Looking For Anything Specific?

ads header

மாப்பூ.... வச்சிட்டாங்கய்யா ஆப்பூ......

யார்ரா இவன் இவ்வளவு காலத்துக்குப் பொறகு வடிவேலு டயலொகோட புதுசா கிளம்பியிருக்கிறானே என்னு பார்க்கிறீங்களா ? பிறகு என்னத்த செய்யிறதுங்க... எல்லாமுமே இப்பிடியாப் போச்சு.
 
ராத்திரி நித்திரைக்குப் போகும் போது கூட நல்லாத்தான் இருந்திச்சி. ஒரு பிழையுமில்ல ரொம்பவே நல்லாத்தான் இருந்திச்சு. ஏன் காலையில் 5.30 மணிக்கெல்லாம் தலையாணிக்குக் கீழே இருந்த கருமத்துலயும் போய் நோண்டிப் பார்த்தேன் நல்லாத்தான் இருந்திச்சு, காலையில 8.00 மணிக்கு சும்மா தானே இருக்கிறோம் ஒரு ரவுண்டு போகலாமே என்னு போய் பார்த்தா... தா... தா... வச்சிட்டானுகள்யா ஆப்பு...

இனிமே நான் என்ன செய்வேன் எப்பிடி நித்திரை கொள்ளுவேன், எப்பிடிச் சாப்பிடுவேன், எப்பிடி கக்கூ.... அட சீ அந்தக் கருமமெல்லாம் இவடத்த வேணாம், எப்பிடி ப்ளாக்கில போஸ்ட் போடுவேன் எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா ஆப்பு வச்சிட்டானுகளே கூகுள் காரனுகள்.

கொஞ்ச நாளாச் சொல்லிச் சொல்லி வந்தானுகள் யாரும் கேட்ட மாதிரி தெரியல்ல போல அதனால அவனுகளே களத்துல இறங்கிட்டானுகள்... நான் கூட ஓல்ட் இஸ் கோல்ட் என்ற தத்துவத்த வச்சிக் கொண்டு புதுசு புதுசா கிளம்பினவங்களப் பார்த்து ஏளனமா சிரிக்கிட்டு இருந்தேன். இப்போ நம்மளையும் புதுசுக்குள்ள மூழ்கடிச்சிப் போட்டானுகளே...

இனிமே எப்பிடிப் பழகப்போறேனோ ஒன்னுமே புரியல்லியே மறுபடியும் நம்ம ப்ளாக் வித்துவானுகள் என்ன சொல்லியிருக்கிறாங்க என்னுறத்த போய் நோண்டிப்பார்த்துத்தான் தெரிஞ்சிக்கனுமே இதுக்கெல்லாம் துட்டு யாரு கொடுப்பா... கூகுள் காரா ??? 

மறுபடியும் ப்ளாக் வித்துவானுகள் உஷாராகிடப் போறாங்க அட்வைஸ் பண்ணி பண்ணி குடல உறுவிடப் போறாங்க.. அதுவும் நல்லது தானே அவங்க குடல உறுவில்லையெண்டா நம்மட பொழப்பு நாறிப் போயிருக்கும்... நம்மளுக்கு விதை போட்டவங்க அவங்க தானே...

பழசில இருந்துட்டு புதுசுக்கு வந்தோமா என்ன செய்யிற எப்பிடி போஸ்ட்  போடுறது என்னு கூட புரியல்ல ஒரு மாதிரியா தட்டுத் தடுமாறி புதுசுல முதலாவதா ஒரு போஸ்ட்டு போடுறேன். 

இன்னமுமா நான் பொலம்பிக்கிட்டு இருக்கிறது உங்களுக்கு புரியல்ல.. அதான்பா கூகுள் காரன் பழைய இண்டர்பேஸ் ஐ பூசுக்கு மாத்திட்டான் பா மாத்திட்டான். இத சொல்லத்தான் இந்த இராமாயணம்... ஆமா இராமாயணம் சரியா ராமாயணம் சரியா இதயும் கொஞ்சம் கிளியர் பன்னிடுங்க நமக்கு டமிழு கொஞ்சமில்ல ரொம்பவே வீக்கு வீக்கு வீக்கு....

