Looking For Anything Specific?

ads header

அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீதின் ஆட்டோகிராப்

ஒரு காலப்பகுதியில் அதிகமான நேரத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே தொலைத்திருந்தேன். ஆனால் இப்போது தொலைக்காட்சியைக் கண்டாலே தொலைவில் போய்விடுகிறேன். கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் இணையத்தில் செலவிடுவதனால் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது மிக மிக குறைவு.

தைப்பொங்கல் தினமான நேற்று எதேர்ச்சையாக தொலைக்காட்சியை திறந்தேன் வசந்தம் தொலைக்காட்சியின் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் முஷர்ரப்போடு சேர்த்து பிரபல அறிவிப்பாளர் பீ எச் அப்துல் ஹமீதையும் காணக் கிடைத்தது.

பீ எச் அப்துல் ஹமீத் எனக்கு மிகவும் பிடித்த அறிவிப்பாளர். அவர் குரலின் தெளிவும் கம்பீரமும் அழகான தமிழ் சொற்களின் உச்சரிப்பும் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கவணம் சிதராமல் பார்த்துக் கொண்டிருக்கத் தூண்டும். இவர் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க பார்த்திருக்கிறேன் ஆனால் இவரை யாரும் நேர் காணல் செய்யும் நிகழ்ச்சிகளை நான் பார்த்தது கிடையாது. 

ஏற்கனவே சில பத்திரிகைகளில் பீ எச் அப்துல் ஹமீதுடைய நேர்காணல்களைப் படித்திருந்தாலும் அது நேரடியாக அவர் குரலில் அவருடைய அனுபவங்களைக் கேட்பது பார்ப்பது போல் இல்லாமையினால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடிப்போம் என்று முடிவெடுத்துவிட்டேன். தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக அது அமைந்திருந்ததும் நிகழ்ச்சியின் அரைவாசியைத் தவறவிட்டுவிட்டேன் என்பதையும் பின்னர் அறிந்து வருந்தவும் செய்தேன்.

நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய இடம் இயற்கைச் சூழல். பொருத்தமானதும் அழகானதுமான இடத் தெரிவு. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் முஷர்ரப் என் மண்னுக்குச் சொந்தக்காரர். மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். மிகவும் மரியாதை கலந்த தொனியிலேயே அவருடைய வினாக்கள் பீ எச் அப்துல் ஹமீதை நோக்கியதாக இருந்திருந்தது. இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்வது போல் நிகழ்ச்சி அமைந்திருந்தது.


ஆட்டோகிராப் நிகழ்ச்சியின் இந்த நேர்காணலில் பல விடயங்கள் பிரபல அறிவிப்பாளர் சார்ந்து எனக்குப் புதிதாகவே இருந்தது. சினிமாத் துறையினுள் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் நுழைந்த அனுபவம் ஏற்கனவே பத்திரிகைகளின் மூலம் அறிந்திருந்தாலும் அவர் பாடலாசிரியராகவும் திரைக்கதை வசன அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார் என்பது எனக்குப் புதிதே.

ஏற்கனவே தெனாலியின் ஆழங்கட்டி மழை தலாட்ட வந்தாச்சா என்ற பாடலில்  சில வரிகள் இலங்கை மண்ணுக்குச் சொந்தமாக இருப்பதாய் நான் உணர்ந்தேன். நேற்றுதான் அந்த வரிகளின் சொந்தக்காரர் பீ எச் அப்துல் ஹமீத் என்பது தெரிந்தது.

அதே போன்றுதான் கண்ணத்தில் முத்தமிட்டால் படத்திலும் இவர் பங்களிப்பு இருக்கிறதென்பது நேற்றுவரை எனக்குத் தெரியாமலே இருந்தது. signore signore என்று ஆரம்பிக்கும் பாடலில் இவர் பங்களிப்பின் அனுபவப் பகிர்வு மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது.

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி பற்றி அவர் கூறியதும் அதில் இப்போதிருக்கும் பிரபல பாடகர்களை இனங்காண முடிந்ததையும் அழகாகக் கூறினார். எந்த வித தயக்கமுமின்றி வருமானத்துக்காகத் தான் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை செய்வதாகவும் அவர் கூறியது மெய்சிலிர்க்க வைத்தது.

ஒரு புதிய பிரபலத்தின் அனுபவப் பகிர்வுபோல் பிடித்தமான இடங்கள் நன்றி கூற விரும்பும் நபர்கள் ஊக்கமளித்தவர்கள் என எல்லோரையும் ஞாபகப்படுத்தினார் மிகப்பெரிய பிரபலம். தமிழ் அறிவிப்பாளர்கள் மத்தியில் இன்று வரை இவர் முதன்மை வகிப்பதற்கு இந்த எளிமைத் தன்மைதான் காரணமோ தெரியாது.

ஒரு பிரபலத்தின் அனுபவத்தினை அழகான  முறையிலும் ரசிக்கக் கூடிய விதத்திலும் பகிர்ந்த வசந்தம் தொலைக்காட்சிக்கும் அதனை அழகாக தொகுத்து வழங்கிய முஷர்ரபிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும்.



Post a Comment

23 Comments

  1. Replies
    1. உடன் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  2. பீ எச் அப்துல் ஹமீத் எனக்கும் பிடித்த அறிவிப்பாளர். அவரின் குரலில் வரும் எந்த நிகழ்ச்சியென்றாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு ஈர்க்கும் தன்மை அவர் குரலுக்கு உண்டு.

    நல்ல பகிர்வு..மிக்க நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அழகான பின்னூட்டத்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  3. எங்களுக்கு அதைப் பார்க்கக் கேட்க கொடுப்பனவு இல்லையே.இணையத்தில் யூ ட்யூப்ல கிடைக்குமா சிட்டு ?

    ReplyDelete
    Replies
    1. இலங்கை தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் யூ டியூபில் பதிவேற்றுவது மிகக் குறைவு முயற்சி செய்கிறேன் நிகழ்ச்சித் தொகுப்பாளரிடமாவது தொடர்பு கொண்டு லிங் தரப் பார்க்கிறேன்
      மிக்க நன்றி அக்கா

      Delete
  4. அவருக்குக் கந்தர்வக் குரல்.

    எப்படிப்பட்டவரையும் இழுக்கும் தன்மையுடையது.
    அழகான தமிழ் உச்சரிப்பு. சொல் நயம்...
    தலைப்பிற்க்கேற்ற கருத்தைச் சொல்லும் தன்மை...
    பழையப்படங்கள் பாடல்கள் மீது கொண்டுள்ள
    அதி ஈடுபாடு... இப்படி அவரின் பெருமைகளைச்
    சொல்லிக்கொண்டே போகலாம்.
    அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும்
    என்றும் எனக்கும் ஆசை உண்டு.

    பகிர்வு அருமை சிட்டு.
    t:m: 1

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பழைய பாடல்கள் சிரமமில்லாமல் அவருடைய நாவிலிருந்து வெளியாகும்..
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete
  5. அவரின் குரலை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா.. பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி என்னுடைய பேவரிட்.. ஊரில் இருக்கும் போது அவர் குரலில் வரும் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்பது/பார்ப்பதுண்டு.

    உங்கள் ஊர்ப்பகுதியில் வெள்ளப்பெருக்கு எனக்கேள்விப்பட்டேன் இப்போது நிலைமை எப்படி?

    ReplyDelete
    Replies
    1. இப்போது கூட எங்களுக்குள் பாட்டுக்குப் பாட்டு வைப்பதென்றால் அவருடைய பாணியில்தான் முயற்சிப்போம்..

      ம்ம்ம்ம்ம் வெள்ளப்பெருக்கு இப்போது சரியாகிவிட்டது நண்பா
      வருகைக்கும் அழகான கருத்திஅலுக்கும் மிக்க நன்றி

      Delete
  6. Can i get the youtube link

    ReplyDelete
    Replies
    1. இலங்கை தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் யூ டியூபில் பதிவேற்றுவது மிகக் குறைவு முயற்சி செய்கிறேன் நிகழ்ச்சித் தொகுப்பாளரிடமாவது தொடர்பு கொண்டு லிங் தரப் பார்க்கிறேன்
      வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  7. நல்ல தொகுப்பு சிட்டு.

    //பீ எச் அப்துல் ஹமீத்// அவரின் கணீர் எனும் குரலுக்காகவே நிகழ்ச்சிகள் கேட்கலாம். பாட்டுக்குப் பாட்டு அவராலதானே இலங்கையில்.. அதிக வரவேற்பைப் பெற்றது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாட்டுக்குப் பாட்டின் தல BH தான்..
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி பூஸானந்தா

      Delete
  8. பார்க்கவில்லை;பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. பார்க்கவில்லை என்றால் இன்னொருமுறை அவர்கள் அதனை ஒளிபரப்பினால்தான் பார்க்கமுடியும் என்றே நினைக்கிறேன்..
      வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  9. பீ.ஹெச், அப்துல் ஹமீது எனும் பெயரைக் கேட்டவுடம் அவர் முகம் ஞாபகம் வரும் முன் அவரது கணீர் குரல் தானே நினைவிற்கு வரும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வசீகரக் குரலின் சொந்தக்காரர்...
      வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  10. அனுபவம் பேசக்கேட்பது மிகவும் பிடித்தமான பாடம் கூடஆகிவிடுவதுண்டு சமயங்களில்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை
      அதிலும் பிடித்தவர்களின் அனுபவம் என்றால் இன்னும் சுவாரஷ்யம்தான்
      வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  11. நான் இன்னும் பார்க்கவில்லை அந்த நிகழ்ச்சியை என்றாலும் முன்னர் நம்நாட்டில் அவரின் சில பேட்டிகளும் அவரையும் சந்திக்கும் சூழல் கிடைத்தது பின் மீண்டும் கடந்த செப்டம்பரில் புலம்பெயர் தேசத்தில் அவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததும் மகிழ்ச்சியான தருணம்.காந்தக்குரல் இறைதாசன் கவிஞர் என பன்முகப்பார்வை அவரிடம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்னும் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை...
      இறைதாசன் என்பதை பதிவில் குறிப்பிட மறந்துவிட்டேன் அதனிப் பற்றியும் அந்த நிகழ்வில் பகிர்ந்தார்..

      வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி அண்ணா

      Delete
  12. கந்தர்வக்குரலோன் பற்றி நல்லதொரு பகிர்வு...

    ReplyDelete