Looking For Anything Specific?

ads header

எதேர்ச்சையாய் மனனமிட்டவை...!



ஆசையாய் உறவுகொள்ள 
அழைக்கிறாள்
அரசனையே ஆளுபவளாம் 
தூக்கமாது
ஏழாம் வகுப்பில் எட்டாவது 
மாடியில் வாத்தியார் சொல்ல
 வாய்பிளந்து கேட்டுள்ளேன்
உறவுகள் வலியைத்தான் கொடுக்குமாம்


ஏழாம் வகுப்பில் ஏட்டில் எழுதியதில்
ஏதும் நினைவிலில்லை
எதேர்ச்சையாய் மனமிட்ட
"உறவுகள் வலியைக் கொடுக்கும்"
வரியைத் தவிர

வலிகளை வைத்திருக்க என்
இதயத்தில் இடமில்லை எனச் சொல்லி
இதயத்தை இடமாற்றியவள்
இரக்கமின்றி தூக்கியெறிந்து
மனனமிட்ட வரிகளை
புதுப்பித்துச் சென்றதையும்
ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்

யார் இவள்...?
அரசனை ஆண்டாலென்ன...
அக்கினியை சுவைத்தாலென்ன..
என்னோடு உறவுகொள்ள 
எப்படி வந்தது ஆசையிவளுக்கு 
என்றுமில்லாததாய்...

வலிகளை நேசிப்பவன் நானில்லை
வந்தவரெல்லாம் உறவுகொள்ள
வாய்ப்புத் தேடுபவனும் நானில்லை

வலியறியாமல் உறவு வைத்து
உறவுகள் புதுப்பித்துத் தருவதாய்
வாக்குறுதியும் வழங்கி எனை
கட்டிலோடு தூக்கிச் செல்ல
வருவார்கள் சிலபேர் அதுவரை
விழித்திருப்பேன் உறவுகள் 
எனை தீண்டாமல்...



Post a Comment

43 Comments

  1. மிகவும் அருமையான ஆழமான கருத்துக்கள் பொதிந்த கவிதை இது !

    ReplyDelete
  2. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    /// கட்டிலோடு தூக்கிச் செல்ல
    வருவார்கள் சிலபேர் அதுவரை
    விழித்திருப்பேன் உறவுகள்
    எனை தீண்டாமல்... /// ?

    ReplyDelete
  3. ஆழ்த்த சிந்தனை!அதன் வெளிப்பாடே இக் கவிதை மிகவும் அருமை!

    ReplyDelete
  4. வலிகளினூடு கவி வரிகள். அருமை நண்பரே.

    ReplyDelete
  5. ஒவ்வொரு வரிகளும் கனமாகத்தான் இருக்கின்றன .ஒருதடவை வாசித்தபோதே பதியும் அளவுக்கு ஆழமாகவும் இருக்கின்றன .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. //வலிகளை வைத்திருக்க என்
    இதயத்தில் இடமில்லை எனச் சொல்லி
    இதயத்தை இடமாற்றியவள்
    இரக்கமின்றி தூக்கியெறிந்து
    மனனமிட்ட வரிகளை
    புதுப்பித்துச் சென்றதையும்
    ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்//
    nice

    ReplyDelete
  7. இது கலக்கல் வாழ்த்துக்கள் சிட்டு.. புரிஞ்சு வாசிக்கணும்

    ReplyDelete
  8. அருமையான சிந்தனைக் கவிதை

    ReplyDelete
  9. விழித்திருப்பேன் உறவுகள்
    எனை தீண்டாமல்...
    >>
    உறவுகளால் நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் உறவுகள் இல்லாம நாம வாழ்ந்திட முடியாதே!

    ReplyDelete
  10. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..

    ReplyDelete
  11. வலிகளை நேசிப்பவன் நானில்லை
    வந்தவரெல்லாம் உறவுகொள்ள
    வாய்ப்புத் தேடுபவனும் நானில்லை..

    அற்புதமான வரிகள்.

    ReplyDelete
  12. வலிகளை வைத்திருக்க என்
    இதயத்தில் இடமில்லை எனச் சொல்லி
    இதயத்தை இடமாற்றியவள்
    இரக்கமின்றி தூக்கியெறிந்து
    மனனமிட்ட வரிகளை
    புதுப்பித்துச் சென்றதையும்
    ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்....

    அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.

    ReplyDelete
  13. கவிதை கனதியானது.வலிகளை நேசிப்பவன் நான் இல்லை பிடித்த வரி சகோ!

    ReplyDelete
  14. கைபேசியில் பின்னூட்டம் போடும் வசதி ஐபோன் மூலம் உங்கள் வலையில் இல்லை சகோ !ம்ம் முகநூலில் எல்லாநேரமும் முகம் காட்ட முடியாது தனிமரம் தனியாள்!ம்ம் புரியும் தானே சகோ!நன்றி!

    ReplyDelete
  15. உருக்கமான வரிகள் நண்பா. ஏன் இப்படி உருக்கம் நண்பா...

    ReplyDelete
  16. அழுத்தமாக அமைந்த வரிகள்,, தொடர்ந்து தங்களின் அனைத்து ஆக்கங்களுமே சிறப்பாக அமைந்து வருகிறது.. தொடருங்கள்,,

    ReplyDelete
  17. அருமையான ஆழமான கருத்துக்கள் தொடருங்கள்,,

    ReplyDelete
  18. //இதயத்தை இடமாற்றியவள்
    இரக்கமின்றி தூக்கியெறிந்து
    மனனமிட்ட வரிகளை
    புதுப்பித்துச் சென்றதையும்
    ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்//

    மீண்டும் வலி தந்த வரிகள். உங்கள் சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அழகாக இருக்கு, வித்தியாசமாக இருக்கு, ஆனா சிலவரிகள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கு... நான் இலக்கணத்தில கொஞ்சம் வீக்கூஊஊஊ:).. முடித்த விதம் அருமை.

    சொல்ல மறந்துட்டேன்ன்ன்:)... வாழ்த்துக்கள் ஜிட்டு.

    ReplyDelete
  20. இக்பால் செல்வன்

    மிகவும் அருமையான ஆழமான கருத்துக்கள் பொதிந்த கவிதை இது !
    _____________________________________________________

    தங்கள் சூடான முதல் வருகைக்கும் அழகன பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பரே பதில் பின்னூட்டமிட அதிக நாட்கள் எடுத்துவிட்டது

    ReplyDelete
  21. @ Seeni

    urukkamaana varikal....
    __________________________________________________

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  22. @ திண்டுக்கல் தனபாலன்

    வித்தியாசமான சிந்தனை வரிகள்...
    ___________________________________________________

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  23. @ புலவர் சா இராமாநுசம்

    ஆழ்த்த சிந்தனை!அதன் வெளிப்பாடே இக் கவிதை மிகவும் அருமை!
    ___________________________________________________

    தொடர்ச்சியான உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  24. @ Muhunthan Rajadurai

    வலிகளினூடு கவி வரிகள். அருமை நண்பரே.
    _____________________________________________________

    உங்களுடைய முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பரே உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

    ReplyDelete
  25. @ roshaniee

    ஒவ்வொரு வரிகளும் கனமாகத்தான் இருக்கின்றன .ஒருதடவை வாசித்தபோதே பதியும் அளவுக்கு ஆழமாகவும் இருக்கின்றன .பகிர்வுக்கு நன்றி
    ____________________________________________________

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன் வ்ருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  26. @ ஹாரி பாட்டர்

    இது கலக்கல் வாழ்த்துக்கள் சிட்டு.. புரிஞ்சு வாசிக்கணும்
    ____________________________________________

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  27. @ குட்டன்

    அருமையான சிந்தனைக் கவிதை
    _______________________________________________

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி குட்டரே

    ReplyDelete
  28. @ ராஜி

    உறவுகளால் நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் உறவுகள் இல்லாம நாம வாழ்ந்திட முடியாதே!
    ____________________________________________________

    உன்மைத்தான் உறவுகளும் வேண்டும் அதற்கான எல்லா நேரமும் பிரச்சனைகள் + தொல்லைகள் தரும் உறவுகள் தேவைதானா என சிந்திக்கவும் செய்கிறது
    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
    ___________________________________________

    ஆமா நல்லதொரு கருத்து
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  29. @ Sasi Kala

    வலிகளை நேசிப்பவன் நானில்லை
    வந்தவரெல்லாம் உறவுகொள்ள
    வாய்ப்புத் தேடுபவனும் நானில்லை..

