Looking For Anything Specific?

ads header

சமூக தளங்களில் ஆபாசம் எது ...?

இன்றைக்கு சமூக தளங்களில் அதிகமானோரால் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாகும் வார்த்தையாக ஆபாசம் எனும்  சொல் காணப்படுகிறது. இந்தச் சொல்லை மையப் பொருளாகக் கொண்டு பலர் பிழைப்புநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சில இணையத்தளங்கள் ஆபாசத்துக்கு முதலிடம் வழங்குவதன் மூலம் தமது வாசகர்களை தன்னகத்தே வைத்துக் கொள்கின்றது. பெரும்பாலான இணையத் தளங்களில் வெளியாகும் செய்திகளில் எங்கேயாவது ஓர் இடத்தில் ஒரு ஆபாசச் செய்தி இல்லாமலில்லை. இதன் மூலம் வாசகர்களும் ஆபாசத்தை விரும்புகிறார்கள் என்பது புலனாகின்றது.

பிரபலங்களை ஊடகங்கள் மிகவும் உண்ணிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் சாதாரண அன்றாட நடவடிக்கைகளை பிரதான விடயமாகக் கொண்டு செயற்படும் ஊடகங்களுக்கு பிரபலங்களின் அந்தரங்க மற்றும் ஆபாச செயற்பாடுகள் கிட்டும் போது கொண்டாட்டமே.

அண்மையில் பிரித்தானிய இளவரசர்களின் ஆபாச செயற்பாடுகளை தகுந்த ஆதாரங்களோடு சில ஊடகங்கள் அம்பலப்படுத்திருந்தன. இந்த செய்திகளை பல சமூக தளங்களின் பயனாளிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இதனை அவர்கள் ஒரு சாதாரண விடயமாகவே கருதி அந்த செய்தியைப் படித்ததுடன் அது தொடர்பான தங்களின் கருத்துக்களையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளியிட்டுக் கொண்டுமிருந்தனர்.

அதே போன்று நிறைய சமூகத்தள பயனாளிகள் தங்களுக்குள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் போது இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.அந்த வார்த்தைகளை படிப்பவரின் மனநிலை மற்றும் அவர் அவ்வார்த்தையை புரிந்துகொள்ளும் விதத்தைப் பொருத்து அது நல்லது கெட்டது என அமைந்துவிடுகிறது.

இவ்வாறு இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைப் பயன்பாடுகளின் போது அங்கே ஆபாசம் என்பது சாதாரண ஒரு விடயமாகவே கருதப்படுகிறது.

பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் ஆபாசம் தொடர்பான குழுமங்கள் மற்றும் வாசகர் பக்கங்கள் போன்றனவும் இருக்கின்றன. இவைகளில் உறுப்பினராகி இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. எனவே இதில் உறுப்பினராகி இருப்பவர்கள் அனைவரும் ஆபாசத்தை சாதாரண ஒன்றாகவே கருதுகிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

நாம் கூறும் சமூக தளங்களுக்கப்பால் அனைவரும் ரசிக்கக்கூடிய  தமிழ் சினிமவில் கூட ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சிகள் பயன்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆபாசத்தை எதிர்ப்பவர்கள் யாருமிருந்தால் தமிழ் சினிமாவில் மொழியக்கூடிய ஆபாச வார்த்தைகளையும் காட்சிகளையும் எதிர்ப்பதற்கு ஆளனி சேர்த்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரையில் சினிமாவின் ஆபாச வார்த்தைகள் மற்றும் காட்சிகளை எதிர்க்க எந்த அமைப்பும் இல்லை.

மிகப் பெரிய பிரபலம் இயக்குனர் பாலு மகேந்திரா தன்னுடைய வலைப்பக்கத்தில் தன் அனுபவங்களைப் பகிரும் போது தான் கெமராவினை முதன் முதலில் தொட்டு உணர்ந்ததை மிகவும் ஆபாசமாகவே உவமைப்படுத்துகிறார்

ஏன் கவிஞர் கண்ணதாசன் உட்பட பல கவிஞர்கள் தமது கவிதைகளில் ஆபாசத்தை மையப்படுத்தியிருக்கிறார்கள்.அவர்கள் எழுதும் கவிதைகளை பாடல்களாகப் பாடும் எந்தவொரு பாடகரும் இதில் ஆபாச வார்த்தைகள் உண்டு அதனால் என்னால் இதனை பாட முடியாது என்று கூறியது கிடையாது. 

எனவே கவிதைகள் எழுதும் போதும் பாடல்கள் பாடும் போதும் ஆபாசமென்ற ஒன்று சாதாரண விடயமாகவே கருதப்படுகிறது.

இங்கு நான் சமூக தளம் என்று கூறிவிட்டு கவிஞர்கள் மற்றும் சினிமாவை எடுத்துக் கொள்வது ஏனெனில் நாம் சமூக தளங்களாக கருதும் பேஸ்புக், ட்வீட்டர், ஓர்குட் போன்றவைகளை விட சினிமாத் துறையோடு சமூகம் தொடர்புபடும் வீதம் மிக அதிகம். பேஸ்புக் ட்வீட்டர் போன்ற சமூகத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் கூட சினிமாவை ரசிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சிறுவர்களுக்கும் சினிமா என்பது  விதிவிளக்கல்ல.



இதனால் தான் சமூகம் அதிகமாக தொடர்புபடும் சினிமாவையும் நான் சமூக தளமாகவே கருதுகிறேன்.

ஆகவே தான் நான் மேற்சொன்ன அனைத்து சமூக தளங்களிலும் ஆபாசம் என்பது இரண்டரக் கலந்து விட்டது என்பது தெளிவாகப் புரிகிறது. ஆகவே சமூக தளங்களில் பயனாளிகள் ஆபாசம் என்ற ஒன்றை மிகச் சாதாரணமாகவே கருதுகிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம் என நினைக்கிறேன்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இன்றைய நவீன உலகில் ஆபாசத்தை வெறுப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. நான் எப்பவுமே ஆபாசத்தை வெறுப்பவன் என்பதனையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

ஆக சமூக தளங்களைப் பயன்படுத்துபவர்கள் எதையுமே ஆபாசமாக எடுத்துக் கொள்வது கிடையாது. இது இப்படியிருக்க;

சமூக தளங்களில் ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக ஒருவர் மீது பொலிஸில் புகார் கொடுத்து அவரை கைது செய்வதென்பது சமூக தளங்களைப் பயன் படுத்தத் தெரியாதவர்களின் செயலென்றுதான் சொல்ல வேண்டும். ஆபாசம் பிடிக்காதவர்கள் ஆபாசம் பயன் படுத்துபவர்களை தனது நண்பர்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம். இப்படியான பல மேம்பட்ட வசதிகளுடன் தான் சமூக தளங்கள் இயங்குகின்றன.

ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டார் என்பதற்காக ஒருவரை கைதுசெய்திருக்கிறார்கள் என்றால் தமிழ் சினிமாவில் ஆபாச காட்சிகளை பயன்படுத்துபவர்களையும், ஆபாச கவிகளை எழுதுபவர்களையும் அதனைப் பாடல்களாக பாடுபவர்களையும் என்ன செய்ய வேண்டும். என்னைக் கேட்டால் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்றே சொல்லுவேன்.

மேற் சொன்ன சினிமா , கவிஞர்கள் மற்றும் பாடகர்களால் பயன்படுத்தப்பட்ட ஆபாச வார்த்தையை விட மிக மோசமான வார்த்தையையா  ராஜன் சிம்மயி விடயத்தில் பயன்படுத்தினார். அப்படி என்ன வார்த்தையை சார் பயன் படுத்தினீங்க ?

எனக்கென்றால் இவையெல்லாம் சின்னப்பிள்ளைத் தனமாகவே தெரிகிறது. இதற்கு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கியஸ்தர்களும் விரைந்து துணைபோவதுதான் புதுமை.



Post a Comment

66 Comments

  1. அளவுக்கு மீறாதவரை எதுவும் ஆபாசமில்லை...


    இது கொஞ்சம் பிரச்சக்குறிய காலம்தான்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னோர்கள் சொல்லித்தான் இருக்கிறார்கள்

      முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சார்

      Delete
  2. மிகச் சரியான அலசல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  4. எதிலும் "நல்லது","கெட்டது" கலந்தே இருக்கும். சமூக தளங்களிலும் அப்படித்தான். சமூக தளங்களில் ஆபாசங்களை அள்ளிவிடும் நபர்களிடமிருந்து நாம் ஒதுங்கி கொண்டாலே அவர்களது இடுகை நம்மை வந்தடையாது. இதுபோல் ஒவ்வொருவரும் செய்ய, அவர்கள் தனிமரமாகி விடுவர். ஆனாலும் அவர்களிடம் மாட்டிக்கொள்வது விழிப்புணர்வற்ற அப்பாவிகள்தான். இது நல்ல விழிப்புணர்வு பகிர்வு. அருமை!

    ReplyDelete
    Replies
    1. மாட்ட்டிக் கொள்வது அப்பாவிகளும் தான் சில சந்தர்பங்களில் உண்மை வில்லனும் தான்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  5. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.தனி நபரை குறிப்பிட்டு பொது வெளியில் ஆபாசமாக பேசுவதும் சினிமா மற்றும் கவிதைகளும் ஒன்றல்ல

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தனிமனித தாக்குதல் வேறு சினிமா வேறுதான்

      நான் சொன்னது ஆபாசம் வார்த்தைகள் இந்த உலகத்தில் மிகவும் மலிந்து சாதாரண வார்த்தைகள் போல் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே...

      தனி மனிதல் தாக்குதலைப் சமூக தளங்களில் பாருங்கள் சினிமா நடிகர்கள் எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தப் படுகிறார்கள்

      அரசியல் தலைவர்கள் எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தப் படுகிறார்கள் ஏன் பவர் ஸ்டார் கூட மிகவும் அசிங்கப்படுத்தப் பட்டிருக்கிறார் இவை எல்லாமுமே தனிமனித தாக்குதல்கள் தானே

      இவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று போர்க்கொடி தூக்கினார்களா

      ஆபாச வார்த்தைகளே சாதாரண ஒன்றாகிவிட்ட போது தனிமனித தாகுதல் என்ன குழு தாக்குதல் என்ன எல்லாமும் சாதரணமாய் பார்க்கப் பட வேண்டியவைதான்

      மீண்டும் சொல்கிறேன் நான் ஆபாசத்தை ஆதரிப்பவன் அல்ல

      முதல் வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி

      Delete
  6. ஊடகங்கள்(குற்ப்பாக பத்திரிக்கைகள்) ஒரு தலைபட்சமாகவே நடந்து கொண்டது போல் தெரிகிறது அவர்களுக்கு என்ன பிரபலமானவரை பற்றி செய்தி கிடைத்தால் போதும். பெரும்பாலான சமயங்களில் "சட்ட ரீதியான" என்ற வார்த்தியில் ஞாயம் நசுக்கப்படுகிறது. ஆபாசமாக ஆண் பேசுவதே குற்றமா ? இல்லை அவன் மட்டும் தான் பேசுகிறானா? எதிராலி வலிமையானவனாக இருந்தால் எளியவனின் பேச்சு எடுபடுவதில்ல என்பதே நிதர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்
      ஆண் மட்டுமே ஆபாசம் பேச வேண்டுமென்றில்லை பிரபலங்கள் (பெண்கள்) கூட ஆபாசமாக பேசுகிறார்கள் என்பது மறைக்கப்பட்ட உண்மை.

      சட்டங்களும் ஒருதலைப் பட்சமாக இருக்கக் கூடாது.

      எதுவோ ராஜன் சிம்மியி விடயத்தை சரியான முறையில் அலசி தீர்ப்பு வழங்கப்பட்டால் சரிதான்
      எந்தவொரு நிரபராதியும் தண்டிக்கப் படக் கூடாது என்பது என் நோக்கம்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  7. தமிழ் சினிமவில சினிமா பாட்டில எல்லாம் ஆபாச வார்த்தைகள் இருக்கு. உண்மை தான். ஸோ ஒருவர் எதிர் கருத்து வைக்கும் போது அவரை ஆபாசமா தூற்றலாம், பெண் என்றால் ஆபாசமா தூற்றி வாயை அடைக்கலாம் என்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. இல்லை சகோ
      பெண் என்றாலும் ஆண் என்றாலும் என்னைப் பொருத்தவரையில் ஆபாசமாகப் பேசுவதன்பது தவறான செயலே

      ஆபாசமாக பேசுகிறார்கள் என்பதற்காக நாம் ஒதுங்கிப் போவது என்பது எமது பலவீனத்தையும் முட்டாள் தனத்தையுமே எடுத்துக் காட்டுகிறது.

      தன்னிடம் உண்மையாக ஆபாசமாப் பேசியிருப்பின் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதில் தப்பில்லை..

      ஆனால் ஆபாசம் எந்தளவுக்கு சாதாரணமாகிவிட்ட என்பதைச் சுட்டிக் காட்டவே சில உதாரணங்களை மேலே சொன்னேன். இப்படி ஆபாசம் சாதாரணமாகப் பார்க்கப் படும் போது சாதாரண ஒரு செயலுக்கு தண்டனை அவசியம் தானா என்பதுதான் எனது வினா

      முதல் வருகைக்கும் அழகான பின்னூட்தத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  8. சரியான அலசல்! அருமை நண்பரே!

    இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடை செய்யாமால் இருப்பதுதான் மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது, நமது இளைய சமுதாயம் மிக எளிதில் தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் காலமாகவே இருக்கறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நீங்கள் கூறுவது நூறு வீதம் சரியே
      நான் இங்கு குறிப்பிட்டுள்ள இணையத் தளங்கள் நுறு வீத ஆபாச தகவல்கள் அடங்கியதை அல்ல மாறாக செய்தித் தளங்கள் என்று கூறிக் கொண்டு ஆபாச செய்திகளை வெளியிடும் தளங்களைப் பற்றித்தான்...

      முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சகோ உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் களிப்படைவேன்

      Delete
  9. உங்கள் கருத்துக்களில் உண்மை இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ட்விட்டரில் ஒருவருக்கொருவர் ஆபாசமாக பேசிக் கொள்வதும் அடுத்தவரை விமர்சிப்பதும் கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது! ஆனால் இந்த விசயத்தில் போலீஸ் நடந்து கொண்ட விதமும் சரியில்லை!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்
      நானும் சொல்கிறேன் எனக்கு ஆபாசத் தூற்றுதலில் சற்றும் உடன்பாடில்லை.
      ஆனால் இன்றைய உலகம் ஆபாசத்தைச் சாதாரணமாக கருதிய பின் ஆபாசமாக பேசியவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று கூறுவதுதான் நகைப்புக்குறியது.

      வருகைக்கும் அழகன பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  10. Replies
    1. வருகைக்கும் அழகான எண்ணப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நேசன் அண்ணா

      Delete
  11. ராஜன் அவர்கள் பதிந்த சில பதிவுகளை நான் ட்விட்டரில் படித்தேன். அவர் சின்மயிடம் ஆபாசமாக பேசினாரா என்று தெரியாது. அதற்கான தகவல்கள் அதில் இல்லை. ஆனால் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பெண் பிரபலங்களை அவர் மிகவும் மட்டமான ரீதியில் ஆபாசமாக பதிந்துள்ளதை படிக்க நேரிட்டது. ஒருவேளை அந்த காரணத்திற்காக கைது நடவடிக்கை இருக்குமோ என்று புரிய வில்லை. எல்லை மீறி ஆபாசமாக ஒருவரை வர்ணிப்பது மிகவும் தவரே!

    ReplyDelete
    Replies
    1. ராஜன் விடயத்தை முற்று முழுதான சின்மயியுடன் தொடர்பு படுத்தியே பேசுகிறார்கள் ...
      ஆனால் நான் மேலே சொன்னது போல் ஆபாசம் சாதாரணமாகிவிட்ட பின்னர் கேலி படுத்தல்கள் பேச்சுச் சுதந்திரங்கள் என்ப சாதாரணமான பின்னர்
      அப்படி செய்தவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று கூறுவது தான் கேள்விக்குறியாக நிற்கிறது

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  12. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  13. சிட்டுக்குருவியின் பார்வை அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  14. இன்றைய நம் சமூகம் ஆபாசம் என்பதை மிக இயல்பாய் எடுத்துக்கொள்வதை நிறைய உதாரணம் கொண்டு விளக்கலாம்,
    குறிப்பாக இணையத்தை தவிர்த்து எல்லோரின் வீடுகளிலும் இருக்கும் டிவிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்வுகள் பெரும்பாலும் எதை மையபடுத்தி ஒளிபரப்பாகிறது! நல்ல அலசல் நண்பா ...

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்
      அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

      Delete
  15. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...சரியான அலசல்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பா
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  16. நல்ல அலசல்...

    பேசுபவரின் செல்வாக்கைப் பொறுத்து மாறுபடும்...! இன்றைய நிலை அது தான்...!!!

    நன்றி...
    tm6

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்து சார்
      வருகைக்கும் அழகான பின்னூட்தத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  17. அழகான அலசல். எதுவுமே நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் தங்கியிருக்கு. அன்னம்போல வாழ பழகிட்டால் பிரச்சனை இல்லை.

    “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”..

    ஆஆஆஆஆஅ எதுக்கு ஜிட்டு முறைக்கிறார்ர்:).. பருந்திடம் சொல்லிடுவேன்ன்.. ஜாக்க்க்ர்ர்ர்ர்தை:)

    ReplyDelete
    Replies
    1. அன்னம் அழகானால் எல்லாம் அழகா ஆவ்வ்வ்வ்வ்வ்
      :::::)))))

      ஓ ஓஓஓ எண்ணம் என்னு சொன்னயலோ எனக்குத்தான் டங்கு சிலிப்பாகிட்டோ
      ஆமா எதுக்கெடுத்தலும் பருந்த கூப்பிடுற வித்தைய எங்க பிடிச்சீங்க
      மீ பாவம் :(

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸ்

      Delete
  18. ஆபாசம் என்பது கேட்பவர் மற்றும் சொல்பவரைப் பொருத்தது நண்பா...

    நமக்கெதுக்கு அந்த வீண் பேச்செல்லாம்....

    ReplyDelete
    Replies
    1. ஒதுங்கிப் போவதுதான் முறையா.....
      வருகைக்கும் அழகான பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  19. அழகும் அளவு மீறினால் ஆபாசமாகும்!

    ReplyDelete
    Replies
    1. அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  20. உண்மைதான் பாஸ்... ஆனால் கண்ணாதாசன் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றால் இப்போது இருக்கும் பல கவிஞர்களை என்ன சொல்வதென்று தெரியல.. நல்ல பகிர்வு பாஸ்..

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்குப் பொய் அழகு என்று சொன்னதால் என்னவோ பொய்யான ஆபாசத்தையும் மெய் பேன்று எழுதுகிறார்கள் கவிஞர்கள் :)
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

      Delete
  21. மிகச் சரியான அலசல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete

  22. கல்லென நினைப்பார்க்கு கல்லாகவும் கடவுள் என நினைப்பார்க்கு
    கடவுளாகவும் தெரிவது போலத்தான் இதுவும்!

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்து
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  23. ஆபாசம் சாதாரண விஷயமாகி விட்டது என்பது உண்மைதான்.பொதுவாக சொல்லப்படும்போது அது சாதாரணமாகவும் ஒரு குறிப்பிட்ட நபரை வெளிப்படையாக தொடர்பு படுத்தும்போது சீரியாசாகி விடுகிறது.ஒரு வரையருக்குள் செயல்படுவதே நல்லது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார் வரையறை இருப்பின் எல்லாம் நலமே
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  24. மேற் சொன்ன சினிமா , கவிஞர்கள் மற்றும் பாடகர்களால் பயன்படுத்தப்பட்ட ஆபாச வார்த்தையை விட மிக மோசமான வார்த்தையையா ராஜன் சிம்மயி விடயத்தில் பயன்படுத்தினார். அப்படி என்ன வார்த்தையை சார் பயன் படுத்தினீங்க ?...நல்ல கேள்வி ...பதில் சொல்வதற்குத்தான் எவரும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. பதில் பின்னூட்டமிடுவதில் பிந்திக் கொண்டமைக்கு மன்னிக்கவும்...

      அழகான பின்னுட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  25. ஆபாசம் என்பது கலக்கிற விகிதத்தில் இருக்கிறது,

    ReplyDelete
    Replies
    1. அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி விமலன் சார்

      Delete
  26. அருமையான பகிர்வு. பிரபலங்களின் குறுந்தகவலுக்கே சிறை தண்டனை என்னும் நிலை மாற வேண்டும். ஆனால் அது போன்று சாமானியர்கள் புகார் ஏற்றுக்கொள்ளப் படுவது உண்டா என்றும் கவனிக்க வேண்டும். எல்லாம் 66 A செய்யும் வேலை.

    அதே சமயம் சமூக வெளியில் உலவும் நண்பர்களும் எழுத்து நாகரிகத்தைக் கடை பிடிக்க வேண்டுவதும் அவசியம்.

    தங்கள் இல்லத்திலும் உள்ள்த்திலும் மகிழ்ச்சி ஒளி சூழ தங்களுக்கு இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் சிட்டுக்குருவி!

    ReplyDelete
    Replies
    1. அழகான பின்னுட்டத்துக்கும் வருககைக்கும் மிக்க நன்றி சகோ...

      உங்களுக்கும் என் பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  27. மிகவும் ஆழமான கண்ணோட்டம்.எதிலும் ஒரு அளவும் எல்லையும் வேணும்.வாழ்வு சந்தோஷமாகும் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவிதாயினி விடுமுறைகளின் பின் மீண்டும் கண்டதில் சந்தோசம்..
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  28. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உறவினர்கள் நண்பர்களுக்கும் என் பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா

      Delete
  29. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி உங்களுக்கும் அதுவே உரித்தாகட்டும் :)

      Delete
  30. இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
    என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் !.......

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக தீபாவளி வாழ்த்தோடு வந்திருக்கிறீர்கள்...
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  31. நான் இன்னும் உங்கள் பதிவைப் படிக்கவில்லை சிட்டு...
    பின்பு வந்து படிக்கிறேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் சிட்டுக்குருவி.

    ReplyDelete
  32. சிட்டுக்குருவி...
    ஆபாசங்கள் நான் வாழும் நாட்டில்
    ஆ..பாசம்மாக இருப்பதால் நான் எதுவும் சொல்வதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சிரமமான வேலைகளுக்கு மத்தியிலும் என் பதிவுகளைப் படிக்க சிறிது நேரம் ஒதுக்கியமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..

      பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  33. மிகவும் அருமையான பதிவு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  34. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் என் பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. புரிதல்கள் இல்லாத மனிதர்களின் வெளிபாடு இன்றைய நவீன உலகம் எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது ஆகவே இது போன்ற வார்த்தைகளால் தங்களை பிரபல படுத்திகொள்ளும் மனிதர்களை தவிர்ப்பது நலம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை கண்டதில் சந்தோஷம்
      அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

      Delete