நான் படிச்ச இங்கிலீசு (குறும்படம்)

இந்தப் பதிவை நான் ரொம்ப நாளா எழுதனும் என்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எப்பிடியோ என்ன செய்தோ யாரையாவது போட்டுத் தள்ளியோ இன்னைக்கு எழுதிடனும்னு முடிவு செஞ்சு எழுதுகிறேன். யாரும் கம்பு கல்லு இதுகளைத் தூக்கிட்டு குறுக்கால வந்திடாதீங்க யாரையாவது போட்டுத் தள்ளிடனும் என்கிற முடிவுல தெளிவா இருக்கேன்.

இது நான் படிச்ச இங்கிலீசு சம்பந்தப்பட்ட பதிவல்ல. ஏன்னா நான் இன்னும் இங்கிலீசு படிக்கவேயில்லை அத்தோட நான் அஞ்சாம் வகுப்பு பெயில் எங்கிறதையும் இவடத்திலை பெருமையா சொல்லிக்கிறதிலை பெருமைப்படுகிறனுங்கோ.

நான் படிச்ச இங்கிலீசு இது என்னோட சின்ன வயசுல என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஈழத்துக் குறும்படம். இன்றைய தினத்தில் ஈழத்தில் நிறையக் குறும்படங்கள் வெளிவருகிறதென்றால் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தவை ஆரம்ப காலங்களில் வெளிவந்த இது போன்ற குறும்படங்களாகத்தான் இருக்க முடியும்.

இப்போது இருப்பது போன்று தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடிய வசதி மிகவும் குறைந்த காலகட்டத்தில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் இலங்கை அரசாங்க அலைவரிசையொன்றில் இந்த குறும்படத்தை முதன் முதலில் பார்த்தேன். அப்போதிருந்த வளங்களைக் கொண்டு மிகச் சிறப்பாக தயாரித்திருந்தார்கள் படக் குழுவினர்.

அழகான ஈழத்து சொல் வழக்கில் மிகவும் நகைச்சுவை நிறைந்ததாக, நகைச்சுவையையே பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த இந்தக் குறும்படம், இப்போது நாம் சமூக தளங்களில் நகைச்சுவைக்காக எடுத்துக் கொள்ளும் சில நையாண்டி வார்த்தைகள் மற்றும் சம்பவங்களையும் கொண்டமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

குறும்படத்தைப் பற்றி சொல்லப்போனால், நடிகர்கள் இன்னார் இன்னார் தான் என்று என்னால் சொல்ல முடியாதுள்ளது. இதற்கு காரணம் சினிமா பற்றிய அறிவு இல்லாத காலத்தில் இப் படம் எனக்கு அறிமுகமானதும் மேலும் இக் கூட்டணியின் தயாரிப்பில் பிற படங்களை நான் பார்க்கததுமேயாகும்.

லண்டனிலிருந்து (?) வந்திருக்கும் தங்கரெத்திணம் அண்ணாவிடம் ஆங்கிலம் கற்பதற்கு வரும் யோகன், எப்படியெல்லாம் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார் இறுதியில் யோகன் கற்ற ஆங்கில கல்விக்கு ஆகும் நிலை என்ன என்பதனை மையக் கருவாக கொண்டிருக்கிறது.

நீங்களும் ஒருக்கா பாருங்களேன் நல்ல நகைச்சுவையாக இருக்கும்.
சந்தோஷமாய் இருப்போம் வாருங்கள்...

சிலர் சந்தோஷத்தை உள்ளத்திலும் இன்னும் சிலர் தங்கள் அழகிய வதனங்களிலும் நிரப்பிக்கொண்டு இந்த உலகத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்வில் நிகழக்கூடிய கவலை தரக்கூடிய சம்பவங்களைக் கூட மிக எளிதாகவும் அழகிய முறையிலும் கையாண்டு வாழ்வின் அடுத்த நொடியை சந்தோஷமாக வைத்திருப்பதற்கு முனைவார்கள். இப்படியானவர்கள் பாக்கியம் பெற்றவர்களே.

இன்னும் சிலருக்கு துக்கமே / கவலையே தான் வாழ்வின் பிரதானமாக நிகழ்வாக இருக்கும்.  வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரக்கூடிய பொன்னான சந்தர்ப்பங்கள் இவர்கள் வாழ்விலும் இருக்கும். அந்த சந்தர்ப்பங்களுக்காக அழகாக தங்களைத் தயார்செய்துகொள்வார்கள். அந்த அழகான சந்தர்ப்பங்கள் / நிகழ்வுகளும் திருப்திகரமாய் முடிந்துவிடும் ஆனால் இவர்களின் உள்ளத்திலோ கவலை சிறிதளவேனும் குடிகொண்டிருக்கும்.

மரணித்துப் போன தன் உறவுகள் இந்த நிகழ்வில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் அல்லது வெளியூரிலிருக்கும் / வெளிநாட்டிலிருக்கும் உறவுகள் கலந்து கொள்ளாதது பற்றிய விமர்சனங்களைக் கொண்டு அல்லது இன்னும் கொஞ்சம் அதிக பணமிருந்திருந்தால் நிகழ்வை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பதாக அக் கவலைகள் அமைந்திருக்கும். 

கனி தரக்கூடிய மரத்தினில் எப்போதும் எல்லாக் காலங்களிலும் சுவைமிகுந்த பழுதடையாத கனிகள் கிடைப்பதில்லை . சில பருவங்களில் காயாகமலேயே கருகுகின்ற பிஞ்சுகளும் இருக்கின்றன. பிஞ்சுகள் கருகுவது , காய்கள் கனியாகாமல் பழுதடைவது எந்தக் காலம் என்ன பருவம் என்பதனை  பராமரிப்பவன் அறிந்து தகுந்த சிகிச்சையளித்தால் கிடைப்பது பலனே. அதே போன்றுதான் நம் வாழ்வும். எப்படியோ பூமிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டோம்
சந்தர்ப்பங்கள் / சம்பவங்கள் இறைவனால் ஏற்படுத்தப்படுபவைகள். அச் சந்தர்ப்பங்கள் / சம்பவங்கள் சில சமயங்களில் சந்தோஷத்தைக் கொடுக்கும் சில சமயங்களில் துக்கத்தைக் கொடுக்கும். 

எதனை எப்படி எடுத்துக் கொள்வது என்பதனைத் தீர்மானிப்பதில் எம் மனசு பிரதானமாகிறது. மனதினில் தோன்றும் எண்ணமே ஆசையைத் தூண்டுகிறது, ஆசைகள் மனதினை நிரப்பும் போது தேவையெழுகிறது இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முனையும்போதே வாழ்வில் பிரச்சனைகளும் கவலைகளும் ஏற்படுகின்றன.

சிறுவயது முதல் மனதினைக் எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கற்றுக் கொண்டிருந்தால் எதிர்கால வாழ்க்கை பிரகாசமானதாகவும் சந்தோஷம் நிறைந்ததாகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆகவே இன்று பெற்றோராய் இருப்பவர்கள் மனக் கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர்ந்து அதனை தம் குழந்தைகள் மீது பிரயோகிக்கும் போது இன்றைய குடும்ப நிலையும் எதிர்கால குடும்ப நிலையும் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது மனக் கட்டுப்பாட்டின் அவசியத்தைக் குழந்தைகள் மீது பிரயோகிக்கும் போது அக் கட்டுப்பாடுகள் குழந்தைகளின் சுதந்திரத்தினில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதாகும். 

எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் பெரிய சந்தோசத்துக்காக இன்று கிடைக்கக் கூடிய சின்னச் சின்ன சந்தோசங்களை விட்டுவிடுவதென்பது முட்டாள்த்தனம். சில சந்தர்ப்பங்களில் பெரிய சந்தோசங்கள் அடையப்படாமலே மரணத்தைத் தொட்டவர்களும் இருக்கிறார்கள். சிலவேளை நாம் முயற்சிக்கும் பெரிய சந்தோஷம் எமக்கு சந்தோஷத்தை மட்டும் தான் கொடுக்கும் என்பதில்  உத்தரவாதம் என்ன ? நாளைய தினத்தை எப்படி சந்தோஷமாக போக்குவது என்பதைப் பற்றி சிந்திக்காமல் நாம் அடைந்திருக்கும் இன்றைய தினத்தை எப்படி சந்தோஷமாக வைத்திருப்பது என்பது பற்றிச் சிந்தித்தலே நன்மைதரக்கூடியது. இதைக்கூட யாரோ எப்பவோ எங்கயோ கிறுக்கிவைத்திருப்பார்கள் என்பதும் உண்மை.

ஒரு குழந்தையிடம் புன்னகைப்பதால் மனதுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தோன்றினால் அதுவும் எமக்குக் கிடைத்த சந்தோஷமே. அந்திப்பொழுதை விளையாட்டில் போக்கிவிடும் சிறுவர்களையும் அவர்களின் விளையாட்டையும் சிறிது நேரம் பார்க்கக் கிடைத்தால் அது கூட எமக்குச் சந்தோஷமானதே. அச் சிறுவர்கள் செய்யக்கூடிய பல செயல்கள் நாம் சிறுவர்களாய் இருக்கும் போது செய்ய முடியாமல் போனவையாகக்கூட இருக்கலாம். அதனை இன்று காணக்கிடைப்பதும் சந்தோஷமானதே.

தூக்கமில்லாமையினால் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது பற்றி செய்தித்தாளில் படிக்கும் வரை இன்று  நாம் நிம்மதியாக நித்திரை செய்த ஒரு மணி நேரமும் எமக்குக் கிடைத்த சந்தோஷமே. இன்றைக்கு எத்தனையோ பேர் வெளிநாடுகளில் தன் குடும்ப சுமை போக்குவதற்காக உறவுகளைப் பிரிந்து சிரமப்படுகிறார்கள், இவர்களை நினைத்தால் நாம் நேருக்கு நேராக நம் உறவுகளுடன் பேசும் ஒவ்வொரு நொடியும் எமக்குச் சந்தோஷமானதே.

மழை பெய்ய ஆரம்பிக்கும் போது கொடியில் கிடக்கும் உடைகளை நனையாமல் பாதுகாப்பாக நாம் எடுத்துப்பது கூட சந்தோஷமே. அம்மாவின் அல்லது மனைவியின் படபடப்பு குறைவது மட்டுமல்லாமல் உடை நனையக் கூடாது என்பதற்காக வேகமாக வெளியில் வரும்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் கூட குறையலாம். எம்மை விட மழை வேகமானது.

சந்தோஷங்களை /  நிம்மதியைத் தேடி நாம் எங்கும் செல்லத் தேவையில்லை சந்தோஷங்கள் எங்களுக்குள்ளேயே ஆழமாக வேரூன்றி புதைந்து கிடக்கின்றது. அதனை எப்படி ஒரு கிளைகள் நிரம்பிய மரமாகக் கொண்டுவருவது என்பது எங்களிடமே இருக்கிறது. இதைத்தான் நம் வாழ்க்கை நம் கையில் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் போல.

ஐந்து நிமிடம்  சுத்தமான இயற்கைக் காற்றை சுவாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தால், நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் நகரத்து மக்களின் நிலமையை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொள்வோம். அதிக தாகமெடுத்த வேளை கிடைக்கும் ஒரு கோப்பை சுத்தமான தண்ணீர் கூட எமக்கு கிடைத்த சந்தோஷமே. இன்று எத்தனையோ மக்கள் குடிப்பதற்கு அசுத்தமான தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் விரைவாகவும் எமது இயற்கை (மலசல)த் தேவைகளை  நிறைவேற்ற முடிகிறதா அது கூட நாம் சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டியதே. இன்றைய நிலமையில் அதிகமானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றாக இயற்கைத் தேவையை சரியாக போக்கமுடியால் இருப்பதுவும் அடங்குகிறது. 

எம் வேலைகளை முடித்துவிட்டு தினமும் இரவில் நித்திரைக்குச் செல்கிறோம். மறுநாள் நாம் அடைந்துகொள்ளும் காலைப் பொழுது கூட எமக்குக் கிடைத்த மிகப் பெரும் சந்தோஷமே. நேற்றைய தினத்தில் எவருடையதாவது மனதை புண்படுத்தியிருந்தால் அவரிடம் இன்றைய தினத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம். அல்லது யாருக்காவது வாக்குறுதியளித்திருந்தால் அவ் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அல்லது நேற்றைய தினத்தை விட இன்று கொஞ்சம் அதிகமான நன்மைகளை செய்து கொள்ளலாம். மாற்றமாக எமது தூக்கத்திலேயே மரணம் எம்மைச் சுவைத்திருந்தால் ? அதனால்தான் நாம் அடைந்து கொள்ளும் ஒவ்வொரு காலைப் பொழுதும் எமக்குக் கிடைத்த மிகப்பெரும் சந்தோஷமென்கிறேன்.

எமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கென ஒரு இடம் கிடைத்தால் அதுவும் சந்தோஷமே. ஆகையால் வலைத்தளங்கள் , பேஸ்புக் என்பன கூட எமக்குக் கிடைத்த எம் முன்னோர்களுக்குக் கிடைக்காத சந்தோஷங்களே. 

எல்லாவற்றிற்கும் மேலாக  பின்னேர பொழுதுகளில் தெரு சந்தியிலுள்ள தேநீர் கடையில் ஒரு கப் தேநீர் குடித்துவிட்டு உலகத்தையும் உலக தலைவர்களையும் ஏன் ஊர் தலைவர்களையும் விமர்சிப்பதற்கும் எமது சின்னச் சின்ன கோபங்களை வெளிப்படுத்துவதற்கும் ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுக்கு சேர்ந்து போவதுக்கும் நல்லதா நாலு நண்பர்கள் கிடைத்தால் இதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்.

ஆகவேதான் சந்தோஷங்கள் என்பவை நாம் தான். நமது உறவுகள், சொந்த பந்தங்கள், நாம் செய்யும் தொழில்,தொழில் செய்யும் இடம், நாம் அன்றாடம் காணும் காட்சிகள், நமது நண்பர்கள். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு சந்தோஷத்தைத் தேடி நாம் எங்கே செல்வது ?நகங்களாலும் பேய் ஓட்டலாம்

பொதுவாக பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மிகவும் நுணுக்கமாகவும் அதிக சிரத்தையெடுத்தும் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்களாம் இதுவும் கேள்விப் பட்டதுதான் :P. 
பெண்கள் அழகுபடுத்தும் உறுப்புக்களில் நகமும் பிரதானமானதாம் (சரிதானங்கோ நான் சொல்லுறது). சிலர் ரசிக்கும் படியாக தங்கள் நகங்களை அழகுபடுத்துவார்கள். சிலர் நகங்களை அழகுபடுத்துகிறோம் என்று கூறி சம்பந்தமே இல்லாத நிறங்களைப் பூசிக்கொண்டு எம்மை பயம் காட்டுவார்கள்.


