Looking For Anything Specific?

ads header

ஐயோ இப்பிடியும் ஒரு பொளப்பு தேவைதானாக்கும்...

சமூகத்தில் பிரபலங்களாக இருப்பவர்கள் தன்னுடைய ஒவ்வொரு செயற்பாட்டிலும் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 



சாதரண மனிதர்களை விட பிரபலங்களின் அசைவுகளில் சமூகம் விழிப்புடன் இருக்கின்றது. அவர்கள் விடக்கூடிய சிறிய தவறுகளையும் பெரியதொன்றாகக் கருதி இவரே இப்பிடிச் செய்யும் போது நாங்க செய்தாலென்ன என்ற ஒரு கருத்து சமூகத்தில் தோன்ற காரணமாகிவிடும்.

அவர் எந்த சூழ்நிலையில் அந்த தவறினை செய்தார் என்பதனை மக்கள் ஆராயும் வீதமும் மிகக் குறைவே. சமூகமும் ஊர் வம்பு பேசிப் பேசிப் பழக்கப்பட்டிருப்பதால் நாலு பேர் சந்திக்கும் இடத்தில் பிரதான பேச்சாக பிரபலத்தின் தவறே இருக்கும்.

அதனால்தான் நான் பிரபலமாவதை விரும்புவதில்லை.....(யாரும் வெளக்குமாறை தூக்காதீங்க) நானும் மனிதன் தான் என்னாலும் சிறிய தவறுகள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. மனிதன்  தவறுக்கும் மறதிக்கும் மத்தியில்தான் படைக்கப்பட்டுள்ளான்.

சில பிரபலங்கள் சந்தர்ப்ப சூழ்  நிலைகளினால் தவறுகளை செய்கின்றார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்று. இன்னும் சில பிரபலங்கள் தன்னுடைய மடமைத்தனத்தால்  தவறுகளை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் தான் அவர்கள் பற்றிய தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் ஆழமாக வேறூன்றி விடுகின்றது.

சரி இப்போ விடயத்திற்கு வருகிறேன் 

சம்பவம் கொஞ்சம் இன்ரஸ்ட்டிங்கா இருக்கனுமே எங்கிறத்துக்காக என்னோட கையால காலால ஏதாவது போட்டிருப்பேன். சுவையா இருக்கனும் எங்கிறத்துக்காக  அஜினமோட்டும் போட்டிருப்பேன் இதுகள யாரும் நோண்டிக்கொண்டு இருக்கப்படாது அப்புறம் எனக்கு சரியான கோவம் வந்திடும்

ஒரு ஊர்ல (என்னப்பா கதை சொல்லுறியா )இவர் மிகப்பெரிய பிரபலம் இல்லாவிட்டாலும் இருக்கக் கூடிய பிரபலங்களில் இவரும் ஒருத்தர் ஐம்பது வயதிருக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை. ஆனால் இவரைப் பார்ப்பவர்கள் யாரும் இவருக்கு ஐம்பது வயதென்று சொல்லமாட்டார்கள். அவ்வளவுக்கு இளமையாக இருப்பார்.

அரசாங்க தொழிலில் நல்ல பதவியில் இருக்கிறார். அண்மையில் பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான செயலமர்வு ஒன்றிற்கு சென்றிருந்தார்.

பொதுவாக இப்படிப்பட்ட செயலமர்வுகளில் ஆண்கள் பெண்கள் இருபாலாரும் கலந்து கொள்வார்கள். ஆனால் அன்றைய தினத்தில் ஆண்களின் வருகை வீதம் மிகக் குறைவாகவே இருந்தது.

இவரும் செயலமர்வினை ஆரம்பிப்பதற்காக தான் ஏற்கனவே தயார் செய்து பென்ரைவில் சேமித்து வைத்திருந்த பிரசண்டேசனை எடுப்பதற்காக அங்கே பொருத்தப்பட்டிருந்த கணனியில் பென்ரைவினைப் பொருத்தியுள்ளார். பொருத்தினதுதான் தாமதம் பென்ரை ஓட்டோ பிளே ஆகி அவருடைய பென் ரைவில் இருந்த வீடியோவெல்லாம் பொருத்தப் பட்டிருந்த பெரிய திரையில் பிளே ஆகிக் கொண்டிருந்தது.

இங்குதான் இவருக்கு எம கண்டம் ஆரம்பித்து விட்டது. அங்கே பிளேயானது சும்மா வீடியோ இல்லீங்க எல்லாமே பல்லானா வீடீயோக்கள் இவர் அதனை நிறுத்துவதற்குப் பட்ட பாடும் அவருடைய மூஞ்சியில் தெரிந்த டென்சனும். யப்பா அதை சொல்லுவதற்கு இவ்விடம் போதாது.

அங்கே இருந்த பெண்களெல்லாம் இவருடைய திருவிளையாடல் முடியுமட்டும் தொங்கிய தலையை நிமிர்த்தவேயில்லையாம்.

சரி சம்பவம் இப்படி நடந்து போச்சு... இவர் சும்மா இருந்திருக்கலாமில்ல   இதைப் பத்தி யாரிட்டயும் சொல்லிடாதீங்கோ என்னு ஒரு குண்டத் தூக்கிப் போட்டிருக்கிறார் .
யாரிட்டையும் சொல்லிடாதீங்க என்னு ஒரு விடயத்தைச் சொன்னா நாம வீடு போய் சேருவதுக்கு முதல்லே அது நம்ம வீட்ட போய் சேர்ந்திடும் என்கிற சமூக தொண்டை இவரு மறந்திட்டாரு போல... அப்பிடித்தான் அதும் நடந்து முடிஞ்சு போச்சு...

இது தற்செயலாக அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையில நடந்ததா அல்லது மடமைத்தனத்தினால் நடந்ததா என்பது பற்றிய உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கப்பா
சின்னதொரு மேட்டர இவடத்த சொல்லிக்கிறேன் அது என்னான்னா பென்ரைவ் பாவிக்கும் விடயத்தில் கொஞ்சம் அவதானமாக இருந்துக்கோங்கப்பா...
அவ்வளவுதான் நம்மளால முடிஞ்சது...
இன்னுமொரு சின்ன மேட்டர் நிறையப் பேரு நம்ம பதிவுலகிலையும்  பிரபலமா இருக்காங்க. அவங்க கருத்திடும் போதும் பதிவிடும் போதும் மிக அவதானமாக இருக்க வேண்டும் எங்கிறது என்னோட அடுத்த மேட்டர்...

ஒரு பிரபலத்தோட படத்தை இணைக்கனும் எங்கிறத்துக்காக எனக்குப் பிடித்த தலயோட படத்தை போட்டேன். தல  ரசிகர்கள் யாரும் கோவிச்சுக்கப்படாது

மேட்டர் தலையோட படத்தை இணைத்தத்துக்குப் பிறகு அது பற்றிய விமர்சனம் கிடைத்ததனால் அதனை நீக்கிவிட்டேன் அழகான முறையில் அதனை எடுத்துச் சொன்ன நண்பர்களுக்கு மிக்க நன்றி

(நண்பன் சொன்ன தகவல்)


Post a Comment

39 Comments

  1. //யாரிட்டையும் சொல்லிடாதீங்க என்னு ஒரு விடயத்தைச் சொன்னா நாம வீடு போய் சேருவதுக்கு முதல்லே அது நம்ம வீட்ட போய் சேர்ந்திடும் என்கிற சமூக தொண்டை இவரு மறந்திட்டாரு போல...//

    அருமையான எழுத்துநடை! மிகவும் ரசிக்க வைக்கிறது படைப்பு. சின்ன சம்பவத்தை சொல்லி அதன் உள்ளே தத்துவங்களை ஒளித்துவைத்திருக்கிறீர்கள்! அருமை!

