Looking For Anything Specific?

ads header

பெண்கள் அதிக வருடம் உயிர் வாழ்வது எதனால்?

எமது முன்னோர்களில் பெரும்பாலானோர் நோய்களின் தாக்கமின்றியும் மேலும் அதிகமான வருடங்கள் உயிர்வாழ்ந்ததாகவும் அறிகிறோம். அதற்கு பிரதான காரணமாக அப்போதைய உணவுப் பழக்கவழக்கத்தினை கூறுகிறார்கள். இரசாயணக் கலவையற்ற உணவுகள் அந்த காலகட்டங்களில் மலிந்து இருந்ததனால், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைத்தது. இருந்தும் அவர்களிடம் மருத்துவ  வசதிகள் குறைவாகக் காணப்பட்டதினால்,ஏற்படுகின்ற ஒரு சில நோய்களுக்கு சிறந்த மருத்துவமின்றி சிலர் உயிரிழந்ததாகவும் அறிகிறோம்.   

இன்றைக்கு ஒரு சில கிராமப் புறங்களில் மட்டும் இரசாயண கலவையற்ற இயற்கை உணவுகள் கிடைக்கின்றது. கிராமத்து ஆண்கள் பொருத்தமான வேலைகள் தேடியும் இன்னும் வேறுபல வேலைகளுக்காகவும், கிராமத்து இளைஞர்கள் தங்களுடைய படிப்பு தொடர்பாகவும் அடிக்கடி நகர்ப்புறங்களுக்கு போவதனால் நகரத்து இரசாயன உணவுகளை இவர்கள் உண்ணவேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆகவே கிராமத்தில் விளையும் இயற்கை உணவுகளை கிராமத்துப் பெண்களே உண்பதற்கு அதிக சந்தர்ப்பம் இருக்கிறது.

இன்றைக்கு உலக சனத்தொகையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுவருகிறது, இன்னும் சொற்ப வருடங்களின் பின்னர் இந்த முழு உலகத்தின் ஆட்சியும் பெண்களின் கைக்குக் கிட்டும் என்பது நிஜம்.

இன்றைய சூழ்நிலையில் சாலை விபத்துக்கள் தான் அதிகமான மரணத்தை ஏற்படுத்துகின்றன. பெண்களை விட ஆண்களுக்கு பொறுப்புக்களும் வெளியில் செல்லக்கூடிய தேவையும் அதிகமாக இருப்பதனால் சாலை விபத்துக்களில் அதிகமாக சிக்குவதும் ஆண்களேதான். சிகரட், போதைப்பொருள் பாவணை போன்றவற்றை அதிகமாக பாவிப்பதும் ஆண்கள் தான். பெண்களும் ஆண்களுக்கு போட்டியாக போதைப்பொருள் பாவனையில் இப்போது அதிரடியாக இறங்கியிருக்கின்றனர், இருந்தபோதிலும் விகிதாசார ரீதியில் பார்க்கும் போது ஆண்களே அதிகம்.

இன்னும் சுரங்கமகழ்தல், பெரிய பெரிய கட்டிடங்களில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடல் போன்ற கடினமான வேலைகளை அதிகம் செய்வதும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே இப்படியான காரணங்கள் மூலம் ஆண்கள் அதிகமாக இளம் வயதுகளில் இறந்துவிடுகின்றனர். எனவேதான் பெண்கள் ஆண்களைவிட அதிகமான வருடம் உயிர் வாழ்கிறார்கள். 

மேலே சொன்ன விடயங்கள் யாவும் கற்பனை என்று சொல்லி பதிவை அரைகுறையாக முடிக்க விரும்பவில்லை, மேலே சொன்னவை அனைத்தும் என்னுடைய கருத்து ஆனால் நான் கீழே பதிவிடும் புகைப்படங்கள் யாவும் பெண்கள் அதிக வருடம் உயிர் வாழ்வதற்கான காரணம் என்று கூறி சில இணையத்தளங்களில் பதிவிடப்பட்டவைகளை தொகுத்திருக்கிறேன்.
















இப்பவாச்சும் நம்புங்கப்பா :P


Post a Comment

7 Comments

  1. படத்தில் உள்ள மாதிரி வீர தீர 'சாக'சகங்கள் செய்தால்...!

    அவர்களாவது வாழ்ந்து விட்டுத்தான் போகட்டுமே (நம் மீது எல்லா பாராத்தையும் போட்டு...!)

    காலையிலேயே பதிவு Reader-ல் வந்தது-வெறுமையாக... படங்களுக்காக தாமதமோ...? நன்றி...

    ReplyDelete
  2. உங்கள் கருத்துகள் எப்படியோ.. ஆனால் படங்கள் ஒவ்வொன்றும் செம... வாய்விட்டு சிரித்தேன்

    ஆண்கள் பாவம்

    ReplyDelete
  3. படங்களுடன் பதிவு
    வெகு வெகு சுவாரஸ்யம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இந்த படங்களை பார்த்தா, அதிக வருடங்கள் எப்படிங்க உயிர் வாழ முடியும். ஏன்னா பெண்களின் மாநாடு மிகவும் இளகிய மனது. இந்த படங்களை எல்லாம் பார்க்க அவுங்க மனசு தாங்காது.

    எங்கேருந்து தான் இந்த படங்கள் எல்லாம் உங்கள் கண்ணில் பட்டுச்சோ!!


    ReplyDelete
  5. படம் போட்டு பதிவைத்தரும் வித்தை இந்தப்படங்கள் போல உங்களிடம் தான் படிக்கவேண்டும் சகோ!ஹீ என்றாலும் பதிவு மூலம் வலையில் சந்திப்பதில் ஆத்மாவுடன் சந்தோஸம்!

    ReplyDelete