Looking For Anything Specific?

ads header

இந்தக் கொடுமையை எங்கு சொல்வது ?

ஜாதி மத பேதமின்றிய உலகை நோக்கிப் பயணிப்போம் என்று பலர் உலகிலுள்ள மத கொள்கைகள் மூட நம்பிக்கைகளை வலுவிழக்கச் செய்வதற்காக காணுமிடமெல்லாம் தங்கள் கருத்துக்களை கூறிக்கொண்டு திரியும் இந்த நவீன காலத்தில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மனதுக்கு மிகவும் வலியைத் தருகிறது.

மனிதம் மரணித்து விட்டது என்று பல ஆண்டுகளுக்கு முன்னிருந்த பெரியார்கள், சமூக நல விரும்பிகள்  கூறிச் சென்றார்கள். அவர்கள் அன்று சொன்னதை இன்றுதான் உண்மையென்று நம்புகிறேன்.

உலகத்தில் எந்தவொரு உயிருக்கும் இப்படியான சம்பவம் நடக்கக் கூடாது. எந்த நிறமாக இருந்தாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் கீழ் ஜாதி மேல் ஜாதி என யாராக இருந்தாலும் எல்லோரிடமும் அன்பையும் நாகரீகமான நடத்தையையும் கடைப்பிடிக்கத்தான்  எல்லா மதங்களிலும் சொல்லியிருக்கிறது.

அசாமில் அண்மையில் நடந்த கொடூர சம்பவம்தான் இந்தப் பதிவை எழுதுவதற்குத் தூண்டியது. நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்களோ தெரியாது. ஆனால் இதைப் படித்தவுடனேயே என் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இனிமேல் இப்படி யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக என் எண்ணங்களுடன் பதிவிடுகிறேன்

குடும்ப வறுமையைப் போக்குவதற்காக செகியூரிட்டி வேலை பார்ப்பவர்தான் லக்ஷ்மி ஓரான். செகியுரிட்டி வேலை பார்ப்பதுடன் ஆதிவாசிகளின் உரிமைக்காகவும் போராடி வருபவர். இவரின் இப் போராட்டத்தைப் பிடிக்காத சில ஜாதி வெறியர்கள் பல மக்கள் மத்தியில் இவரை  அம்மணமாக்கியதுடன் வீதி நெடுகிலும் விரட்டி விரட்டி அடித்துள்ளார்கள். 

சம்பவம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகளை தருகிறேன்...

“நான் மிகுந்த அவமானத்தில் இருக்கிறேன் இந்த அவமானத்தை என்னால் என் வாழ்கையின் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாது … ஆதிவாசிகள் உரிமைகளை கேட்பது தவறா .. ?? மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும் என்று விரும்பாது தவறா .. ?? வீதியில் நாய்கள் நுழைந்தால் கூட ஒன்றும் செய்யாத மேல் சாதி .நாங்கள் நடந்ததும் எங்களை கேவலமாக அடித்து விரட்டுவது ஏன் ??  நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??”

“நான் தற்கொலை செய்து கொள்ள யோசிக்காத இரவே இல்லை…ஆனால் என்னை நம்பித்தான் என் குடும்பம் இருக்கிறது.. அந்த குடும்பம் எப்போதும் போல வறுமையில் தான் இருக்கிறது …அதை காபற்றத்தான் நான் அவமானத்தை மறந்து வருமானத்திற்க்காக இன்று செக்யுரிட்டி வேலை பார்கிறேன் ..!!”

இவருடைய வினாக்களைப் பாருங்கள். இந்த ஆதி வாசிகள் இப்போது இருக்கும் நிலையில் தான் இருக்க வேண்டுமா ? ஆதிவாசிகள் இறைவனின் படைப்பில்லையா ? ஐந்தறிவுள்ளவைகளிடமே அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள் என்று சிறு வயது முதலே போதிப்பப்பட்ட்டுள்ளோம். ஆறறிவு உள்ள ஒருவரிடம் ? இப்படி அசிங்கமாக நடந்து கொள்வதைத்தான் ஜாதி வெறியர்கள் விரும்புகிறார்களா ?

இப்படியான சம்பவங்களைத் தடுத்து விடுங்கள் உலகம் இன்னும் கொஞ்சக் காலம் இருக்கும் இல்லாவிட்டால் 21 ஆம் திகதியென்ன இன்றே அழிந்துவிடும் 

Post a Comment

17 Comments

  1. இந்த படங்களைப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது. ச்சே! இப்படியுமா???

    ReplyDelete
  2. இன்று இருப்பவன் நாளை இல்லை இந்த உண்மை விளங்கிக்கொள்ளாதவரைகளை என்ன செய்வது? ஒருவன் பிறப்பால் மட்டும் இழிந்தவன் என்று கருதினால், மனம் முழுதும் இருட்டாக இருக்கும் இவர்களை உருவாக்கிய இந்த சமூகம் மேல் வெறுப்பு கொள்ள வைக்கிறது.

    ReplyDelete
  3. மிக மிகக் கொடுமையா இருக்கு மிருகங்கள் கூட இப்படி இருக்காது போல என்ன செய்வது இவர்களை ?

    ReplyDelete
  4. அவர் ஆதி வாசியல்ல! அடித்து உதைத்தவர்கள்தான் ஆதிவாசிகள்! இப்படியும் சில மிருகங்கள் மனிதப் போர்வையில் வசிப்பது சகிக்கமுடியாத ஒன்று! வேதனையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  5. இவனுகள எல்லாம் திருத்த இன்னும் எத்தன பெரியார் பொறக்க வேண்டி இருக்கோ தெரியல .. விலங்குகளை விட நாங்கள் தாழ்ந்தவர்களா என்ற அந்த பெண்ணின் கேள்வி சற்று மனதை கலங்க வைத்தது..

    ReplyDelete
  6. ஆத்மா... கடவுள் இருக்கிறார் என்கிறார்களே...
    ஏன் இப்படிப்பட்ட மனித மிருகங்களைத் தண்டிப்பதில்லை...?
    இதில் யார் கெட்டவர் என்பது அவருக்கே தெரிவதில்லையோ...?

    பதிவு மனத்தை வலிக்கச்செய்துள்ளது சிட்டு.

    த.ம.1

    ReplyDelete
  7. கொடுமைகள் அதுவும் பெண்களுக்கான கொடுமைகள் செய்வதில் எந்த நாடுகளும் குறைந்தவர்கள் அல்ல !

    ReplyDelete
  8. திருந்த மாட்டார்கள,

    ReplyDelete
  9. ஹையோ எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்கிறது... ஒருவர் துன்புறுத்தப் படுவதைப் புன்னகையோடு பார்த்து ரசிக்கிறார்களே.. என்னவெனச் சொல்வது..

    ReplyDelete
  10. ஐயோ கடவுளே...நெஞ்சு பொறுக்குதில்லையே..இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்.....:(

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்...
      வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  11. மிகவும் வேதனை தருகிற நிகழ்வு

    ReplyDelete
  12. ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா? வேதனையான நிகழ்வு.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்...
      வருகைக்கும் அழகான கருத்திடலுக்கும் மிக்க நன்றி

      Delete
  13. அழகாகக் கருத்திட்டுச் சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி...
    உங்கள் கருத்துக்கள் உற்சாகமளிக்கின்றன :)

    ReplyDelete
  14. i felt very sad. my heart is broken.

    ReplyDelete
  15. துக்கத்தில் தொண்டை அடைக்கும் என்பார்கள் இந்த கொடுமைகளை படிக்கும் போது அனுபவித்தேன்.இந்த அநியாயக்காரர்களை படைத்த இறைவன் நிச்சயம் பழி வாங்குவான் என் நம்பிக்கை

    ReplyDelete