Looking For Anything Specific?

ads header

புதிதாய் பிறக்கிறேன்... பிரசவிக்க வருவீர்களா...?

சிறியதொரு இடைவெளி... இப்படியான இடைவெளி எடுத்துக் கொண்டது கிடையாது என்று சொல்லிவிடவும்  முடியாது.
 
இனிமேல் இடைவெளிகள் ஏற்படாது என்று சொல்லவும் முடியாது.

நான் புதியவன், சிறியவன், அனுபவமில்லாதவன் என்னை விட அனுபவம் நிறைந்தவர்கள் பதிவுலகில் நிறைய இருக்கிறார்கள்.

இடைவெளிகளும் அவர்களுக்கு வசப்பட்டிருக்கும்.

சென்ற மாத நடுப்பகுதியிலிருந்து இன்று வரை ...

யாருடைய வலைப் பக்கத்திற்கு வரவுமில்லை கருத்திடவுமில்லை...
அதனால் என்ன என் மீது கோபம் கொள்ளப் போகிறீர்களா ? நிச்சயமாக கோபம் கொள்வதற்கு உங்களுக்குஉரிமை இல்லாவிட்டால்...? 
என்றாவது ஒரு நாள் உங்கள் கோபம் தனியும் அதுவரையில் நான் உங்களோடு இருப்பேன்...  நீங்கள் என்னோடு இல்லாவிட்டாலும் சரியே... :P

இனியென்ன இறைவன் நாடினால் தொடருவேன்.

என் மனதில் இருந்த நீண்ட கால குழப்பமிது. ஆலோசனை கிடைக்கும் எனும் ந(ட்)ப்பாசையில் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

நான் வலைப்பதிவிட தொடங்கி சிறிது காலத்தில் தெரிந்து கொண்டேன் சிட்டுக் குருவி என திருவாளர் விமலன் சாரும் தன் வலைப்பக்கத்திற்கு நாமமிட்டுள்ளதை.

சில நண்பர்கள் பின்னூட்ட பெட்டிகளில் என்னை விமலன் என்றும் அழைத்திருக்கிறார்கள்.

இதன் போதெல்லாம் என் மனதில் எந்த விதமான வேறுபட்ட சிந்தனைகளும் உணர்ச்சிகளும் தோன்றவில்லை. மாற்றமாக விடயத்தைத் தெளிவுபடுத்தினதே தவிர வேறில்லை.

ஆனால் இப்போது சில நாட்களாய் என் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி... தவறிழைத்துவிட்டோமோ என்கிற பயம் தொற்றிக் கொண்டுவிட்டது...

நான் பாடம் கற்க வேண்டிய மூத்த பதிவர் விமலன் சார். எனக்கு முதல் அவருக்கே சிட்டுக் குருவி நாமம் சொந்தமானது. இனிமேலும் தவறிழைக்க என் மனம் இடம் தறாது.

முடிவெடுத்துவிட்டேன் என்னுடைய (சிட்டுக் குருவி) அடையாளத்தை மாற்றுவதாய்.

இது நீங்கள் வளர்த்த சிட்டுக் குருவி
உங்கள் அன்பு என் வலைத்தளம் முழுதும் இறக்கைகள் முளைத்துப் பறந்து திரிகின்றது. 

எல்லோருக்கும் அழகாகத் தெரியும் வசந்த பருவ மரம் நான். நான் எனும் மரத்திற்கு ஆணி வேறே நீங்கள் தான். வாழையாய் இருந்த என்னை ஆலையாய் மாற்றியவர்கள் நீங்கள்.

என் அன்புக்குறியவரி(ளி)ன் SMS இல் கிடைக்கும் பூரிப்பை  உங்களிடம் ஆலோசிப்பதில் கிடைக்கும் சந்தோஷம் மிகைத்து விடுகிறது. 

எனக்கு சொல்லிச் செல்லுங்கள்...