இன்று உங்களோடு நான் பகிர்ந்து கொள்வது இணையத்தில் நான் பார்த்து பயந்த சில நக வடிவமைப்புக்களை தான். பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் ரசிக்கக் கூடியவகையில் இந்த நகங்களை அழகுபடுத்தியிருக்கிறார்கள். நீங்களும் பார்த்து பயந்துக்கோங்க / வியந்துக்கோங்க...

வகை வகையான பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடி முடிச்சிருப்பீங்க என்று நினைக்கிறேன். இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாகவும் இந்த தீபாவளியைக் கொண்டாடியிருப்பீங்க அப்படித்தானே... ???

ரொம்ப நாளைக்குப் பிறகு பதிவு எழுதுவதால என்ன மாதிரியான செட்டிங்க்ஸ் செய்யனும் எங்கெல்லாம் பகிரனும் எங்கிறதெல்லாம் மறந்து போச்சு.  ஏன்னா நான் கஜினி சூர்யா மாதிரி விரைவா எல்லாத்தையும் மறந்துடுவேன். கஜினி நயந்தாரா மாதிரி நல்ல உள்ளம் கொண்டவங்க யாராச்சும் இருந்தா சில ஆலோசனைகளையும் சொல்லிட்டுப் போகலாம். சில வேளை ஆலோசனை சொல்ல வந்த உங்களையும் நான் யார் நீங்க என்று கேட்கலாம். இப்படிக் கேட்கப்படுபவங்க மறுபடியும் கஜினி படத்தைப் போய்ப் பாருங்க

இன்றைய ஞாயிறு நல்லதாய் அமையட்டும்நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது

சில மரங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை எண்ணிக் கணக்கெடுத்துவிட்டு  கனிகளைத் தருகின்றன. சில மரங்கள் உங்கள் பரம்பரையில் உள்ளவர்களுக்கெல்லாம் கனி தருகின்றன.
கடற்கரையோரமாக அமர்ந்திருக்கும் மலைத் தொடரில் ஒரு மலையைத் தொடும்போது அது எழுந்து வாலைக் கிளப்பிக் கொண்டு கடலை நோக்கி ஓடிச் செல்கிறது இதை கடும் கற்பனை என்று விலகிச் சென்றுவிடாமல் நம்பி வாசியுங்கள் நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கும்.

கவிதைகளை எழுதுபவர்களிடமே அதற்கான விளக்கமும் கேட்கவேண்டிய கவிஞர்கள் மத்தியில் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்வது சரியாகத்தான் தோன்றுகிறது எனக்கு. எண்ணிகையில் அதிகளவான கவிஞர்களை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தற்போதுள்ள சமூக தளங்களையே சேரும் என்று சொல்வதும் தப்பில்லை.

கவிதைகளுக்குத் தட்டுப்பாடு என்பதே கிடையாது உறவுகளின் பிரிவுகளையும், வாழ்க்கைப் பயணத்தின் வெற்றிகளையும் தோல்விகளையும், இன்னும் பொழுதுபோக்குக்காகவும் வேறு வழியில் சொல்லப் போனால் கிறுக்குத் தனமாகவும் கவிதைகள் உருவாகிக்கொண்டேயிருக்கின்றது. ஆனால் ஒவ்வொரு கவிதையும் ரசிக்கக் கூடியதாகவும் பாராட்டப் படக் கூடியதாகவும் இருக்கின்றது என்பது உண்மை. இப்படியாக எழுதப்படும் கவிதைகள் உரியமுறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்பதும் இங்கு சொல்லப்படவேண்டியதே.

அதிகமாக கவிதைகள் புலங்கும் இடமாக சமூகதளங்களை சொல்லலாம். பேஸ்புக்கிலும் தனிப்பட்ட வலைத் தளங்களிலும் அதிகமான கவிதைகள் உட்பட கருத்தில் எடுத்துக்கொள்ளக் கூடிய ஆக்கங்கள் பதிவிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படிப் பதிவிடப்படும் ஆக்கங்கள், கவிதைகள் களவாடப்படுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, அதேபோன்று எனது கவிதைகள் களவாடப்பட்டு புத்தகங்களாக வெளிடப்பட்டுள்ளன என்று சமூக தளங்களில் புலம்பும் கவிஞர்களும் இல்லாமலில்லை. பிரபல கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இணையத்தில் பதியப்படும் கவிதைகள் உட்பட ஆக்கபூர்வமாக அனைத்துப் பதிவுகளையும் ஆவணப்படுத்தி நூலுருவாக்கம் செய்தால் நன்றாக இருக்கும். தமிழ் பதிவர்கள் மத்தியில் இவ்வாறான ஒரு குழு/ அமைப்பு உருவாகுமானால் இலக்கியத்துறையில் எம்மை யாராலும் முந்திவிட முடியாது. பதிவர்கள் சந்திப்பு போன்றவை இதற்கு அடித்தளமிடும். இடம்பெறவிருக்கும் அடுத்த பதிவர்கள் சந்திப்பில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் இருக்கும் பதிவர்களின் நலன் கருதி இவ்வாறான குழுவொன்றை உருவாக்க முயற்சி செய்யுமாறு தொடர்புடையவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

"நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது" அதிகமாக சிந்திக்க வேண்டாம் சொல்லிவிடுகிறேன், அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதைத் தொகுப்பின் பெயர்.

கவிஞரைப் பற்றி சொல்லப்போனால் இன்றைய சமூகத்துக்குத் தகுந்தாற்போல தன்னை இணையத்துக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தாலும் தன் உள்ளத்தில் தோன்றும் சிறந்த கவிதைகளை இணைய நட்புகளிடம் இவர் பகிர்ந்துகொள்வது மிகக் குறைவு. இலக்கியத் திருட்டு கவிதைத் திருட்டினை காரணமாகச் சொல்கிறார். அவர் சொல்வதுவும் உண்மைதான்.

விருதுகளுக்காகவும் பாராட்டுக்காகவும் என பல கவிஞர்கள் இருக்கும் இன்றைய நாளில் விருதுகளை விரும்பாத ஒரு கவிஞராக இவரை நான் காண்கிறேன். எப்படியென்றாலும் உலகளவில் தான் பேசப்பட வேண்டும் என்ற ஒரு சிறிய ஆசையாவது இவர் மனதில் இருக்கும் என்பது எனது எண்ணப்பாடு.
நூலாசிரியர் அகமது ஃபைசல்
 2006 ஆம் வருட காலப்பகுதியில் "ஆயிரத்தோராவது வேதனையின் காலை" என்ற கவிதைத் தொகுப்பினை மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தால் வெளியிட்டுவைத்தார். இந்தக் கவிதைத் தொகுப்பில் என்ன விடயத்தைச் சொல்லவருகிறார், சொல்லியிருக்கிறார் என்பவை புரியவில்லை என்று இன்னொமொரு கவிஞர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

2012 ஆம் வருட காலப்பகுதியில் "நிலத்தோடு பேசுகிறேன்" என்ற கவிதைத் தொகுப்பினை தென்னிந்தியாவின் புது எழுத்து பதிப்பகத்தினால் வெளிட்டார். இந்த இரண்டு தொகுப்பும் முற்றிலும் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டமைந்திருக்கின்றது. என்னைக் கேட்டால் இப்படியான கவிதைகளை இதுவரை யாரும் எழுதவில்லை என்றே சொல்வேன்.

இவரின் அடுத்த வெளியீடுதான் காகம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது. இந்தத் தொகுப்பும் கூட முன்னர் வெளிட்ட இரண்டு தொகுப்புகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. எமது சிந்தனையில் அடிக்கடி வந்து செல்லக் கூடிய விடயங்களைக் கூட தன் கற்பனைத் திறமையினால் அழகாகவும் நேர்த்தியாகவும் கவியாக்கியிருக்கிறார்.

இன்றைய நாட்களில் நம்மில் அநேகமானவர்கள் தான் வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும் போது தன்னுடைய கையடக்கப் பேசியை மறந்து வீட்டில் வைத்துவிட்டு திரும்பி வந்து அதனை எடுத்துக் கொள்கிறோம். நான் கூட இதற்கு விதிவிலக்கல்ல... கவிஞர் இதனை கடலோடு ஒப்பிடும் விதம் ரசிக்கக் கூடியது.

அழகிய கடல்தனை இப்படிச் சீர்குலைக்கலாம்
தொலைபேசியை எடுக்க மறந்து 
ஒரு அலை
திரும்பிச் செல்கின்றது   

இன்னும் சொல்வதென்றால் கவிதைகளுக்கு இவர் இடும் தலைப்பானது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. இந்தக் கவிதையை ஆயிரம் வருடங்களுக்குப் பின் வாசிக்கவும் ,விடியும் போது இந்தக் கவிதை இருக்கோ இல்லையோ, துப்பாக்கியை மேலுயர்த்தி சுட்டவுடன் ஓடும் படம் போன்ற தலைப்புக்கள் கவியுலகில் இதுவரை நான் வாசித்திராததும் பழக்கப்படுத்திராததுமான தலைப்புக்களாக இருக்கின்றன.
இன்றைய இலக்கிய உலகில் சமூகத்திற்குப் பரிச்சயமற்ற கவிதைகளை கொடுக்க முற்படும் மிகக் குறைந்த சிலரில் இவரும் ஒருவராக இருக்கிறார். நவீன கவிதையின் அடுத்த நிலையாகவும் இது இருக்கலாம்.

மேலதிக தேவைகளுக்கு எனது மின்னஞ்சல் முகவரியோடு தொடர்புகொள்ளுங்கள் jasmimoosa@gmail.com


நூல் தலைப்பு : நீரில் எழுதப்பட்டிருக்கும் மீனை பூனை வாசிக்கின்றது
ஆசிரியர் : அகமது ஃபைசல்
முதல் பதிப்பு : ஜூலை 2013
வெளியீடு : காகம் பதிப்பகம் மஃமுத் ஆலிம் வீதி வாழைச்சேனை
விலை : 340 /=


பிஸியான வருடம்... அகவை 3

எப்படித்தான் இரண்டு நாளைக்கு ஒருக்காவாவது பதிவு போடுவோம் என்று முயற்சித்தாலும் முடியமாட்டேனெங்குது என்ன செய்யிறது... :( இந்த வருஷம் பதிவிடுறத்துக்கு ஒரு டசன் மேட்டரிருந்தாலும் சின்ன சின்னதா பேஸ் புக்குல மட்டுமே  அதுகல சொல்லிட்டு இருந்தேன்.பேஸ்புக்குல என்னை கண்டுக்க இங்க கிளிக் செய்யுங்க 
இன்னைக்காவது ஒரு பதிவு போடல்லன்னா என் மனட்சாட்சி என்னையே கேவலமாப் பார்க்க ஆரம்பிச்சிடும்,பின்னாடி அசிங்கமாவும் போயிடும்... ஏன்னா இன்னைக்கு ப்ளாக் ஆரம்பிச்சி மூனாவது வருஷத்துல காலடி எடுத்து வச்சிருக்கிறேன்.

நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இந்த ப்ளாக் ஆரம்பிச்சேன் எங்கிறதை போனவருஷம் இதே நாளில பதிவிட்டுட்டேன். படிக்காதவங்க + படிச்சவங்க இரண்டு பேரும் இந்த லிங்க்ல போயி இன்னுமொருக்கா படியுங்கோ இதை ஏன் இவடத்தை சொல்லுறேன்னா மறுபடியும் மறுபடியும் ஒரு விஷயத்தை என்னால சொல்லிக்கொண்டு இருக்க முடியாது, நான் ரொம்ப பிஸியானவன், என்னோட பிஸிக்கு ஒபாமாவுக்கே ஈடு கொடுக்க ஏலாதாம் எண்டா பாருங்களேன்...

இதுவரை காலமும் என்னோடு சேர்ந்து பயணிக்கும் அனைத்து வலையுலக நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். நான் பதிவிடாமல் இருந்த காலப்பகுதியிலும் என் வலைத்தளப் பக்கம் வந்தவர்களுக்கும் மற்றும் இக் காலப்பகுதியில் என்னைப் பல இடங்களில் அறிமுகப்படுத்தியவர்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையைச் செல்ல முடியாமல்...(வாயில என்ன கொழுக்கட்டையா என்னு மட்டும் கேட்டுடாதீங்கோ) அதற்கு ஈடான வார்த்தைகள் உலகத்தில் எங்கிருந்தாலும் அதனைக் கொண்டுவந்து உங்கள் காலடியில் சமர்ப்பிக்க முயற்சிக்கிறேன். 

சரி இனிமே உங்களை அடுத்த பதிவுல சந்திக்கிறேன் அதுவரை ஜாலியா இருங்கோ

எதுக்கும் இந்த வீடியோக்களையும் பார்த்து உங்களுடைய உள்ளத்தில பட்டதையும் சொல்லிட்டுப் போங்க... 


ஒன்னுமேயில்ல... ஆனா இருக்கு...!!!

என்ன நடந்தது என்றே தெரியல்லீங்க ப்ளாக் பக்கம் வருகிறத்துக்கு மனசு வரமாட்டேனெங்குது.... நான் நினைக்கிறேன் யாரோ எனக்கும் என் ப்ளாக்குமா சேர்த்து பில்லி சூனியம் செஞ்சிட்டாங்களோ என்னு... 

அலோ... பில்லி சூனியம் செஞ்சவங்களே...இன்னமும் நீங்க பில்லி சூனியம் செய்யிற முடிவோட இருந்தால், இனிமே உங்க பில்லி சூனியமெல்லாம் எங்கிட்ட வேலைக்காவாது என்கிறதை சந்தோஷமா சொல்லிக்கிறேன். ஏன்னா இப்போதான் முறிஞ்சான் கிறிஞ்சான் சாமியாரைப் பார்த்துட்டு வந்திருக்கிறேன். அவர் இடுப்புல இருந்து முறிச்சித் தந்த தாயத்தை என் கொம்பியூட்டர்ல பத்திரமா கட்டிவச்சிருக்கேன். தாயத்துக்கு காவலுக்கு என் போலிஸ் அங்கிளையும் வச்சிருக்கேன். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி நீங்க பில்லி சூனியம் செய்யிற முடிவ மாற்றல்லையென்றா அதுக்குப் பிறகு வரும் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பாகாது... ஓK...