ஆனாலும் பூசு சோக்காத்தான் இருக்குப்பா பூசு பூசா நல்ல வடிவா நெறைய வசதிகளோட இருக்கு எல்லாத்தையுமே மொத்தமா பாக்கிற மாதிரியும் இருக்கு ( என்ன செய்றது இனிமே பூசுலதான் காலத்த ஓட்ட வேண்டியிருக்கு அதனால பூசு இண்டர் பேஸ காக்காப் புடிக்கிறன்பா ) எப்பிடியெல்லாம் ஜமாளிக்க வேண்டியிருக்கு

சப்பா...முடியல்ல எப்பிடியோ ஒரு மாதிரி இத எழுதி முடிச்சாச்சு யாராச்சும் தப்பித் தடுமாறி குறுக்கால நம்ம ப்ளாக் பக்கம் வந்து இந்த போஸ்ட்ட படிச்சீங்க என்றா .... அதுக்குக் காணிக்கையா புதிய இண்டர்பேஸ் தொடர்பான தகவல்கள கீழால சொல்லிட்டுப் போங்க புண்ணியமாப் போயிடும்... 

அடேய் யார்ராது அருவாளத் தூக்கிறது... அதான் கிளப்புறோம் என்னு சொல்லிட்டோமில்ல அப்புறமுமென்ன சீன் போடுற... மறுபடியும் மறுபடியும் சீன் போட்டீங்க அப்புறமா கிணத்தக் காணோமே என்னு கம்லைண்ட் பண்ண வந்திடுவேன்... 

நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி....

இதுதான் புதிய தோற்றத்துட போஸ்ட்டு போடும் பகுதி.. நல்லா பார்த்துக்கோங்க




Post a Comment

38 Comments

  1. வெகு காலம் முன்பே இப்படி மாறி விட்டது நண்பா... நான் கூகுளே கம்போஸ் தான் உபயோகப் படுத்துகிறேன்.. அங்கிருந்து இங்கு கட் கோப்பி பேஸ்ட் தான்

    ReplyDelete
  2. முன்பு இருந்ததை விட இப்போ இன்னும் நல்லாயிருக்கு... ரெண்டு நாளைக்கு உங்களுக்கு சிரமமா இருக்கும் அப்புறம் பாருங்க நீங்களும் இதையேதான் சொல்லுவீங்க...

    ReplyDelete
  3. எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாலையே மாறி விட்டது! பட் என்னால ரெண்டு வியுவையும் இப்போது வரை உபயோகிக்க முடியுது!

    ReplyDelete
  4. எனக்கும் பழைய முறைதான் பிடித்திருந்தது ஆனால் இப்போ புதியதை கட்டாயப்படுத்திட்டாய்ங்க!

    இது பழகுவது கஷ்டம் இல்லையென்றாலும் பழைய முறைதான் மிக இலகு!!

    ReplyDelete
  5. மாப்பு நீதான்யா வச்சிட்டா ஆப்பு ....என்னவோ எதோ என்று பதறி அடிச்சு பிடிச்சு வந்தா ............இராமாயணம் சரியா ராமாயணம் சரியா ?ம்ம்ம்ம் வேணும் எனக்கு வேணும் இடுகாட்டன் அலெர்ட்டா இருடா இனி சிட்டுக்குருவியோட ..............

    ReplyDelete
  6. சிட்டு ... நானும் என்னமோ.. ஏதோன்னு வந்து பார்த்தேன்.... எல்லாருக்கும் சேர்த்து ஆப்பா...!!

    சரிசரி... இது கொஞ்ச காலமாகவே மாறிடுச்சி... என்னை மாதிரி நீங்களும் கத்துக்குவீங்க...

    தமிழில் எந்த வார்த்தையும் “ர“ என்ற எழுத்தில் துவங்கக்கூடாது என்பது தொல்காப்பிய விதி. (தவிர “ர“ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் வட சொற்கள்)

    அதனால் “ர“ வில் துவங்கும் வார்த்தைக்கு முன் “இ“ என்ற எழுத்தைச் சேர்க்கிறார்கள்.

    ராகவன் - இராகவன்
    ராமாநுாசம் - இராமாநுாசம்... இப்படி...



    ReplyDelete
  7. ரொம்ப மாதத்திற்கு முன்பே மாறி விட்டது... ஆரம்பத்திலேயே நானும் திணறினேன்... இப்ப இது தான் ரொம்ப ரொம்ப ஈஸி...

    ReplyDelete
  8. நிறைய நாட்களாக புது பிளாக்கர் தான் யூஸ் பண்ணுகிறேன்! கஷ்டமில்லை! சுலபம் தான்!

    ReplyDelete
  9. நான் வலைப்பூ ஆரம்பித்த போது பழைய இண்டர்பேஸ் தான். ஆனா போஸ்ட் போட ஆரம்பிக்கும் போது புதுசு. புரியலையா...?, என்னோட முதல் போஸ்ட்டே மூணு வருசத்துக்கு அப்புறம் தான்.

    ReplyDelete
  10. இம் முறை இலகுவாக தானே உள்ளது அண்ணா....

    ReplyDelete
  11. ஹா..ஹா..ஹா... ஜிட்டு... இப்போ அவசரமா வந்தேன்ன்... பிறகு அவசரமில்லாமல் வாறேன்ன்:).. ஆஆஆஆஆஆஆஆஆஆறுதல் சொல்ல.. இந்தாங்க இந்த போன்விட்டாவைக் குடிச்சு தென்பா இருங்கோ இப்போதைக்கு... வேறென்ன சொல்ல:)

    ReplyDelete
  12. பழையன கழிதலும்,புதியன புகுதலும் வழுவல!பழகிவிடும்

    ReplyDelete
  13. //ராத்திரி நித்திரைக்குப் போகும் போது கூட நல்லாத்தான் இருந்திச்சி. ஒரு பிழையுமில்ல ரொம்பவே நல்லாத்தான் இருந்திச்சு. ஏன் காலையில் 5.30 மணிக்கெல்லாம் தலையாணிக்குக் கீழே இருந்த கருமத்துலயும் போய் நோண்டிப் பார்த்தேன் நல்லாத்தான் இருந்திச்சு, காலையில 8.00 மணிக்கு சும்மா தானே இருக்கிறோம் ஒரு ரவுண்டு போகலாமே என்னு போய் பார்த்தா... தா... தா... வச்சிட்டானுகள்யா ஆப்பு...//

    ஹா..ஹா..கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ முடியல்ல:) இப்ப என்ன குடியா மூழ்கிட்டுது?:).... இப்பூடி சவுண்டு வைக்கிறார்ர்...:))..பழகிட்டால் போச்சு:) நான் புளொக்கைச் சொன்னேன்:).

    ReplyDelete
  14. //பழசில இருந்துட்டு புதுசுக்கு வந்தோமா என்ன செய்யிற எப்பிடி போஸ்ட் போடுறது என்னு கூட புரியல்ல ஒரு மாதிரியா தட்டுத் தடுமாறி புதுசுல முதலாவதா ஒரு போஸ்ட்டு போடுறேன். //

    ஹா...ஹா..ஹா.. இப்பூடிச் சிரிக்க வைக்கிறீங்க ஜிட்டு:)... இதில என்ன குறை கண்டீங்க?:)

    ReplyDelete
  15. //ஆனாலும் பூசு சோக்காத்தான் இருக்குப்பா பூசு பூசா நல்ல வடிவா நெறைய வசதிகளோட இருக்கு எல்லாத்தையுமே மொத்தமா பாக்கிற மாதிரியும் இருக்கு ( என்ன செய்றது இனிமே பூசுலதான் காலத்த ஓட்ட வேண்டியிருக்கு அதனால பூசு இண்டர் பேஸ காக்காப் புடிக்கிறன்பா ) எப்பிடியெல்லாம் ஜமாளிக்க வேண்டியிருக்கு///

    என்னாது பூஸா?:) எந்தப் பூஸைச் சொல்றீங்க?:) விட மாட்டேன்ன்ன்ன்.. ஒரு பூஸைக் காக்கா பிடிக்க விடவே மாட்டேன்ன்ன்ன்.... இதோ போகிறேன் தேம்ஸ் கரைக்கு உண்ணாவிரதம் ஆரம்பம்:))...

    ReplyDelete
  16. என்னதான் ஜொலுங்க ஜிட்டு.. ஓல்ட்டூஊஊஊஊ இஸ்ஸு கோல்ட்டுத்தான்:)..

    ReplyDelete
  17. @ சீனு

    வெகு காலம் முன்பே இப்படி மாறி விட்டது நண்பா... நான் கூகுளே கம்போஸ் தான் உபயோகப் படுத்துகிறேன்.. அங்கிருந்து இங்கு கட் கோப்பி பேஸ்ட் தான்

    ///////////////////////////////////////////

    ஆமா நண்பா ரொம்ப நாளைக்கு முதல் மாறிவிட்டது தான் ஆனால் அதிலிருந்து பழைய இண்டர்பேஸுக்கு மாறலாம் இப்போது புதிய இண்டர்பேஸ் நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது நண்பா

    சூடான முதல் வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  18. @ HOTLINKSIN.com திரட்டி

    முன்பு இருந்ததை விட இப்போ இன்னும் நல்லாயிருக்கு... ரெண்டு நாளைக்கு உங்களுக்கு சிரமமா இருக்கும் அப்புறம் பாருங்க நீங்களும் இதையேதான் சொல்லுவீங்க...

    /////////////////////////////////////////

    நிச்சயமாக பல வசதிகள் உள்ளடங்கியிருக்கும் என நினைக்கிறேன். புலி கூட வித்தைக்காரனிடம் அடங்கிவிடுகிறது தானே... எல்லாம் பழகினாச் சரியாகிடும் உண்மைதான் சார்....

    வருகைக்கும் அழகான் எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. @ வரலாற்று சுவடுகள்

    எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாலையே மாறி விட்டது! பட் என்னால ரெண்டு வியுவையும் இப்போது வரை உபயோகிக்க முடியுது!

    ///////////////////////////////////////

    உண்மைதான் சார் நானும் இரண்டு வியுவிலையும் சில நாள் யூஸ் பண்ணினன் ஆனால் இப்போது புதிய வியு மட்டும்தான் யூஸ் பண்ணுர மாதிரி செய்து விட்டார்கள். அதனால் தான் இந்த கில்மா போஸ்ட்

    வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  20. @ Riyas

    எனக்கும் பழைய முறைதான் பிடித்திருந்தது ஆனால் இப்போ புதியதை கட்டாயப்படுத்திட்டாய்ங்க!

    ///////////////////////////////////

    நிச்சயமாக எனக்கும் பழையதுதான் பிடித்திருந்தது நண்பா... அதுக்காக பழமை வாதி என்கிற பட்டமெல்லாம் கொடுத்திடாதீங்க.. அதுதான் இப்போ புதுசுக்கு மாறிட்டோமில்ல...

    பழகினா எல்லாம் நம்ம சொல் கேடும் என நினைக்கிறேன் நண்பா
    வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. @ நெற்கொழுதாசன்

    மாப்பு நீதான்யா வச்சிட்டா ஆப்பு ....என்னவோ எதோ என்று பதறி அடிச்சு பிடிச்சு வந்தா .....

    ///////////////////////////////////////

    ஆ... தொப்பி தொப்பி ஏமாந்திட்டீங்களா ... உங்களையெல்லாம் ஏமாத்தனும் என்னு நான் நினைக்கல்ல பாஸ் சும்மா ஒரு கிக்குக்குத்தான் இந்த போஸ்ட்....... நிறையப் பேர் கிக்குக்கு என்னவெல்லாம் செய்யிறாங்களாமே நாம என்ன அப்பிடியா...

    அதுக்கெல்லாம் நிறைய செலவாகும் என்னுட்டுத்தானே இப்பிடி செஞ்சோம்...

    எதுக்கும் அலேர்ட்டா இருங்கோ...

    வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி பாஸ்

    ReplyDelete
  22. @ அருணா செல்வம்

    அதனால் “ர“ வில் துவங்கும் வார்த்தைக்கு முன் “இ“ என்ற எழுத்தைச் சேர்க்கிறார்கள்.

    ராகவன் - இராகவன்
    ராமாநுாசம் - இராமாநுாசம்... இப்படி...

    /////////////////////////////

    ஆஹா என்னவொரு விளக்கம் பதிவர்களை வச்சே அழகாக விளங்கப்படுத்திவிட்டீர்கள்...