என் வலைப்பக்கத்திற்கு என்ன அடையாளம் (பெயர்) வைக்கலாம் என்பதனை...

வலையுலகில் உங்களோடு உறவாடியதில் + உரையாடியதில் உங்களின் நினைவாய் உங்களில் ஒருவர் சொல்லும் அழகான பெயரினை என் தளத்திற்குச் சூட்டுவதாய் எண்ணியுள்ளேன்.

கவனியுங்கள் இதுவரையில் நான் இட்ட பதிவுகளின் தன்மையினையும் கருத்தில் கொண்டு அழகான நாமத்தினை வெளிப்படுத்துங்கள்.

முடிவில் மாற்றம் வைப்பதாய் எண்ணமில்லை...

வலையுலகில் இனி சிட்டுக் குருவி என விமலன் சார் மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன்.

இடைவெளியில் என் தளம் வந்து சென்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி இன்னும் தொடருங்கள் நான் களிப்படைவதில் களைப்படைய மாட்டேன்....:)


Post a Comment

57 Comments

  1. //நான் பாடம் கற்க வேண்டிய மூத்த பதிவர் விமலன் சார். எனக்கு முதல் அவருக்கே சிட்டுக் குருவி நாமம் சொந்தமானது. //

    உமது ப்ரோபைல் ஏப்ரல் 2010

    அவரு ப்ரோபைல் செப்டம்பர் 2010


    அப்ப எப்பூடீ கொயப்பமா கீது

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ் வாங்க...
      முதலாவதா வந்திருக்கீங்க சூடா ஏதாவது தரட்டுமா...?

      ஒரு கொயப்பமும் வேணாம் 2010 இல் ஆரம்பித்தது மாத்திரம்தான் தளப் பெயரிடவுமில்லை பதிவிடவுமில்லை...

      பதிவிடல் எல்லாம் 2011 இலிருந்துதான். அதன் பொதுதான் சிட்டுக்குருவி என்று பெயரும் வைத்தேன்.

      என்னவாக இருந்தாலும் விமலன் சார் 2010 இலிருந்து முறையாக பதிவிடுகிறார். அவருக்கே அது சொந்தம் என நினைக்கிறேன்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் நன்றி பாஸ்...

      ஆமா மேட்டருக்கு வராம எஸ் ஆகிட்டீங்களே நல்லதா ஒரு பெயரை வச்சிட்டுப் போகலாமில்ல

      Delete
  2. குழப்பத்தை விரைவில் சரி செய்து கொள்ளுங்கள்... புது பெயருடன் விரைவில் சிந்திப்போம்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் சொல்லிட்டு எஸ் ஆகிடலாம் என்னு நினைக்காதீங்கோ...
      நல்லதா ஒரு அடையாளத்தை சொல்லிட்டுப் போங்க...

      Delete
  3. நானும் ஆரம்ப நாட்களில் விமலன் சார் என்றே நினைத்து வந்திருக்கிறேன்.

    அவரவர்கென்று ஆர்வம் இருக்கும் அதுமில்லாமல் நாம் ஒரு பெயர் சொல்ல அதை நீங்கள் தேர்வு செய்யாது விட்டால் கஷ்டமா இருக்கும் அதனால இந்த விளையாட்டுக்கு நான் வரள சரியா ?

    ReplyDelete
    Replies
    1. Sasi KalaNovember

      நானும் ஆரம்ப நாட்களில் விமலன் சார் என்றே நினைத்து வந்திருக்கிறேன்.
      /////////////////////

      உங்களை சங்கடப்படுத்தியமைக்கு வருந்துகிறேன் அக்கா
      __________________________________________________

      நாம் ஒரு பெயர் சொல்ல அதை நீங்கள் தேர்வு செய்யாது விட்டால் கஷ்டமா இருக்கும்
      ////////////////////////////////////

      ஐயோ இதுல இப்படி ஒரு வில்லங்கம் இருக்கும் என்கிறத மறந்தே போயிட்டேனே....பொருத்திருந்து பார்ப்போம்

      Delete
    2. ஹாரி.R

      Me too thala.. :D
      /////////////////////////

      என்னா பாஸ் அப்படியே எஸ் ஆவுறீங்க...விடமாட்டேன்

      Delete
  4. பெயர்ல என்னங்க இருக்கு? நான் கூட என்னென்னமோ யோசிச்சு கடைசியில என் பெயரையே வைத்துக்கொண்டேன். ஏதாவது நல்ல பெயரா வச்சுக்கங்க.... ஹி ஹி எஸ்கேப்

    ReplyDelete
    Replies
    1. அப்போ பெயர்ல ஒன்னுமே இல்லியா நாந்தான் மனச குழப்பிட்டேனா...

      எதுக்கும் பொருத்திருந்து பார்ப்போம் சார்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  5. ஹல்லோ, நீங்க என்னதான் தள பெயரை மாத்தினாலும் உங்க ப்ளாக் பெயர் சிட்டுக்குருவியை மாத்த முடியாதுங்கோ...(http://citukuruvi.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. இல்லை இல்லை .. நீங்கள் சுட்டியை மாற்றலாம். ஆனால் தமிழ்மணத்தில் மீண்டும் இணைக்க வேண்டி வரலாம் .. அவ்வளவே.

      Delete
    2. அட முத்தரசண்ண நீங்க மாகா கெட்டிக்காரனா இருக்கீங்களே :))))

      தள முகவரியோடு தொடர்புடையதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் பார்க்கிறேன்

      Delete
    3. இக்பால் சார் சுட்டியை மாற்றுவதாக எண்ணமில்லை....
      அப்படியெனில் ஏறாளமான பிரச்சனைகளை சந்திக்க வருமே :(

      Delete
  6. நான் பாடம் கற்க வேண்டிய மூத்த பதிவர் விமலன் சார். எனக்கு முதல் அவருக்கே சிட்டுக் குருவி நாமம் சொந்தமானது


    இந்த பக்குவம் இருக்கே, இது உங்களை மென்மேலும் வளர்க்கும், உங்களுக்கு பிடித்த செல்லப் பெயரையே வைக்கவும்.

    நானும் எஸ்கேப்..................

    ReplyDelete
    Replies
    1. பெயர் வைக்கிற பொருப்பை நம்மகிட்டே விட்டுட்டு போயிட்டீங்களா :(

      பிறந்த பிள்ளைக்கு உறவுக்காரர்கள் தான் பெயர் வைப்பார்கள்... இங்கு எனக்கு நானே பெயர் வைக்க வேண்டியதாக இருக்கு

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  7. நண்பரே
    பாலா அவர்கள் சொல்வதும் சரிதான் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீங்களும் எஸ் ஆகிடுறதா முடிவு பண்ணிட்டீங்க....

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  8. What is in a name bro?

    A rose by any other name would smell as sweet..-:)

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியெங்கிறிங்க......

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  9. இம்ரானின் சிட்டுக்குருவி!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப புதுசா ஈக்குது...... ஈ மொய்க்காம விட்டா சரிதான்

      Delete
    2. /இம்ரானின் சிட்டுக்குருவி!!//

      Vote 1

      Delete
  10. மூஸாவின் பலதும் பத்தும்.!?

    ReplyDelete
    Replies
    1. ஆகா......
      எப்பிடி மாம்ஸ் உங்களால மட்டும் :)

      Delete
  11. Replies
    1. விஜய் கண்ணுல படாம விட்டா சரிதான்....
      எதுக்கும் பல வாட்டி யோசிச்சிக்கிறேன்

      வருகைக்கும் அழகழகான பெயர்கள் சொல்லிச் சென்றமைக்கும் மிக்க நன்றி மாம்ஸ்

      Delete
  12. என்னாது அடிக்கடி மிரட்டுவனே ஜிட்டுவை பருந்து தூக்கப் போகுதென:) இப்போ உண்மையிலேயே தூக்கிட்டுதோ?:)... ஆஆஆஆ பெயர் மாற்றினால் கொஞ்சக் காலத்துக்கு கஸ்டம்தான்.. அடையாளம் கண்பது:)

