மலிவாய் கிடைக்கிறது அன்பு இங்கே ...

போலிகளுடன் அசலும் சேர்கிறது ...
போலிகள் என்பதில் சற்றும் சந்தேகமில்லை நிஜமான  போலிகள் தான் அவைகள்...

சின்ன சின்ன சண்டைகள்
சில சந்தப்பங்களில் செல்லச் சண்டையாய் முடிவதுமுண்டு...

மூட நம்பிக்கைகளை சமூகத்திலிருந்து கழைவதற்காய் பகுத்தறிவாளிகள் எனும் ஆடையை உடுத்தியிருக்கும் சிலர்...

உலகம் பிரசவிக்கும் புதுப் புது கருவிகளை அதன் குறை நிறைகளோடும் முந்திக்கொண்டும் இதை வாழ் நாளில் எப்போவாது ஓர் நாள் நானும் அனுபவிப்பேன் என்று முனுமுனுத்துக் கொண்டு திரிபவர்களிடம் எந்த வித எதிர்பார்ப்புமின்றி எத்தி வைக்கும் தொழிநுட்ப வாதிகளாய் சிலர்...

என்றாவது ஓர் நாள் நானும் பிரபலமாவேன் என்ற எண்ணத்தில் காலடி எடுத்து வைத்து ஏன் தான் காலடி வைத்தோம் என புலம்பிக்கொண்டு திரியும் புதியவர்களும் இங்கே...

டிசம்பரில் உலகம் அழியப்போகிறது என கவலையுடன் சிலர். எதுவித கவலைகளும் இல்லாமல் தலைக்கும் தளபதிக்குமாய் சண்டையிடும் இன்னும் சிலருமிங்கே...

வரலாறுகள் போல் ஏடுகளில்  பதிக்க வேண்டிய கவலைகளையும் சந்தோஷங்களையும் ஓரிரு வரிகளுக்குள் மிக அழகாகவும் தெளிவாகவும் வேண்டியவர்களுக்கு உறைக்கும் வகையிலும் கவியாய் படைக்கவும் சிலர்...

பூமியின் இறுதி நாள் வரையிலும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தன் ஆயுளை பூமியின் ஆயுளுக்கும் மேலாக நினைத்தும் இன்னும் சிரிப்பை தாரை வார்த்தும் ஆயுளை அதிகரித்துக் கொண்டு வாழ் நாளின் மிகுதிப் பகுதிகளை வேற்றுக் கிரகங்களில் வாழ்வதற்காக மாத்தி யோசித்து மொக்கைகளால் எல்லோர் முகங்களிலும் புன்னகையின் அடையாளங்களை ஏற்படுத்திச் செல்லும் சிலரும்...சாக்கடைக்குள் இறங்கியிருக்கும் சிலரின் அழுக்குகளை அகற்றுவதற்காக வெளியில் நின்று கொண்டு அழுக்கிள் மூழ்கியிருப்பவனிடம் சுத்தத்தைப் பற்றி மனம் தளராது சொல்லிக் கொண்டும் தங்களை சிறந்த அரசியல் விமர்சகர்களாகவும் காட்டிக் கொள்ளும் சிலருமிங்கே...

உலகத்தில் என்னதான் நடந்தாலும் தானும் தன் நிலையும் என்று தான் கூற வந்த விடயத்தை  சொதப்பி இறுதியில் யாருக்கும் வலிக்காமலும் விடயத்தினைப் சரியான முறையிலும் பூர்த்தி செய்யாமலும் தானும் உயிரோடு இருக்கிறேன் என்று கூறிக்கொள்ளும் என்னைப் போன்றவர்களும் இங்கே....

இன்னும் இன்னும் ஏறாளமாக பல வகை கொள்கையுடையோரும்....

எப்படியான கொள்கையுடையவராக இருந்தாலும் ,  தன் கருத்துக்களை யாரும் ஏற்காவிட்டாலும்  , தன் கருத்துக்களால் சண்டைகள் ஏற்பட்டாலும் இவர்கள் கொண்ட அன்புக்கு நிகர் ஏதுமிருக்கென்று அறியேன் அடியேன்...

ஒரு நாள் அல்லது ஏதோ ஒரு வேலையின் காரணமாக சிறிது காலம் ஒருவரின்  அசைவு இல்லாத போது அவரிடம் வந்து குவியும் நல விசாரிப்பு மெயில்களும் SMS களும் சொல்கிறது அவர்களுக்கு இருக்கும் உறவையும் அன்பையும்...

போலியாய் முகவரிகள் கொண்டாலும் இவர்கள் கொண்ட அன்பில் போலியில்லை என்பதே உண்மை

எத்தனையோ நபர்கள் அன்பைத்தேடி எங்கேயெல்லாம் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் தொலைத்த பொருளைத்தான் தேடி அலைய வேண்டும். தொலையாத அன்பு எம்மிடம் இருக்க ஏன் அதை தேட வேண்டும். தொலையாத பொருள் எவ்வளவு தான் தேடியும் கிடைக்கப் போவது கிடையாது.

ஏதோ சொல்லனும் போல் தோன்றியது சொல்லிவிட்டேன்...
மலிவாய்க் கிடைக்கிறது அன்பு இங்கே....

முக்கிய செய்தி......

சென்ற பதிவில் என் பெயரை மாற்றுவதாக கூறியிருந்தேன் அதற்கு உங்களிடம் உதவியும் கோரியிருந்தேன். எல்லோரும் பல அருமையானதும் பிடித்தமானதுமான கருத்துக்களையும் எனக்கு சூட்டிக் கொள்ள அழகான பெயர்களையும் சொல்லிச் சென்றீர்கள்...

இதற்கு நன்றி என்ற ஒன்றைச் சொல் போதாது என்றே நினைக்கிறேன். உலகத்தில் உள்ள பெருமைப்படுத்தும் வார்த்தைகளையெல்லாம் அன்பு உள்ளங்கள் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 
அது போதா விட்டாலும் எங்கெல்லாம் வேறு எந்தக் கிரகங்களிலெல்லாம் பெருமைப்படுத்தும் வார்த்தைகளும் நன்றிக்குறிய சொற்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று அவ் வார்த்தைகளைச் சேகரித்து உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

பின்னூட்டத்தில் சொன்ன அழகான பெயர்களில் ஏதும் நான் தேர்வு செய்யவில்லை. பல காரணங்கள் உண்டு அதற்கு... பின்புதான் காரணங்களியும் உணர்ந்து கொண்டேன். அதனால் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நம்பிக்கை வைக்கிறேன்.

இன்று முதல் என்பெயரை ஆத்மாவாக மாற்றிக் கொள்கிறேன். சில நாட்களுக்கு சிட்டுக் குருவியுடன் ஆத்மா பயணிக்கும். பின் நாட்களில் ஆத்மாவாகவே மாறிடும்.


37 கருத்துரைகள்

/பின்னூட்டத்தில் சொன்ன அழகான பெயர்களில் ஏதும் நான் தேர்வு செய்யவில்லை. பல காரணங்கள் உண்டு அதற்கு... பின்புதான் காரணங்களியும் உணர்ந்து கொண்டேன். அதனால் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நம்பிக்கை வைக்கிறேன்.//

hi hi

இதுக்கு தான் ஹாரி எஸ் ஆனாப்ல

Reply

ஆத்மா...

நல்ல தேர்வு... ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்...
tm1

Reply

வாழ்த்துக்கள்

Reply

ஆத்மா...

நல்ல தேர்வு. வாழ்த்துகள்...

Reply

ஆத்மா தினமும் பயணிக்க வாழ்த்துக்கள் நல்ல தேர்வு

Reply

ஆதமா புதுப்பொழிவுடன் வலம் வர வாழ்த்துக்கள்.

Reply

ஆத்மா....

அருமையான தேர்வு. வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி்.

மேலே உள்ள கட்டுரையும் மிக அருமையாக இருக்கிறது.

Reply

ஆத்மாவாக அவதாரம் எடுக்கும் சிட்டுக்குருவிக்கு வாழ்த்துக்கள்!

Reply

வாழ்த்துகள் நண்பரே!

ஆத்மா! என்ற பெயர் வைத்ததும் ,நிறைய ஆழமான கருத்துகளை சொல்லிருக்கிறீர்கள். அழகான-அமைதியான எழுத்துநடை

தரமான பதிவு நண்பரே! தொடருங்கள்.

Reply

அச்சச்சோஓஓஓஓ ஜிட்டு எப்போ சாமியாரானார்?:))..

Reply

//இன்று முதல் என்பெயரை ஆத்மாவாக மாற்றிக் கொள்கிறேன். சில நாட்களுக்கு சிட்டுக் குருவியுடன் ஆத்மா பயணிக்கும். பின் நாட்களில் ஆத்மாவாகவே மாறிடும்.// ஆருடைய ஆத்மா?:)

Reply

ஆத்மா நன்றாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு பிடிச்சிருக்குல்ல? விட்டுதள்ளுங்க. எல்லாம் நல்லபடி நடக்கும். ஆத்மா மகாத்மா ஆக வாழ்த்துக்கள். (சும்மா .... :) )

Reply

டையம் பார்த்து ஆப்பு வச்சிட்டு எஸ் ஆவுறீங்களே பாஸூ..

சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்ற் சார்

Reply

வருகிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

அழகான வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க

Reply

சார் இனிமே நமக்குள்ள எந்தக் குழப்பமும் வராது என நினைக்கிறேன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க

Reply

நிண்ட நாட்களின் பின்னான வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

வருகைக்கும் அழகான மனம் நிறைந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

ஜாமியெல்லாம் ஆகல்லிங்கோ.....
நாம நாமதான் எப்பவுமே

Reply

எல்லாம் நம்ம ஆத்மாதான் கொஞ்சக் காலம் இப்படிப் பயணித்துத் தான் பார்ப்போமே...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸாரே

Reply

ஆத்மா மகாத்மா என்னு பஞ்ச் எல்லாம் விடுகிறீங்க.
எப்படியோ ஒரு அடையாளத்தை எடுத்தா சரிதானே.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

நான் சொன்னது சரியா ?

இதுக்குத்தான் நானும் பெயர் சொல்லவில்லை எப்பூடி .............

ஆத்மா நன்றாக இருக்கு சகோ.

Reply

சென்ற பதிவை நான் தவற விட்டுவிட்டேன் என்று நினைக்கிறன்... நீங்கள் கேட்டது எனக்கு தெரிந்திருக்கவில்லை...
ஆத்மா.. சுஜாதாவின் படைப்பு .. எனக்கு மிகவும் பிடித்த பெயர்

Reply

ஆன்மா....அன்பும் இணைஞ்சிருக்கும்.வாழ்த்துகள் சிட்டு !

Reply

ஆத்மா... நிறைந்த வாழ்த்துகள்.

Reply

ஆத்மா நல்ல பெயர் சகோ. புதுப்பேரிலேயே தொடரட்டும் உங்கள் எழ்த்து பணி.

Reply

வாழ்த்துகள்

Reply

சந்தர்ப்பம் பார்த்து ஆப்படிக்கிறிங்க :)
அதுவும் ஒரு வகையில் நலவுக்குத்தானே
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கவிதாயினி

Reply

ஆத்மா என்னு படைப்பு வேற இருக்கா தெரியாமப் போச்சே.....
அப்போ பிடிச்ச பெயர்தான் என் கிட்னியில உதிச்சிருக்கு :)
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

உண்மைதான் கவிதாயினி
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி :)

Reply

வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க :)

Reply

அழகான வாழ்த்துப் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாஸ்

Reply

munne neenga sonna visayangal-
nenjai varudiyathu.....

Reply

Post a Comment