Looking For Anything Specific?

ads header

Comment Reply வசதி இல்லையா ? கவலையை விடுங்கள்

அண்மையில் ப்ளாக்கரில் அறிமுகப் படுத்திருந்த புதிய வசதிதான் வாசகர்கள் இடும் கருத்துரைகளுக்கு இலகுவாக பதிலிடும் முறை. இந்த முறைகளை எப்படி தன்னுடைய வலைப்பதிவுகளில் இயங்கச் செய்வது என்பது பற்றி ப்ளாக் ஸ்பெசலிஸ்ட்டுகளான சசிகுமார் சார் போன்றோர் பதிவிட்டிருந்தார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே...
நானும் அவர்கள் சொன்ன முறைப்படி செய்திருந்தேன் எனக்கும் அது நல்ல படியாக இயங்கியது. ஆனால் என்னுடைய டெம்ப்ளேட்டை மாற்றியதிலிருந்து அந்த வசதி இயங்காமல் போய்விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அதனை பழைய படி இயங்கச் செய்ய முடியாமலாகிவிட்டது.

இனிமே அந்தக் கவலையே இல்லை எல்லா டெம்ப்ளேட்டுகளுக்கும் பொருந்துற மாதிரி Comment Reply வசதியை ப்ளாக்கரே எமக்குச் செய்து தந்திருக்கிறது. அதைப் பற்றித்தான் இங்கு நான் சொல்லப் போகிறேன்.

முதலில் ப்ளாக் ஸ்பெசெலிஸ்ட் சசிகுமார் சார் சொன்ன முறைப்படி அவர் தந்துள்ள கோடிங்குகளை சேர்த்துவிடுங்கள். பதிவின் நீளம் கருதியதால் அவருடைய லிங்குகளைத் தருகிறேன் அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள். அவருடைய தளத்துக்குச் செல்ல கீழே இணைத்திருக்கும் சுட்டியை கிளிக் பண்ணுங்க


அவர் சொன்ன முறைப்படி செய்தும் உங்களுக்கு Comment Reply வசதி கிடைக்கவில்லையென்றால் இனி நான் சொல்லும் முறைகளைப் பின்பற்றுங்கள்.

இதற்கு எந்த வித கோடிங்கும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை ஏற்கனவே நான் சசிகுமார் சார் சொன்ன முறைகளைச் செய்து வைத்திருந்ததால் இதற்கென்று தனியான கோடிங்குகள் எதுவும் சேர்க்கவில்லை. இதுவரை கோடிங் சேர்க்காதவர்கள் இருந்தால் கோடிங் சேர்க்காமலே ஒருமுறை நான் சொல்லும் முறைகளைச் செய்து பாருங்கள் சரியாகிவிட்டால் எனக்கும் தெரியப்படுத்துங்கள்.

முதலில் ப்ளாக்கர் கணக்கினுள் நுழைந்து டெம்ப்ளேட் பகுதிக்கு சென்று எம்முடைய டெம்ப்ளேட்டை ஒரு முறை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். நான் சொல்லும் முறையில், டவுன்லோட் செய்யும் டெம்ப்ளேட்டினால் மேலதிகமாக நாம் சேர்த்துக் கொண்ட கோடிங்குகளை பெற்றுக் கொள்ளலாமே தவிர அதனை மீண்டும் பதிவேற்ற முடியாது.

அடுத்து Template - Edit HTML - Proceed செல்லுங்கள் இது நாம் வழமையாக செய்கிற செயற்பாடு என்பதனால் அதற்கான விளக்கப் படங்கள் இணைக்கவில்லை தேவைப்படுவோர் பின்னூட்டத்தில் கேளுங்கள் தருகிறேன்.

அதன் பின் கீழுள்ள படத்தில் உள்ளது போல் HTML பகுதியில்  Revert widget templates to default கிளிக் செய்யுங்கள். 


அடுத்து உங்களிடம் கீழுள்ள படத்தில் போன்று ஒரு வினா எழுப்பப்படும் . அதுக்கு டக்குன்னு தாமதியாது OK  குடுத்துடுங்க.


அவ்வளவுதான் இப்ப கேம் ஓவர்.................:)

சின்னதொரு சிக்கல்........:(
உங்க டெம்ப்ளேட்டு பழைய படியே இருக்கும் ஆனா நீங்கள் சேர்த்த திரட்டிகளின் ஓட்டுப் பட்டை போன்ற கூகுளுடன் தொடர்பு படாத அனைத்துக் கோடிங்குகளும் நீக்கப்பட்டுவிடும். அதனை இலகுவாக சரி செய்து விடலாம்.

திரட்டிகளின் ஓட்டுப் பட்டை கிடைக்காதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் தருகிறேன்.

முதலாவது ப்ளாக்கர் டிப்ஸ் எழுதியிருக்கேன் புடிச்சிருக்கா இல்லியா என்பதையும் சொல்லிட்டு போங்க பாஸ்......

Post a Comment

32 Comments

  1. நானும் இந்த முறையை நான்கு மாதத்திற்கு முன் வைத்திருந்தேன்... பிடிக்கவில்லை... (எல்லா நண்பர்களின் கருத்துகளுக்கும் ஒரே Reply கருத்து தான் என் தளத்தில்...)

    அது ஏன்...? என்பதை இன்னும் சில மாதங்களில் இன்னொரு தளத்தில் சொல்கிறேன்...

    /// அவ்வளவுதான் இப்ப கேம் ஓவர்.................:) ///

    கேம் ஓவர் ஆகாது... மேலும் சிக்கல் தான் ஆகும்... இதையும் இன்னும் சில மாதங்களில் இன்னொரு தளத்தில் சொல்கிறேன்...

    உங்களுக்கு Comment Reply வசதி வேண்டுமாயின்... இதோ பிளாக்கர் நண்பனி(ரி)ன் இரண்டு Links : முயற்சித்துப் பாருங்கள் விருப்பம் இருந்தால்...(எளிது)

    1) http://www.bloggernanban.com/2012/06/threaded-comments.html (ப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா?)

    2) http://www.bloggernanban.com/2012/06/reply-button.html (ப்ளாக்கரில் புதிய Reply Button வைக்க)

    9944345233
    dindiguldhanabalan@yahoo.com

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நேற்று வரையிலும் நான் பதிலளிப்பு முறையினை தனியான பதிலளிப்பாகவே வெளியிட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த முறையைப் பார்த்ததும் அதனை முயற்சி செய்தேன் பயனுள்ளதாய் அமைந்தது...

      இந்த லிங்குகள் எனக்கு முன்னமே தெரியாமல் போய்விட்டது

      தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்.....

      என்னக்குள் குழப்பத்தை உண்டுபன்ணிவிட்டு சென்று விட்டீர்களே சார்..ஏன் சிக்கல் அதிகரிக்குமோ தெரியப்படுத்துங்கள் மெயில் அனுப்புகிறேன் அதில் குறிப்பிடுங்கள்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  2. நீங்க சொன்னது போல் ரிப்லே வந்துச்சு ஆனால் என் ப்ளாக் settings எல்லாமே மாறி போச்சு

    ReplyDelete
    Replies
    1. எல்லா செட்டிங்க்கும் மாறாதே எனக்கு அப்படி மாறவில்லை. பரவாயில்லை டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து வைத்திருப்பீர்கள் தானே அதனை மீண்டும் அப்லோட் செய்து கொள்ளுங்கள்.

      இந்த முறையில் சிக்கல் இருப்பதாகவும் தனபாலன் சார் மேலே சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்கு சிக்கல்கள் இல்லாமல்தான் இருக்கிறது. பின்னாட்களில் என்ன நடக்குமோ தெரியாது.

      ஆகவே நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட்டை அப்லோட் செய்துவிட்டு மேலே தனபாலன் சார் தந்திருக்கும் அப்துல் பாசித் சாரின் தளத்திற்குச் சென்று அவர் சொன்ன முறையில் முயற்சி செய்து பாருங்கள். அப்படி வராவிட்டால் இதனை முயற்சி செய்யுங்கள்..

      முன்னர் நான் கூறி விட்டேன் கூகுளுடன் தொடர்பு படாத கோடிங்குகள் எல்லாம் அழிந்து விடுமென்று

      முயற்சி செய்து அதன் பிரதிபலிப்பை பதிந்து சென்றமைக்கு மிக்க நன்றி

      Delete
  3. நல்ல பயனுள்ள பகிர்வு.... நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  4. சோம்பல் நிறைய...அதனால் சாவகாசமாய் செய்து பார்க்கிறேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சரியான சோம்பல் பார்ட்டியா அப்போ இதுல கைய வச்சிடாதீங்க...
      மேலே ப்ளாக் ஸ்பெசலிஸ்ட் அப்துல் பாசித்தின் லிங்கை தனபாலன் சார் தந்துள்ளாஎ அது சோமப் பார்ட்டிக்கு இலகுவாக இருக்கும் அதன் படி செய்யுங்கள்

      வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  5. தாங்கள் சொன்னதுபோல் செய்தால் நமது தள வடிவமைப்பு மீண்டும் பழைய, இயல்பு நிலைக்கு மாறிவிடுமே நண்பரே!

