மனிதனைப் போல எறும்புகள்...

அச்சச்சோ......... இன்னைக்கு ஞாயித்துக் கிழமையாச்சே இன்னைக்கு படம் காட்டியே தீரனுமே இல்லாட்டி சூசைட் பண்ணிக்குவேன் என்னு யாரோ ஒரு பேமாளி எனக்கு மொட்ட மெயில் அனுப்பியிருந்தானே....

யாரோட சாவுக்கும் நாம காரணமாகிடப் போடாது இந்த கொள்கையில நான் ஒத்த முடிவுல இருக்கிறேன்....
அதனால இன்னைக்கு ஊங்களுக்கு படம் காட்டியே தீருவேன் நீங்களும் பார்த்தே தீரனும்..

அதுக்கு முன்னாடி சீரியசா சில டயலொக்குகள்.....:)

எறும்புகள் பற்றி நம்மில் அறியாதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று கேட்டால் அதற்கு பதில் பெருமளவில் இல்லையென்றுதான் கிடைக்கும். நிழல் தேடி மரத்தின் கீழ் நின்றாலும் பழம் பறிக்க மரத்தில் ஏறினாலும் அங்கு எறும்புகளின் தாக்குதலை சந்தித்தேயாகவேண்டிய கட்டாய நிலை ஏனெனில் நாம் வாழ்வது வெப்பவலயத்தில்.

எறும்புகள் பெரும்பாலும் குளிர் நிறைந்த பிரதேசத்தில் வாழாது குறிப்பாக ஐஸ்லாந்து ,அந்தாட்டிக்கா , கிரீன்லாந்து போன்ற பிரதேசங்களில் எறும்புகள் இல்லையென்று ஒரு ப்ளாக்கில் படித்ததாய் ஞாபகம்.

உலகத்தில் ஏறத்தாள 22000 வகை எறும்புகள் இருக்கின்றதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த எறும்புகள் எப்போதும் கூட்டம் கூட்டமாகத்தான் வாழ்கின்றன. தாம் வாழும் இடங்களைப் பொருத்து குழுக்களில் உள்ளடங்கும் தனியன்களின் எண்ணிக்கையை சிறிய தொகையிலிருந்து பல மில்லியன் வரைக்கும் வகுத்துக் கொள்கின்றன.

இந்தக் குழுக்களில் இருக்கும் எறும்புகளில் சிலவற்றிற்கே இனப்பெறுக்க சக்தி இருக்கின்றது. இனப்பெருக்க சக்தி கொண்ட  பெண் தனியன்களை  அரசி (Queen)  யாகவும் இனப்பெருக்க சக்தி கொண்ட ஆண் தனியன்களை சோம்பேறிகள் (Drones) களாகவும் இனப்பெருக்க சக்தி அற்ற பெரும்பாண்மையான எறும்புகள் வேலையாட்கள் (Workers) மற்றும் போராளிகள் (Soldiers) ளாகவும் காணப்படுவார்கள். சுறுசுறுப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் எறும்புகளாக இந்த போராளி மற்றும் வேலையாட்கள் எறும்புகளே காணப்படுகின்றன. அரசியும் சோம்பேறி எறும்புகளும் தங்களது சந்ததிகளைப் பெருக்குவதிலேயே மட்டும் பங்குகொள்வார்களாம்.

கறையான்கள் உருவவியலில் எறும்புகள் போலக் காணப்படுவதால் அவற்றை வெள்ளை எறும்புகள் என அழைக்கின்றனர். ஆனால் உயிரின வகைப்பாட்டின் அடிப்படையில் கறையான்கள் எறும்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுகிறது.

எறும்புகளை அவற்றின் செயற்பாட்டை கொண்டு மனிதர்களோடு ஒப்பிடுகின்றனர். (இப்பதான் தலைப்புக்கே வந்திருக்கிறேன்)
சில எறும்புகளின் குணங்களை வைத்து அவற்றை சுள்ளெறும்பு என வகைப்படுத்துகின்றனர். இந்த சுள்ளெறும்புகள் பெறும்பாலும் அசைவ உண்ணிகளாகக் காணப்படும் இவைகள்தான் மனிதர்களைக் கடிக்கவும் செய்கின்றன.

சில எறும்புகள் மனிதனைக் கடிப்பதில்லை இவை சைவ உண்ணிகளாகக் காணப்படும். உருவளவில் சிறியதாகவும் கருமை நிறத்திலும் காணப்படும் இவ் எறும்புகளை சாமி எறும்புகள் என அழைக்கின்றார்கள்.

கருப்பாக பெறியதாக தெரியும் எறும்புகளை கட்டறெம்பு என அழைக்கின்றனர்.

உடம்பின் நடுப்பாகத்தில் இளஞ்சிவப்பு நிறமாகவும் மற்ற பாகங்கள் கரு நிறமாகவும் கடித்தால் கடுமையான வலி நீண்ட நேரமிருக்கும் எறும்புகளை சுலுக்கெறும்பு எனவும் அழைக்கின்றனர்.  

சப்ப்ப்ப்ப்ப்ப்பா.........எப்பிடியோ ஒரு மாதிரியா முடிச்சாச்சு

எவ்வளவு மேட்டர சொல்ல வேண்டியிருக்கு ..... இப்பவே மூச்சு வாங்குது

சரி சரி இப்பவே போஸ்ட்டு நீண்டு போச்சு கீழால படங்களை இணைச்சுள்ளேன் பார்த்து ரசியுங்கோ............ 
34 கருத்துரைகள்

படங்கள் மிகவும் அருமை...

எறும்புகளியிடமிருந்து இன்றைய மனிதர்கள் கற்றுக் கொள்ள விசயங்கள் நிறைய உள்ளன...

