எல்லாப் பெண்களும் கேவலமானவர்களா...?

பதிவுற்குள் நுழைவதற்கு முன் சில சொற்கள்...
இந்தப் பதிவில் நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் இருக்குமோ எனக்குத் தெரியாது...
சில வீடியோக்களைப் பார்க்கக் கிடைத்தது அவைகளைப் பார்த்த பின் என் உள்ளத்தில் தோன்றியவைகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்...

இறைவனின் படைப்புக்களில் மிகவும் சிறந்ததும் அழகானதுமான படைப்பு மனித இனம்தான். மனிதர்களில் மிகவும் போற்றத்தக்கவர்களென்றால் அது பெண்களாகத்தான் இருப்பார்கள்.

ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை குடும்ப வாழ்வில் பெண்களின் பங்கு மிகவும் பெறுமதி வாய்ந்ததாக காணப்படுகிறது. ஆண்களைப் பொருத்த வரையில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் குடும்பத்துக்காக உழைப்பதிலேயே அவர்களின் ஆயுள் கழிந்துவிடுகிறது. ஆண் தன் தொழிலிருந்து ஓய்வு பெற்று ஆசைக் குடும்பத்தில் அக்கறை கொள்ளும் போது   அவருடைய பிள்ளைகள் யாவும் தங்களுக்கென ஒரு குடும்பத்தைப் பொறுப்பேற்கக் கூடிய நிலையை அடைந்துவிட்டிருப்பார்கள்.

அதுவரைக்கும் குழந்தையைக் கருவில் சுமந்தது முதல் அப்பிள்ளையை சிறந்ததொரு பிள்ளையாக வளர்க்கும் வரை பெண்ணின் சேவைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அப்பிள்ளையும் வளர்ந்து அது திருமணம் முடித்த பின்னர் அதற்குப் பிறக்கும் குழந்தையையும் (பேரப்பிளைகளையும்) வளர்க்கும் பொருப்பை அந்தத் பெண் (தாய்) ஏற்றுக் கொள்கிறாள் இதுவே எமது தமிழ் சமூகத்தின் பாரம்பரியமாகவும் இருக்கிறது.

எமது சமூகத்துக்கு நல்ல பிரஜைகளை உருவாக்கும் இப்படிப்பட்ட பெண்களை சிலர் மிகவும் கேவலமாக சித்தரிப்பதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆனால் பெண்கள் தாங்கள் கேவலமாக சித்தரிக்கப் படுகிறோம் என்பதனை இன்னும் உணராமலே இருக்கிறார்கள் என்பதை அவர்களின் தொடர்ச்சியான அமைதியே சொல்கிறது.

இதில் வியப்புக்குறியது என்னவெனில் பெண்கள் அதிகமாக விரும்பும் தொலைக்காட்சிகளிலே அவர்கள் கேவலப்படுத்தப் படுகிறார்கள் என்பதுதான். சில வேளை நெடுந்தொடர்களால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டிருப்பதானல் தங்களை அவமானப்படுத்தும் காட்சிகள் அவர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லையோ தெரியாது.

சில நெடுந்தொடர்களிலும் பெண்கள் கேவலப்படுத்தப் படாமலில்லை.

இந்தக் கேவலப் படுத்தல்களில் குடும்பப் பெண்களைக் கேவலப்படுத்தல் என்பது குறைவாகவே இருக்கிறது. ஆனால்  அதிகமான இளம் பெண்களை ஏதோ ஆண்களுக்கு அடிமைப்பட்டவர்களாகவே சித்தரிக்கிறார்கள் அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்வோர்.

உதாரணத்துக்குச் சில...

சாதாரண ஒரு சேர்ட்டினை (Ex Reborn) அணிந்து கொள்ளும் ஒரு இளைஞனை இளம் பெண்களின் கூட்டமொன்று துறத்திச் செல்வதாக ஒரு விளம்பரக் காட்சியமைப்பு

ஹேர் ஜெல் (Hair gel)  இனை தன் முடிகளில் பூசிக்கொண்டு வசீகரமாக வரும் இளைஞனை சில பெண்கள் ரொமண்டிக்காய் பார்ப்பதும் அதில் ஒரு பெண்ணை அந்த இளைஞன் தேர்வு செய்து கொள்வதாகவும் ஒரு விளம்பரம்.

அழகான வாசனை தரக் கூடிய Perfume ஐ ஒரு இளைஞன் பூசிக் கொண்டு பாதையால் போகும் போது அவரைச் சுற்றி அவர் பூசிச் செல்லும் Perfume இன் வாசனையில் தங்களை இழந்த சில பெண்கள் அவர் பின்னால் செல்வது போன்றதான காட்சியமைப்பு.

பேர் எண்ட் லவ்லி போன்ற முகப் பொலிவுக் க்ரீம்களைப் பாவிப்பதனால் பாவிக்கும் ஆணின் அழகில் மயங்கிய பெண்கள் அவர்களை அடைந்து கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகள்...

கீழே  சொடுக்கி காணொளிகளைக் காணுங்கள்
1
2
3
 
இவை போன்று இன்னும் சொல்லலாம்.


இப்படியான விளம்பரங்களினால் அனைத்துப் பெண்களும் கேவலமானவர்களாகத்தான் இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அனைத்துப் பெண்களும் கேவலமானவர்கள் இல்லை எனில் ஏன் இப்படிப்பட்ட விளம்பரங்களை அவர்கள் இன்னும் எதிர்க்கவில்லை.

யாரும் இப்படிப்பட்ட காணொளிகளைத் தயாரிப்போரை எதிர்த்ததை இது வரையும் நான் பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் இப்படி பெண்களைச் கேவலமாக சித்தரிக்கும் விளம்பரங்கள் அதிரித்துக் கொண்டே போகின்றன.

அல்லது மேற்சொன்ன காட்சிகளை வடிவைப்போர் ஆண்களை முட்டாள்களாக்குகிறார்களோ என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது.ஒருவரைக் காதலிப்பதற்கு அவரின் பல விடயங்களைப் நோட்டமிட்டு அலசி ஆராய்ந்த பின் காதலிக்கும் காதலர்கள்(?) இருக்கும் இவ்வுலகத்தில் (சில சந்தர்ப்பங்களில் மருத்துவ சான்றிதழ் கேட்கும் காதலர்களும் இருக்கிறார்கள்.) ஒரு ஹேர் ஜெல்லை பாவிப்பதனாலோ அல்லது வாசனை தரக்கூடிய பேர்பியூம்களை பாவிப்பதனாலோ பெண்களை இலகுவாக அடைந்து கொள்ளலாம் என்று காட்சிப்படுத்தி ஆண்களை கேவலப்படுத்துகிறார்களோ தெரியவில்லை ...

நாகரீக உலகில் நடைமுறைக்கு ஏற்றமாதிரி விளம்பரங்களை எடுக்கிறோம் என்று பொருட்களைத் தயாரிப்போர் கூறினால். பெண்களை அல்லது ஆண்களை அடைந்து கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டுதான் இன்றைய இளைஞர் யுவதிகள் வாழ்கிறார்களா என்று இளம் சமூகத்தை கேள்விக் குறியோடு நோக்கவேண்டியிருக்கிறது.

பொருட்களை சந்தைப்படுத்தும் உற்பத்தியாளர்கள் பொருட்களின் தரம் அதனைப் பாவிப்பதனால் ஏற்படும் பலன்களை மையப் பொருளாக வைத்து விளம்பரங்களை காட்சிப்படுத்தலாமே. எல்லா விளம்பரங்களிலும் பெண்ணையோ அல்லது ஆணையோ அடைந்து கொள்வதாக இறுதியில் காட்டப்படுகிறது.

நான் இங்கு ஆண்களைப் பற்றிப் பேசினாலும் அதிகமான விளம்பரங்களில் ஆண்களிடம் வீழும் பெண்களைக் கொண்டுதான் விளம்பரங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில்தான் இப்படியான விளம்பர காட்சிப்படுத்தல்கள் அதிகமென்று நினைத்திருந்தேன் ஆனால் ஐரோப்பிய நாடுகளும் இதற்கு விதிவிளக்கல்ல என்பதை என்னால் பின்னர் தான் புரிந்து கொள்ளமுடிந்தது.

இப்படியான காட்சிகளைப் நான் பார்க்கும் போது எனக்கு அவைகள் கேவலமாகத் தான் தோன்றுகின்றது. பெண்களுக்கு அது எவ்வாறு தெரிகிறதோ நான் அறியேன்....

33 கருத்துரைகள்

உண்மை ஆத்மா.. இத்தனை பெரிய விடயத்தை நான் இதுவரையும் கண்டு கொள்ளவில்லை.... உங்களின் இப்பதிவு பெண்பதிவர்களையும் விழிக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை... நல்லதொரு பதிவைத் தந்தமைக்கு என் பாராட்டுக்கள்...

Reply

நாகரீக உலகில் நடைமுறைக்கு ஏற்றமாதிரி விளம்பரங்களை எடுக்கிறோம் என்று பொருட்களைத் தயாரிப்போர் கூறினால்.
பெண்களை அல்லது ஆண்களை அடைந்து கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டுதான் இன்றைய இளைஞர் யுவதிகள் வாழ்கிறார்களா???
என்று இளம் சமூகத்தை கேள்விக் குறியோடு நோக்கவேண்டியிருக்கிறது.!!!!

அருமையான விழிப்புணர்வு...........

Reply

all girls are having good character. but they are having one bad character. that is, they attract the boys by wearing glamour dresses and show all their inner things openly. that is not good. try to change that one. all the problems comes because of this bad character.

Reply

அருமையான பகிர்வு.
விளம்பரம் மூலம் தாம் இலாபம் அடையளாம் என்றால் அரசியல் வாதிகளும் அவர்களின் மகளீர் அணி முதல் சாதார மகளிர்குழுக்களும் மல்லூக்கட்டுவார்கள் துடைப்பத்துடன் ஆனால் இப்படியான விளம்பர ஒடுக்களை எதிர்க்க மாட்டார்கள் என்பதை நன்கு அறிந்துகொண்டு இருக்கின்றார்கள் போலும் விளம்பர நிறுவனங்கள் .அக அழகைவிட இப்போது புற அழகுதான் முக்கியம் என்பதை பிரபல்யப்படுத்தும் வியாபார கோட்பாட்டில் ஏப்போதுதான் மாற்றம் வருமோ அதுவரை இப்படி விளம்பர மோகங்கள் கூடிக்கொண்டே இருக்கும் என்பது என் கருத்து!

Reply

பல விளம்பரங்களில் பெண்ணினம் கேவலப்படுத்தப்படுகிறது என்பதே உண்மை.நன்று சொன்னீர்கள்.

Reply

ஆத்மா... நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
இந்த விளம்கரங்கள் அனைத்தும்
ஆண்களை ஏமாற்றும் தந்திரம் தான்.

அதே சமயம் பெண்களை இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாது.
பெண்கள் புத்திசாளிகள்.

ஆண்களுக்குத் தன் மீது உள்ள அழகிலோ ஆண்மையிலோ நம்பிக்கை இல்லை... இந்த ஃபர்ஃபீமையோ... ஜெல்லயோ போட்டால் தான் பெண்கள் வருவார்கள் என்று ஆண்கள் நம்புவதால் அவர்களுக்காக
இப்படிப்பட்ட விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தவிர, நெடுந்தொடர்களில் பெண்களின் அறியாமைகள் தான் விளக்கப் படுத்தப்படுகின்றன. இப்படியெல்லாம் உலகத்தில் பெண்களுக்குக் கொடுமைகள் நடக்கின்றன என்று காட்டப்படுவதால் பெண்கள் எச்சரிக்கையாகவும் தைரியமாகவும் நடந்து கொள்ள கற்றுக்கொள்கிறார்கள்.

பதிவு நன்கு சிந்திக்கக் கூடியதாக உள்ளது ஆத்மா. நன்றி.
த.ம.1

Reply

//அதே சமயம் பெண்களை இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாது.
பெண்கள் புத்திசாளிகள்.//

அட போ மா காமெடி பண்ணிக்கிட்டு..

நீங்க விளம்பர பக்கம் போவதே இல்ல போல.. நூற்றுக்கு 80% விளம்பரங்கள் பெண்களை மாத்திரமே குறி வைத்து தயாரிக்க படுகிறது.. நகைல இருந்து நைட்டி வரைக்கும் (இப்போ கண் முன்னாலே ஓடிக்கிட்டு இருக்கு).. பொம்மி நைட்டிஸ் தான் வேணும்னு எந்த கணவனாவது உடுப்பு கடை வாசல்ல போய் இருந்து இருக்கானா?..

ஒன்னும் தேவல காலையில 2 மணி நேரம் சண் டிவி இடைவிடாம பாருங்க.. 30 நிமிச விளம்பரத்தில ஆண்களுக்கான தயாரிப்பு எவை பெண்களுக்கான தயாரிப்பு எவை அதிகம் என தெரியும்..

//ஆண்களுக்குத் தன் மீது உள்ள அழகிலோ ஆண்மையிலோ நம்பிக்கை இல்லை... இந்த ஃபர்ஃபீமையோ... ஜெல்லயோ போட்டால் தான் பெண்கள் வருவார்கள் என்று ஆண்கள் நம்புவதால் அவர்களுக்காக//

அப்போ இப்படி ஃபர்ஃபீமையோ இல்ல இன்ன பிற பொருட்கள் பற்றிய விளம்பரங்கள் பெண்களை மையமாக வைத்து தயாரித்தால் பெண்களுக்குத் "தங்கள் பெண்மையில்" நம்பிக்கை இல்லை என்ற கூற்றை நாங்கள் கூற விடுவீர்களோ???? நாலு பக்கத்தில பெண் சுதந்திரம் பேசுவீங்க..

கடைசியில ஆண் ஆதிக்க சண்முகமா சாரி சமூகமா எங்களை மாத்தி... சரி வேணாம் விடுங்க..

நன்றி

Reply

நம்ம பசங்கள பற்றி உங்களுக்கு தெரியல.. இப்படியாவது போட்டா ஒன்னையாவது வாங்கிடுவான்னு நம்பிக்கையில அவங்களும், பாவம்யா நமக்காக நாலஞ்சு பொண்ணுங்கள வைச்சு அவைங்களும் கஷ்ட படுறாங்களே என்ற பரிதாபத்தில் பசங்களும் ஜாலியாக வாங்குவது தான்..

கண்ணா
ஒரு ஆம்பிள மணமேதிக்க நல்ல லைப் பாயும்
கூடவே தலை சீவ அஞ்சு விரல் கையும் போதும்..

- only for jolly-

Reply

//நான் இங்கு ஆண்களைப் பற்றிப் பேசினாலும் அதிகமான விளம்பரங்களில் ஆண்களிடம் வீழும் பெண்களைக் கொண்டுதான் விளம்பரங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.//

ஆணுக்குனா ஜாலியா பார்க்கிற உலகம் பெண்ணுக்கேன்றால் இவற்றை அத்துணை ஜாலியாக ஏற்று கொள்ளாதோ என்னவோ..

//ஆண்களிடம் வீழும் பெண்களைக்//

இது கண்டிப்பாக கண்டிக்க பட வேண்டியது தான்.. பெண்களை ஒரு வகையில் யோசிக்கையில் மட்ட கரமாக அவர்கள் பாவிக்கும் சூழ்நிலையே அதில் தொடர்கிறது..

நல்ல பதிவு.. சிட்டு கலகிட்ட மச்சி..

Reply

நிறையத்தான் சிந்திக்கிறீங்க... இப்போ எதுவும் சொல்ல வருகுதில்லை எனக்கு..

Reply

பெண்கள் விளம்பரப் பொருளாக மட்டுமே பார்க்கப் படுகிறார்கள்... இது முளுக்க முளுக்க விளம்பர யுக்தியே...

