Looking For Anything Specific?

ads header

நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் ஆப்புவைத்தவர்...

எந்த விதமான கவலையாக இருந்தாலும் கவலையுடன் நகைச்சுவை சேரும் போது அங்கே அந்தக் கவலை மறைக்கப்பட்டுவிடுகிறது. இந்த வகையான நகைச்சுவைத் தனமான பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகளைக்
கொண்டவர்கள் இறைவனின் உயர்ந்த படைப்பான மனித படைப்புக்களில் மிகவும் வித்தியாசமானவர்களே

சிரிக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் என்று கவிஞர்கள் கூட நகைச்சுவையை பெருமைப்படுத்தியும் வியந்தும் சொல்லியிருக்கிறார்கள்.இங்கு "கவிஞர்கள் கூட" என்று நான் கூறியதற்குக் காரணம் ஏறாளமான கவிஞர்கள் நகைச்சுவையான கவிகளைத் தருவதில்லை நிறையக் கவிகள்  சோகம் இழையோடியதாகவே இருக்கும், அப்படிப்பட்ட கவிஞர்களே நகைச்சுவையை பெருமைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள் என்றால் நகைச்சுவை என்பதனை நாம் ஆழ்ந்துதான் நோக்க வேண்டும்.

நகைச்சுவையென்பதும் ஒரு வகை கலைதான். எல்லோரிடத்திலும் நகைச்சுவைத் தன்மை சிறிதளவாவது இருக்கத்தான் செய்யும் விதிவிலக்காகவும் சிலர் இருக்கின்றனர். சிலர் தங்களின் அந்தஸ்த்தினை பிரதானமாக வைத்து தானும் நகைக்காமல் பிறரை நகைப்பூட்டாமலும் இருக்கின்றனர். இவர்களும் மனித பிறப்பில் வித்தியாசமாக பார்க்கப் பட வேண்டியவர்கள்தான்.

நொடிப்பொழுதில் ஒருவருடைய மன நிலையை மாற்றக் கூடிய சக்தி நகைச்சுவைக்குத்தான் இருக்கிறது. உறவுகள் நண்பர்கள் பகைவர்கள் என எல்லோரையும் ஆட்சி செய்வதுவும் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. ஆனால் எல்லோரையும் நகைக்கச் செய்வதென்பது சிரமமான விடயம்தான். அச் சிரமமான விடயத்தினையும்  தனது அங்க அசைவுகள் பேச்சுக்கள் மூலம் இலேசாக செய்யக்கூடிய தன்மை கொண்டவர்கள் அரிதாகவேயிருக்கிறார்கள்

குறிப்பாக சினிமாக்களில் நகைச்சுவை தாராளமாக இருக்கும் தமிழ் சினிமாவை பொருத்தவரையில் அங்கே வைகைப்புயல் வடிவேலுவிற்கு தனியிடம் இருக்கிறது அவரின் நகைச்சுவையான பேச்சுக்களும் உடலசைவுகளும் எந்தவொரு மனிதனையும் சிரிக்க வைத்துவிடும். எங்க வீட்டு சிறிசுகள் கூட தொலைக்காட்சியில் வடிவேலுவைப் பார்த்தவுடனேயே சிரித்துவிடுவார்கள்.

அதே போன்று ஹாலிவூட் உலகில் சார்ளி சப்ளின் மிஸ்டர் பீன் போன்றவர்களின் நகைச்சுவையான செயற்பாடுகள் எல்லோரையும் விரைவில் கவர்ந்துவிடும்.

சினிமாவில் நகைச்சுவை கலந்துவிடுவதென்பது பெரிதாக அலச வேண்டிய விடயமொன்றில்லை காரணம் நகைச்சுவையை வெளிப்படுத்துபவருக்கும் அதனை சினிமாவாக உருவாக்குபவர்களுக்கும் அங்கே பணம் கிடைக்கிறது. விளையாட்டோடு ஒப்பிடும் போது சினிமாவில் போட்டித்தன்மை குறைவே.

போட்டி நிறைந்த விளையாட்டில் நகைச்சுவையை வெளிப்படுத்துதல் என்பது மிக மிக சிரமமான விடயம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நகைச்சுவையை வெளிப்படுத்துபவர்களை சினிமாவில் நகைச்சுவையை வெளிப்படுத்துபவர்களுக்கு ஒரு படி மேலாகவே பார்க்க வேண்டும்.

மிகவும் சிரமான சூழ் நிலையிலும் கூட ரசிகர்களை தனது நகைச்சுவையான செயற்பாடுகள் மூலம் தன் பக்கம் ஈர்க்கும் ஒரு வீரனை (நடிகனை)த் தான் இந்தப் பதிவில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன்.எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரபலம்தான் இவர். ம்ம்ம்ம்ம்ம்ம் எல்லோரும் என்று சொல்வதைவிட கிரிக்கெட் பிரியர்கள் எல்லோருக்கும் என்று சொல்வது சிறந்தது என நினைக்கிறேன். அவர் யார் என்பதனையும் அவர் எப்படி ரசிகர்களை நகைச்சுவைப் படுத்துகிறார் என்பதனையும் கீழே இணைத்திருக்கும் வீடியோக்களைப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.






Post a Comment

41 Comments

  1. நகைச்சுவை சிறந்த மருந்து...

    கண்ணொளி பிறகு பார்க்கிறேன்... (கரண்ட் கட்)

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே ...
    நகைச்சுவை எப்போதும் இளமையாக வைத்து கொள்ளும் ..
    அதை உணராமல் பலர் அரக்க பறக்க ஓடுவது தான் வேடிக்கையாக இருக்கிறது .

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவைப் பண்பாளரின் காணொளிகளை அழகாக தொகுத்துள்ளீர்கள், வாழ்த்துகள்.

    வணக்கம்...

    ReplyDelete
  4. பக்க வடிவமைப்பு மிகவும் நன்று

    ReplyDelete
  5. ஹீ சகோ எனக்கு கிரீட்கட் மீது அதிக ஆர்வம் இல்லை!ம்ம் ஆனாலும் பந்து போட வருவதும் பின் தவறு என்று சொல்வதும் உள்குத்து போடுவது போல ரசித்து சிரித்தேன்!ஹீ சகோ!கிரீட்கட் மீளவும் பார்க்க வைத்த பதிவு சகோ இனியும் இப்படி கமடி பண்ணி என் நேரத்தை வீனாடித்தால் தனிமரம் வராது சகோ எனக்கு சோகம் தான் விதிவழி!ஹீ கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் !

    ReplyDelete
  6. நண்பனே ..நகைச்சுவை உணர்வுகளை தொலைக்கவில்லை மறைத்து வாழ பழகிவிட்டோம்.என்பதை மீள நினைவுறுத்தி விட்டிங்க.
    சுமைகுரைக்கும் ஒரு நல்ல மருந்து.ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் கிரிஸ் கைல் நண்பன்டா ...........விளையாட்டு வீரனுக்கு உரிய நகைசுவை
    வாழ்த்துக்கள் பதிவுக்கு

    ReplyDelete
  7. சிரிக்க வைத்த பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. கிறிஸ் கெய்ல் காமடி உண்மையிலேயே நகைச்சுவைதான். நகைச்சுவை பற்றிய தங்களது கருத்துக்கள் சரியே. அருமை.

    ReplyDelete
  9. நல்ல கருத்து நண்பா.. கண்டிப்பாக அனைவருக்கும் தேவையான.. இழந்துவிட்டு அல்ல தொலைத்து விட்டு தேடும் விடயங்களில் பிரதானமானது நகைச்சுவை.. படங்கள் இணைத்து இருக்கலாம்.. பந்தி அமைப்பு போல இருந்து இருக்காது.. மற்றபடி எழுத்துக்கள் கலக்க்கல்

    ReplyDelete
  10. உண்மை நண்பா... நகைச்சுவை உணர்வுடன் இருப்பவரை யாரும் பகைத்துக்கொள்வதில்லை. மேற்கிந்திய தீவு அணிகளை பொறுத்தவரை எவ்வளவு இக்கட்டான சூழலையும் நகைச்சுவயுடன் கையாள்வார்கள். வேறு எந்த அணியையும் இப்படி நான் கண்டதில்லை. முதல் படத்தில் நடந்தது போல் ஒருமுறை ஒரு போட்டியின் இறுதி ஆட்டத்தில் கர்ட்னி வால்ஷ் கடைசி பந்தில் பாகிஸ்தான் அணிவீரருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதுவே அவர்களுக்கு வினையாகி போனது. அப்துல் காதிர் அபூர்வமான ஒரு சிக்ஸர் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார். அந்த நிலைமையிலும் மேற்கிந்திய தீவு அணி சிரித்துக் கொண்டே இழப்பை எதிர்கொண்டது.

    ReplyDelete
  11. நல்லது நண்பரே !! இன்றைய அவசர காலகட்டத்துக்கு அவசியமான ஒன்றாக தான் இந்த நகைச்சுவை விளங்குகின்றது . நானும் உங்கள் வீட்டு சிறுசுகள் போல தான் வடிவேலுவை திரையில் கண்டதும் சிரித்து விடுவேன் அதுபோல் மிஸ்டர் பீன் உடையா நகைச்சுவை சந்தர்ப்பங்கள் வரும்போது நினைத்து நினைத்து சிரிப்பேன் உண்மை தான் அவர்களுக்கு அது கடவுளால் கொடுக்கப்பட்ட நன்கொடை என்றே சொல்லலாம்.

    ReplyDelete
  12. ஹா ஹா ... அருமையான பதிவு நண்பா. க்றிஸ் கெயிலை அவரின் அதிரடி ஆட்டத்திற்கு மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேன். இநத் 20-20 போட்டிகளின் பின் அவரின் “ஆட்டத்திற்கும்” ரசிகனாகிவிட்டேன்.

    ReplyDelete
  13. @ திண்டுக்கல் தனபாலன்

    நகைச்சுவை சிறந்த மருந்து...

    கண்ணொளி பிறகு பார்க்கிறேன்... (கரண்ட் கட்)
    ______________________________________________________

    முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்
    ஆறுதலாக வந்து பார்க்கவும் நான் கோவிச்சுக்க மாட்டேன்....:)

    ReplyDelete
  14. @ Seeni

    nalla pakirvu....

    haaa haaa
    ___________________________________________________

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  15. @ அரசன் சே

    உண்மைதான் நண்பரே ...
    நகைச்சுவை எப்போதும் இளமையாக வைத்து கொள்ளும் ..
    அதை உணராமல் பலர் அரக்க பறக்க ஓடுவது தான் வேடிக்கையாக இருக்கிறது
    ___________________________________________________

    நல்லதொரு கருத்தினைச் சொன்னீர்கள் சார்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. @ இரவின் புன்னகை

    நல்ல நகைச்சுவைப் பண்பாளரின் காணொளிகளை அழகாக தொகுத்துள்ளீர்கள், வாழ்த்துகள்.
    ___________________________________________________

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  17. @ முனைவர்.இரா.குணசீலன்

    நல்லதொரு பகிர்வு.
    ______________________________________________

    மிக்க நன்றி சார்
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    பக்க வடிவமைப்பு மிகவும் நன்று
    _____________________________________________

    மிக்க நன்றி சார்
    அடிக்கடியான உங்கள் வருகை சந்தோஷமளிக்கிறது
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  18. @ தனிமரம்

    சகோ எனக்கு சோகம் தான் விதிவழி!ஹீ கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் !
    _________________________________________________

    என்ன சகோ இப்படி சொல்லிப்போட்டீங்க.....
    எதுக்கு பழையதை எல்லாம் நினைத்துக் கொண்டு மூஞ்சியை உம்முன்னு வச்சிருக்கனும் வாழ்க்கையில எல்லாம் ஏற்படும் தான் அதுக்காகத்தான் இறைவன் மறதியைப் படைத்துள்ளான்...
    அதிகமான வலிதரும் விடயங்களைக் கூட சிலர் கொஞ்ச நாளின் பின் மறந்து விடுகின்றனர் வாழ்வு என்பது மிகவும் சிக்கல்வாய்ந்ததுதான் அதனை சந்தோஷமாக வைத்திருப்பவந்தான் சிறந்த மனிதனாக முடியும்.......

    வலிதரக் கூடிய விடயங்களை விட்டுத் தள்ளுங்கள் புது மனிதனாக மறுபிறப்பெடுங்கள்
    எப்போது எதையுமோ சந்தோஷமாகவும் நல்லண்ணம் கொண்டதாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்..
    பதிவில் உங்களுடைய நேரம் வீணாகியிருந்தால் அதற்கு என்னை மன்னித்துவிடுங்கள்.......

    நான் உங்களை விடச் சிறியவன் என்றே நினைக்கிறேன் இதை ஒரு அட்வைஸ் என்று நினைக்க வேண்டாம் சிறியதொரு எண்ணப்பகிர்வுதான் இது...

    வருகைக்கும் அழகாக எண்ணத்தை வெளிப்படுத்திச் சென்றமைக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  19. @ நெற்கொழுதாசன்

    நண்பனே ..நகைச்சுவை உணர்வுகளை தொலைக்கவில்லை மறைத்து வாழ பழகிவிட்டோம்.
    ___________________________________________________

    மேலே தனிமரம் சகோவுக்க்கு சொன்னதையே உங்களிடமும் சொல்கிறேன்

    வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  20. @ ராஜி

    சிரிக்க வைத்த பதிவு. பகிர்வுக்கு நன்றி
    _______________________________________________

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. @ துரைடேனியல்

    கிறிஸ் கெய்ல் காமடி உண்மையிலேயே நகைச்சுவைதான். நகைச்சுவை பற்றிய தங்களது கருத்துக்கள் சரியே. அருமை.
    _________________________________________________

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் சார்...
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  22. @ ஹாரி பாட்டர்

    படங்கள் இணைத்து இருக்கலாம்.. பந்தி அமைப்பு போல இருந்து இருக்காது.. மற்றபடி எழுத்துக்கள் கலக்க்கல்
    _______________________________________________

    உண்மைதான் நண்பா படம் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இதுதான் என்னுடைய அதிக வீடியோ கொண்ட பதிவும் கூட பதிவின் நீளம் கருதித்தான் படம் இணைக்கவில்லை...

    நல்லதொரு ஆலோசனை சொல்லிச் சென்றமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  23. @ முத்து குமரன்

    உண்மை நண்பா... நகைச்சுவை உணர்வுடன் இருப்பவரை யாரும் பகைத்துக்கொள்வதில்லை.
    _____________________________________________________

    உண்மை சார் நானும் கர்ட்னி வால்ஷ் பற்றிய செய்திகள் கேட்டுள்ளேன் ஒருமுறை ஒரு வீரரை 99 இல் ஆட்டமிழக்க சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை அவர் செய்யாமல் அவரை 100 ஓட்டங்கள் எடுக்க வைத்து பின்னர் ஆட்டமிழக்கச் செய்ததாகவும் கேள்விப்பட்டுள்ளேன்
    விளையாட்டில் இப்படி நல்லுள்ளம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் இருந்தார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  24. @ பிரியமான தோழி ஷியா

    நல்லது நண்பரே !! இன்றைய அவசர காலகட்டத்துக்கு அவசியமான ஒன்றாக தான் இந்த நகைச்சுவை விளங்குகின்றது
    _____________________________________

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் தொடர் வருகை இன்னும் சந்தோஷமளிக்கிறது....

    வருகைக்குக் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. @ ஹாலிவுட்ரசிகன்

    ஹா ஹா ... அருமையான பதிவு நண்பா. க்றிஸ் கெயிலை அவரின் அதிரடி ஆட்டத்திற்கு மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேன். இநத் 20-20 போட்டிகளின் பின் அவரின் “ஆட்டத்திற்கும்” ரசிகனாகிவிட்டேன்.
    _________________________________________________

    உண்மைதான் நண்பா கெயிலின் ஆட்டங்கள் இரண்டும் சூப்பர்தான் நானும் அவர்களின் ரசிகனாகிவிட்டேன்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  26. உண்மை சகோதரரே

    ReplyDelete

  27. வணக்கம்!

    ஈா்க்கும் வண்ணம் இன்னுரையை
    எழுதும் சிட்டே! இவ்வுலகில்
    யார்க்கும் வாய்க்க நகைச்சுவையை
    இங்கே ஈந்து பறக்கின்றாய்!
    சோ்க்கும் இடுகை அத்தனையும்
    செம்மைத் தமிழின் வளமென்பேன்!
    பார்க்கும் கண்கள் குளிர்ந்திடவே
    பாட்டில் பதிவைப் படைத்தனனே

    மின்வலையைக் குறித்துச் சில ஐயங்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்
    தொலை்பேசி எண்களை அறிய தரவும். kambane2007@yahoo.fr

    ReplyDelete
  28. ஆடையில்லாதன் அரை மனிதன் என்பார்கள்.
    ஆனால் நகைச்சுவை உணர்வு இல்லாதன்
    மனிதனே இல்லை என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
    சூப்பர் பதிவு சிட்டுக்குருவி.

    ReplyDelete
  29. //நொடிப்பொழுதில் ஒருவருடைய மன நிலையை மாற்றக் கூடிய சக்தி நகைச்சுவைக்குத்தான் இருக்கிறது.//

    சரியாக சொன்னீர்கள் !

    ReplyDelete
  30. ஒரு குழந்தையிடம் கோபமாகப் பாருங்கள். சின்ன சிரிப்பில் நம் மனதை மாற்றும் திறன் அதனிடம் பார்க்கலாம்.

    ReplyDelete
  31. நகைச்சுவை பற்றி ரொம்ப விபரமாத்தான் சொல்லியிருக்கிறீங்க... அனைத்துமே உண்மைதான்.. சிரிக்கத் தெரிந்தால்தான் மனிதன் என்று பெயர்:).

    ReplyDelete
  32. @ Mohan P

    உண்மை சகோதரரே
    ______________________________________

    உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  33. கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்


    வணக்கம்!

    ஈா்க்கும் வண்ணம் இன்னுரையை
    எழுதும் சிட்டே! இவ்வுலகில்
    யார்க்கும் வாய்க்க நகைச்சுவையை
    இங்கே ஈந்து பறக்கின்றாய்!
    சோ்க்கும் இடுகை அத்தனையும்
    செம்மைத் தமிழின் வளமென்பேன்!
    பார்க்கும் கண்கள் குளிர்ந்திடவே
    பாட்டில் பதிவைப் படைத்தனனே

    மின்வலையைக் குறித்துச் சில ஐயங்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்
    தொலை்பேசி எண்களை அறிய தரவும். kambane2007@yahoo.fr
    ___________________________________________

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா உடனேயே நீங்கள் எழுதும் கவிதைகளைப் பார்க்கும் பொது வியந்து போகிறேன் உங்கள் தமிழ்ப் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்
    உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேண் பாருங்கள்

    ReplyDelete
  34. @ குட்டன்

    ஒரு புதிய பார்வை
    ______________________________________________

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி குட்டரே

    ReplyDelete
  35. @ அருணா செல்வம்

    ஆடையில்லாதன் அரை மனிதன் என்பார்கள்.
    ஆனால் நகைச்சுவை உணர்வு இல்லாதன்
    மனிதனே இல்லை என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
    சூப்பர் பதிவு சிட்டுக்குருவி.
    _______________________________________________

    உண்மைதான் அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  36. @ கலாகுமரன்

    //நொடிப்பொழுதில் ஒருவருடைய மன நிலையை மாற்றக் கூடிய சக்தி நகைச்சுவைக்குத்தான் இருக்கிறது.//

    சரியாக சொன்னீர்கள் !
    ______________________________________________

    மிக்க நன்றி சார்
    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    கலாகுமரன்October 15, 2012 5:46 PM

    ஒரு குழந்தையிடம் கோபமாகப் பாருங்கள். சின்ன சிரிப்பில் நம் மனதை மாற்றும் திறன் அதனிடம் பார்க்கலாம்.
    _____________________________________

    உண்மைதான் மழலைகளின் குரும்பில் மகிழாதவர் யார்தான்
    உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
    உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்

    ReplyDelete
  37. @ athira

    நகைச்சுவை பற்றி ரொம்ப விபரமாத்தான் சொல்லியிருக்கிறீங்க... அனைத்துமே உண்மைதான்.. சிரிக்கத் தெரிந்தால்தான் மனிதன் என்று பெயர்:).
    ________________________________________________________
    வாங்க பூஸார்
    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  38. நல்ல நகைசுவை பதிவு...நடிகர் என்று அறிமுகப்படுத்திய விதம அருமை

    ReplyDelete