    தலைப்பும், இடுகையின் முதல் வரிகளும், படமும் படத்தில் இருப்பவரை பற்றி தவறாக யோசிக்க வைக்கிறது. நமது சுவாரஸ்யத்திற்காக இன்னொருவரை தவறாக பயன்படுத்துவதாக எனக்கு படுகிறது. இது எனது தாழ்மையான கருத்து மட்டுமே! முடிந்தாலும் தாங்கள் விரும்பினாலும் வேறு படத்தை வைக்கலாமே! நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. உண்மைதாங்க...இப்படி நடக்க சாத்தியம் உண்டு..இவர்கள், இதெற்க்கென் தனியாக் ஒரு பென்ட்ரைவ் வைத்திருப்பது நல்லது.. எனக்கும் ஒரு அனுபவம் உண்டு...என்னோட சுப்பீரியர் அவரின் பென்ட்ரைவை தந்து எனது சிஸ்டத்தில் குறிப்பிட்ட ஃபைலை காப்பி பண்ண சொன்னார்...நான் அவரின் பென்ட்ரைவை..சிஸ்டத்தில் போட்டு செலக்ட்பண்ணிததுதான்...அய்யோ..பாலான பாலான் ஸ்டில்ஸ்...எனக்கு பக்குனு பயத்துல என்ன பண்றதுனு தோனலை...யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்தேன்..நிறைய பெண்கள் வேலைபார்க்கிறார்கள்...டக்குனு க்லோஸ் பண்றதுக்கூட சிறமமாகிவிடுகிறது.. ஏன் இதில் அதைஎல்லாம் ஸ்டோர் பண்ணியதுமட்டுமல்லாமல், ஓப்பன் ஹாலில், காப்பி பண்ண கொடுக்கிறார்கள்..

    இங்கு அவரின் கவனக்குறைவு...அவருக்கு தெரியும்தானே....

    ReplyDelete
  3. படத்தை மட்டும் மாற்றி விடுங்கள்...

    சிலர் தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு...

    நன்றி..tm1

    ReplyDelete
  4. இப்போது நீங்கள் இணைத்துள்ள படமே இடுகையின் பாதிவேலையை செய்துவிட்டது நண்பரே! நல்ல படத்தை இணைத்துள்ளீர்கள்! அருமை! தொடருங்கள்!

    ReplyDelete
  5. உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

    http://enrenrum16.blogspot.com/2012/10/blog-post_18.html

    ReplyDelete
  6. தல படம் தூக்கியாச்சு போல?

    ReplyDelete
  7. சாதரண மனிதர்களை விட பிரபலங்களின் அசைவுகளில் சமூகம் விழிப்புடன் இருக்கின்றது. அவர்கள் விடக்கூடிய சிறிய தவறுகளையும் பெரியதொன்றாகக் கருதி இவரே இப்பிடிச் செய்யும் போது நாங்க செய்தாலென்ன என்ற ஒரு கருத்து சமூகத்தில் தோன்ற காரணமாகிவிடும். அருமையான இடம் இது நண்பா.எமது சமூகத்தின் இன்னொரு பலவீனம் இது.ஒப்பீடுகள் செய்வதும்,இயலாமை என்று ஒதுங்கிக்கொள்வதும்,ம்ம்ம்ம் என்ன செய்வது இதுபோன்ற பதிவுகளை பார்த்தாவது திருந்தட்டும் நம்மவர்கள். மிகவும் எளிமையான எல்லோருக்கும் விளங்கிடக்கூடிய எழுத்துநடை.நன்றி நண்பனே பகிர்வுக்கு

    ReplyDelete
  8. ஏன்யா தல படத்த எடுத்தீங்க.?முன் யாக்கிறத முத்தண்ணா நீர்தான்யா..!

    ReplyDelete
  9. “மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில்தான் படைக்கப்பட்டுள்ளான்.“

    அருமையான வாசகம் சிட்டுக்குருவி.

    பாவம்... அவனும் மனிதன் தானே... என்று மன்னித்திடனும்...!!!

    ReplyDelete
  10. யோவ் எதுக்குயா எங்க தல கொனன் படத்தை போட்டீங்க...?
    -:)

    ReplyDelete

  11. யானைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மைதானே!

    ReplyDelete
  12. ஆமாம்! ப்ரபலம் என்பவரும் மனிதர்தானே! நம்ம சமூகம்தான் மாறனும்! ஆனா இப்ப எல்லாம் ஒன்னு தெரியுமா? நிறைய பேர் தப்பு செய்யுரதாலயே ப்ரபலமா ஆகிவிடுகிறார்கள்! ஆனாலும் நிறைய இடங்கள் பதிவில் அருமையாக நச்சென்று இருந்தது! பகிர்வுக்கு
    மிக்க நன்றி!
    த.ம 2

    ReplyDelete
  13. நீங்கள் சொல்வது சரிதான்

    ReplyDelete
  14. @ வே.சுப்ரமணியன்.

    அருமையான எழுத்துநடை! மிகவும் ரசிக்க வைக்கிறது படைப்பு. சின்ன சம்பவத்தை சொல்லி அதன் உள்ளே தத்துவங்களை ஒளித்துவைத்திருக்கிறீர்கள்! அருமை!
    ____________________________________________________

    சூடான முதல் வருகைக்கும் அழகாக ரசித்துப் படித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


    தலைப்பும், இடுகையின் முதல் வரிகளும், படமும் படத்தில் இருப்பவரை பற்றி தவறாக யோசிக்க வைக்கிறது
    _________________________________________________

    நிச்சயமாக உங்கள் ஆலோசனை சிந்திக்க வைக்கிறது
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    இப்போது நீங்கள் இணைத்துள்ள படமே இடுகையின் பாதிவேலையை செய்துவிட்டது நண்பரே! நல்ல படத்தை இணைத்துள்ளீர்கள்! அருமை! தொடருங்கள்!

    __________________________________________

    மிக்க நன்றி நண்பரே அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் ஆலோசனைக்கும் மீண்டுமொருமுறை நன்றி

    ReplyDelete
  15. @ Anonymous

    உண்மைதாங்க...இப்படி நடக்க சாத்தியம் உண்டு..இவர்கள், இதெற்க்கென் தனியாக் ஒரு பென்ட்ரைவ் வைத்திருப்பது நல்லது..
    _______________________________________________________

    வாங்க முகம் தெரியாத உறவே உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. இந்தப் பதிவின் மூலம் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி
    நல்லதொரு கருத்தைச் சொல்லிச் சென்றமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. @ திண்டுக்கல் தனபாலன்

    படத்தை மட்டும் மாற்றி விடுங்கள்...

    சிலர் தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு...

    நன்றி..tm1
    ___________________________________________________

    உங்கள் ஆலோசனை சிந்திக்க வைத்துவிட்டது அதன் படி செய்து விட்டேன்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  17. @ enrenrum16

    உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்
    _____________________________________________

    ஐயை யோ.
    இது என்ன கொடுமையிது...
    வருகிறேன் உங்கள் தளம் வந்து என்ன விடயமென்று பார்க்கிறேன்
    வருகைக்கும் கருத்திட்டுச் சென்றமைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. @ ஹாரி.R

    தல படம் தூக்கியாச்சு போல?
    ___________________________________________

    ஆமாம் நண்பா தூக்கியாச்சு
    எங்க கிட்னியவும் கொஞ்சப் பேரு வேலை செய்ய வச்சிட்டாங்க

    ReplyDelete
  19. @ நெற்கொழுதாசன்

    அருமையான இடம் இது நண்பா.எமது சமூகத்தின் இன்னொரு பலவீனம் இது.ஒப்பீடுகள் செய்வதும்,இயலாமை என்று ஒதுங்கிக்கொள்வதும்,ம்ம்ம்ம் என்ன செய்வது இதுபோன்ற பதிவுகளை பார்த்தாவது திருந்தட்டும் நம்மவர்கள். மிகவும் எளிமையான எல்லோருக்கும் விளங்கிடக்கூடிய எழுத்துநடை.நன்றி நண்பனே பகிர்வுக்கு
    _________________________________________________

    வாங்க நண்பரே உங்கள் அழகிய பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது
    உங்கள் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. @ காட்டான்

    ஏன்யா தல படத்த எடுத்தீங்க.?முன் யாக்கிறத முத்தண்ணா நீர்தான்யா..!
    ___________________________________________________

    வாங்க மாம்ஸ்
    நமக்கும் சண்டைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது எதுக்கு வம்புல போயி தானாவே விழுந்துக்கிறது அதுதான் தூக்கிட்டேன்

    இடைவெளியின் பின்னான வருகை மகிழ்ச்சியளிக்கிறது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. @ அருணா செல்வம்

    “மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில்தான் படைக்கப்பட்டுள்ளான்.“

    அருமையான வாசகம் சிட்டுக்குருவி.
    ________________________________________________

    எல்லாம் உங்களப் பார்த்து படிச்சிக்கிட்டதுதான்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றிங்க

    ReplyDelete
  22. @ ரெவெரி

    யோவ் எதுக்குயா எங்க தல கொனன் படத்தை போட்டீங்க...?
    -:)
    ___________________________________________

    யாருய்யா இது ஏற்கனவே ஒரு தல புகைப்படத்த போட்டுத்தான் இந்தப் பிரச்சனை
    பிரச்சனையில இருந்து தப்பத்தான் இந்த படத்த போட்டேன் இந்தாளுக்கும் இங்க ரசிகர்கள் இருப்பாங்க என்று எனக்கு தெரியாமப் போச்சே....

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  23. @ புலவர் சா இராமாநுசம்

    யானைக்கும் அடி சறுக்கும் என்பது உண்மைதானே!
    ______________________________________________

    உங்கள் பின்னூட்டம் கண்து மகிழ்ச்சியளிக்கிறது ஐயா
    உண்மைதான் ஆனால் அடி சருக்கும் எனத் தெரிந்துகொண்டு பயணிப்பது மடமைதானே

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  24. @ சுடர்விழி

    ஆமாம்! ப்ரபலம் என்பவரும் மனிதர்தானே! நம்ம சமூகம்தான் மாறனும்! ஆனா இப்ப எல்லாம் ஒன்னு தெரியுமா? நிறைய பேர் தப்பு செய்யுரதாலயே ப்ரபலமா ஆகிவிடுகிறார்கள்! ஆனாலும் நிறைய இடங்கள் பதிவில் அருமையாக நச்சென்று இருந்தது! பகிர்வுக்கு
    மிக்க நன்றி!
    _______________________________________________

    உங்கள் வருகை கண்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் மகிழ்வேன்...
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. @ துரைடேனியல்

    Interesting!
    ________________________________

    உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  26. @ குட்டன்

    நீங்கள் சொல்வது சரிதான்
    _______________________________________________

    வாங்க குட்டரே
    உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. அவதானம் மிகமுக்கியம் பிரபல்யமானவர்களுக்கு !நீங்கள் சொல்லுவது சரிதான்!

    ReplyDelete
  28. அந்த கதை செம அட்டகாசம் தலைவரே ...
    எப்படி எல்லாம் அவரின் மானம் கப்பலேருகிறது ...
    சரி சரி எல்லோரும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தா எப்பிரச்சினையும் வராதுல்ல...

    ReplyDelete
  29. பிரபலம் ஆனாலே ப்ராப்லம் தான்...

    ReplyDelete
  30. ஆஹா.. ரசிக்கப் பண்ணிட்டீங்க ஜிட்டு.. உங்கட எழுத்து நடையால...

    ReplyDelete
  31. படிக்கையில் மிகவும் சுவாரசியமும் , கூடவே நகைச்சுவையாகவும் இருந்தது நண்பரே !! அழகான எழுத்து நடை மிகவும் அழகாயிருக்கிறது (அஜினமோட் போட்டதாலோ என்னவோ )

    ReplyDelete
  32. @ தனிமரம்

    அவதானம் மிகமுக்கியம் பிரபல்யமானவர்களுக்கு !நீங்கள் சொல்லுவது சரிதான்!
    ________________________________________-

    ஆமாம் சகோ
    வருகைக்கும் உங்கள் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  33. @ அரசன் சே

    அந்த கதை செம அட்டகாசம் தலைவரே ...
    எப்படி எல்லாம் அவரின் மானம் கப்பலேருகிறது ...
    சரி சரி எல்லோரும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தா எப்பிரச்சினையும் வராதுல்ல...
    _________________________________________________

    உண்மைதான் எச்சரிக்கை மிக முக்கியம் சார்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  34. @ Ayesha Farook

    பிரபலம் ஆனாலே ப்ராப்லம் தான்...
    ______________________________________

    ஆமா
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  35. @ athira

    ஆஹா.. ரசிக்கப் பண்ணிட்டீங்க ஜிட்டு.. உங்கட எழுத்து நடையால..
    _________________________________

    வாங்க பூஸ்
    வருகைக்கும் ரசித்துச் சென்றமைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  36. @ பிரியமான தோழி ஷியா

    படிக்கையில் மிகவும் சுவாரசியமும் , கூடவே நகைச்சுவையாகவும் இருந்தது நண்பரே !! அழகான எழுத்து நடை மிகவும் அழகாயிருக்கிறது (அஜினமோட் போட்டதாலோ என்னவோ )
    ______________________________________________

    வாங்க தோழி
    எல்லாம் வலையுலத்தில கற்றுக் கொண்டவைதான்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  37. Replies
    1. வாங்க நண்பரே உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

      Delete