வாக்களித்தலின் உண்மை நிலை என்ன...?

இலங்கையில் இப்போது தேர்தல் காலமாக இருக்கின்றது. நாளை (சனிக்கிழமை) மூன்று மாகாண சபைகளுக்கான வாக்களிப்பு இடம்பெற இருக்கின்றது. எந்தவொரு கலவரங்களும் இல்லாமல் இந்த வாக்களிப்பு இடம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


இலங்கையைப் பொருத்தவரையில் இது மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாக இருக்கின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிர்கால இருப்பினைத் தீர்மானிக்கும் ஒரு களமாக இத் தேர்தல் அமைகின்றது. குறிப்பாக சிறுபாண்மையின மக்களின் ஆதரவு அரசுக்கு சார்பானதாக இருக்கின்றதா எனபதனையும் இத் தேர்தல் வாக்களிப்பின் மூலம் அரசாங்கம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சென்ற மாகாணசபைத் தேர்தலை விட இத் தேர்தலுக்கு ஜனாதிபதி அதிக கவனமெடுத்திருப்பது அவரின் அண்மைக்கால நடவைக்கை மூலமாக புலனாகின்றது. இம்முறை ஜனாதிபதி அதிமான இடங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் நேரடியாகத் தொடர்புபட்டிருக்கிறார். இதனை மையமாக வைத்து நாம் சிந்திக்கும் போது அரசாங்கத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இது அமையவிருக்கின்றது என்பது வெளிச்சமாகின்றது.

இது இப்படியிருக்க...

இப்போது இலங்கையில் தேர்தல் இடம்பெறவிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தமது வாக்கு அட்டைகளுடன் வாக்களிப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிற இந்த சந்தர்ப்பத்தில் இந்தப் பதிவினை நான் எழுதுவது அவசியமானதொன்றாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு வாக்களிப்பின் மூலம் நாம் ஒருவரை எமக்காக தெரிவு செய்கிறோம். அந்த தெரிவு செய்யப் படும் நபர் எப்படியிருக்க வேண்டும். எமது வாக்குகளில் பலம் என்ன ? நாம் வாக்களிக்கிறோம் என்றால் அதன் உண்மை அர்த்தம் (பொருள்) என்ன என்பது பற்றி நாம் இந்த சந்தர்ப்பத்தில் அறிந்திருப்பது அவசியமாகும்.

சமூகத்தில் அக்கறை கொண்ட பல சமூக சேவைகளை செய்கூடிய மக்களுக்கும் அவர்களின் உரிமைக்கும் குரல் கொடுக்கிற ஒருத்தரைத்தான் மக்கள் தெரிவு செய்வதற்கு விரும்புவார்கள். சில சந்தர்ப்பங்களில் மக்களின் நலன் விரும்பும் தலைவர்கள் மத்தியில் சுய நலத்திற்காக போராடும் தலைவர்களும் இருக்கின்றனர். இவர்களால் கட்சிகளில் வேட்வாளர்களாக நிறுத்தப்படுபவர்கள் நிச்சயமாக சமூக நலன் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புக்கள் குறைவு.ஒரு சிலர் இருக்கவும் செய்கின்றனர். ஆனால் அவர்களின் சமூகம் மீதான அக்கறை அவர்களின் சுயநல அக்கறையிலும் பார்க்க குறைவாகவே இருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு பலன் தரக்கூடிய தலைவரை தெரிவு செய்வது மக்களில் தலையாய கடைமையாக இருக்கின்றது. இந்த இடத்தில் மக்கள் தவறிழைப்பின் அது அவர்கள் சமூகத்துக் செய்யும் துரோகமாக இருக்கும்.

ஆகவே  எம் வாக்குகளைக் கொண்டு நாம் வாக்களிக்கும் நபரினை எங்களின் பிரதிநிதியாக அனுப்புகிறோம் / தெரிவு செய்கிறோம். அப்படிப்பட்ட பிரதிநிதியிடமிருந்தான மக்களுக்கான பின்னூட்டங்கள் மக்கள் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். அவரால் எடுக்கப்படும் தீர்மானங்களும், நடவடிக்கைகளும் மக்கள் சார்பானதாகவே இருக்க வேண்டும். தன்னிச்சையாக அவர் செயற்படுமிடத்து அவர் சமூக நலன் கொண்ட மக்களின் பிரதிநிதி என்ற தகுதியை இழக்கின்றார்.

