Looking For Anything Specific?

ads header

உலக அழிவு உறுதியாவ(ன)து எப்படி...

எம் உள்ளம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர மற்ற எவராலும்  குறித்த தினத்தில் தான் உலகம் அழியும் என்று சொல்ல முடியாது. ஒரு பொருளைத் தோற்றுவித்தவனுக்குத் தான் அதன் அழிவுக்காலம் தெரியும் என்பதை நம் யாவருக்கும் இன்னுமொருத்தர் வகுப்பெடுத்து புரியவைக்க வேண்டும் என்கிற அவசியம் தேவையில்லை.

இதனை அறிந்திருந்தும் ஏன் தான் எம்(?) உள்ளம் வெரும் வதந்திகளையும் பரபரப்புச் செய்திகளையும் கண்டு பதற்றமடைகிறதோ தெரியவில்லை. ஆழ் மனதில் டிசம்பர் உலக அழிவு பற்றி பலர் அவ நம்பிக்கை கொண்டிருந்த போதும் வெளிப்படையாக உறவினர்களுடனும் நண்பர்களுடனும் உரையாடும் போது உலக அழிவு செய்திகளைப் பிரதானமாகக் கொண்டு உரையாடுகிறார்கள்.

இந்த உரையாடல்கள் நேரக்கழிப்புக்கு சுவாரஷ்யமாக இருந்த போதிலும் உரையாடலின் போது சிலரின் உள்ளம் தற்போது பரவியிருக்கும் செய்திகளில் சிறிதளவேணும் நம்பிக்கை கொள்கிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் அதி நவீனமாக வளர்ந்திருக்கும் இன்றைய அறிவியல்.

இன்றைய இந்த அறிவியல் மேதைகளால் கணித்து  தினசரி தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்படும் சாதாரண வானிலை அறிக்கையே பொய்ப்பித்துப் போவதை எம் கண் முன்னே காண்கிறோம். அப்படியிருக்கும் போது எம்மால் எப்படி இந்த அறிவியளார்களின் கூற்றுக்களை நம்பமுடிகிறது? 

ஒருவிடயத்தில் 100 வீத சாத்தியப்பாட்டைக் காணும்போதே அறிவியல் வெற்றி கொண்டதாகக் கொள்ளப்பட வேண்டும். எதிர்வுகூறல்களையும் அனுமானங்களிலும் 100 வீத நம்பிக்கை கொள்ள முடியாது.

அதே போன்றுதான் டிசம்பர் உலக அழிவும். இதுவும் வெறும் எதிர்வு கூறலே தவிர 100 வீத உறுதிப்பாடு கிடையாது. ஆகவே உலக அழிவு பற்றிய பேச்சுக்களை விட்டுவிட்டு பிரயோசனமான விடயங்களில் நேரத்தையும் கவணத்தையும் செலுத்தும் போது மனதுக்கும் மற்றவர்களுக்கும் அது நன்மையாக அமையும்.

இந்த உலகம் அழிய கூடாது என்று ஆசை கொள்பவர்களுக்கு கீழே சில புகைப்படங்கள் இனைக்கிறேன் நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்...


உலகம் அழிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக சில புகைப்படங்களை கீழே இணைக்கிறேன்...

உலகத்தில் பெரிய பெரிய அழிவுகள் அவ்வப்போது இடம்பெற்றாலும் அது மொத்தமாக எல்லோரையும் பாதிக்காதது இவர்கள் போன்றோர் செய்யும் சேவைகளால்தான்...

உலக அழிவில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...


உணவைப் பகிர்ந்து கொள்ளுதலும் அன்பைப் பரிமாறிக் கொள்ளுதலும் ஏழைகளுக்குகென்றே உரித்தாகிவிட்டது போல...

உங்களில் பலகீனர்களின் பொருட்டால்தான் வானிலிருந்து இறங்கும் சோதனைகள் குறைக்கப்படுகின்றன


Post a Comment

32 Comments

  1. படங்கள் அருமை. அன்பை பகிர்வதில் என்ன குறைந்துவிடப்போகிறது.

    அன்பே சிவம், அன்பே சத்தியம், அன்பே சாந்தம் அன்பே ஓம் எனும் அருப்பெரும்சுடர் என ஸ்கந்த குரு கவசத்தில் வரும் வரிகள் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க...

