்பினும் நல்ல வாத்தியாராக அவரை சித்தரித்துக் கொண்டு வந்து முடிவில் இப்பூடிப் பண்ணிட்டீங்களே ஆத்மா??:)

    ReplyDelete
    Replies
    1. கதையோ கவிதையோ எதை எழுதினாலும் முடிக்கத் தெரியாமல் முழிப்பதுதாம் நமக்கு வாடிக்கை :(

      Delete
  6. சூப்பரா கதையை நகர்த்தியிருக்கிறீங்க... தொடர்ந்து வாசிக்க முடியுது.. சில கதைகள் வாசிக்க முடியாமல் போரடிக்கும்... இது அப்படியில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஹையோ... அப்படியா அப்போ நானும் பெரிய எழுத்தாளம் ஆகிடுவேனா... :V

      Delete
    2. வருங்காலம் என்ன.. இப்பவே ஆகிட்டீங்க... எழுத்துப் பிழை விடக்கூடா சொல்லிட்டேன்ன்:)

      Delete
  7. என்னை அறிமுகப்படுத்தியமைக்கும் அதனைத் தெரியப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி சகோ
    விரைவில் பதிவைப் பார்க்கிறேன்

    ReplyDelete
  8. ourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
    home appliance
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete