Looking For Anything Specific?

ads header

பேஸ்புக்குக்கு நடந்த மகா கொடுமை

இந்த நவீன உலகத்தில் பேஸ்புக் பற்றி தெரியாதவர்கள் இல்லையென்றே சொல்லாம். புதிதாக இணைய இனைப்பினைப் பெற்றுக் கொள்பவர்கள் கூட முதலில் பேஸ்புக் கணக்கொன்றினைத் திறந்ததுக்குப் பின்னர்தான் தன்னுடைய ஏனைய வேலைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். (அப்பிடித்தானே...)

பேஸ்புக்கினால் என்ன நன்மை தீமை இருக்கிறது என்பதை நாம் ஆராய்வது கிடையாது. ஒரு செய்தியை மிகவும் அதிகமானவர்கள் படிக்க வேண்டுமென்று கருதினால் அதனை பேஸ்புக்கில் பதிவு செய்தால் அந்தச் செய்தி நாம் நினைத்தைவிட அதிகமானவர்களிடம் இன்றில்லாவிட்டால் என்றாவது ஓர் நாள் சென்றுவிடும்.

பேஸ்புக் ஆரம்பிக்கப் பட்டதின் நோக்கம் நிறைவேறியதோ தெரியாது ஆனால் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் நோக்கம் எப்படியாகினும் நிறைவேறிவிடுகிறது என்பதனை சிவகார்த்திகேயன் நடித்த பேஸ்புக் எனும் குறும்படம் சொல்கிறது.

2004 பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் தளத்தின் வருமானம் (2008 ஆம் வருட கணக்கெடுப்பின் படி) சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என  கணக்கெடுக்கப் பட்டுள்ளது. குறைந்த காலப் பகுதியில் அதிக வருமானமீட்டி இணையத்தளங்களின் வரிசையில் முதலாம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டது. (சரி பேஸ்புக் புராணம் போதும் என நினைக்கிறேன்)

நான் முன்னர் கூறியது போன்று நாமெல்லாம் ஒரு விடயத்தின் நன்மை தீமைகளைப் பற்றி ஆராய்ந்து செயற்படுவது மிகக் குறைவு. முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்ற கொள்கையினை வேதவாக்காக் கொண்டு ஒரு விடயத்தில் இறங்கி அதில் பட்ட பின்புதான் அவ்விடயத்தின் நன்மை தீமைகளைப் பற்றி பேசிக் கொள்வோம்.

ஆனால் ஆங்கில சமூகத்தினர் தங்களது செயல்களில் நன்மை தீமைகள் பற்றி ஆராய்ந்துதான் செயற்படுவார்கள் என்று அன்மையில் விக்கிபீடியா வெளியிட்ட தகவல் சொல்கிறது. இதனை நன்மை தீமைகளை ஆராய்கிறார்கள் என்று சொல்வதா அல்லது பேஸ்புக் பற்றி தெரியாமல் அது தொடர்பான தகவல்களைத் திரட்டுகிறார்கள் என்று சொல்வதா என்று புரியவில்லை. இரண்டாவதாக இருந்தால் அது பேஸ்புக்குக் கிடைத்த மகா அவமானம்

இந்த வருடம் அதிகமாக வாசிக்கப்பட்ட பதிவுகளை விக்கிபீடியா தளம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதிகமானவர்கள் தேடிப்படித்த தகவல்களில் முதலிடத்தில் இருப்பது பேஸ்புக் தளம் பற்றிய தகவல்களே.அதுவும் ஆங்கிலம் பேசக்கூடியவர்களே இந்த தகவலை அதிகம் தேடிப்படித்ததாகவும் விக்கிபீடியா சொல்லியுள்ளது.

  • 32,647,942 தடவைகள் இங்கிலாந்தில் பேஸ்புக் தொடர்பான  பதிவுகள் வாசிக்கப் பட்டுள்ளன
  •  18,569,543 தடவைகள் ஜப்பான் ஆபாசப் பட நடிகைகளின் பட்டியல் தேடிப் படிக்கப் பட்டுள்ளது  
  •  12,719,284 தடவைகள் சீனாவில் உள்ள சான்சி மலை தொடர்பான தகவல்கள் தேடிப் படிக்கப் பட்டுள்ளது 
  • 3,682,191 தடவைகள் ரஷ்யா பற்றிய தகவல்கள் தேடிப் படிக்கப்பட்டுள்ளது.
  • 11,217,715 தடவைகள் ஸ்பெயினில் பேஸ்புக் பற்றிய தகவல்கள் தேடிப் படிக்கப்பட்டுள்ளது.
  • 4,907,569 தடவைகள் சீனாவின் Baidu தேடுதல் தளம் பற்றி தேடிப் படிக்கப் பட்டுள்ளது. இத் தளம் கூகுளுக்கு இணையாகப் போட்டி போடுகிறது என்பது கூடுதல் தகவல்
  • 10,206,548 தடவைகள் ஜேர்மனியர்களால்  cul-de-sacs எனும் பாதை ஒழுங்கு (சந்தி) பற்றி தேட்ப்படிக்கப் பட்டுள்ளது. இது அதிக வாகண நெருக்கடி நிறைந்த பாதை என்பதும் குறிப்பிடத் தக்கது.
  • 2,185,387 தடவைகள் துருக்கியின் முதல் ஜனாதிபதி முஸ்தபா கமால் பற்றி தேடிப் படிக்கப்பட்டுள்ளது.
  • 4,464,618 தடவைகல் பிரஞ்சுக் காரர்களால்  Ilex crenata எனும் தாவரம் பற்றி அதிகம் தேடிப் படிக்கப் பட்டுள்ளது.
  • 1,385,687 தடவைகள் இந்தோனேசியாவில் பேஸ்புக் தொடர்பான தகவல்கள் தேடிப் படிக்கப் பட்டுள்ளன. இது பேஸ்புக் தொடர்பான தகவல்களை அதிகம் தேடிப்படித்த மூன்றாவது நாடாகும்.


Post a Comment

25 Comments

  1. பேஸ்புக் பற்றி தொடர் எழுதி வரும் எனக்கு இது மிகவும் உபயோகமான பதிவு நண்பா

    ReplyDelete
    Replies
    1. பயபுள்ளை நோட்ஸ் எடுத்துகிச்சு போல...

      Delete
    2. கேப்புல சிக்ஸர் ஆடிக்கிறதெங்கிறது இதைத்தானோ...
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீணு + வசு

      Delete
  2. Replies
    1. முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ
      உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்

      Delete
  3. புள்ளி விவரங்கள்,தகவல்கள் சுவாரசியம்.தொடர்க!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  4. Replies
    1. வாங்க பாஸ்....
      அப்படியே தான்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

      Delete
  6. புள்ளிவிபரங்கள் அசத்துகிறது நண்பா

    ReplyDelete
    Replies
    1. இடைவெளியின் பின் வருகை கண்டது சந்தோஷம்..
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  7. ம்ம்...தேடல்களில்தான் எத்தனை விதம் !

    ReplyDelete
    Replies
    1. தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்...
      ம்ம்ம்ம்
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி கவிதாயினி

      Delete
  8. வித்தியாசமான கணக்கெடுப்பு ஒன்றை எடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    சீனு... இந்த வெள்ளிக்கிழமை மிஸ் ஆகி விட்டது போலேருக்கே...!

    ReplyDelete
    Replies
    1. ஆமா சீனு மிஸ் பண்ணிட்டார் போல..
      தொடர் வருகை சந்தோஷமளிக்கிறது
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  9. தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  10. அப்படியா செய்திப் பகிர்வு சிறப்பு தொடருங்க சகோ. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதாயினி..
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  11. அருமையான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வஅருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  12. facebookபயனுள்ளது

    ReplyDelete