Looking For Anything Specific?

ads header

ராஜாக்கள்...!


ராஜாக்கள் மத்தியில்
நானும் ஒரு ராஜாவாய்...
சில பொழுதுகளில் என் பசியினைப்
போக்கிய ராஜாக்களும்  உண்டு


ராஜாக்களுக்கு கொள்ளை
அன்பு என் மீது...
எப்பொழுதும் என்னாலும் அவைகளை
பிரிய பிரியமில்லை

அவைகளின் விழியில் விழிநீர்
சில பொழுதுகளில் ...
எனக்காகத் தான் அவைகள்
அழுதனவோ தெரியாது...

அசதியால் இரவில் கூட தூங்கியது சொற்பம்
ஆனாலும் நான் பகலிலும் நித்திரை
செய்வதாக ராஜாக்களிடம் ஒரு கருத்து...
உண்மைதான் சில வேளை அவைகளுக்கு
புரியாமலும் இருக்கலாம் அது
பசி மயக்கத்தால் வந்த தூக்கமென்பது...

எங்கள் தெருவால் புது ஆடைகளுடன்
ஒரு கூட்டம்... நான் மட்டும்
அழுக்கினை சுமந்த கிழிசல் வேட்டியுடன்
ஏக்கத்தோடு அக் கூட்டத்தினை
பார்த்துக் கொண்டிருந்தேன்

இன்று மட்டும் என் நெஞ்சு கணத்தது
இராத் தூக்கத்தை போக்க
ராஜாக்களின் மடி தேடி இருப்பிடம்
வந்தேன் நேரத்தோடு...

அவைகளும் அங்கே நேரத்தோடு
வந்திருப்பதனை உணர்ந்தேன்
அவைகளின் இருப்புக்களும் பார்வைகளும்
என்றுமில்லாததாய் தோன்றியது எனக்கு

என்னைச் சூழ்ந்து கொண்ட ராஜாக்கள்
எனக்கு புதுவித ஆடையொன்றினை
அணிவித்தனர்
எதுவும் அறியாதவனாய் அவைகளை நோக்கினேன்
இன்று
மானிடர்களின் புதுவருடமாம் என சைகை
செய்தன ராஜாக்கள்...

என்னுள் இனம்புரியா சந்தோஷம்
நிச்சயம் அது இனம்புரியா சந்தோஷம் தான்
நான் வேறு இனமாக இருக்க என்
துக்கத்தைப் போக்கிய தெரு ராஜாக்களால்
எனக்குண்டானது இனம்புரியா சந்தோஷம் தான்.

மானுடன்கள் செய்யத் தவறியதை
மானுடனெனக்கு செய்திட்ட 
தெரு ராஜாக்கள் எனக்கு எப்பவுமே ரோஜாக்கள்தான்
அவைகளைக் கொஞ்சுவதிலும்
அவைகளிடன் கெஞ்சுவதிலும் எப்பவுமே
ராஜாவாய் நான் மட்டும்தான்
இன்னுமொரு மானுடனுக்கு வேண்டாம் இந்த
ராஜா வேஷம்... 






Post a Comment

30 Comments

  1. ராஜாவாய் நான் மட்டுமே வரிகள் அழவைத்து விட்டன.

    ReplyDelete
  2. பசியின் கொடுமையையும் ஆடம்பரத்தின் கூத்தினைனையும் அழகாய்ச்சொல்லி ஜீவராசியின் அன்பை மெச்சும் கவிதை அழகு சிட்டு.

    ReplyDelete
  3. முதல் படம் மனசை பிசையுது. கவிதையை படிக்கவே மனசு வரலை

    ReplyDelete
  4. இன்னுமொரு மானுடனுக்கு வேண்டாம் இந்த
    ராஜா வேஷம்...

    அழுத்தமாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  5. மானுடன்கள் செய்யத் தவறியதை
    மானுடனெனக்கு செய்திட்ட
    தெரு ராஜாக்கள் எனக்கு எப்பவுமே ரோஜாக்கள்தான்...

    சிட்டுக்குருவி... தெரு ராஜாக்கள் நன்றியுள்ளது தான்.
    ஆனாலும் அவைகளிடம் எனக்கு பயம் தான்.

    ReplyDelete


  6. மனிதம் தனிதனை விடு விலகிக்கொண்டே இருக்கிறது! துன்பம் தோய்ந்த வரிகள்!

    ReplyDelete
  7. வித்தியாசமான கவிதை. நன்றாக இருக்கு.

    ReplyDelete
  8. படிக்க மனதைக் கனக்க வைக்கிறது. பொருத்தமான படங்களும் கூடவே.... இதை ஜிட்டுவா எழுதியது?:))) ஆஆஆஆஆஆஆஆ எஸ்கேப்ப்ப்ப்ப்:).

    ReplyDelete
  9. நல்லா இருக்கு நண்பா வாழ்த்துக்கள்.. அழுத்தமாய் சிந்திக்கிறிங்க.. அடுத்த படியில் கண்டிப்பாக இன்னும் நிறைவாய் தாங்க..

    ReplyDelete
  10. நெஞ்சை கணக்கச்செய்யும் கவிதை!

    ReplyDelete
  11. தெருக்களின் ராஜா....நாயாரை உயர்த்திய கவிதை.வித்தியாசமானதும்கூட !

    ReplyDelete
  12. வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள். அடர்த்தியான கருத்துக்கள்.

    ReplyDelete
  13. @ திண்டுக்கல் தனபாலன்

    மனம் கனத்தது.
    /////////////////////////////

    முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  14. @ Sasi Kala

    ராஜாவாய் நான் மட்டுமே வரிகள் அழவைத்து விட்டன.

    //////////////////////////

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  15. @ தனிமரம்

    பசியின் கொடுமையையும் ஆடம்பரத்தின் கூத்தினைனையும் அழகாய்ச்சொல்லி ஜீவராசியின் அன்பை மெச்சும் கவிதை அழகு சிட்டு.
    ////////////////////////////////////////////////////

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நேசன் அண்ணா

    ReplyDelete
  16. @ ராஜி

    முதல் படம் மனசை பிசையுது. கவிதையை படிக்கவே மனசு வரலை
    ///////////////////////////////////

    ஐயோ அந்தளவுக்கா எழுதியிருக்கிறேன் ஏதோ நம்மளால முடிஞ்சது....
    எழுதினத மட்டும் படிக்காம போயிடாதீங்க
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா...
    அக்கா சரிதானே

    ReplyDelete
  17. @ முனைவர்.இரா.குணசீலன்

    இன்னுமொரு மானுடனுக்கு வேண்டாம் இந்த
    ராஜா வேஷம்...

    அழுத்தமாகச் சொன்னீர்கள்.
    //////////////////////////////////////////////////

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் சார்...
    அடிக்கடியான உங்கள் வருகையில் தான் உணர்கிறேன் நானும் வலையுலகில் இருப்பதனை
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  18. @ அருணா செல்வம்

    சிட்டுக்குருவி... தெரு ராஜாக்கள் நன்றியுள்ளது தான்.
    ஆனாலும் அவைகளிடம் எனக்கு பயம் தான்.
    ////////////////////////////////////////

    அவைகளிடம் நானும் அதிக பயம் கொண்டுள்ளவந்தான்..
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  19. @ புலவர் சா இராமாநுசம்

    மனிதம் தனிதனை விடு விலகிக்கொண்டே இருக்கிறது! துன்பம் தோய்ந்த வரிகள்!
    ////////////////////////////////////

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் ஐயா
    உங்கள் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. @ athira

    வித்தியாசமான கவிதை. நன்றாக இருக்கு.
    ////////////////

    மிக்க நன்றி அக்கா.....

    _____________________________________________________

    படிக்க மனதைக் கனக்க வைக்கிறது. பொருத்தமான படங்களும் கூடவே.... இதை ஜிட்டுவா எழுதியது?:))) ஆஆஆஆஆஆஆஆ எஸ்கேப்ப்ப்ப்ப்:).
    //////////////////////////

    பிடிடா பிடிடா....
    எஸ் ஆகுறத்துக்குள்ள பிடிச்சிடு என்னப் பார்த்து என்னா கேள்வியக் கேட்டுப்புட்டு போகுது
    விட்டுடாதே துறத்து ஹி ஹி ஹி

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பூஸ்

    ReplyDelete
  21. @ ஹாரி பாட்டர்

    நல்லா இருக்கு நண்பா வாழ்த்துக்கள்.. அழுத்தமாய் சிந்திக்கிறிங்க.. அடுத்த படியில் கண்டிப்பாக இன்னும் நிறைவாய் தாங்க..
    ////////////////////////////////////

    நிச்சயமாக உங்கள் மன்ம் நிறைந்த வாழ்த்தில் பிறக்கும் உற்சாகத்தில் நிறைவு காண முயற்சிக்கிறேன் நண்பா
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  22. @ வரலாற்று சுவடுகள்

    நெஞ்சை கணக்கச்செய்யும் கவிதை!
    /////////////////////////////////////

    உங்களின் தொடர்ச்சியான வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  23. @ ஹேமா

    தெருக்களின் ராஜா....நாயாரை உயர்த்திய கவிதை.வித்தியாசமானதும்கூட !
    ///////////////////////////////

    வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  24. @ T.N.MURALIDHARAN

    வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள். அடர்த்தியான கருத்துக்கள்.
    ///////////////////////////////

    வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  25. மனதில் ரணம் விதைக்கும் கவிதை...

    ReplyDelete
  26. ராஜாவின் வலியை வெளிபடுத்தியது அருமை

    ReplyDelete
  27. ராஜாவின் வலியை வெளிபடுத்தியது அருமை

    ReplyDelete
  28. @ இரவின் புன்னகை

    மனதில் ரணம் விதைக்கும் கவிதை...
    ////////////////////////////////////////////////
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  29. @ மாற்றுப்பார்வை

    ராஜாவின் வலியை வெளிபடுத்தியது அருமை
    /////////////////////////////////

    உங்களுடைய வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்
    முதல் வருகை என நினைக்கிறேன் உங்கள் வருகைக் தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்

    ReplyDelete