நன்றி...
tm1

Reply

மிகச்சிறந்த படங்களை அதன் தொடர்புடைய செய்திகளோடு வெளியிட்டமைக்கு எனது பாராட்டுக்கள் நண்பரே சிட்டுக்குருவி.. tm 2

Reply

அருமையான செய்திகளுடன் ரசிக்கும்படியான படங்களையும் இணைத்தமை அருமை!

Reply

பலவர்ணப் படங்களுடன் கட்டுரை அருமை.

Reply

மேலே உள்ள டயலாக்கும் சூப்பர் அதனையொத்த படங்களும் சூப்பர். அந்த மொட்ட கடுதாசி போட்டது யாருன்னு சொல்லுங்க நானே அவன தள்ளி விட்டு சாகடிசிடுறேன்...

Reply

ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா முடியல்ல:) அப்போ நாங்களெல்லாம் சுள்ளெறும்போ?:)).. அசைவம் உண்போராயிற்றே:)).

Reply

//அச்சச்சோ......... இன்னைக்கு ஞாயித்துக் கிழமையாச்சே இன்னைக்கு படம் காட்டியே தீரனுமே இல்லாட்டி சூசைட் பண்ணிக்குவேன் என்னு யாரோ ஒரு பேமாளி எனக்கு மொட்ட மெயில் அனுப்பியிருந்தானே....//

அப்போ அவர் இன்னும் உயிரோடயா இருக்கிறார்?:) சாக விட்டிருக்கலாமில்ல:)).. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:)

Reply

//யாரோட சாவுக்கும் நாம காரணமாகிடப் போடாது இந்த கொள்கையில நான் ஒத்த முடிவுல இருக்கிறேன்....//

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் ஜாமீஈஈஈஈஈஈ:) இதில ஒத்த முடிவெண்டால் என்ன?:)) அப்போ ரெட்டை முடிவெண்டும் இருக்கோ?:))...

இண்டைக்குப் பதில் சொல்லாட்டில்.. பருந்து வந்து தூக்கிடப்போகுது:)) ஐ மீன் ஜிட்டுவை:).

Reply

adengappa....

arumaiyaana padangal...

Reply


எறும்பு புத்துக்கை தலை வச்ச மாதிரி இருக்கு ...............ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் நண்பா.எறும்புகளில் மிக விசமானவையும் இருக்கு கூட்டமாக வந்து பெரிய விலங்குகளை தாக்கி கொல்லும் திறன் வாய்ந்தவை அவை என்றும் படித்ததாக நினைவு.நன்றி நண்பா பகிர்வுக்கு

Reply

அறியாத விஷயங்களை அறிந்து கொண்டேன்
படங்களுடன் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்

Reply

ஆத்தாடி.. வித்தியாசமான பகிர்வு குருவி.. வாழ்த்துகள். இவ்வளவு எறும்பு வகைகளா..?இருக்கும் இருக்கும்.. நம்ம வீட்டிலேயே, சக்கரைக்குள் ஒருவகை, சாப்பாட்டு மேஜையில் ஒருவகை, பூச்செடிகளில் ஒருவகை, என இன்னும் சொல்லலாம்..போய் ஆராய்கிறேன். :)

Reply

சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்
அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பரே

Reply

உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

Reply

உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

என்ன நண்பா கொலையெல்லாம் பண்ண தயாராகிட்டீங்க...
சீ பாவம் பொளச்சிப் போகட்டும் விட்டுடுங்க...
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

வாங்க பூஸ்......
அட உண்மையிலே நீங்க சுள்ளெரும்போ...
ரெண்டு மட்டன் பீஸ் பார்சல்.....

Reply

ஏ.....ஏ........ஏன் இந்த வெறி வடிவேல் வெறி
அந்தாளு சாகப்போடாது என்னுதானே படம் காட்டினேன் விடமாட்டீங்க போலிருக்கே

Reply

ஆங்.......
டங்கு சிலிப்பாகிட்டோ
ஒத்த முடிவெண்டா........ஒத்த முடிவுதான்
இப்பிடியும் எடுத்துக் கொள்ளலாமே
... தெளிவா இருக்கிறேன் என்னு...

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸ்

Reply

வாங்க நண்பா வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

நீங்க சொல்லுவதும் உண்மைதான் மாமிச உண்ணி எறும்புகளும் இருக்கத்தான் செய்யும்...

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

வாங்க சார்
உங்க வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி

Reply

உண்மைதான் வீட்டு எறும்புகளை மறந்தே போயிட்டேன்...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

பின்னூட்டப் பதில் போடும் கோடிங்கை எங்கேருந்து புடிச்சீங்க!!! நல்லாருக்கு, இப்போதுதான் பார்க்க அழகாகவும், தெளிவாவகவும் உள்ளது...

Reply

சிட்டுக்குருவி...


எறும்பைப் பற்றின விசயங்களை அறிந்து கொண்டேன்.

ஆனால்
இதே போன்று இருப்பது தான் தேனீக்களின் வாழ்க்கையும்.

பகிர்விற்கு நன்றி சிட்டுக்குருவி.

Reply

எப்படியே தேடிப் பிடித்தாகிவிட்டது அதைப் பற்றி பதிவிடுகிறேன் பொருத்திருங்கள் நண்பா

Reply

உண்மைதான் தேனீக்களிலும் நிறைய வகைகள் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

Reply

உங்கள் பதிவைப் பார்த்துவிட்டேன் நண்பா...

அருமையாக விவரித்துள்ளீர்கள்...

Reply

எறும்பு படங்கள் அத்தனையும் நல்லத் தேர்வு ...அருமை

Reply

சீரியஸான டயலாக்கும் சிந்திக்க வைத்த படங்களும் சிறப்பு.

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

Post a Comment