      Delete
  2. தனியொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
    தானாகவே அழியட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் குட்டரே...
      பணமிருப்போர் இந்த ஏழைகளாஇயும் சிந்தித்தால் உலகத்தின் ஆயுள் இன்னும் கொஞ்சம் அதிகமாலாம்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  3. அருமையான பகிர்வு! உலகம் அழியுமா? இதுதான் இப்போது எங்கும் டாபிக்! அதை பேசும் நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்யலாம்தான்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே...
      நீங்க கூட இந்த பேச்சுக்களை விட்டுட்டு பிரயோசனமான வேலைகளைப் செய்யுங்கள்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  4. Replies
    1. நன்றி பாஸ்...
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  5. அருமையான பதிவு சிட்டு... உண்மைதான் உலகில் எத்தனையோ விதம் இருக்கு... அனைத்து பக்கத்தையும் பார்க்கத் தவறி விடுகிறோம் சில வேளைகளில்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா... பூஸார்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  6. //இந்த உலகம் என்றோ ஒரு நாள் அழியப்போவது உறுதியான ஒன்றே, உலகத்தை உருவாக்கிய இறைவனைத் தவிர மற்ற எவராலும் குறித்த தினத்தில் தான் உலகம் அழியும் என்று சொல்ல முடியாது//

    அந்த நாள் எந்த நாள் என்று ஏதாவது மத புத்தகத்தில் போட்டிருக்கிறதா???
    இல்லை என்றால் ஏன் அது 21/12/12 ஆக இருக்க கூடாது
    இது உங்கள் பதிவின் உட்கருத்து புரிந்து கொள்ளவே மற்றபடி இதை நான் நம்பவில்லை

    ReplyDelete
    Replies
    1. 21/12/12 ஆக இருக்க கூடாது ??

      காத்திருந்து என்ன நடக்கிறது என்று பாருங்கள்

      முதல் வருகை கண்டதில் சந்தோஷம் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்

      Delete
  7. சில காரியங்கள பார்க்கறப்போ இந்த உலகம் இருந்து மட்டும் என்ன செஞ்சிடப் போகுதுன்னு தோணுது...

    விளக்கங்களுடன் படங்களும் அருமை...

    சிறு இணைய இடைவெளி விட்டுவிட்டது. இனி தொடர்வேன் என நம்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இடைவெளியின் பின் பின்னூட்டம் கண்டதில் சந்தோஷம்
      வருகைக்குக் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. நல்ல கருத்துச் செறிவுள்ள பதிவு.... உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய வாய்ப்புள்ளது... ஒரே நேரத்தில் அழிய வாய்ப்பெல்லம் கிடையாது.. படங்கள் அனைத்தும் தனித்தனியே கருத்து சொல்கின்றன

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி எழுத்தாளரே

      Delete
  9. உலகம் அழியும்போது அழியட்டும்.அழிவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது அவ்வளவுதான்.நல்ல பதிவு பொருத்தமான படங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  10. படங்களும் பதிவும் நன்றாக உள்ளது ஆத்மா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க..

      Delete
  11. Arupaiyana pathivu.. Arumaiyaana padagal

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன் பழையவர்கள் உங்களின் வருகையால் என் தளம் சிறப்புப் பெறுகிறது...:)

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  12. உலக அழு என்பது உண்மை அல்லது அது பொய் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.இவ்வளவு அகன்ற பிரபஞ்சம் எப்படி ஒரே நாளில் அழியும்.இது நிஜமா கட்டமைக்கப்படுகிற ஒரு பொய்யா?நமது மூளைகள் யாவும் இங்கே நம் அனுமதியில்லாமல் வடிவமைக்கப்படுகின்றன,அதன் எஞ்சிய வடிவத்தில் ஒன்றுதான் இது மாதிரியானவைகள்.நெஞ்சைத் தொடுகிற படங்கள்,வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  13. தானாக அழிய வேண்டுமா என்ன?நாம்தான் அழித்துக் கொண்டிருக்கிறோமே!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை கண்டதில் சந்தோஷம் ஐயா
      வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  14. தங்கள் பகிர்வும் நண்பர் விமலன் பதிலும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி கவிதாயினி

      Delete
  15. அருமையான படங்களுடன் பகிர்வு சிறப்பானது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை கண்டதில் சந்தோஷம் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  16. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய கிற்துமஸ் + புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

      Delete