    ReplyDelete
    Replies
    1. :(
      உங்க சாபம் பழிச்சிடுச்சி போல ...
      விட்டுடுவேனா மதிலுக்கு நானும் சாபமிடுவேனில்ல

      Delete
  13. என்னைத் தவிர:), இங்கின ஆரும் ஒழுங்கான பெயர் சொல்ல மாட்டினம், சோ.... நான் ஜொள்ளும் பெயரையே சூட்டுங்கோ..

    “ஜிட்டு”

    இப்படி ஒரு பெயர் வலையுலகில் எங்கேயும் இல்லையெல்லோ?

    ReplyDelete
    Replies
    1. ஜிட்டு இப்போ சூப்பர் மாட்டி:)

      Delete
    2. ஜிட்டு யாரும் திட்டாம விட்டா சரிதான்.....

      நீங்க ஜொள்ளும் பெயரில் யாரும் ஜொள்ளு விடாமல் இருந்தா எல்லாம் சரியா இருக்கும்

      Delete
  14. ஒரே பெயர் இரு தளங்களுக்கு இருந்தால் குழப்பமே மிஞ்சும் .. என்ன பெயர் வைக்கலாம். பஞ்சவர்ணக் கிளி என வைக்கலாமா ?

    வேறு சில ...

    தமிழ்க் காகம்

    மைனா

    தவிட்டுக் குருவி

    ... இப்படி எதாவது வைக்கலாமே. நீங்கள் தொடர்ந்து பறந்த வண்ணமே இருங்க.. தரைக்கு வந்திடாந்தீங்க..

    ReplyDelete
    Replies
    1. முடிவா என்னுடைய இறக்கைகளை ஒரு வழி பண்ணித்தான் விடுவீங்க போல.....

      அது என்னாது தமிழ் காகம்.... எங்காச்சும் சுற்றித் திரிகிறதா யாரும் பிடிச்சி பிரியாணி போடாம விட்டா சரிதான்...

      யோசிக்கிறேன் ...

      அழகான பின்னூட்டத்துக்கும் அழகழகான பெயர்களுக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
    2. //தவிட்டுக் குருவி//

      புதுசா இருக்குன்னே புதுசா இருக்கு.. :D

      Delete
  15. ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்துக்கொண்டு beach க்குப் போங்க.. போயா வருது. அன்று நிதானமா இருந்து அலையைப் பார்த்தபடி.. வானத்தை நோகி இருங்க.. படாரென கிட்னியில் ஒரு பெயர் உதிக்கும்:)) அதையே வச்சிடுங்க:).. அது அநேகமாக “ஜிட்டு” வாகத்தான் இருக்கும்:)))...

    சரி சரி ஏதோ எனக்குப் பிடிச்சதைச் சொன்னேன்.. உங்கள் விருப்பத்துக்கு வைங்க:)..

    அல்லது இலங்கை வானொலி நேயர் விருப்பப் பகுதியில் கேட்கச் சொல்லுங்க:) இதுக்கு மேல வாணாம் நான் ஓடிடுறேன்:).

    ReplyDelete
    Replies
    1. ஐயோ போயா வருகுதோ...
      என்னைய கட்டி போட்டிடுவாங்களே பின்ன எப்பிடி பீச்சுக்கு போவது...

      எனக்கு பென்சிலைக் கண்டால பயம்...
      யாரும் எழுதிறத்துக்கு நோட்சு சொல்லிடுவாங்களோ என்றுதான்...

      ஐயோ ராஜஸ்வரியம்மாவும் போயிட்டாங்களே அங்கே நல்ல பெயர்கள் சொல்லுவாங்களோ ?

      எதுக்கும் இன்னும் யோசிக்கிறேன்....

