சரோஜா : பிரேம்ஜியும் நானும்...

தலைப்பைப் பார்த்து சரோஜா படப்பிடிப்பின் போது எனக்கும் பிரேம்ஜியுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு + பிரச்சனை பற்றி எழுதப்போறன் என்னு நீங்க நினைச்சீங்கன்னா அந்த நினைப்பு நிஜமாகிறத்துக்கு ப்ரே பண்ணிக்கோங்க...


சரோஜா படம் பார்த்த எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் அதுல பிரேம்ஜியோட ரோல் எவ்வளவுக்கு முக்கியமா இருந்துதுன்னு. படம் மெகா ஹிட் ஆனதுக்கு காரணம் பிரேம்ஜியோட காமெடி என்னும் சொல்லப்பட்டிச்சு..

சரி இப்ப எதுக்கு சரோஜா படத்தோட விமர்சனம் என்னு தடியத்தூக்காதீங்கப்பா எனக்கு பைட் என்னால ரொம்பப் பயம். இப்பிடித்தான் ஒருமுறை கணல் கண்ணன் என்கிட்ட பைட் செய்ய வந்து பிறகு ஒரு புள்ளப் பூச்சிய அநியாயமா நசுக்கிட்டோமே என்னு ராவு பகலா பீல் பண்ணினதும் பின்னாடி எனக்கிட்ட மன்னிப்புக் கேட்டது எல்லாம் தனிக் கதை அதை நீங்க அடிச்சுக் கேட்டாலும்  இவடத்த நான் சொல்ல மாட்டேன்... (எல்லாத்தையுமே சொல்லிட்டு ஒன்னுமே சொல்லாத மாதிரி முழிக்கிற முழியப்பாரு :P)

சரி விசயத்துக்கு வாரேன்

சரோஜா படத்துல (மறுபடியுமா?) பிரேம்ஜி எந்தப் பொண்ணப் பார்த்தாலும் அந்தப் பொண்ணச் சுத்தி ஒரு தேவதையின் கூட்டமொன்னு வந்து பாடலொன்று போகும். இதே மாதிரி ஒரு சீன் தூம் 2 படத்துலயும் உதேய் சோப்ரா வுக்கும் கொடுக்கப் பட்டிருக்கும். ஒரு அழகான பொண்ணக் கண்டா அந்தப் பொண்ணோட கல்யாணமாகி பின்னாடி குழந்தை குடும்பம் என்னு கனவுலகத்துல மிதப்பாரு.

அச்சச்சோ ஓப்பனிங் சீன் நீண்ண்ண்ண்டு போச்சே.......

இப்பிடித்தான் எனக்கும் எல்லாமுமே வருகுது இப்ப பேஸ் புக்குல ஒரு பொண்ணோட ப்ரண்டு ரிகுவஸ்ட்டப் பார்த்தா பிரம்ஜீயா மாறிடுறன். அது பேக் ஐடியா இல்ல வேற என்னமுமா என்னு ஒரு நிமிசம் கூட எனக்குள்ள இருக்கிற பிரேம்ஜி யோசிக்க மாட்டேங்கிறாரு.

எங்க குடும்பம் கொஞ்சம் பணக்காரக் குடும்பமா.......... (என்ன இந்த இழுவ இழுக்கிற) அச்சச்சோ உண்மைய சொல்லிட்டேனே :( சீச்ச்ச்....சீ இதெல்லாம் உண்மை இல்லீங்க யாரும் கத்தியோட  நைட்டுக்கு வந்து என்ன கிட்ணா பண்ணத் தேவையில்ல இதெல்லாம் நிஜமாவே பொய்யுங்க........அதையும் மீறி வந்தீங்கன்னா என்னால உங்கள காப்பாத்த முடியாது அதையும் சொல்லிப்போட்டேன்... இந்த மேட்டர் ரொம்ப டெரரா இருக்கிறதால இதுல நான் சொல்ல வந்தத சொல்லாமலே எஸ் ஆகிடுறேன்.......


ஒரு முறை என் போனுக்கு ஹாய் என்னு ஒரு எஸ் எம் எஸ் வந்தது. புது நம்பர்ல இருந்து வந்ததா உடேனே என்னோட பிரேம்ஜி உஷாரானாரு நான் கொஞ்சம் கொன்ரோல் பண்ணிக்கச் சொல்லிட்டு யாருப்பா நீ என்னு பதில் எஸ் எம் எஸ் அனுபினேனா..... பார்ட்டி உஷாராகிட்டு ஒரு பொண்ணோட பெயர சொல்லி நான் இவரு உங்கள எனக்குத் தெரியும் அப்பிடின்னு அடுத்த எஸ் எம் எஸ் அனுப்பிச்சு....

இந்த தடவே பிரேம்ஜீயோட சேர்ந்து உதேய் சோப்ராவும் உஷாராகிட்டாரு... நான் விடல்ல அன்னைக்கு நைட்டு பீச்சுக்குப் போனோமா எல்லாரும் இருக்கிறப்ப அந்த நம்பருக்கு ஒரு கோல் போட்டேன் நம்ம பார்ட்டியுக்குள்ளே அது ரிங் ஆகிச்சு ... பார்த்தீங்களா பாவிப் பயலுகள் நம்மளுக்கே ஆப்பு வைக்கப் பாக்கிறானுகள்.

இப்பிடித்தாங்க ஒருமுறை ரோட்டுல போயிட்டு இருக்கும் போது ஒரு அழகான வடிவான வணப்பான ....... பொண்னு என்னையப் பார்த்து சிரிச்சிச்சு. உடனே எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த உதேய் சோப்ரா எந்திரிச்சிட்டாரு (நாங்க ரொம்ப மரியாதையான பெமிலியாக்கும் வசன முடிவுல ரு தான் போடுவோம்). எங்க இருக்கிறோம் என்ன செய்யிறோம் என்னு கூட சிந்திக்காம அவர் பாட்டுக்கு சீன கிரியேட் பண்ணிக்கொண்டு போயிக்கொண்டே இருந்தாரு எனக்கும் அது புடிச்சிருந்ததா நானும் அவர டிஸ்ராப் பண்ணல்ல அவர் பாட்டுக்கே விட்டுட்டேன்....


திடீர்னு ஒரு சவுண்டு அட மொள்ளமாரி பேண்டு ஜிப்ப போட்டுட்டு போடா என்னு கேட்டிச்சு அப்பதான் சுய நினைவுக்கு வந்தேன். உடனே கீழ பார்த்தேனா உண்மையாவே பேண்டு ஜிப்பு போடல்லீங்க.... அப்பதான் என் மர மண்டைக்கு புரிஞ்சிது அந்தப் பொண்ணு நாம ஜிப்பு போடாதத பார்த்துத்தான் சிரிச்சிருக்கான்னு.......

இதுதாங்க என் பிரச்சனை என்னத்தப் பார்த்தாலும் ப்ரேம்ஜியும் உதேய் சோப்ராவும் விடமாட்டேங்கராங்க என்ன ரொம்ப பாடா படுத்துராங்க எங்க ஏரியாவுல எனக்கு பேய் புடிச்சிருக்கின்னு ஒரு புரளிய வேற ஏரியா சின்னப் பயலுகள் கிளப்பிவிட்டானுகள்... (அவனுகள்ளய புடுங்கி திண்ணா விடுவானுகளா தேடித் தேடி ஆப்பு வைக்கிறானுகள் )


என் பிரச்சனைய யாருக்கிட்ட சொல்லுறதென்றே புரியல்ல... அம்மாக்கிட்ட சொல்லப் போனா அவ அகப்பையத் தூக்குறாவு. அப்பாக்கிட்ட சொல்லப் போனா மண்வெட்டியால ரெண்டு சாத்து சாத்தினா சரியா வரும் என்னு சொல்லுறாரு.....

எனக்கு யாராவது உதவி பண்ணுங்கப்பா தொடர்ந்தும் நான் பிரேம்ஜீய என்னோட வச்சிருக்கிறதா இல்லையா அப்பிடி வச்சிருக்கிறதென்றா அதுக்கு ஒரு நல்ல ஐடியாவுக் சொல்லித் தாங்க......

28 கருத்துரைகள்

இல்ல!.. இல்ல!.. இப்படியே மெயின்டையின் பண்ணுங்க. அப்பத்தான் நம்பள சுத்தி நிறைய பொண்ணுங்க ரவுண்ட் அடிப்பாங்க!(கனவுலதான்! ஹி! ஹி! ஹி!) இந்த சேம் பீலிங்க்ஸ் எங்கிட்டயும் இருக்குப்பா!

Reply

ஹாஹாஹாஹாஹா... என்ன சொல்ல, என்ன சொல்ல! இப்பவே கண்ணக்கட்டுதே:)))))

Reply

இந்த வயசுல இதெல்லாம் சகஜமப்பா!

Reply

இப்படி எல்லாம் நினைக்கலேன்னா தான் சம்திங்... சம்திங்... ராங்...

Reply

நல்லா கனவு கானுங்க! வாழ்த்துக்கள்!

Reply

பேசாம பிரேம்ஜிய தூக்கிட்டு அசின், ஹன்சிகான்னு யாரையாச்சு கூப்பிட்டு வச்சிக்கங்க. எல்லாம் சரியாகிடும். :)

Reply

நீங்க தான் அடுத்த இளைய ஆதீனமோ ? சும்மா டவுட்டு ...
வாலிப வயசு தல அப்படி தான் இருக்கும் .. என்சாய் ...

Reply

ஹா ஹா ஹா.........
நல்ல ஐடியா குடுங்குறீங்க பாஸ்

சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

ஐயையோ....
சீக்கிரம் டொக்டரிட்ட போயிடுங்க அப்புறம் எனக்கு சாபமிட்டுருவீங்க...:)

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

Reply

நீண்ட இடைவெளியின் பின்னான உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி கொண்டேன் ஐயா...
மீண்டுமொருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

எல்லாம் நீங்க அனுபவிச்சதுதானே நீங்க சொன்னா கேக்கத்தான் வேணும்

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

அப்போ உங்களுக்கும் அப்பிடித்தானா....இப்பவும் இருக்கா இல்ல ...:)
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

வாங்க சார் நீண்ட இடைவெளியின் பின் உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

இது சூப்பர் ஐடியாவா இருக்கே அடுத்த முறை அப்படித்தான் செய்ய வேணும்......
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

ஆஹா அந்த ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டீங்களா.....
அதுக்கெல்லாம் நம்மள நம்பக்கூடிய பக்தர்கள் வேணுமே......
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

நீங்க அவர மாதிரி ரொம்ப அழகா(!) இருப்பீங்களா?

Reply

பாஸ் இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.பேசாமல் அப்பாவுடன் மண்வெட்டியை தூக்கி கொண்டு அதிகாலையில் (கவனிக்க அதிகாலையில்) தோட்டத்துக்கு போங்க .பேசாமல் மண்வெட்டியால ஓங்கி ...........கால் பெரு விரலை வெட்டுங்க வாற வலியில பிரேம்ஜி ஆவது பிரேமானந்தா சுவாமியாவது நினைவுக்கு வந்தா பார்ப்போம்

Reply

நல்ல ...நல்ல...ரெம்ப நல்ல தகவல்

Reply

//இதுதாங்க என் பிரச்சனை என்னத்தப் பார்த்தாலும் ப்ரேம்ஜியும் உதேய் சோப்ராவும் விடமாட்டேங்கராங்க என்ன ரொம்ப பாடா படுத்துராங்க/////

ஹா..ஹா..ஹா... ஜிட்டு பேசாமல் இருவரையும் கொலை பண்ணிடுஞ்கோ:)))... ஐ மீன் உள்ளுக்குள் இருக்கும் மிருகத்தைக் கொன்றிடுங்கோ:).

Reply

//எனக்கு யாராவது உதவி பண்ணுங்கப்பா தொடர்ந்தும் நான் பிரேம்ஜீய என்னோட வச்சிருக்கிறதா இல்லையா //

வாணாம்... வாணாம்ம்ம்.. கொன்றிடுங்கோ:)

Reply

எனக்கு யாராவது உதவி பண்ணுங்கப்பா தொடர்ந்தும் நான் பிரேம்ஜீய என்னோட வச்சிருக்கிறதா இல்லையா
>
இருக்கட்டும் அப்போதான் பதிவு தேத்த முடியும்...,

Reply

ஹா ஹா ஹா !!!

செம நகைச்சுவை நண்பா , ரொம்ப ரசித்து சிரித்தேன் ,இந்த பதிவை பிரேம்ஜி படிச்சி பார்த்தாரு அவர் உங்க ரசிகனாயிடுவார்.:-))))))))))))))

Reply

அவர் அளவுக்கு இல்லாட்டியும் வடிவேல் அளவுக்காகவது அழகா இருக்கோமில்ல அது போதாதா......:)

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ......

Reply

அடியாத்தி கொலகாரக் கும்பலா இருக்குமோ
என்னா ஐடியாக்கள் சொல்லுதுகள் பாரு..............அதிகாலை என்ற வார்த்தை என் அகராதியிலே இல்ல...

அதுக்காக வேற அகராதிகள் பேர் சொல்லி வாங்கச் சொல்லிடாதீங்க அப்புறம் வம்பாப் போயிடும்.....

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

வாங்க சகோ....
வருகைக்கும் அழகான பின்ணூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

மறுபடியும் கொலையா ......
தாங்காது இந்தப் பூமி.......

ஆமா வலிக்கிற மாதிரி கொலை பண்ணவா இல்ல வேற மாதிரி பண்ணவா எனக்கு வலிக்கிறமாதிரி பண்ண மட்டும் தான் தெரியுமே :(

Reply

விடமாட்டாய்ங்க போலிருக்கே........
நான் ஏதோ ஒரு அவசரத்துல எனக்கிட்ட இருக்கிற இத்துநூண்டு கிட்னிய வச்சி வயித்துப் பொளப்புக்கு ஒரு பதிவு தேத்தினா...:0

நம்மள மாமியார் வீட்டுக்கு அனுப்பிறதிலே குறியா இருக்காங்களே......

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸ்

Reply

வாங்க வாங்க வாங்கிறத்துக்கு வாங்க........

இந்த ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு இந்த ஐடியாவ வச்சி இன்னும் நாலு பதிவ தேத்திக்குறேன்.....

வருகைக்கும் அழகான பிண்ணூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

Reply

ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........
அவ்வளவுக்கு நல்லாவா எழுதியிருக்கிறேன் :)

ஏதோ நம்மளால முடிஞ்சது அவ்வளவுதான் நண்பா...

முதல் முறையா வந்திருக்கிறீங்க அப்பிடியே கொஞ்சம் போல பிரியாணி கொண்டுவந்திருக்கிறேன் சாப்பிட்டிட்டு போங்க...

முதல் வருகை தொடர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

Post a Comment