சந்தோஷமாய் இருப்போம் வாருங்கள்...

சிலர் சந்தோஷத்தை உள்ளத்திலும் இன்னும் சிலர் தங்கள் அழகிய வதனங்களிலும் நிரப்பிக்கொண்டு இந்த உலகத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்வில் நிகழக்கூடிய கவலை தரக்கூடிய சம்பவங்களைக் கூட மிக எளிதாகவும் அழகிய முறையிலும் கையாண்டு வாழ்வின் அடுத்த நொடியை சந்தோஷமாக வைத்திருப்பதற்கு முனைவார்கள். இப்படியானவர்கள் பாக்கியம் பெற்றவர்களே.

இன்னும் சிலருக்கு துக்கமே / கவலையே தான் வாழ்வின் பிரதானமாக நிகழ்வாக இருக்கும்.  வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரக்கூடிய பொன்னான சந்தர்ப்பங்கள் இவர்கள் வாழ்விலும் இருக்கும். அந்த சந்தர்ப்பங்களுக்காக அழகாக தங்களைத் தயார்செய்துகொள்வார்கள். அந்த அழகான சந்தர்ப்பங்கள் / நிகழ்வுகளும் திருப்திகரமாய் முடிந்துவிடும் ஆனால் இவர்களின் உள்ளத்திலோ கவலை சிறிதளவேனும் குடிகொண்டிருக்கும்.

மரணித்துப் போன தன் உறவுகள் இந்த நிகழ்வில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் அல்லது வெளியூரிலிருக்கும் / வெளிநாட்டிலிருக்கும் உறவுகள் கலந்து கொள்ளாதது பற்றிய விமர்சனங்களைக் கொண்டு அல்லது இன்னும் கொஞ்சம் அதிக பணமிருந்திருந்தால் நிகழ்வை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பதாக அக் கவலைகள் அமைந்திருக்கும். 

கனி தரக்கூடிய மரத்தினில் எப்போதும் எல்லாக் காலங்களிலும் சுவைமிகுந்த பழுதடையாத கனிகள் கிடைப்பதில்லை . சில பருவங்களில் காயாகமலேயே கருகுகின்ற பிஞ்சுகளும் இருக்கின்றன. பிஞ்சுகள் கருகுவது , காய்கள் கனியாகாமல் பழுதடைவது எந்தக் காலம் என்ன பருவம் என்பதனை  பராமரிப்பவன் அறிந்து தகுந்த சிகிச்சையளித்தால் கிடைப்பது பலனே. அதே போன்றுதான் நம் வாழ்வும். எப்படியோ பூமிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டோம்
சந்தர்ப்பங்கள் / சம்பவங்கள் இறைவனால் ஏற்படுத்தப்படுபவைகள். அச் சந்தர்ப்பங்கள் / சம்பவங்கள் சில சமயங்களில் சந்தோஷத்தைக் கொடுக்கும் சில சமயங்களில் துக்கத்தைக் கொடுக்கும். 

எதனை எப்படி எடுத்துக் கொள்வது என்பதனைத் தீர்மானிப்பதில் எம் மனசு பிரதானமாகிறது. மனதினில் தோன்றும் எண்ணமே ஆசையைத் தூண்டுகிறது, ஆசைகள் மனதினை நிரப்பும் போது தேவையெழுகிறது இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முனையும்போதே வாழ்வில் பிரச்சனைகளும் கவலைகளும் ஏற்படுகின்றன.

சிறுவயது முதல் மனதினைக் எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கற்றுக் கொண்டிருந்தால் எதிர்கால வாழ்க்கை பிரகாசமானதாகவும் சந்தோஷம் நிறைந்ததாகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆகவே இன்று பெற்றோராய் இருப்பவர்கள் மனக் கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர்ந்து அதனை தம் குழந்தைகள் மீது பிரயோகிக்கும் போது இன்றைய குடும்ப நிலையும் எதிர்கால குடும்ப நிலையும் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது மனக் கட்டுப்பாட்டின் அவசியத்தைக் குழந்தைகள் மீது பிரயோகிக்கும் போது அக் கட்டுப்பாடுகள் குழந்தைகளின் சுதந்திரத்தினில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதாகும். 

எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் பெரிய சந்தோசத்துக்காக இன்று கிடைக்கக் கூடிய சின்னச் சின்ன சந்தோசங்களை விட்டுவிடுவதென்பது முட்டாள்த்தனம். சில சந்தர்ப்பங்களில் பெரிய சந்தோசங்கள் அடையப்படாமலே மரணத்தைத் தொட்டவர்களும் இருக்கிறார்கள். சிலவேளை நாம் முயற்சிக்கும் பெரிய சந்தோஷம் எமக்கு சந்தோஷத்தை மட்டும் தான் கொடுக்கும் என்பதில்  உத்தரவாதம் என்ன ? நாளைய தினத்தை எப்படி சந்தோஷமாக போக்குவது என்பதைப் பற்றி சிந்திக்காமல் நாம் அடைந்திருக்கும் இன்றைய தினத்தை எப்படி சந்தோஷமாக வைத்திருப்பது என்பது பற்றிச் சிந்தித்தலே நன்மைதரக்கூடியது. இதைக்கூட யாரோ எப்பவோ எங்கயோ கிறுக்கிவைத்திருப்பார்கள் என்பதும் உண்மை.

ஒரு குழந்தையிடம் புன்னகைப்பதால் மனதுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தோன்றினால் அதுவும் எமக்குக் கிடைத்த சந்தோஷமே. அந்திப்பொழுதை விளையாட்டில் போக்கிவிடும் சிறுவர்களையும் அவர்களின் விளையாட்டையும் சிறிது நேரம் பார்க்கக் கிடைத்தால் அது கூட எமக்குச் சந்தோஷமானதே. அச் சிறுவர்கள் செய்யக்கூடிய பல செயல்கள் நாம் சிறுவர்களாய் இருக்கும் போது செய்ய முடியாமல் போனவையாகக்கூட இருக்கலாம். அதனை இன்று காணக்கிடைப்பதும் சந்தோஷமானதே.

தூக்கமில்லாமையினால் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது பற்றி செய்தித்தாளில் படிக்கும் வரை இன்று  நாம் நிம்மதியாக நித்திரை செய்த ஒரு மணி நேரமும் எமக்குக் கிடைத்த சந்தோஷமே. இன்றைக்கு எத்தனையோ பேர் வெளிநாடுகளில் தன் குடும்ப சுமை போக்குவதற்காக உறவுகளைப் பிரிந்து சிரமப்படுகிறார்கள், இவர்களை நினைத்தால் நாம் நேருக்கு நேராக நம் உறவுகளுடன் பேசும் ஒவ்வொரு நொடியும் எமக்குச் சந்தோஷமானதே.

மழை பெய்ய ஆரம்பிக்கும் போது கொடியில் கிடக்கும் உடைகளை நனையாமல் பாதுகாப்பாக நாம் எடுத்துப்பது கூட சந்தோஷமே. அம்மாவின் அல்லது மனைவியின் படபடப்பு குறைவது மட்டுமல்லாமல் உடை நனையக் கூடாது என்பதற்காக வேகமாக வெளியில் வரும்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் கூட குறையலாம். எம்மை விட மழை வேகமானது.

சந்தோஷங்களை /  நிம்மதியைத் தேடி நாம் எங்கும் செல்லத் தேவையில்லை சந்தோஷங்கள் எங்களுக்குள்ளேயே ஆழமாக வேரூன்றி புதைந்து கிடக்கின்றது. அதனை எப்படி ஒரு கிளைகள் நிரம்பிய மரமாகக் கொண்டுவருவது என்பது எங்களிடமே இருக்கிறது. இதைத்தான் நம் வாழ்க்கை நம் கையில் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் போல.

ஐந்து நிமிடம்  சுத்தமான இயற்கைக் காற்றை சுவாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தால், நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் நகரத்து மக்களின் நிலமையை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொள்வோம். அதிக தாகமெடுத்த வேளை கிடைக்கும் ஒரு கோப்பை சுத்தமான தண்ணீர் கூட எமக்கு கிடைத்த சந்தோஷமே. இன்று எத்தனையோ மக்கள் குடிப்பதற்கு அசுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் விரைவாகவும் எமது இயற்கை (மலசல)த் தேவைகளை  நிறைவேற்ற முடிகிறதா அது கூட நாம் சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டியதே. இன்றைய நிலமையில் அதிகமானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாக இயற்கைத் தேவையை சரியாக போக்கமுடியால் இருப்பதுவும் அடங்குகிறது. 

எம் வேலைகளை முடித்துவிட்டு தினமும் இரவில் நித்திரைக்குச் செல்கிறோம். மறுநாள் நாம் அடைந்துகொள்ளும் காலைப் பொழுது கூட எமக்குக் கிடைத்த மிகப் பெரும் சந்தோஷமே. நேற்றைய தினத்தில் எவருடையதாவது மனதை புண்படுத்தியிருந்தால் அவரிடம் இன்றைய தினத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். அல்லது யாருக்காவது வாக்குறுதியளித்திருந்தால் அவ் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அல்லது நேற்றைய தினத்தை விட இன்று கொஞ்சம் அதிகமான நன்மைகளை செய்து கொள்ளலாம். மாற்றமாக எமது தூக்கத்திலேயே மரணம் எம்மைச் சுவைத்திருந்தால் ? அதனால்தான் நாம் அடைந்து கொள்ளும் ஒவ்வொரு காலைப் பொழுதும் எமக்குக் கிடைத்த மிகப்பெரும் சந்தோஷமென்கிறேன்.

எமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கென ஒரு இடம் கிடைத்தால் அதுவும் சந்தோஷமே. ஆகையால் வலைத்தளங்கள் , பேஸ்புக் என்பன கூட எமக்குக் கிடைத்த எம் முன்னோர்களுக்குக் கிடைக்காத சந்தோஷங்களே. 

எல்லாவற்றிற்கும் மேலாக  பின்னேர பொழுதுகளில் தெரு சந்தியிலுள்ள தேநீர் கடையில் ஒரு கப் தேநீர் குடித்துவிட்டு உலகத்தையும் உலக தலைவர்களையும் ஏன் ஊர் தலைவர்களையும் விமர்சிப்பதற்கும் எமது சின்னச் சின்ன கோபங்களை வெளிப்படுத்துவதற்கும் ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுக்கு சேர்ந்து போவதுக்கும் நல்லதா நாலு நண்பர்கள் கிடைத்தால் இதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்.

ஆகவேதான் சந்தோஷங்கள் என்பவை நாம் தான். நமது உறவுகள், சொந்த பந்தங்கள், நாம் செய்யும் தொழில்,தொழில் செய்யும் இடம், நாம் அன்றாடம் காணும் காட்சிகள், நமது நண்பர்கள். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு சந்தோஷத்தைத் தேடி நாம் எங்கே செல்வது ?13 கருத்துரைகள்

தங்களின் தகவலுக்கு :

கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

Reply

வணக்கம் சொந்தமே!அருமை.வாழ்கைல ஒவ்வொரு நொடியும் சந்தோஷமே!!விடுதியில் உள்ள இரவுகளில்பல்கனியில் நின்று.லைட்கவுஸ பார்த்து இரு கை வித்து தலை நிம்ர்துகையில் ஒரு கூதல் காற்று கடக்கும் பாருங'க..ஆகா...டிகிறி முடிக்கேக்ககூட வருமான்னு தெரியாத சுகம்..சந்தோசம்.வாழ்த்துக்கள்

Reply

ஓ.....அந்தக்கடையில நின்னு..அந்த அவர பற்றிஅப்பிடிஅப்பிடியெல்லாம் கதைச்சிங்களே ஆத்மா.இது தான் சங்கதியா???ஆனாலும் அவ்ளோ டீப்பாபேசியிருக்க கூடாது போங்க.

Reply

அடடே ஆத்மா வலைதலமாகிவிட்டது போல.. யோவ் சொல்லவே இல்ல... இல்ல நான் தான் கவனிக்கவில்லையா..

சென்றவாரம் தான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆத்மாவும் பதிவுகள் எழுதுவதை குறைந்து விட்டாரே என்று.. சந்தோசமாய் இருப்பது பற்றி வகுப்பெடுத்த தோழரே சந்தோசமாய் பல பதிவுகள் எழுதுவோம் வாருங்கள்

Reply

அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள்!

Reply

தூங்கி அடுத்த நாள் விழித்தெழுந்தால் கடவுளுக்கு நன்றி சொல்வோம்... நிறைய யோசிக்க வைத்துவிட்டது....

Reply

தகவலுக்கு மிக்க நன்றி சார்

Reply

தனிமையில கொஞ்ச நேரம் இயற்கையை வியக்கிறதென்பது மிகப் பிடித்தமான ஒன்றுதான்.....

பாருங்க டிகிறி முடிக்கேக்க பெரிய ஞானியாகவே மாறிடுவீங்க..

Reply

ஆத்தி அவ்வளவு சத்தமாவே பேசினோம்... அங்க வரைக்கும் முழங்கியிருக்கு...

வருகைக்கு மிக்க நன்றிங்க

Reply

இரண்டு மாதத்துக்கு முதல் அது வலைத்தளமாக மாறிவிட்டதுப்பா.. நான் தான் பெரிசுபடுத்தல்ல.....

இனிமேல் அடிக்கடி பதிவுகள் தொடரும்... பாஸ்

Reply

மிக்க நன்றி சார்....
வருகைக்கும் வாழ்த்துக்கும்

Reply

வாங்க வாத்தியாரே...
நம்மளுக்குத்தான் உங்க பக்கம் வர முடியாமல் இருக்கு போல..
இனிமே வந்துடுறேன்

அழகான கருத்துக்கு மிக்க நன்றி

Reply

உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Reply

Post a Comment