    அற்புதமான வரிகள்.
    ______________________________________________

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  30. @ அருணா செல்வம்

    அருமையான வரிகள்.
    வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.
    ___________________________________________

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  31. @ முத்தரசு (மனசாட்சி)

    உறவுகள்....ம்
    _______________________________________________

    பெயரை மாற்றி விட்டீர்கள் போல முத்தரசு அழகின் அரசு......
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

    ReplyDelete
  32. @ தனிமரம்

    கவிதை கனதியானது.வலிகளை நேசிப்பவன் நான் இல்லை பிடித்த வரி சகோ!
    ________________________________________________

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  33. @ தனிமரம்

    கைபேசியில் பின்னூட்டம் போடும் வசதி ஐபோன் மூலம் உங்கள் வலையில் இல்லை சகோ !ம்ம் முகநூலில் எல்லாநேரமும் முகம் காட்ட முடியாது தனிமரம் தனியாள்!ம்ம் புரியும் தானே சகோ!நன்றி!
    _____________________________________________________

    புரிந்து கொண்டேன் சகோ....
    ம்ம்ம்ம்ம் கைபேசி பின்னூட்ட வசதியினை என்னவென்று பார்க்கிறேன்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நண்றி சகோ

    ReplyDelete
  34. @ இரவின் புன்னகை

    உருக்கமான வரிகள் நண்பா. ஏன் இப்படி உருக்கம் நண்பா..
    ______________________________________________

    எல்லாம் சும்மா இருக்கும் போது எழுதினதுதான் நண்பா
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  35. @ தொழிற்களம் குழு

    அழுத்தமாக அமைந்த வரிகள்,, தொடர்ந்து தங்களின் அனைத்து ஆக்கங்களுமே சிறப்பாக அமைந்து வருகிறது.. தொடருங்கள்,,
    _____________________________________________________

    தொடர்ச்சியான உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  36. @ மாலதி

    அருமையான ஆழமான கருத்துக்கள் தொடருங்கள்,,
    ________________________________________________

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  37. @ முத்து குமரன்

    //இதயத்தை இடமாற்றியவள்
    இரக்கமின்றி தூக்கியெறிந்து
    மனனமிட்ட வரிகளை
    புதுப்பித்துச் சென்றதையும்
    ஞாபகத்தில் நிறுத்திக் கொள்கிறேன்//

    மீண்டும் வலி தந்த வரிகள். உங்கள் சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்
    _______________________________________________

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்.
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  38. @ தினபதிவு

    மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது
    _________________________________________________

    நிச்சயமான உங்கள் திரட்டியில் இணைந்துவிடுகிறேன் உங்களைப் போன்றவர்கள் தானே எங்களுக்கு வளம்
    வருகைக்கும் திரட்டியினை அறிமுகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  39. @ athira

    அழகாக இருக்கு, வித்தியாசமாக இருக்கு, ஆனா சிலவரிகள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கு... நான் இலக்கணத்தில கொஞ்சம் வீக்கூஊஊஊ:).. முடித்த விதம் அருமை.

    சொல்ல மறந்துட்டேன்ன்ன்:)... வாழ்த்துக்கள் ஜிட்டு.
    _________________________________________________

    ஐயோ இலக்கணம் அது இது வென்று புதுப் பிரச்சனையை உண்டாகிடாதீங்கோ ஏதோ நம்மளால முடிஞ்சது...அவ்வளவுதான்.

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸ்

    ReplyDelete
  40. நான் உங்களின் இந்த கவிதையை முன்பே படித்து விட்டேன். என் கணினியில் உள்ள கோளாறினால் என்னால் அன்று பதிவிட முடியவில்லை. நல்ல வரிகள்.. அருமை... ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த கவிதை.. தொடருங்கள்...

    ReplyDelete
  41. @ Ayesha Farook

    நான் உங்களின் இந்த கவிதையை முன்பே படித்து விட்டேன். என் கணினியில் உள்ள கோளாறினால் என்னால் அன்று பதிவிட முடியவில்லை. நல்ல வரிகள்.. அருமை... ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த கவிதை.. தொடருங்கள்...
    _______________________________________________

    கணனியின் கோளாரு சரிவந்த பின்னர் நிம்மதியாகவும் ஆறுதலாலவும் வந்து படித்துச் செல்லுங்கள்..:)
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete