Looking For Anything Specific?

ads header

சிந்தனைகளை தோற்கடிக்கும் தேவைகள் !

இறைவனின் படைப்புக்களில் மிகவும் சிறந்த படைப்புத்தான் மனித இனம். என்னுடைய பதிவுகளில் அடிக்கடி இதனைக் கூறிக் கொள்கிறேன். இறைவனால் கொடுக்கப்பட்ட பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவுதான் மனிதனை ஏனைய படைப்புக்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.


இந்த ஆறாவது அறிவினை சிந்தனை அறிவு என்றும் சொல்லலாம். ஆறாவது அறிவினைக் கொண்டுத்தான் மனிதன் தனக்கு பொருந்தக் கூடிய விடயங்களைப் வகைப்படுத்தி நன்மை தரக்கூடியவைகளை அனுசரித்தும் அவ்வாறான நன்மைகளை மேலும் எவ்வகையான வழிகளில் அடைந்து கொள்ளலாம் என்றும் முயற்சித்துக் கொண்டு இருப்பதுடன் தீமைகளை விலக்கவும் செய்கிறான்.

சிந்திக்கக் கூடிய சக்தியை இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்ட மனிதனின் ஆரம்பகால சிந்தனைகள் குறைவாக இருந்ததனால் அவனது தேவைகளும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் பிறக்கக்கூடிய ஒவ்வொருவரும் சிறு வயது முதலே தமது தேவைகளை அடுக்கிக் கொண்டு செல்லக் கூடியவர்களாக இருக்கின்றனர். தேவை அதிகரித்துக் காணப்பட்டிருக்கிறது என்றால் மறுபுறம் மனிதன் சிந்திக்கும் ஆற்றல் அதிகரித்துக் காணப்படுகிறது என்று சொல்லுவதற்கு ஐயப்படத் தேவையில்லை.

அன்று ஆகாயத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த பறவையினைப் பார்த்து சிந்தித்த இரண்டு சகோதர்களின் வெளிப்பாடாகத்தான் இன்றைய ஆகாய விமானங்கள். சிந்தித்ததால் விமானத்தைக் கண்டு கொண்டான் விமானம் கண்டுகொள்ளப்பட்டதனால் அதன் தேவைகளும் இன்று அதிகரித்து விட்டன. ஆகவே இன்றைய பயணத்திற்கு அத்தியவசிய தேவையாக விளங்கும் விமானத்திற்கு அடித்தளமிட்டது இருவரின் சிந்தனை.

இப்படி சிந்தனைகளும் தேவைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாகக் காணப்படுகிறது.சொல்லப்போனால் தேவைக்கான உந்துசக்தி சிந்தனையாக இருக்கிறது. இந்த சிந்தனைத் திறன் மனிதனுக்கு விஷேடமாக இறைவனினால் கொடுக்கப்பட்டது.

இந்த சிந்தனைகளின் வெளிப்பாடான தேவைகளை பூர்த்தி செய்ய முற்படும் போது அதற்காக பயன்படுத்தப்படும் வளங்களின் அளவு தேவைகளோடு ஒப்பிடும் போது குறைவாகத்தான் காணப்படுகிறது. இதன் போதுதான் சிக்கனத்திற்காக அவசியம் ஏற்படுகின்றது. சிக்கனத்தின் முக்கியத்துவத்தினைக் கருத்தில் கொள்வதனால் இங்கு மாற்றுப்பயன்பாடு பிறக்கின்றது.

சிக்கனத்தின் அவசியத்தினால் இன்று மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய உற்பத்தி செய்யும் பொருட்களை பல தேவைகளுக்குப் பயன்படுத்தும் விதமாக உற்பத்தி செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறான். இருபதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் வளங்களின் பற்றாக்குறை தொடர்பான சிக்கல் பொருளியல் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்ததனால் அதற்கு தீர்வாக பல பிரதியீட்டுப் பொருட்களை குறைந்த வளப் பயன்பாட்டுடன் உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள்/ பயன்படுத்தினார்கள்.

இப்படி மாற்றுப் பயன்பாட்டுக்கு அல்லது  பல தேவை பயன்பாட்டுக்கு பொருட்களை உற்பத்தி செய்யும் போது பல உற்பத்திகள் மிகவும் பிரயோசனமிக்க தாக அமையும். சில பொருட்கள் சொதப்பிடும். அப்படியான சொதப்பல் உற்பத்திகளிலுள் எமக்குப் பிரயோசனம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவற்றில் நல்ல நகைச்சுவை கலந்திருக்கும். 

