பிஸியான வருடம்... அகவை 3

எப்படித்தான் இரண்டு நாளைக்கு ஒருக்காவாவது பதிவு போடுவோம் என்று முயற்சித்தாலும் முடியமாட்டேனெங்குது என்ன செய்யிறது... :( இந்த வருஷம் பதிவிடுறத்துக்கு ஒரு டசன் மேட்டரிருந்தாலும் சின்ன சின்னதா பேஸ் புக்குல மட்டுமே  அதுகல சொல்லிட்டு இருந்தேன்.பேஸ்புக்குல என்னை கண்டுக்க இங்க கிளிக் செய்யுங்க 
இன்னைக்காவது ஒரு பதிவு போடல்லன்னா என் மனட்சாட்சி என்னையே கேவலமாப் பார்க்க ஆரம்பிச்சிடும்,பின்னாடி அசிங்கமாவும் போயிடும்... ஏன்னா இன்னைக்கு ப்ளாக் ஆரம்பிச்சி மூனாவது வருஷத்துல காலடி எடுத்து வச்சிருக்கிறேன்.

நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இந்த ப்ளாக் ஆரம்பிச்சேன் எங்கிறதை போனவருஷம் இதே நாளில பதிவிட்டுட்டேன். படிக்காதவங்க + படிச்சவங்க இரண்டு பேரும் இந்த லிங்க்ல போயி இன்னுமொருக்கா படியுங்கோ இதை ஏன் இவடத்தை சொல்லுறேன்னா மறுபடியும் மறுபடியும் ஒரு விஷயத்தை என்னால சொல்லிக்கொண்டு இருக்க முடியாது, நான் ரொம்ப பிஸியானவன், என்னோட பிஸிக்கு ஒபாமாவுக்கே ஈடு கொடுக்க ஏலாதாம் எண்டா பாருங்களேன்...

இதுவரை காலமும் என்னோடு சேர்ந்து பயணிக்கும் அனைத்து வலையுலக நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். நான் பதிவிடாமல் இருந்த காலப்பகுதியிலும் என் வலைத்தளப் பக்கம் வந்தவர்களுக்கும் மற்றும் இக் காலப்பகுதியில் என்னைப் பல இடங்களில் அறிமுகப்படுத்தியவர்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையைச் செல்ல முடியாமல்...(வாயில என்ன கொழுக்கட்டையா என்னு மட்டும் கேட்டுடாதீங்கோ) அதற்கு ஈடான வார்த்தைகள் உலகத்தில் எங்கிருந்தாலும் அதனைக் கொண்டுவந்து உங்கள் காலடியில் சமர்ப்பிக்க முயற்சிக்கிறேன். 

சரி இனிமே உங்களை அடுத்த பதிவுல சந்திக்கிறேன் அதுவரை ஜாலியா இருங்கோ

எதுக்கும் இந்த வீடியோக்களையும் பார்த்து உங்களுடைய உள்ளத்தில பட்டதையும் சொல்லிட்டுப் போங்க... 


15 கருத்துரைகள்

நீண்ட நாட்கள் ஆயிற்றே. வாரத்திற்கு ஒன்றாவது எழுதலாம்.

Reply

மூன்றாவது ஆண்டு தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்

Reply

நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள் நண்பா...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்... வாழ்வு, எழுத்து என அனைத்தும் வளம் பெறட்டும்...

Reply

மூன்றாண்டு கடந்து நாலாவதில் படியேற்கும் ஆத்மாவே பலபதிவுகள் தாருங்கள் ஐயா !பார்வையாளரில் நானும் ஒருவன் நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் நட்பு!

Reply

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்கள் வலைபூவிர்க்கும்...

என்னதான் ஒபாமாவை மிஞ்சிய உயரதிகாரி போல் காட்டிக் கொண்டாலும் வாரம் ஒரு பதிவாவது போடும் படி சங்கம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது

Reply

நீண்ட இடைவெளியின் பின் உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் ஐயா .. முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

ஹாரி வாங்க பாஸ்.......ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்குப் பிறகு.

Reply

அழகான வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா தொடர்ச்சியான ஊக்குவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது

Reply

சொல்லவந்ததை சொல்லுறது....... :)

Reply

வாங்க குருவே......
சங்கத்தின் விருப்பத்துக்கான தீர்வு பரிசீலனையின் பின் தெரிவிக்கப்படும்... :)

Reply

முதலி மூன்றாவது வருடத்தில் அடிஎடுத்துவைக்கிற தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.இரண்டும் நல்ல வீடியோ/

Reply

நிறைய எழுதுங்க...படிக்க ஆவலா இருக்கோம்

Reply

Post a Comment