சரி இப்போ மேட்டருக்கு வருவோம்.... ரொம்பப் பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் பதிவூடாக  சொந்தங்களை சந்திக்கப் போகிறேன் என்பதை நினைக்கும் போது மனசிற்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னோட டேஷ்போர்ட்டைப் பார்க்கும் போது நான் மட்டும்தான் ப்ளாக்குக்கு லீவு விட்டதாக தெரிகிறது. நிறையப்பேருடைய சுவாரஷ்யமான விவாதங்கள், கட்டுரைகள்,கவிதைகள், குறுந்தொடர் கதைகள், தொடர் கவிதைகள் + கதைகள் எல்லாவற்றையும் மிஸ் பண்ணிட்டேன் என்று நினைக்கிறேன் அதற்காக எல்லோரும் என்னை மனதார வாழ்த்தி...... அட ச் சீ மன்னிச்சுக்கோங்க....

நான் இடையில காணாப்போனதையிட்டு நலம் விசாரணை செய்த அனைத்து சொந்தங்களுக்கும் இவ்விடத்துல நன்றியைச் சொல்லிக்கிறேன். இழவு வீட்டுல விஜயகாந்து சொன்ன நன்றி என்று மட்டும் இதை எடுத்துக்காதீங்கோ... இது அடி மனசில இருந்த வந்த நன்றி எங்கிறதையும் ஸ்பீக்கர் போட்டுச் சொல்லிக்கிறேன்.

அடுத்து எனக்கு என்ன ஆச்சு என்று ஒரு சிறிதும் கவலை இல்லாமல் இருந்த சொந்தங்களுக்கு ம்ம்ம்ம்ம்ம் இனிமே அவங்க சொந்தம் கிடையாது. இன்னையோட அவங்க உறவை முறிச்சிக்கிறேன். (அவங்க மறுபடியும் என்னோட உறவு கொண்டாட வேண்டுமென்றால் என் அக்கவுண்ட்டுக்கு 100 டொலர் அனுப்பிடனும் யாருக்கும் தெரியாம நமக்குள்ளேயே மேட்டர முடிச்சிக்கலாம்.) அத்தோட அவர்களுக்கு என் வலுவான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இது கைப்புள்ள எடுத்த தீர்மானம் இதுல எந்த மாற்றமும் கிடையாது.


டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்

என்னாது மணி அடிக்கிறது என்று யோசிக்கிறீங்களா ? இந்தப் போஸ்ட் எழுதிட்டு இருக்கும்போதே. (நேரத்தையும் சொல்லிக்கிறேன் காலையில 05.15 மணி) அடுத்த வேலை வந்துவிட்டது, என்ன செய்யிறது வேலையை முடிச்சிட்டு வந்து சேர்ந்துக்கிறேன். இந்த வருசம் முடியிறத்துக்கு முன்னாடி எப்படியாவது இந்த பதிவை பப்ளிஸ் பண்ணிடனும் எங்கிறதுல மட்டும் நான் தெளிவா இருக்கேன்.

பல விடயங்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து என்னைப் பதிவிட முடியாமல் செய்துவிட்டன. குறிப்பாக புதிதாக முதலீடு செய்த வியாபாரத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தியமையைச் சொல்லலாம். என்னதான் காசு பணம் துட்டு Money Money என்றிருந்தாலும் நம்ம ப்ளாக்கில நாலு மொக்குத்தனமான விடயத்தை பதிவிட்டு அதுக்கு  கிடைக்கும் கமண்ட்ஸ்களைப் பார்த்து ரசிப்பதைப் போல இருக்குமா என்ன... :) 

சுனாமி அடிச்சாலும் இல்ல உலகம்தான் அழியப்போகுது என்று புரளியக் கிளப்பினாலும் என்னோட பதிவு மாசத்துக்கு ஒருமுறையாவது வந்து சேரும் எங்கிறதையும் சொல்லிக்கிறேன் . 

சரி இனி அடுத்த பதிவில் சந்திப்போம் அதுவர இந்த வீடியோவைப் பாருங்கள்


ஆப்பு வைக்கும் பூனையும்... கட்டையில போகும் பாட்டியும்...

மக்கள்ஸ் நலமோ....... மீ ரொம்ப ரொம்ப பிஸி.... உங்க பக்கம் தலைகூட காட்டமுடியல்ல சின்ன சின்னதா நேரம் கிடைக்கும் போது உங்ககிட்ட வந்து போய்க்கிட்டுத்தான் இருக்கிறேன் (ஹூம்ம்ம்ம்ம் இதைக் கூட ஸ்பீக்கர் போட்டுச் சொல்ல வேண்டியதாக் கிடக்கு ).......:P

விரைவில் வேகமாக உங்கள் பக்கம் திரும்புகிறேன்...

ஐயோ ஐயோ..... மூச்சு வாங்குதே ஒரு கரட்டுத்தான் திருட்டுத் தனமா சாப்பிட்டேன். அதுக்காக இப்பிடியா.... எங்கப்பன ரஜனிபடம் பார்க்க விட்டது தப்பாப் போச்சே......


பயபுள்ளைக்கு இன்னா தைரியம்பா............  நீ நல்லா வருவடா ஏரியா தாதாவா...


நீ தாண்டா எங்க வாரிசு...... நம்ம குல பெயர காப்பாத்த நீ மட்டுமே போதும்... சின்ன வயசில நான் கூட இப்பிடித்தான் இருந்தேன் எங்கிறத மட்டும் யாரிட்டயும் சொல்லிடாதே...


இந்தப் பூனையும் பால் குடிக்குமென்று பார்த்தா ..... ரொம்பப் பெரிய ஆப்பா வைக்குதே.....  நீங்க எவ்வளவுதான் அடிச்சிக் கேட்டாலும் அது என் சூ என்கிறத சொல்லவே சொல்ல மாட்டேன்....


கட்டையில போற வயசில இது உனக்குத் தேவையா பாட்டி தேவையா...?


நிச்சயதார்த்தம் செய்யப் போறீங்களா...?

நேத்தைக்கு....அப்பிடியே இணையத்துல ஒரு சுற்றுலா போய்க்கிட்டே இருந்தேனா அந்தச் சுற்றுலாவுல எல்லாமுமே  மிகவும் முக்கியமானதும் சுவாரஷ்யமானதுமான மேட்டர்களாகத் தான் தெரிஞ்சுது, அதுல கொஞ்சத்தை உங்க கூட பகிர்ந்துக்கிறேன். எல்லாத்தையும் ஏன் பகிரக் கூடாது என்னு கேக்குறீங்களா ?
பகிரவே பகிர மாட்டேன் ஏன்னா நான் சரியான பொறாமைக் காரணாம் என்னு என் ஏரியாப் பயலுகள் சொல்லுறானுகள் அதனையும் நான் நிரூபிக்கத் தானே வேணும்....:P


இனிமே நீங்க உங்களோட கல்யாண நிச்சயதார்த்தத்துக்கு எப்படியான மோதிரம் செய்யவேணும் என்பது பற்றிக் கவலைப்படத் தேவையேயில்லை. ரொம்பக் காசு செலவு பண்ணி அந்தக் குறைய நான் போக்கியிருக்கிறேன்.  இங்கே பல பல அழகான டிசைனுகள்ல நிச்சயதார்த்த மோதிரம் இருக்குது. தேவையானவங்க பிடிச்சதை எடுத்துக்கோங்க..... மறக்காம பக்கத்துல அதனோட விலைகளையும் போட்டிருக்கிறேன் அதனையும் என் அக்கவுண்டுக்குப் போட்டிடுங்க.....

Gold and Onyx Unisex Band, $850
ஆத்மா

Triangle Diamond Engagement Ring, $260
ஆத்மா

Sapphire and Red Diamond Ring, $870
ஆத்மா

14k Gold Ring, $350
ஆத்மா

14k Gold and Opal Ring, $475
ஆத்மா

Modern Sterling Geometric Ring, $180
ஆத்மா

ஆத்மா

Dainty Sterling and Black Diamond Stacking Ring, $128
ஆத்மா

Men's Distressed Silver Band Ring, $60
ஆத்மா

Pyrite Cube and Sterling Silver Ring, $105
ஆத்மா

 Sterling Raw Uncut Diamond Ring, $105
ஆத்மா

 Double Band Diamond Ring, $729
ஆத்மா

Herkimer Diamond Ring with Gold Band, $325
ஆத்மா

Modern Silver Ring, $38
ஆத்மா

Gold Twig Ring, $250

Black Diamond, Black Silver Ring, $171
ஆத்மா

Conflict-Free Black Diamond Ring, $385
ஆத்மா

14K Gold and Recycled Sterling Silver Geometric Ring, $280
ஆத்மா

Silver Braided Grass Ring, $90
ஆத்மா

 Black Diamond and Gold Tiny Skull Ring, $250
ஆத்மா

Hand-Carved Silver and Stone Ring, $430
ஆத்மா

 Sphere Ring, $210
ஆத்மா

 Double Triangle Diamond Ring, $722
ஆத்மா
  
Titanium and White Sapphire Ring, $429
ஆத்மா

Prismatic Ring, $330
ஆத்மா _ இம்றான் மூஸா

Sterling and White Sapphire Ring, $774
ஆத்மா _ இம்றான் மூஸா

Diamond and 14K Gold Moon Ring, $970
ஆத்மா _ இம்றான் மூஸா

Modern White Sapphire Engagement Ring, $228
ஆத்மா _ இம்றான் மூஸா
உங்களுக்குப் பிடிச்சா படங்களின் மீது கிளிக் செய்து பெரிசு படுத்தியும் பார்த்துக்கலாம் :)