பள்ளிக்குப் போகிறாள்...!


உசைன் பாய் கடையில
நாளைக்குக் காசு உம்மா தருவதாய்
சொல்லி கடனுக்கு வாங்கிய 
அஞ்சு ரூபா உஜாலா பக்கட்டை
தண்ணியில கரைச்சி...

அறுபது அடி கிணத்துல ஆறு தடவ
தண்ணியிறச்சி ஆயிசாவோடு சேர்ந்து
கழுவிய ஆறாம் வகுப்பு வெள்ளைச்
சட்டைக்குப் போட்டு அது
காயக் காத்திருந்து...

காலையில ஆறுமணிக்கெல்லாம்
கண்முழிச்சி காக்காய் போல 
தலை நனைச்சி வயித்துக்குள்ள
போட ஏதுமில்லாம வாரிக் கட்டிய
கொண்டையோட...

சுனங்கினால் சுழுக்கெடுக்கும்
வாத்தியார நெனச்சி
வரப்பு மேல போகும் போது
வாரறுந்த செருப்பு மேல பட்ட சேறு
சட்டையில தெரிக்குது...

ராத்திரியடிச்ச  ராட்ஷச மழைய
செல்லமாய்க் கடிந்து கொள்கிறாள்
எதிர்காலத்து பிரபலம் ஒருத்தி...  சரோஜா : பிரேம்ஜியும் நானும்...

தலைப்பைப் பார்த்து சரோஜா படப்பிடிப்பின் போது எனக்கும் பிரேம்ஜியுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு + பிரச்சனை பற்றி எழுதப்போறன் என்னு நீங்க நினைச்சீங்கன்னா அந்த நினைப்பு நிஜமாகிறத்துக்கு ப்ரே பண்ணிக்கோங்க...

Comment Reply வசதி இல்லையா ? கவலையை விடுங்கள்

அண்மையில் ப்ளாக்கரில் அறிமுகப் படுத்திருந்த புதிய வசதிதான் வாசகர்கள் இடும் கருத்துரைகளுக்கு இலகுவாக பதிலிடும் முறை. இந்த முறைகளை எப்படி தன்னுடைய வலைப்பதிவுகளில் இயங்கச் செய்வது என்பது பற்றி ப்ளாக் ஸ்பெசலிஸ்ட்டுகளான சசிகுமார் சார் போன்றோர் பதிவிட்டிருந்தார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே...

மனிதனைப் போல எறும்புகள்...

அச்சச்சோ......... இன்னைக்கு ஞாயித்துக் கிழமையாச்சே இன்னைக்கு படம் காட்டியே தீரனுமே இல்லாட்டி சூசைட் பண்ணிக்குவேன் என்னு யாரோ ஒரு பேமாளி எனக்கு மொட்ட மெயில் அனுப்பியிருந்தானே....

ஐயோ இப்பிடியும் ஒரு பொளப்பு தேவைதானாக்கும்...

சமூகத்தில் பிரபலங்களாக இருப்பவர்கள் தன்னுடைய ஒவ்வொரு செயற்பாட்டிலும் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

கருமை மேகமும் காதல் தோல்வியும்...!

விசாலமான புல் வெளி...
கருமை நிறத்திலான காலை நேர பனிமேகம் தான் அளவில்லா ஆசைகொண்ட புல்வெளியிடமிருந்து பிரிய மனமின்றி அழுதுகொண்டிருக்கிறது. தன் காதலின் ஆழத்தை வெளிப்படுத்த அழுது தீர்க்கிறது பனித்துளிகளை. 

நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் ஆப்புவைத்தவர்...

எந்த விதமான கவலையாக இருந்தாலும் கவலையுடன் நகைச்சுவை சேரும் போது அங்கே அந்தக் கவலை மறைக்கப்பட்டுவிடுகிறது. இந்த வகையான நகைச்சுவைத் தனமான பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகளைக்

எதேர்ச்சையாய் மனனமிட்டவை...!ஆசையாய் உறவுகொள்ள 
அழைக்கிறாள்
அரசனையே ஆளுபவளாம் 
தூக்கமாது
ஏழாம் வகுப்பில் எட்டாவது 
மாடியில் வாத்தியார் சொல்ல
 வாய்பிளந்து கேட்டுள்ளேன்
உறவுகள் வலியைத்தான் கொடுக்குமாம்