ஆகவே எம் வாக்குகளின் மூலம் ஒருவரை பிரதிநிதியாக அனுப்புகிறோம் /தெரிவு செய்கிறோம் என்றால் அந்தப் பிரதிநிதியின் அனைத்து செயற்பாடுகளுக்கு நாமும் பொருப்பாகின்றோம். அவர் செய்யக் கூடிய அனைத்து செயற்பாடுகளிலும் எங்களின் பங்கும் இருக்கின்றது. அவர் நன்மையான ஒரு விடயத்தை செய்தால் அதற்குறிய நன்மையும் இறைவனிடத்தில் எமக்குக் கிடைக்கின்றது. மாற்றமாக ஒரு தீமையான விடயத்தை அவர் செய்தால் அதற்குறிய தீமையும் / தண்டனையும் இறைவனிடத்தில் வாக்களித்த எமக்கும் கிடைக்கின்றது.

எனவே தான் இவ்விடத்தில் எமக்கான பிரதிநிதி பற்றி நாம் மிகவும் நுணுக்கமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

வாக்களிக்கிறோம் என்பதின் மற்றுமொரு பொருள் தான் நாம் வாக்களிக்கும் நபர் சமூகத்துக்குப் பொருத்தமானவர் என்பது பற்றி சாட்சி கூறுகிறோம்.
நாம் சொல்லும் சாட்சி உண்மையானதாக சத்தியத்துக்கு உடன் பட்டதாக இருந்தால் அது பற்றி கவலைப் படத் தேவையில்லை. ஆனால் பொய்யான சாட்சியாக இருந்தால்...? பொய் சாட்சிக்கு உலகத்திலுள்ள  நீதிபதிகளாலே தண்டனைகள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பொய்ச் சாட்சி என்பது பாரிய ஒரு குற்றச் செயலாக அனைவராலும் கருதப்படுகிறது என்பது தெட்டத் தெளிவாகிறது.

உலக நீதிபதிகளாலே தண்டனை வழங்கப்படும் ஒரு குற்றமான செயலுக்கு இறைவனிடத்தில் எவ்வாறான தண்டனையிருக்கும் என்பது பற்றி இறை நம்பிக்கை கொண்டவர்கள் அவசியம் சிந்திக்க வேண்டும். மேலும் எமது சாட்சிகளினை பொய்யாக்கும் விதத்தில் நாம் தெரிவு செய்த பிரதிநிதி செயற்படுவாரேயானால் எதிர்காலத்தில் அப்படிப்பட்ட பிரதிநிதியினால் மன உளைச்சலுக்கு உள்ளாகுவதும் வாக்களித்த நாம் தான். பிரதிநிதி சமூக அக்கறை கொண்டவர் இல்லையெனில் சொகுசான வாழ்க்கையினை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். பின்னர் நாம் தெரிவு செய்த பிரதிநிதியினால் எந்த விதமான பலனுமில்லை என்று சந்திக்கு சந்தி கூறிக்கொண்டு திரிவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே தான் எமக்கான பலத்தினை உறுதிப்படுத்தும் ஒரு கேடயமாக விளங்கும் எம் வாக்குகளை நாம் மிகவும் பிரயோசனமான முறையில் பயன்படுத்துவது அவசியமாகும். ஆகவே எமது சாட்சி மற்றும் பிரதிநிதி விடயத்தில் நாம் அவசியம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. 

பலதரப்பட்ட வேட்பாளர்களால் கட்சிகளில் அவர்களின் இருப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக அவர்களிலிருந்து வெளியாகும் வார்த்தைகளை நம்பி இன்னுமின்னும் ஏமாறாமல் இருப்பதற்காக இன்றைய பொழுதிலிருந்தாவது வேட்பாளர்களின் உண்மை நிலை பற்றி உங்களுக்குள் நீங்கள் மிக நன்றாக அலசி சிறந்ததொரு முடிவினை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கைகளில் இருப்பது வெறும் வாக்குகளல்ல அதம் மூலம் நீங்கள் சாட்சி சொல்கிறீர்கள். ஆகவே உங்களின் சாட்சிகளை உண்மையானதாக ஆக்கிக் கொள்ளுங்கள் .


31 கருத்துரைகள்

நண்பா எனக்கு இது எனக்கு முதல் தடவை ஓட்டு போட வந்து இருக்கு.. நான் கூட பதிவு போட இருந்தன்.. ஆனாலும் உங்க கடமைய செய்திட்டிங்க..

யாரையும் நம்பவில்லை நண்பா.. எனது உரிமையை கடமையை மட்டுமே செய்ய போகிறேன்..

Reply

//உங்கள் கைகளில் இருப்பது வெறும் வாக்குகளல்ல அதம் மூலம் நீங்கள் சாட்சி சொல்கிறீர்கள். ஆகவே உங்களின் சாட்சிகளை உண்மையானதாக ஆக்கிக் கொள்ளுங்கள் .//
எந்நாட்டிலும் எத்தேர்தலிலும் எந்நாளும் பொருந்தும் மணி வாசகங்கள்.
த.ம.2

Reply

தங்கள் கருத்து சரிதான் நண்பரே...

ஆனால் தேர்தல் நேரங்களில் மக்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் அவர்களை மூளைச்சலவை செய்து அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்தை வெற்றியடைய செய்கிறார்கள்...

இலவச அறிவிப்புகள், பொய் அறிக்கைகள், ஓட்டுக்கு பணம், உண்மையாளன் போல் நடிக்காமல் மக்களிடம் ஓட்டுக்கேட்டால் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள்..

Reply

தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் முடிய வேண்டும் அதுவே என்னுடைய எண்ணம்...

Reply

என்னது ஜனாதிபதி பிரசாரம் எல்லாம் செய்வாரா.. அப்போ இந்தியாவுல தான் அவரு டம்மி பீசா

உங்கள் உரிமை உங்கள் குரல் ...உண்மை நண்பா

Replyதேர்தலில் கைகொள்ள வேண்டிய அறிவுரை மட்டுமல்ல நல்ல அறவுரையும் ஆகும்!
நன்று! நன்றி!

Reply

நிறைய தகவல்களை ஒரு சிறிய பதிவில் அழகாக பகிர்ந்திருப்பது சிறப்பு!

Reply

இன்று என் வலைப்பூவில் “சாமி எங்கே வரும்?-மீண்டும் ஒரு கவிதை
வந்து பார்த்துக் கருத்துச் சொல்லுங்களேன்!
மறக்காம ஓட்டும்!
http://kuttikkunjan.blogspot.in/2012/09/blog-post_7.html

Reply

வாக்காளர்கள் என்னமோ நல்ல எண்ணத்தில் தான் எப்பொழுதுமே வாக்களிக்கிறார்கள்.... வெற்றி பெறுபவர்களுக்குத் தான் எண்ணங்கள் மாறி விடுகிறது சிட்டுக்குருவி.

Reply

எது என்னவே நல்லவங்க ஆட்சிக்கு வந்தா சந்தோஷம்.....................

Reply

மக்கள் நல்லவர்களை தெரிவு செய்ய வேண்டும் ஊழலுக்கு ஒத்துழைக்காமல் இருக்க வேண்டும் அருமையான பதிவு சகோ!

Reply


உங்கள் கைகளில் இருப்பது வெறும் வாக்குகளல்ல அதம் மூலம் நீங்கள் சாட்சி சொல்கிறீர்கள். ஆகவே உங்களின் சாட்சிகளை உண்மையானதாக ஆக்கிக் கொள்ளுங்கள் //.

தெளிவூட்டும் அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Reply

நல்ல அறிவுரை குருவி

Reply

@ ஹாரி பாட்டர்

நண்பா எனக்கு இது எனக்கு முதல் தடவை ஓட்டு போட வந்து இருக்கு.. நான் கூட பதிவு போட இருந்தன்.. ஆனாலும் உங்க கடமைய செய்திட்டிங்க..

யாரையும் நம்பவில்லை நண்பா.. எனது உரிமையை கடமையை மட்டுமே செய்ய போகிறேன்.
////////////////////////////////////////////////////

நல்லதொரு தீர்மானம் நண்பா....
வாழ்த்துக்கள் முதல் ஓட்டு சரியான ஒரு தலைவரைத் தீர்மானிக்கட்டும்.....

சூடான முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ குட்டன்

எந்நாட்டிலும் எத்தேர்தலிலும் எந்நாளும் பொருந்தும் மணி வாசகங்கள்.
த.ம.2
////////////////////////////////////////

அழகான எண்ணத்தைப் பதிந்து சென்றமைக்கு மிக்க நன்றி குட்டரே...
வாக்களிப்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி உங்கள் தளம் நிச்சயமாக வருகிறேன்

Reply

@ கவிதை வீதி... // சௌந்தர் //

இலவச அறிவிப்புகள், பொய் அறிக்கைகள், ஓட்டுக்கு பணம், உண்மையாளன் போல் நடிக்காமல் மக்களிடம் ஓட்டுக்கேட்டால் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள்..
////////////////////////////////////////////

நல்லதொரு கருத்து சார் நிச்சயமாக போலி வார்த்தைகளை அரசியல் வாதிகாள் அள்ளி வீச்சாவிட்டால் அரசியல் புனிதமானதுதான்.

_____________________________________________________

தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் முடிய வேண்டும் அதுவே என்னுடைய எண்ணம்...

//////////////////////////////////////

உங்களுடைய எண்ணம் தான் என்னதும்..
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ சீனு

என்னது ஜனாதிபதி பிரசாரம் எல்லாம் செய்வாரா.. அப்போ இந்தியாவுல தான் அவரு டம்மி பீசா

உங்கள் உரிமை உங்கள் குரல் ...உண்மை நண்பா

////////////////////////////////////////////////

இங்க ஜானாதிபதிவும் பூட் வேர்க் செஞ்சாகனும்... ஏன்னா பெரும்பான்மைகள் அப்படிப்பட்ட அநியாயங்களை செய்திருக்கிறார்கள் அல்லவா...

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ புலவர் சா இராமாநுசம்

தேர்தலில் கைகொள்ள வேண்டிய அறிவுரை மட்டுமல்ல நல்ல அறவுரையும் ஆகும்!
நன்று! நன்றி!
///////////////////////////////////////

உங்களின் அழகான எண்ணப்பகிர்வுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

@ krishna ravi

நிறைய தகவல்களை ஒரு சிறிய பதிவில் அழகாக பகிர்ந்திருப்பது சிறப்பு!
///////////////////////////////////

அழகான எண்ணப்பகிர்வுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ AROUNA SELVAME

வாக்காளர்கள் என்னமோ நல்ல எண்ணத்தில் தான் எப்பொழுதுமே வாக்களிக்கிறார்கள்.... வெற்றி பெறுபவர்களுக்குத் தான் எண்ணங்கள் மாறி விடுகிறது சிட்டுக்குருவி.

///////////////////////////////////////////

நல்லணெண்ணத்தில் வாக்களிக்கும் வாக்களர்களிடம் போலியான வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறார்களே.. அதனை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய சிந்தனை

வருகைகும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

Reply

@ esther sabi

எது என்னவே நல்லவங்க ஆட்சிக்கு வந்தா சந்தோஷம்.....................

////////////////////////////////////

வருகைக்கும் அழகான எண்ணத்தைப் பதிந்து சென்ரமைக்கும் மிக்க நன்றி சகோ..
வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

@ தனிமரம்

மக்கள் நல்லவர்களை தெரிவு செய்ய வேண்டும் ஊழலுக்கு ஒத்துழைக்காமல் இருக்க வேண்டும் அருமையான பதிவு சகோ!
////////////////////////////////////////

நிச்சயமாக உங்கள் சிந்தனையுடன் ஒத்துப் போகிறேன்.. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ Ramani

தெளிவூட்டும் அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

//////////////////////////////////

அழகான எண்ணத்தைப் பதிந்து சென்றமைக்கும் வாக்களிப்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ மனசாட்சி™

நல்ல அறிவுரை குருவி
///////////////////////////////////

வருகைக்கும் அழகான எண்ணத்தைப் பதிந்து சென்றமைக்கும் மிக்க நன்றி பாஸ்

Reply

விரிவான அலசல் தோழரே...
வாக்கின் வலிமையை அறிந்தாலே அமைதியாய் அனைத்தும் நடந்தேறும் நன்றி

Reply

தேர்தல் பற்றிய தெளிவான ஆழமானதொரு பதிவு சிட்டு !

Reply

உங்கள் கையில் இருப்பது வெறும் வாக்கு அல்ல.
ஒரு தீக்குச்சி.
விளக்கேற்றுமோ, வீடெரிக்குமோ ... காலம் தான் முடிவு செய்யும்.

விடியட்டும் பொழுதுகள்

Reply

@ அரசன் சே

விரிவான அலசல் தோழரே...
வாக்கின் வலிமையை அறிந்தாலே அமைதியாய் அனைத்தும் நடந்தேறும் நன்றி

////////////////////////////////////////

முதல் வருகைக்கும் அழகான எண்ணப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்
உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

@ ஹேமா

தேர்தல் பற்றிய தெளிவான ஆழமானதொரு பதிவு சிட்டு !

//////////////////////////////////////

வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

@ சிவகுமாரன்

உங்கள் கையில் இருப்பது வெறும் வாக்கு அல்ல.
ஒரு தீக்குச்சி.
விளக்கேற்றுமோ, வீடெரிக்குமோ ... காலம் தான் முடிவு செய்யும்.

விடியட்டும் பொழுதுகள்

///////////////////////////////////////

அழகான எண்ணப் பகிர்வுக்கும் முதல் வருகைக்கும்
மிக்க நன்றி சார்
உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

Post a Comment