மனிதன் இப்படியான சொதப்பல் உற்பத்திகளை தரும்போது அவனுடைய சிந்தனைக்கான தேவையினை சில சந்தர்ப்பங்களில் பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது. இதன் போது சிந்தனைகள் தோல்வியைத் தழுவினாலும் அடுத்த சில உற்பத்திகளில் அந்த சிந்தனைக்கான தேவைகள் பூரணமாக கிடைக்கின்றன.

சிந்தனைகளை உரிய முறையில் வெளிப்படுத்தும் போது அவைகள் தோற்பதற்கான சாத்தியங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன.

என்னடா இவன் உற்பத்தி என்கிறான் மாற்றுப் பயன்பாடு என்கிறான் வளப் பற்றாக்குறை என்கிறான் என்றெல்லாம் யோசிக்கிறிகளா...? யோசிச்சிக் கொண்டே இருங்க..... நீங்க யோசிச்சா அதுக்கு நான் என்ன செய்யிறது..:)

இல்லப்பா சின்னதொரு மேட்டர் என்கிட்ட சிக்கிச்சு அத உங்க கிட்ட பகிந்துக்கிறத்துக்குத்தான் இந்த பூசி மொழுகுதல்...ஆமா மொழுகுதல் என்று தானே சொல்லுவாய்ங்க.... சரியா சொல்லியிருக்கிறோமா இல்ல சைசா சொல்லியிருக்கிறோமா புரியல்லப்பா.....:(

மனிசன் பல தேவைகளுக்காக உற்பத்தி செய்யும் பொருட்கள்ல செருப்பையும் பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம் என்னு மாத்தி யோசிச்சிருக்கிறாங்க... அதுகளெல்லாம் எப்பிடி இருக்குது என்னு கீழ போட்டிருக்கிறேன் பார்த்து ரசியுங்கோ....

படங்கள்ல கிளிக் பண்ணுங்கோ அது தா......னாகவே பெரிசா தெரியும் ...:)
 














 

Post a Comment

22 Comments

  1. புகைப்படங்கள் சிரிக்க வைத்தாலும்.... படைத்தவனின் கற்பனை திறனை எண்ணி வியக்கவும் வைக்கிறது!

    ReplyDelete
  2. உச்சக்கட்ட கற்பனை .. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. சிட்டுக்குருவி... நல்லா தான் பூசி மொழுவி இருக்கிறீர்கள்.
    படங்கள் “இப்படியெல்லாம் யோசிக்கிறார்களா...?“ என்ற வியப்பைக் கொடுக்கிறது.

    ReplyDelete
  4. நல்லா தான் சிட்டு மொளுகிரிங்க.. ஆமா அதுலயும் குழந்தைகள் போலயும் உருவாக்கி இருக்காங்களே பக்கிங்க..

    ReplyDelete
  5. என்ன ஐடியா?அதுக்காகக் குழந்தையைப் போட்டு மிதிக்கிற மாதிரி....!

    ReplyDelete
  6. நானும் என்னவோ எதோ என பதறி அடிச்சு பிடிச்சு மூளையை குவிச்சு வாசிச்சா (மூளை இருக்கா என்று எல்லாம் கேட்கப்படாது )
    செருப்புக்கு விளம்பரம் ..ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ இருந்தாலும் குட்டன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  7. படங்கள் சிந்திக்கவைக்கின்றது .

    ReplyDelete
  8. எப்பிடியெல்லாம் குண்டக்கா மண்டக்காவா சிந்திக்கிறாங்களப்பா !

    ReplyDelete
  9. கற்பனைக்கு எல்லை ஏதப்பா?? எம்புட்டு திறமைகளுடன் கலை நயத்துடன் சப்பல்கள்.

    சப்பலுக்கு இம்புட்டு முன்கதை

    ReplyDelete
  10. படங்கள் கலக்கல்...

    நன்றி...

    (எங்கேயிருந்து இந்த படங்கள் எல்லாம் கிடைக்குது...?)

    ReplyDelete
  11. எங்கேருந்து இப்படிப் பட்ட படங்களை புடிக்கிறீங்க குருவி... சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  12. @ வரலாற்று சுவடுகள்

    புகைப்படங்கள் சிரிக்க வைத்தாலும்.... படைத்தவனின் கற்பனை திறனை எண்ணி வியக்கவும் வைக்கிறது!

    /////////////////////////////////////////

    சூடான முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்.....

    ReplyDelete
  13. @ அரசன் சே

    உச்சக்கட்ட கற்பனை .. பகிர்வுக்கு நன்றி

    ///////////////////////

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  14. @ அருணா செல்வம்

    சிட்டுக்குருவி... நல்லா தான் பூசி மொழுவி இருக்கிறீர்கள்.
    படங்கள் “இப்படியெல்லாம் யோசிக்கிறார்களா...?“ என்ற வியப்பைக் கொடுக்கிறது.
    ////////////////////////////////////////////////

    வருகைக்கும் அழகான பூசி மொழுவுதலுக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  15. @ ஹாரி பாட்டர்

    நல்லா தான் சிட்டு மொளுகிரிங்க.. ஆமா அதுலயும் குழந்தைகள் போலயும் உருவாக்கி இருக்காங்களே பக்கிங்க..
    ///////////////////////////////////////////

    ஆமா இவங்க கற்பனைத் திறனுக்கு ஒரு விவஸ்த்தையே இல்லாமப் போச்சு நண்பா
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. @ குட்டன்

    என்ன ஐடியா?அதுக்காகக் குழந்தையைப் போட்டு மிதிக்கிற மாதிரி....!

    //////////////////////////////////////

    ஐயோ சீரியசா எடுக்காதங்க நண்பா நகைச்சுவை கண்னோட்டத்துல பாருங்க...
    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. @ நெற்கொழுதாசன்

    (மூளை இருக்கா என்று எல்லாம் கேட்கப்படாது )
    //////////////////////

    நாங்க எப்பவுமே உஷார் தான் எங்களுக்கு அது முன்னாடியே தெரிஞ்சு போச்சு

    ____________________________________________________
    செருப்புக்கு விளம்பரம் ..ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ இருந்தாலும் குட்டன் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

    ஹா ஹா.... விளம்பரமா ஆமா இல்ல புது ஐடியா ஒன்னு சொல்லித் தந்திருக்கிறீங்க..நானும் ஒரு செருப்புக் கம்பனி ஆரம்பிக்கலாம் என்னு இருக்கிறேன் உங்க ஐடியாவுல சிறப்பாக நடக்கிறத்துக்கு இதுல விளம்பரப்படுத்திடுறேன்..

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  18. @ தனிமரம்

    படங்கள் சிந்திக்கவைக்கின்றது .

    ///////////////////////////////

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  19. @ ஹேமா

    எப்பிடியெல்லாம் குண்டக்கா மண்டக்காவா சிந்திக்கிறாங்களப்பா !
    //////////////////////////////////////////////////////

    ஆமா குண்டக்க மண்டக்காவா அப்பிடியெண்டா என்ன..:(

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  20. @ மனசாட்சி™

    கற்பனைக்கு எல்லை ஏதப்பா?? எம்புட்டு திறமைகளுடன் கலை நயத்துடன் சப்பல்கள்.

    சப்பலுக்கு இம்புட்டு முன்கதை

    //////////////////////////////////////////////////

    இப்பவெல்லாம் முன் கதையோட சொன்னாத்தான் எல்லாத்தையும் அப்பிடியே நம்புறாய்ங்க பாஸ் அதான் இப்பிடி ஒரு பில்டப்பூ.......

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

    ReplyDelete
  21. @ திண்டுக்கல் தனபாலன்

    படங்கள் கலக்கல்...

    நன்றி...

    (எங்கேயிருந்து இந்த படங்கள் எல்லாம் கிடைக்குது...?)

    ///////////////////////////////////////////

    நாங்க அடைப்புக் குறியுக்குள்ள இருக்கிறதெல்லாம் வாசிக்கிறதில்ல சார்.....
    இருந்தும் உங்களுக்காக சொல்லுறேன்..
    எங்க எடுக்கிற என்கிற உண்மையச் சொன்னா எப்பிடி பதிவே தேத்திக்குறது...அதெல்லாம் இராணுவ ரகசியம்

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  22. @ இரவின் புன்னகை

    எங்கேருந்து இப்படிப் பட்ட படங்களை புடிக்கிறீங்க குருவி... சூப்பரா இருக்கு...

    //////////////////////////////////////

    அதெல்லாம் இராணுவ இரகசியம் நண்பா ..
    வருகைகும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete