தேவதையுடன் க(ழி)ளித்த பொழுதுகள்...

இவ்வளவு நாளும் இந்த சிட்டுக் குருவி வானத்திலயும் கொஞ்சம் போல தரையிலயும் பறந்து திரிஞ்சத நீங்க எல்லோரும் அறீவீர்கள் என்னு எனக்குத் தெரியும் ஏன்னா நீங்ககெல்லாம்
ரொம்ப..ரொம்ப ரொம்ப புத்தி சாலி என்னு நான் நினைச்சுக் கொண்டு இருக்கிறன் அந்த நினைப்புல மண்ண அள்ளி போட்டுக்குற மாதிரி நடந்திடாதீங்க...

என்னடா இப்பிடி ஒரு குதர்க்கமா கதைக்கிறான் என்று பார்க்கிறயளா...:( இன்னைக்கு ஞாயித்துக் கிழமையாயிற்றே அதனால தான் இப்பிடி வெறித்தனமாக பேச்சுக்கள வெளியாக்க வேண்டியிருக்கு... சோ நீங்க இதப் பத்தி பெரிசா கவலைப் படத் தேவையில்லை திங்கள் கிழமையாகிச்சென்றா அது தானாகவே சரியாகிடும்.

போன வாரம் ஞாயித்துக் கிழமை எங்கயாச்சும் போகலாமான்னு எல்லாருமா சேர்த்து ஒருத்தண்ட கால்ல நின்னு யோசிசுக்கொண்டு இருந்தோம்...
இங்க ஒரு மேட்டர சொல்லியாகனும் ஞாயித்துக் கிழமைதான் நாங்க வெளியில போற என்னு நீங்க தப்பா நினைச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்ல எங்களுக்கு எல்லா நாளும் ஞாயித்துக் கிழமைதான் என்பதை இவ்விடத்தில சந்தோஷமா அறிவிச்சுக்கிறேன்...

ஸ்பெஷலா ஞாயித்துக் கிழமை மட்டும் எங்கயாவது போறதென்றா கொஞ்சம் போல கிட்னிய யூஸ் பன்னிக்குவோம் அது ஏன்னா உலகத்துல எல்லோருமே ஞாயித்துக் கிழமை வெளியில போறத்துக்கு டீமா இருந்து யோசிப்பாங்களாம் என்னு கேள்விப்பட்டுடோம் அதனால தான் நாங்களும் அப்பிடி...

இவடத்த நாங்க நாங்க என்னு பேசுறீயே அப்பிடி நீங்க எத்தின பேர் இருக்கிறயள் என்று மட்டும் கேட்டுடாதீங்க அப்புறம் வம்பா போயிடும்...

சரி ரொம்ப கஷ்டப் பட்டு யோசிச்சு ஞாயித்துக் கிழமை பூரா கடலுக்குள்ளே இருப்போம் என்னு முடிவாகிச்சு... கடல்னா எனக்கு ரொம்ப பிரியம் பௌர்னமி இரவுகள்ல கடலுக்குள்ள கப்பல்லையோ இல்லாட்டி ஒரு சிறிய படகுலயோ போய் இருக்கனும்னு ரொம்ம நாள் ஆசை ஆனா அது இன்னமும் நிறைவேறினதா இல்ல இனிமேலும் நிறைவேறுமா என்னுகூட தெரியாது...

சரி சொந்தக் கத சோகக் கதையெல்லாம் இவ்விடத்துல அவசியமில்லை என்னு நினைக்குறேன்...

கடலுக்குள்ள போவோம்ன்னு முடிவெடுத்து ஞாயித்துக் கிழமை கடலுக்குப் பக்கத்தில போய் நாங்க எல்லாரும் நிண்டோமா... நிண்டோமா...நிண்டோமா... ஒரு அழகான கடல் தேவதை என்னுடைய அழகில மயங்கி அப்படியே என்னை கடலுக்குள்ள கிட்னப் பன்னிட்டுப் போயிட்டுது...

அது கிட்னப் பன்னிட்டுப் போகும் போது சினிமாவுல வாற ரவுடிங்க மாதிரி எனக்கு... டாம் டூம் டிஸ்யூம்... என்னு எல்லாம் அடிக்கெல்ல அதுக்குப் பதிலா அழகான காட்சிகளைக் காட்டிக் கொண்டு போனது அப்பிடிப் பார்த்த காட்சிகெல்ல ஒரு காட்சியத்தான் இன்னைக்கு உங்களோட பகிர்ந்துக்கப் போறன்... எல்லோரும் பார்த்து ரசியுங்கோ..

சரி கடலுக்குள்ள போன நான் எப்பிடி வெளில வந்தேன் என்னோட வந்த மத்தவங்க எல்லாம் என்ன ஆனாங்க என்னக் காணாம என்னவெல்லாம் பன்னினாங்க என்றதப் பத்தி விரிவா இன்னுமொரு நாளைக்குச் சொல்லுறேன்...

அதுவரைக்கும் நல்லா இருங்க அல்லது நாசமா....:0 இல்ல நல்லாவே இருங்க...

படங்களின் மீது கிளிக் செய்து நல்ல வடிவாப் பார்த்து ரசியுங்கோ.....

43 கருத்துரைகள்

ஓ ... இப்பல்லாம் கொஞ்சம் அழகாயிருந்தா உடனேயே கிட்னாவா?

Reply

பதிவை படிக்கிறதுக்கு முன்னால நல்லா இருந்தேன்..பதிவை படிச்ச பிறகு என் கிட்னி கலங்க்கிருஞ்சு! :D

Reply

padangal arputham!

maasha allaah!

Reply

நான் அழகிய படங்களை மட்டுமேபார்த்தேன் வேறு எந்த எழுத்துக்களும் என் கண்களுக்கு தெரியவில்லை.

Reply

அழகான படங்கள் மூஸா, உங்கள் ரசனை நல்லா இருக்கு, இதே மாதிரி நிறைய படங்களை சுட்டு சுட்டு எங்களுக்கு வழங்குவீராக

Reply

இவ்வளவு அழகழகான கடல்வாழ் உயிரினங்களை நான் இதுவரையில் பார்த்ததேயில்லை. அருமை.

Reply

அருமை சகோ கடலுக்குள்ள இறங்கி கலக்கிதிங்க மிகவும் அருமையான வண்ண வண்ண படங்கள் பார்க்க பார்க்க சந்தோசமாக இருந்தது நன்றி

Reply

படங்கள் கொள்ளை அழகு

Reply

சிட்டுக்குருவி...
ஞாயற்று கெழமையில நீங்க உங்க கிட்னிய யுஸ் பண்ணி இணையக் கடலுக்குள் போய் படங்கள் பார்த்து எடுப்பது தான் பொழுது போக்கா....?

(எனக்கும் அதே வேலை தான். ஆனால் என் கண்ணில் இதெல்லாம் கிடைக்கலையே... ஒரு சமயம் உங்க கூட வந்த தேவதையின் அருளாக இருக்குமோ...)

Reply

அட்டகாசமான படங்கள்... நன்றி...

Reply

எப்பவும் ஞாயித்துக்கிழமையா....அப்போ வெட்டியாவா குருவி பறந்துகொண்டு திரியுது....ஹிஹிஹி....படங்கள் நல்ல வடிவு.ஒரு நாளைக்கு படகுவீட்டில் குடியேற இப்பவே வாழ்த்தி வைக்கிறன் !

Reply

வாவ்.... நட்சத்திர மீன்களில் இத்தனை வகையா? ஏதோ அழகழகான பூக்களைப்பார்த்தது போலிருக்கிறது. நானாக இருந்தால் இணையத்தில் கிடைத்தவை என்று ஒரு வரியில் முடித்திருப்பேன்...இப்படி அழகான கற்பனையெல்லாம் ஏணி வச்சாலும் என் மூளைக்கு எட்டாது...ஹி..ஹி.....

ஓ...உங்கள் பெயர் மூஸாவா?

Reply

படங்கள் அருமை சகோ. கிட்னி நல்லா வேலை செய்ய்துங்கோ.

Reply

வர வர உங்க படத்தை நீங்க விளக்க எடுக்கும் முடுவு ரொம்ப டெர்ரரா போய்கிட்டு இருக்கு பஸ்....

படங்கள் அற்ப்புதம், ஒவ்வொன்றும் ஒரு ராகம்...

Reply

படங்கள் சூப்பரு பாஸ் அதிலும் சிலது வெல்வெட் துணி போல இருக்கு.. நண்பா அதிக நேரம் படத்தை பார்க்க வைச்சுட்டிங்க.. வாழ்த்துக்கள்..

Reply

அதிலும் கடைசி படம் கார்பெட் போலவே இருக்குங்க.. கார்பெட்ட தான் யாரும் க்ளிக் பண்ணி ஒட்டுறாங்களோ தெரியல

Reply

நல்ல பகிர்வு,,, அடிக்கடி வருகை தாருங்கள்,,,,

Reply

@ ஹாலிவுட்ரசிகன்

ஓ ... இப்பல்லாம் கொஞ்சம் அழகாயிருந்தா உடனேயே கிட்னாவா?
///////////////////////////////////////////

எவ அவ... கொஞ்சம் அழகா.....:(
நான் ரொம்ப அழகாம் என்னு ஊருக்குள்ள போஸ்ட்டர் ஒட்டித்திரியிறானுகள் நம்ம பயலுகள் நீங்க வேற அவங்க ஆசையில மன்னள்ளிப் போடுறமாதிரி.......
ஐயோ வேணாம் அழுதிடுவேன்

சூடான முதல் வருகைக்கும் அழகான நகைச்சுவை மிகு பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

Reply

@ வரலாற்று சுவடுகள்

பதிவை படிக்கிறதுக்கு முன்னால நல்லா இருந்தேன்..பதிவை படிச்ச பிறகு என் கிட்னி கலங்க்கிருஞ்சு! :D
///////////////////////////////////

ஹா ஹா ஹா...
ஏன் சார் ஏன்
அவ்வளவுக்கு அசிங்கமாவா கிறுக்கியிருக்கேன் அவ்வ்வ்வ்

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ Seeni

padangal arputham!

maasha allaah!
/////////////////////////////

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ Sasi Kala

நான் அழகிய படங்களை மட்டுமேபார்த்தேன் வேறு எந்த எழுத்துக்களும் என் கண்களுக்கு தெரியவில்லை.
////////////////////////////////////

ஹா ஹா ஹா.......
ஏன் இந்த குரூர எண்ணம்...
செம காண்டுல இருக்கீங்களோ
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

@ கலைவிழி

அழகான படங்கள் மூஸா, உங்கள் ரசனை நல்லா இருக்கு, இதே மாதிரி நிறைய படங்களை சுட்டு சுட்டு எங்களுக்கு வழங்குவீராக
////////////////////////////////////////

வாங்க மெடம் வாங்க..... ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறீங்க டீ குடிச்சிட்டுப் போங்களேன்..:)

சுட்டு சுட்டு விளையாடுறத்துக்கு இது பிட்டுமில்ல துப்பாக்கியுமில்லியே....:((((
எதுக்கு உங்க ஆசையில மண்ணள்ளிப் போட நல்லாவே சுட்டுத்தாரேன் பார்த்து ரசியுங்கோ...

நீண்ட இடைவெளியின் பின்னான வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ காட்டான்

அருமை மூஸா...!!
//////////////////////////////

வாங்க மாம்ஸ்.:)
அடிக்கடியான உங்கள் பின்னூட்டம் காண்பதில் மிக்க சந்தோஷம்....
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ பழனி.கந்தசாமி

ரசித்தேன்.
///////////////////////

வாங்க ஐயா உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்.
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

இவ்வளவு அழகழகான கடல்வாழ் உயிரினங்களை நான் இதுவரையில் பார்த்ததேயில்லை. அருமை.
/////////////////////////////////////////////////

இப்போ பார்த்திட்டீங்க இல்ல......
பணமெடுத்து வச்சிட்டு இடத்த காலி பண்ணுங்க....:))ஹா ஹா ஹா...

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ Mohan P

அருமை சகோ கடலுக்குள்ள இறங்கி கலக்கிதிங்க மிகவும் அருமையான வண்ண வண்ண படங்கள் பார்க்க பார்க்க சந்தோசமாக இருந்தது நன்றி
///////////////////////////////////////

உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம்
உங்களின் தளத்தை என்னால் அடையவும் எதுவென்று அறியவும் முடியவில்லை... முடிந்தால் இங்கே உங்கள் தள் முகவரியை தெரியப்படுத்துங்கள்

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ குட்டன்

படங்கள் கொள்ளை அழகு
///////////////////////////////////

வருகைக்கும் படங்களை ரசித்துச் சென்றமைக்கும் மிக்க நன்றி குட்டரே

Reply

இப்போது தான் முதன் முதலில் தங்கள் தளத்திற்கு வருகிறேன். கடந்த ஐந்து பதிவுகளையும் படித்தேன். குருவியாரே தங்கள் தளம் நன்றாக உள்ளது(உங்க எழுத்தையும் சேர்த்துதான்).. படங்களை நன்றாக தேர்வு செய்கின்றீர்... முடிந்தால் நம்ம தளத்திற்கும் வாருங்கள்.http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html

Reply

@ அருணா செல்வம்

சிட்டுக்குருவி...
ஞாயற்று கெழமையில நீங்க உங்க கிட்னிய யுஸ் பண்ணி இணையக் கடலுக்குள் போய் படங்கள் பார்த்து எடுப்பது தான் பொழுது போக்கா....?

(எனக்கும் அதே வேலை தான். ஆனால் என் கண்ணில் இதெல்லாம் கிடைக்கலையே... ஒரு சமயம் உங்க கூட வந்த தேவதையின் அருளாக இருக்குமோ...)

/////////////////////////////////

ஹா ஹா ஹா.........
இரண்டு கடலிலையும் தான் சுத்தித் திரிவோம்..

அட நீங்க இணையக் கடலுக்குள்ள போகும் போது எனக்கு தந்தி அனுப்பியிருக்க வேண்டாமா... நான் ஐடியா சொல்லித் தந்திருப்பேனே....

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

அட்டகாசமான படங்கள்... நன்றி...
////////////////////////////////////////////

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ ஹேமா

எப்பவும் ஞாயித்துக்கிழமையா....அப்போ வெட்டியாவா குருவி பறந்துகொண்டு திரியுது....ஹிஹிஹி....
/////////////////////////////////////

ஐயோ ரகசியத்த இப்பிடி ஸ்பீக்கர் போட்டு அம்மபமாக்கிட்டேனோ.....அவ்வ்வ்வ்வ்வ்

____________________________________________________

படங்கள் நல்ல வடிவு.ஒரு நாளைக்கு படகுவீட்டில் குடியேற இப்பவே வாழ்த்தி வைக்கிறன் !

/////////////////////////////////////

ஆஹா இந்த மனசு யாருக்கு வரும்
நான் கொஞ்ச காலத்துக்குத்தான் படகு வீட்டுல இருக்க ஆசைப் பட்டேன் நீங்க என்ன மொத்தமாவே குடியேற்றி வைத்திடுவீங்க போலிருக்கு...

வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

@ enrenrum16

வாவ்.... நட்சத்திர மீன்களில் இத்தனை வகையா? ஏதோ அழகழகான பூக்களைப்பார்த்தது போலிருக்கிறது. நானாக இருந்தால் இணையத்தில் கிடைத்தவை என்று ஒரு வரியில் முடித்திருப்பேன்...இப்படி அழகான கற்பனையெல்லாம் ஏணி வச்சாலும் என் மூளைக்கு எட்டாது...ஹி..ஹி.....
////////////////////////////////////////////

நட்சத்திர மீன்களில் இன்னும் எத்தனை வகைகள் இருக்கோ அந்த இறைவனுக்குத்தான் அது தெரியும் அப்புறம் ஏணி மூளை என்றெல்லாம் என் மூஞ்சிக்கு முன்னாடி புகழாதீங்கோ எனக்கு வெக்கம் வெக்கமா வருகுது.....:))
_________________________________________________

ஓ...உங்கள் பெயர் மூஸாவா?
//////////////////////////////////////////

என் பெயரோட எங்க அப்பன் பெயரையும் சேர்த்துத்தான் இந்த வலையுலகில பாவிச்சி வந்தேன் எல்லோரும் என் பேர விட்டுட்டு என் அப்பன் பேரையே எனக்கு வச்சிட்டாங்க நானும் அத பெரிசு பண்ணாம விட்டுட்டேன்.

அடிக்கடியான உங்கள் பின்னூட்டம் காண்பதில் மிக்க சந்தோஷம் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ ராஜி

படங்கள் அருமை சகோ. கிட்னி நல்லா வேலை செய்ய்துங்கோ.
//////////////////////////////////

ஹா ஹா ஹா......
உங்க கிட்னிய விடவா நல்லா வேலை செய்யப் போகுது....
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ இரவின் புன்னகை

வர வர உங்க படத்தை நீங்க விளக்க எடுக்கும் முடுவு ரொம்ப டெர்ரரா போய்கிட்டு இருக்கு பஸ்....

படங்கள் அற்ப்புதம், ஒவ்வொன்றும் ஒரு ராகம்...
/////////////////////////////////////////////////////

ஹா ஹா ஹா.......
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ ஹாரி பாட்டர்

படங்கள் சூப்பரு பாஸ் அதிலும் சிலது வெல்வெட் துணி போல இருக்கு.. நண்பா அதிக நேரம் படத்தை பார்க்க வைச்சுட்டிங்க.. வாழ்த்துக்கள்..
////////////////////////////////////////////////

மூஞ்சிக்கு முன்னாடி புகழாதீங்க பாஸ் எனக்கு வெக்கம் வெக்கமா வருகுது
____________________________________________

அதிலும் கடைசி படம் கார்பெட் போலவே இருக்குங்க.. கார்பெட்ட தான் யாரும் க்ளிக் பண்ணி ஒட்டுறாங்களோ தெரியல
////////////////////////////////////////

ஐயோ சந்தேகம் வந்திடிச்சா ...
சந்தேகத்தப் போக்க இப்ப நான் எங்க போவேன்...:(
எனக்கும் தெரியாது பாஸ் யாராவது ஓட்டுறாங்களா என்னு நான் சுட்டவருக்கிட்ட ஒரு முறை கேட்டுச் சொல்லுறேன்.....
ஐயோ....
சுட்டவரிட்ட டவுட்டு கிளியர் பண்ணுறதா இது ரொம்ப அநியாயமாயில்ல இருக்கு.....

வருகைக்கும் அழகான பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ தொழிற்களம் குழு

நல்ல பகிர்வு,,, அடிக்கடி வருகை தாருங்கள்,,,,
/////////////////////////////////////

உங்கள் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம்
நிச்சயமாக வருகிறேன்

உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

@ சேகர்

இப்போது தான் முதன் முதலில் தங்கள் தளத்திற்கு வருகிறேன். கடந்த ஐந்து பதிவுகளையும் படித்தேன். குருவியாரே தங்கள் தளம் நன்றாக உள்ளது(உங்க எழுத்தையும் சேர்த்துதான்).. படங்களை நன்றாக தேர்வு செய்கின்றீர்... முடிந்தால் நம்ம தளத்திற்கும் வாருங்கள்.http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html
////////////////////////////////////////

வாங்க சேகர் உங்க முதல் வருகை கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமடைவேன்
நிச்சயமாக உங்கள் தளம் வருகிறேன்.....

உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Reply

பதிவு நல்லயிருக்கு,படங்கள் சூப்பர் சிட்டுக்குருவி

Reply

@ indrayavanam.blogspot.com

பதிவு நல்லயிருக்கு,படங்கள் சூப்பர் சிட்டுக்குருவி
__________________________________________________

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

இந்த உயிர்கள் வாழும் காலத்தில்தான் நாமும் வாழ்கிறோமா அதிசயிக்க வைக்கிறது அருமை

Reply

உங்கள் வருகை கண்டதில் சந்தோஷம்
அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

Reply

Post a Comment