    அட ஆப்பெல்லாம் வைக்கனும் என்னு எனக்கு ஐடியா இல்ல ...எனக்கு கூகுள் காரன் வச்சத்தத்தான் நான் உங்களுக்கு வச்சேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. @ திண்டுக்கல் தனபாலன்

    ரொம்ப மாதத்திற்கு முன்பே மாறி விட்டது... ஆரம்பத்திலேயே நானும் திணறினேன்... இப்ப இது தான் ரொம்ப ரொம்ப ஈஸி...

    /////////////////////////////////////

    நானும் முன்னர் பாவித்து விட்டு பின் பழையதுக்கே மாறி விட்டேன் ஆனால் இப்போது புதியதை கட்டாயப்படுத்தி விட்டார்கள் அதுதான் இந்த குதர்க்கம்...
    புதியதைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  24. s suresh

    நிறைய நாட்களாக புது பிளாக்கர் தான் யூஸ் பண்ணுகிறேன்! கஷ்டமில்லை! சுலபம் தான்!

    /////////////////////////////////////////////

    அழகாக அனுபவத்தைப் பதிந்து சென்றமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  25. @ முத்து குமரன்

    நான் வலைப்பூ ஆரம்பித்த போது பழைய இண்டர்பேஸ் தான். ஆனா போஸ்ட் போட ஆரம்பிக்கும் போது புதுசு. புரியலையா...?, என்னோட முதல் போஸ்ட்டே மூணு வருசத்துக்கு அப்புறம் தான்.

    ////////////////////////////////////////

    ஆமாம் உங்களுடைய பின்னூட்டம் ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன் ..பதிவிடுவதுக்கு நிறைய கேப் விட்டுஇருக்கிறீர்கள்...
    முதல் வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க் நன்றி சார்...
    உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

    ReplyDelete
  26. @ esther sabi

    இம் முறை இலகுவாக தானே உள்ளது அண்ணா....
    ////////////////////////

    ஆமாம் நிறையப்பேர் இலகுவாகத்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். நானும் இனி கட்டாயமாக இந்த முறைக்கே மாற வேண்டியதாயிற்று இனி பழக்கப் படுத்தினால் சரிதானே..

    ஆமா உங்களுடைய ப்ளாக்கிற்கு என்னால் வர முடியாமலிருக்கிறது உங்கள் ப்ளாக் லிங்கினை நீங்கள் விரும்பினால் இங்கே பகிருங்கள்

    வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. @ athira

    ஹா..ஹா..ஹா... ஜிட்டு... இப்போ அவசரமா வந்தேன்ன்... பிறகு அவசரமில்லாமல் வாறேன்ன்:).

    ////////////////////////////////////

    ஆ..... வாங்க வாங்க....நீங்க அவசரமாவும் வந்து அவசரமில்லாமலும் வந்து போயிட்டீங்க... நாமதான் லேட் அண்ட் போன்விட்டாவையும் மிஸ்பண்ணிட்டோம்... அதுதான் நேத்தையோட பழுதாப் போச்சே...

    ReplyDelete
  28. @ குட்டன்

    பழையன கழிதலும்,புதியன புகுதலும் வழுவல!பழகிவிடும்
    //////////////////////////////

    பழகாட்டியும் கட்டாயம் பழக வேண்டிய சூழலுக்குள்ளாகிட்டோமே குட்டரே...

    வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நண்றி

    ReplyDelete
  29. @ athira

    ஹா..ஹா..கிக்..கிக்..கீஈஈஈஈஈஈ முடியல்ல:) இப்ப என்ன குடியா மூழ்கிட்டுது?:).... இப்பூடி சவுண்டு வைக்கிறார்ர்...:))..பழகிட்டால் போச்சு:) நான் புளொக்கைச் சொன்னேன்:).

    //////////////////////////////////////

    அய்யோ என்னாச்சு முடியல்லியா அம்பியுலன்ஸ் ஏதும் எடுப்பிக்கயோ...:0
    நல்ல வேளை யாரோட பழகனும் எங்கிறதையும் சொல்லிட்டீங்க இல்லேன்னா இங்க பக்கத்து வீட்டுல இருக்கிற அ....... இல்ல வேனாம் விட்டுடுவோம்

    ReplyDelete
  30. @ athira

    ஹா...ஹா..ஹா.. இப்பூடிச் சிரிக்க வைக்கிறீங்க ஜிட்டு:)... இதில என்ன குறை கண்டீங்க?:)

    ///////////////////////////////

    இங்க பார்ரா கொடுமைய ஊரக் கூப்பிட்டு அழுதுகொண்டு இருக்கிறேன் சிரிக்க வைக்கிறேன் என்னு சொல்லுறாங்களே... அவ்வளவு கேவலமாவா அழுதிருக்கிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    இன்னும் ஒரு குறையும் காணல்ல....இப்பதானே மாறியிருக்கிறோம் என்ன சின்னதா ஒரு குறை நம்மட 1100 மொபைல்ல தெரியமாட்டேங்குது...

    ReplyDelete
  31. @ athira

    என்னாது பூஸா?:) எந்தப் பூஸைச் சொல்றீங்க?:) விட மாட்டேன்ன்ன்ன்.. ஒரு பூஸைக் காக்கா பிடிக்க விடவே மாட்டேன்ன்ன்ன்.... இதோ போகிறேன் தேம்ஸ் கரைக்கு உண்ணாவிரதம் ஆரம்பம்:))...

    //////////////////////////////////////

    அய்யோ "பூசு" இங்க சொல்லுக்கு அப்படி ஒரு மீனிங் இருக்கு என்கிறது தெரியாமப் போச்சே...
    தெரிஞ்சிருந்தா காக்க பிடிச்சிருக்க மாட்டேன் கழுகு , பருந்து பிடிச்சிருப்பேனே... மிஸ் பன்னிட்டேன் அடுத்த தடவை மறக்காம காக்கா..சீ கழுகு பிடிக்க வைக்கிறேன்..

    அஸ்க்கு... உங்க உண்ணாவிரதம் எங்களுக்குத் தெரியாதாக்கும்... எங்களுக்கும் தெரியுமே விமல் வீரவன்ச மாதரி உண்ணாவிரதம் இருக்கிறத்துக்கு...

    ReplyDelete
  32. @ athira

    என்னதான் ஜொலுங்க ஜிட்டு.. ஓல்ட்டூஊஊஊஊ இஸ்ஸு கோல்ட்டுத்தான்:)
    /////////////////////////////////////////

    உண்மைதான் உங்கள் கருத்தை பிரேரிக்கிறேன்.. அண்ட் ஆமோதிக்கிறேன்.. + உங்க கருத்துக்கு யூரியா இடுகிறேன்...

    வருகைக்கும் கலகலப்பு கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா சந்திப்போம்

    ReplyDelete
  33. அண்ணே நீங்க நம்ம இனம்ண்ணே. கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு. அறிவிப்பு குடுத்த போதே பழகி இருக்கலாமோ??!!

    ReplyDelete
  34. பதிவு நல்ல இருக்கு சிட்டுக்குருவி

    ReplyDelete
  35. @ ராஜி

    அண்ணே நீங்க நம்ம இனம்ண்ணே. கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு. அறிவிப்பு குடுத்த போதே பழகி இருக்கலாமோ??!!

    /////////////////////////////////

    அத இப்ப யோசிச்சி என்ன பயன் பட்டது தான் பட்டம்... இனிமே பழகிக்க வேண்டியதுதான்...:)
    வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  36. @ indrayavanam.blogspot.com

    பதிவு நல்ல இருக்கு சிட்டுக்குருவி
    ////////////////////////////////

    வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  37. உங்களுக்காவது பரவாயில்ல தினம் எழுது வது இன்னைக்கு தெரியலனனலும் நாளைக்கு பதிவு போட்டுகக்லாம்,
    ஆனால் வலைச்சர பதிவு எழுதிட்டே இருக்கும் போது காலையில் மூன்றாவது பதிவ போஸ்ட் பண்ணலாம் ந்னு ஓப்பன் செய்தால்

    ஐயோ பே பே பே ஆப்பு தான் நான் எபப்டி தட்டி தடுமாறி இருப்பே,

    இதேல்லாம் ரொம்ப ஜகஜம்மம்ப்பாஆ

    ReplyDelete
  38. இதுக்குத்தான் இத்தனை கலையப்பாரமா !!! நான் என்னமோ ஏதோன்னு நினைச்சி பதறிட்டேன்...

    ReplyDelete