Looking For Anything Specific?

ads header

நான் படிச்ச இங்கிலீசு (குறும்படம்)

இந்தப் பதிவை நான் ரொம்ப நாளா எழுதனும் என்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எப்பிடியோ என்ன செய்தோ யாரையாவது போட்டுத் தள்ளியோ இன்னைக்கு எழுதிடனும்னு முடிவு செஞ்சு எழுதுகிறேன். யாரும் கம்பு கல்லு இதுகளைத் தூக்கிட்டு குறுக்கால வந்திடாதீங்க யாரையாவது போட்டுத் தள்ளிடனும் என்கிற முடிவுல தெளிவா இருக்கேன்.

இது நான் படிச்ச இங்கிலீசு சம்பந்தப்பட்ட பதிவல்ல. ஏன்னா நான் இன்னும் இங்கிலீசு படிக்கவேயில்லை அத்தோட நான் அஞ்சாம் வகுப்பு பெயில் எங்கிறதையும் இவடத்திலை பெருமையா சொல்லிக்கிறதிலை பெருமைப்படுகிறனுங்கோ.

நான் படிச்ச இங்கிலீசு இது என்னோட சின்ன வயசுல என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஈழத்துக் குறும்படம். இன்றைய தினத்தில் ஈழத்தில் நிறையக் குறும்படங்கள் வெளிவருகிறதென்றால் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தவை ஆரம்ப காலங்களில் வெளிவந்த இது போன்ற குறும்படங்களாகத்தான் இருக்க முடியும்.

இப்போது இருப்பது போன்று தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடிய வசதி மிகவும் குறைந்த காலகட்டத்தில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் இலங்கை அரசாங்க அலைவரிசையொன்றில் இந்த குறும்படத்தை முதன் முதலில் பார்த்தேன். அப்போதிருந்த வளங்களைக் கொண்டு மிகச் சிறப்பாக தயாரித்திருந்தார்கள் படக் குழுவினர்.

அழகான ஈழத்து சொல் வழக்கில் மிகவும் நகைச்சுவை நிறைந்ததாக, நகைச்சுவையையே பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த இந்தக் குறும்படம், இப்போது நாம் சமூக தளங்களில் நகைச்சுவைக்காக எடுத்துக் கொள்ளும் சில நையாண்டி வார்த்தைகள் மற்றும் சம்பவங்களையும் கொண்டமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

குறும்படத்தைப் பற்றி சொல்லப்போனால், நடிகர்கள் இன்னார் இன்னார் தான் என்று என்னால் சொல்ல முடியாதுள்ளது. இதற்கு காரணம் சினிமா பற்றிய அறிவு இல்லாத காலத்தில் இப் படம் எனக்கு அறிமுகமானதும் மேலும் இக் கூட்டணியின் தயாரிப்பில் பிற படங்களை நான் பார்க்கததுமேயாகும்.

லண்டனிலிருந்து (?) வந்திருக்கும் தங்கரெத்திணம் அண்ணாவிடம் ஆங்கிலம் கற்பதற்கு வரும் யோகன், எப்படியெல்லாம் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார் இறுதியில் யோகன் கற்ற ஆங்கில கல்விக்கு ஆகும் நிலை என்ன என்பதனை மையக் கருவாக கொண்டிருக்கிறது.

நீங்களும் ஒருக்கா பாருங்களேன் நல்ல நகைச்சுவையாக இருக்கும்.




Post a Comment

14 Comments

  1. நல்ல சி(ரி)றப்பாத்தான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. அழகான முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி சார்

      Delete
  2. // யாரையாவது போட்டுத் தள்ளிடனும் என்கிற முடிவுல தெளிவா இருக்கேன்.///
    அப்போ இன்னும் போடல்லியா?:) சேம் ஷேம்ம்ம்ம்ம்ம்:). வீடியோ நல்ல நகைச்சுவையாகத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா சொல்லாமக் கொள்ளாம பேரையெல்லாம் மாத்திட்டீங்க போல......
      இனிமேதான் யாரையாச்சும் ......... :)
      மிக்க நன்றி பூஸார்

      Delete
  3. வீடியோ விரைவில் பார்க்கின்றேன் சகோ.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் பாருங்கள் அண்ணா மிகவும் நகைச்சுவையாக இருக்கும்
      மிக்க நன்றி அண்ணா

      Delete
  4. என் மொபைல்ல காணொளியைக் காண இயலவில்லை... விமர்சனம் அருமை.... தொடருங்கள். நல்ல பதிவு...

    ReplyDelete
    Replies
    1. சந்தர்ப்பம் கிடைக்கும் போது கணனியில் காணத் தவறாதீர்கள்...
      மிக்க நன்றி பாஸ்

      Delete
  5. விமர்சனம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துக்கு மிக்க நன்றி சார்

      Delete
  6. கே ஜங்ஸன் கோ கோ ஜங்ஸன்
    எத்தன வாட்டி பாத்துட்டம் ல சிறிச்சு முடியல்ல நாங்களும் சின்னவயசில பாத்திருக்கோம்

    ReplyDelete

  7. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  8. நகைச்சுவையாக உள்ளது

    ReplyDelete
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : வாசிப்பும் சுவாசிப்பது போல!!

    ReplyDelete