Reply

அப்பட்டமான உண்மையே பெண்களை வைத்து எந்த ஒரு செய்தி சொன்னாலும் விரைவில் சென்றடையும் என்ற நோக்கில் எதுவேண்டுமானாலும் சொல்லப்பட்டாலும் அதை ஆராய்ந்து செய்ய வேண்டியது பெண்கள் இதில் அவரவர் சூழ்நிலை மனநிலையே காரணம் மொத்த பெண்களையும் குறை சொல்ல முடியாது என்பது என் கருத்து.

Reply

அந்த விளம்பரங்களை காணுகையில் எனக்குள்ளும் இந்த கோபம் வெளிப்பட்டு அருகில் இருப்பவர்களிடம் கேட்டது உண்டு ஆனால் சரியான வகையில் அதை எதிர்க்க இனி ஆயதம் மேற்கொள்ளலாம் கலாசார சீர்கேடுகள் உருவாக விளம்பரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது இதை கண்டிக்க வேண்டும் உங்கள் பதிவு அதற்க்கு முதல் கட்டமாக இருக்கட்டும் ஆத்மா

Reply

உங்கள் முதல் முதலான வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்...
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கவிதாயினி

Reply

முதல் முதலான உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி சகோ :)

Reply

உண்மைதான் சகோ
முதல்முதலான வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்

Reply

உண்மைதான் நேசன் அண்ணா...
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி

Reply

:)
அழகான கருத்திடலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி குட்டரே

Reply

ஹாரி ரொம்ப நன்றிப்பா....
//////////////////////////


அருணா செல்வம்December 17, 2012 8:29 PM

ஆத்மா... நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
இந்த விளம்கரங்கள் அனைத்தும்
ஆண்களை ஏமாற்றும் தந்திரம் தான்.
/////////////////////

ஹாரி சொன்னத்துக்கு மேலும் நான் சொல்லனுமா என்ன...
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி சகோ

Reply

நீண்ட நாட்களின் பின் வருகை கண்டது சந்தோஷமளிக்கிறது..
உங்கள் வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி கருண் சார்

Reply

வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி சகோ

Reply

ஒரு ஆம்பிள மணமேதிக்க நல்ல லைப் பாயும்
கூடவே தலை சீவ அஞ்சு விரல் கையும் போதும்..
///////////////////

ஹா ஹா ஹா....
சூப்பர் பாஸூ

Reply

நல்ல கருத்திடலின் மூலம் என் வேலையைக் குறைத்துவிட்டீங்க பாஸ்..
வருகைக்கும் அழகான கருத்திடல்களுக்கும் மிக்க நன்றி

Reply

ஹா ஹா ஹா..
அப்பிடியே ஷாக் ஆகிட்டீங்களோ...:)
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி பூஸானந்தா

Reply

உண்மைதான் விளம்பரத்துக்காக எப்படியென்றாலும் பெண்களைப் பயன்படுத்தலாம் என்று வளரும் சமூகத்துக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள் போல...
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி எழுத்தாளரே

Reply

எல்லாப் பெண்களையும் சொல்ல முடியாது என்பது உண்மையே ஆனாலும் பெண்களை இப்படி சித்தரிப்பவர்களை எதிர்க்காவிட்டாலும் ஆதரிக்காமல் இருக்கும் பெண்களின் சமூகமொன்று உருவானால் நல்லதே
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி

Reply

உங்களின் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்...
உங்களின் கோபம் இதற்கு தீர்வாய் அமைய வாழ்த்துகிறேன்
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி

Reply

நான் எப்போதும் சிந்திப்பதை எழுதியேவிட்டீர்கள் ஆத்மா !

Reply

உங்கள் சிந்தனையை செயற்படுத்தும் காலம் வந்துவிட்டது கவிதாயினி அக்கா
வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

மனித உணர்வுகளைத் தூண்டி மாயத் தோற்றத்தை உருவாக்கி விடுகின்றன இவ்விளம்பரங்கள் ,என்பது மிகை இல்லை.
நல்ல பதிவு.

Reply

A very good,impressive and progressive thought.

But people won't worry about such advts.Most of the products advertised vastely are ''costly,subsatandard and unimportant" for our life.There is a say "All that Glitters are not Gold". Am I rit?

Reply

Post a Comment