    இதற்கு எளிமையான மாற்று வழியாக (எந்த codingsம் சேர்க்க வேண்டியதில்லை)தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தங்களுக்கு பிடித்த அழகான templateகளை இணையத்தில் பெற்று உபயோகப்படுத்திக்கொள்ளலாம்!

    நானும் அப்படித்தான் செய்திருக்கிறேன். இப்போது எனது தளம் மிக அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது.

    நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்து நண்பரே ..
      ஆனாலும் புதிய டெம்ப்ளேட்டுகளை டவுன்லோட் செய்து நிறுவுவதென்பது மிகவும் சிரமமான காரியமாச்சே அதனால் தான் அதைவிட சற்று இலகுவான இம்முறையைச் சொன்னேன்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  6. டெம்ப்ளேட்ட்ல கைய வைக்கவே பயமா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.....
      பயம்தான் எல்லாம் பழகினா சரியாகிடும் தல...
      வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  7. நம்ம பழைய டெம்ப்ளேட்ல இருக்கல...ரொம்ப கஷ்டப்பட்டு மாத்தினேன். இப்போ புது டெம்ப்ளேட்ல ஆட்டோமேடிக்கா எல்லாம் கணக்கா இருக்கு..ஜாலி. ;)

    ReplyDelete
    Replies
    1. ஒகே ஜாலிய அப்பிடியே மெயிண்டைன் பண்ணுங்க பாஸ்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. நேற்று நான் கேட்ட கேள்விக்கு பதில் போல தெரிகிறது...

    அழகாக கூறியுள்ளீர்கள், அனைவருக்கும் வரும் பிரச்சனை இது... நல்ல வழிகளை அளித்துள்ளீர்கள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆமா நண்பா கேள்விக்கு பதில் என்றும் சொல்லலாம்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  9. நண்பா சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  10. பயனுள்ள பதிவு. ஆனா, அதை செயல்படுத்தும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. மின்னல் வரிகள் கணேஷ் அண்ணாக்கிட்ட சொன்னா எனக்கு மாத்தி குடுத்துடுவார்.

    ReplyDelete
    Replies
    1. சின்னதொரு வேலைக்கும் பொருமை இல்ல என்கிறீங்களே வீட்டுல எப்பிடித்தான் காலம் போகுதோ.:) சீரியசா எடுத்துக்க வேணாம் ...

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  11. வணக்கம்! Template - Edit HTML – Proceed என்றாலே எனக்கு பயம்தான். ஏனெனில் முதன்முறையாக ஒரு பதிவினைத் தொடங்கி தமிழ் மணம் ஓட்டுப் பட்டையை நிறுவுவதற்காக Template - Edit HTML செய்தேன். அப்புறம் அந்த பதிவே காணாமல் போய்விட்டது.


    ReplyDelete
    Replies
    1. தவ்றுதலாக டிலிட் செய்யப்பட்டிருக்கும்.
      பழகினால் எல்லாம் இலேசாகப் போய்விடும்சார்

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
      முதல் வருகை தொடர் வருகையானால் மகிழ்ச்சி கொள்வேன்

      Delete
  12. நமக்கு வேண்டாம்ப்பா....

    அதெல்லாம் தொடவே எனக்கு பயம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா
      ரொம்பத்தான் பயமோ....

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

      Delete
  13. நல்லதொரு தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் சென்று பார்க்கிறேன்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி முதல் வருகை என நினைக்கிறேன் உங்கள் வருகை தொடர்ந்தால் மகிழ்ச்சி கொள்வேன்

    ReplyDelete
  14. எனக்கும் அதிக அனுபவம் இல்லை சிட்டு தனிமரம் படிக்காத பாமரன் ! மண்டையை போட்டு பிக்க முடியாது!ஹீ நன்றி பகிர்வுக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா....
      ரொம்பத்தான் தன்னடக்கம் உங்களுக்கு சகோ
      வருகைக்குக் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  15. Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  16. என்னக்கு வரவிள்ளயிய தோழர் ??

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய தளம் சென்றேன் அங்கேயே நீங்கள் ப்ளாக்கரின் வசதியை விட மேலதிகமான வசதி கொண்ட கருத்துப் பெட்டியை இணைத்துள்ளீர்கள்...

      வழமையான ப்ளாக்கருக்குத்தான் இது செயற்பாடும் என நினைக்கிறேன் அதாவது என்னுடைய தளத்தைப் போன்ற ப்ளாக்குகளுக்கு...

      முயற்சி செய்து பாருங்கள் அல்லது மேலே தனபாலன் சார் சொன்ன கருத்தின் படி செய்யுங்கள்

      முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  17. இந்தமுறை நல்லாயிருக்கிறது நண்பா, முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete