Looking For Anything Specific?

ads header

பள்ளிக்குப் போகிறாள்...!


உசைன் பாய் கடையில
நாளைக்குக் காசு உம்மா தருவதாய்
சொல்லி கடனுக்கு வாங்கிய 
அஞ்சு ரூபா உஜாலா பக்கட்டை
தண்ணியில கரைச்சி...

அறுபது அடி கிணத்துல ஆறு தடவ
தண்ணியிறச்சி ஆயிசாவோடு சேர்ந்து
கழுவிய ஆறாம் வகுப்பு வெள்ளைச்
சட்டைக்குப் போட்டு அது
காயக் காத்திருந்து...

காலையில ஆறுமணிக்கெல்லாம்
கண்முழிச்சி காக்காய் போல 
தலை நனைச்சி வயித்துக்குள்ள
போட ஏதுமில்லாம வாரிக் கட்டிய
கொண்டையோட...

சுனங்கினால் சுழுக்கெடுக்கும்
வாத்தியார நெனச்சி
வரப்பு மேல போகும் போது
வாரறுந்த செருப்பு மேல பட்ட சேறு
சட்டையில தெரிக்குது...

ராத்திரியடிச்ச  ராட்ஷச மழைய
செல்லமாய்க் கடிந்து கொள்கிறாள்
எதிர்காலத்து பிரபலம் ஒருத்தி...  



Post a Comment

36 Comments


  1. அருமையான கவிதை! அழகு!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  2. அழகான கவிதை வரிகள் நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  3. எப்படியெல்லாம் சிரமமெடுத்து துவைத்த வெள்ளைத்துணி மீண்டும் அழுக்காகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமா மழைக்காலம் என்றாலே இப்படித்தான்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  4. ம்ம்ம்..கவிதை , மழைக்காலத்தில் தேநீர்
    அருந்தும் சுகம் போல !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கவிதாயினி

      Delete
  5. நானும் பலமுறை யோசித்திருக்கிறேன்... நம் நாட்டில் எதற்கு இந்த வெள்ளை நிற யூனிபார்ம் என்று... அது தேவையில்லாதது.... அதிக தூசி,pollution ல் வளரும் நம் குழந்தைகளுக்கு அதை துவைத்து தூய்மையாக வைப்பதென்பது மிகவும் சிரமம் தான்.... அவர்களுக்கு இல்லையென்றால் அவர்களுடைய தாய்மார்களுக்கு....

    கவிதை சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் வெள்ளையால் தொல்லைகள் அதிகம்தான் அதனை சரி செய்ய அரசு என்ன செய்யுமோ தெரியாது கிணற்றுத் தவளைகள் நாம் கத்துவது யாருக்கும் கேட்கப்போகிறதோ...

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  6. சிட்டுக்குருவி, கவிதை கலக்கல்!



    tm2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி

      Delete
  7. Replies
    1. உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
      முதல் முறை உங்களைக் காண்பதாய் உணர்கிறேன் உங்கள் வருகை தொடர்ந்தால் களிப்படைவேன்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. //அஞ்சு ரூபா உஜாலா பக்கட்டை // பாக்கெட் - ஆ

    நீங்க உஜாலவுக்கு எப்ப மாறினீங்க ? சொல்லவேயில்லை.

    நல்ல கவிதை.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் பாக்கெட்...
      ஒரு காலத்துல மாறியிருந்தேன் சார் இப்போ அந்தப் பசங்களைப் பார்க்கும் போது பழைய நினைவுகள் துளிர்க்கிறது
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  9. அருமையான கிராமத்து மணத்துடன் கவிதை சிறப்புறுகின்றது.

    மழைக்காலம் வந்தாலே வீட்டில் அம்மாமார்களுக்கு வேலை அதிகம்தான்:))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  10. மழையில் பள்ளிக்கு போகவே விருப்பம் இருக்காது... குழந்தைகளுக்கு.. இருந்தும் உங்கள் சிறுமி சிறிது கடிந்து செல்வது அழகு தான்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மழையில் பள்ளிக்கு போவது மலையேறுவதுக்கு சமம்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  11. Replies
    1. வாங்க நண்பா ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிரீங்க...:)
      மிக்க நன்றி நண்பா வருகை + பின்னூட்டம்

      Delete
  12. ஆஹா.. கலக்கல் கவிதை. யதார்த்தமான சில நிகழ்வுகள் சொல்லி நிற்குது கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூஸ்
      பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
      சும்மாதான் கிறுக்கினேன்
      வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சந்திப்போம்

      Delete
    2. என்னாது கிறுக்கினனீங்களோ?:) அவ்வ்வ்வ் கிறுக்கலே இப்பூடியெனில்?:)) எனக்காராவது சுட்டாறின தணி தெளியுங்கோஓஓ:).

      Delete
    3. என்னாது சுட்டாரின தண்ணியோ :)
      நமக்கு கொதிக்கிற தண்ணி தெளிச்சித்தான் பழக்கம் :)

      Delete
  13. //வாத்தியார நெனச்சி
    வரப்பு மேல போகும் போது
    வாரறுந்த செருப்பு மேல பட்ட சேறு
    சட்டையில தெரிக்குது...//

    இந்தவரிகள் எனக்கு மிகவும் பிடித்தது நண்பரே... அருமை..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  14. Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  15. சிறப்போ சிறப்பு! அருமையான அவதானிப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

      Delete
  16. நல்ல வரிகள்... அருமை...

    நன்றி...
    tm4

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார் :)

      Delete
  17. கவிதையில் ஒரு விதை-அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

      Delete