      வருகைக்கும் அழகழகான ஐடியாக்களுக்கும் மிக்க நன்றி பூஸ்

      Delete
  16. என்னதுதுதுதுது .... சிட்டுக்குருவி ... பெயரை மாத்தப் போறீங்களா...?
    ஐயோ... சிட்டு சிட்டு என்றெல்லாம் பாட்டு எழுதினேனே... அதனால் பயந்து விட்டீர்களா...?

    என்னடம் நிறையப் பெயர்கள் இருக்கிறது.
    ஆனால்... சிட்டுக்குருவி என்ற அளவுக்கு அழகாக இருக்காது. அதனால் சொல்லவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பட்டும் படாமலும் சொல்லிட்டுப் போறீங்களே.....
      நம்ம மரமண்டைக்கு புரியாது.....

      எதுக்கும் மறுபடியும் மறுபடியும் யோசிக்கிறேன்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

      Delete
  17. வலைக்குருவி? வலைப்பூக்குருவி? !?!?!?!?!?! குழப்புறனோ?
    ஹிஹிஹி....

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பெயர் சூட்டப் போயி நீங்க குழம்பாம விட்டா சரிதான்...
      ஏற்கனவே பல பேர் குழம்பியதால் தான் இப்படியொருமுடிவு

      யோசிக்கிறேன்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  18. நானென்ன சொல்ல இருக்கு நண்பா .......................நீங்க என்ன பேர் வைச்சாலும் உங்களின் பதிவுகளின் தரம் குறையப்போவதில்லைதானே ............கண்டபடி யோசிக்காமல் ஒரு பேரை வையுங்க ..............வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. என் பதிவுகளுக்கு தரமும் இருக்குதா :0

      எதுக்கும் பல தடவைகள் யோசிக்கிறேன்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  19. சிந்தனைக்குருவி...?

    இல்லை என்றால் 'உங்கள் விருப்பம்'

    tm2

    ReplyDelete
    Replies
    1. நல்லதொரு பெயர்.....
      சிந்திக்கிறேன்

      வருகைக்கும் அழகான பெயருக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  20. பாடம் கற்றுக்கொள்கிற அளவுக்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரியவனில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்க இப்படிச் சொல்லலாம் ஆனா நாங்க அப்படித்தான் சொல்லுவோம்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  21. சின்னக்குருவி - இந்தப் பெயரை வைக்கலாம்.
    அப்புறம் இந்த "ரீட்மோர்" சமாச்சாரத்தை ஒதுக்கு வைக்கலாம். ஒரு கிளிக்கில் உங்கள் பதிவிற்குள் வந்திடவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அழகான பெயரொன்று ஐயா...

      ரீட்மோர் சமாச்சாரத்தைக் கவனத்தில் கொள்கிறேன் ஐயா
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  22. நல்ல ஒரு .... குருவி பெயருடன் வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீங்க ஒன்னுமே சொல்லாமப் போறீங்க....

      தேடி எடுத்துக் கொண்டு மறுபடியும் சந்திக்கிறேன்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

      Delete
  23. சிட்டுக்குருவி...பழகிப்போச்சு !

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது மாற்ற வேண்டி சூழ்நிலைக்கு ஆளாகிவிட்டோமே...

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

      Delete
  24. adache:.......


    naan rompa thaamatham....


    perallaaam vacha pirakuthaan panthikku vanthirukken....

    ReplyDelete
  25. சிங்காரக்குருவி விரைவில் பறந்து பாடட்டும் ....

    ReplyDelete
  26. நான் உங்கள் இருவருக்கும் follower ஆக இருப்பதால் எனக்கு ஆரமபத்தில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது.பெயர் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்ட விரும்பினேன், என்றாலும் தயக்கத்தின் காரணமாக சொல்லவில்லை.நீங்கள் செய்த பெயர் மாற்றம் சரியானதே.அதற்கு சொன்ன காரணம் உங்கள் நல்ல பண்பைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete