உலக அழிவுக்குக் விதை போடும் செய்தி ஊடகங்கள் ?

இந்த உலகத்தில் எதனைச் செய்தாலும் அதனை அடுத்த நிமிடமே செய்தியாகக் கொண்டுவந்து அனைவரிடத்திலும் அதனை பரப்புறை செய்யும் விடயத்தில் செய்தி ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றது.
ஒரு ஊடகத்தினால் உண்மையான ஒரு சம்பவத்தினை பொய்ப்படுத்தவும் முடியும் பொய்யான ஒரு சம்பவத்தினை உண்மைப்படுத்தவும் முடியும்.

சிறந்ததொரு ஊடகத்தினை அவைகள் வெளியிடும் செய்திகளின் / தகவல்களின் மூலம் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக கண்களால் காண்பதுவும் பொய் காதுகளால் கேட்பதுவும் பொய் தீர விசாரித்து அதனது உண்மைத்தன்மையை அறிந்து அதன் பின் செய்திகளை வெளியீடு செய்வதனால் இன்று உலகில் நிலவும் அதிகளவான பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்.

இப்படியான ஒரு ஊடகத்தினை அதிக கவர்ச்சியான விளம்பரங்களின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய ஒரு தேவையில்லை. மக்கள் / சமூகம் ஊடகங்களின் விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள் . ஆகவே உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களை சமூகம் இனங்கண்டு அவற்றின் வாடிக்கையாளர்களாகவும் வாசகர்களாகவும் மாறிவிடுகிறார்கள் குறைந்த விளம்பரங்களின் மூலம் அல்லது விளம்பரங்கள் இல்லாமலே.

என்னைப் பொருத்தவரை அதிகளவான விளம்பரங்கள் மூலம் தங்களை அடையாளப்படுத்தும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்கும்.

இன்றைய விரைவான உலகில் இணையமென்பது மிகவும் அத்தியவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எதிர்காலத்தில் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, உறங்குமிடம் என்பவற்றுடன் இணையமும் சேர்ந்து கொண்டால் அதுவும் வியப்புக்குறிய ஒன்றாக இருக்காது. அந்தளவுக்கு மக்கள் இணையத்துக்கு அடிமையாகிவிட்டார்கள்.

இந்த இணையமும் மக்கள் மத்தியில் செய்திகளைக் கொண்டுசெல்லும் ஊடகமாக செயற்பட்டுவருகின்றது. மிகவும் விரைவாக செய்திகளை  மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில்  இணையத்தளங்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளன.

இன்று உலகமே எதிர் நோக்கியிருக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக உலக அழிவு காணப்படுகிறது. இன்றைக்கோ நாளைக்கோ உலகம் அழியப்போகின்றது என்று விஞ்ஞானத்தில் முதிர்ச்சி பெற்றவர்கள் தினம்தினம் புலம்பிக்கொண்டு திரிகின்றனர்.இவர்கள் உலக அழிவுக்கு பல விஞ்ஞான முறையிலான காரணங்களைக் காட்டினாலும் நான் சொல்லுவேன் உலக அழிவு என்பது ஆரம்பமாகுமாகயிருந்தால் அதுக்கு மூல காரணமாக இந்த இணையத்தளங்களே அமையும்.

மிகவும் புதுமையான செய்திகளை அணுதினமும் இணையத்தளங்கள் வெளியிடுகின்ற. அவற்றில் எத்தனை சத வீதம் உண்மை இருக்கிறது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் அண்மையில் இணையத்தில் அதிகமாக பேசப்பட்ட / உலாவந்த ஒரு சில செய்திகள் பற்றித்தான் இன்றைய பதிவில் உங்களுடன் பேசப்போகிறேன்.

குறிப்பாக இரண்டு செய்திகளை உதாரணங்களுக்காக எடுத்துக் கொள்கிறேன். ஒன்று பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பானது மற்றையது அமெரிக்க முதல் பெண்மணி மிஷல் ஒபாமா தொடர்பானது.

இவர்கள் இருவரின் தனிப்பட்ட + குடும்ப வாழ்க்கையில் ஊடகங்கள் அதிகமாக விளையாடியிருக்கிறது. இதில் அமெரிக்க முதல் பெண்மணியின் சம்பவம் பெரிதாக பரபரப்பான செய்தியாக பேசப்படாவிட்டாலும், பிரித்தானிய அரச குடும்பம் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் புதுப்புது சுவாரஷ்யமான (?) தகவல்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


இவ்விடத்தில் ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன் பிரித்தானிய அரச குடும்பத்தில் இளவரசி டயானாவின் விடயத்திலும் ஊடகங்கள் அதிக சிரத்தையெடுத்து இறுதியில் அவருடைய இறப்புக்கும் அவைகளே காரணமாக அமைந்தன.
இளவரசி டயானா தொடர்பாக முன்னர் நான் இட்ட பதிவினை நேரமிருப்பின் இங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள்


பிரித்தானிய அரச குடும்பத்தில் குறிப்பாக இளவரசர்கள் தொடர்பான செய்திகள் மேலைத்தேய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது. இதன் போது ஊடகங்கள் அரச குடும்பத்தின் தனிப்பட்ட முறையிலான வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்திருப்பது வியப்புக்குறியதாக இருக்கிறது.

இளவரசர்கள் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இவர்களின் சிறு வயது முதலான அனைத்து செயற்பாடுகளிலும் ஊடகங்கள் மிகவும் அக்கரை கொண்டுள்ளது. இவர்களின் பள்ளிபடிப்பு தொடக்கம்  இவர்களது திருமணம் முதல் அனைத்து விடயத்தையும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன.

இவர்களும் எல்லோரையும் போன்று ஒரு சாதாரண மனிதனுடைய உணர்வு கொண்டவர்கள்தான். இவர்களுக்கென்று விஷேட உணர்வுகளைக் கொண்டு இறைவன் இவர்களைப் படைக்கவில்லை. இன்று உலகம் இவர்களை வேற்றுப் பிறப்பாக பார்ப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இவர்கள் குளித்தாலும் செய்தியாக வெளியிடுகிறார்கள் குடித்தாலும் செய்தியாக வெளியிடுகிறார்கள். ஊடகங்கள் இவ்விடத்தில் மிகப் பெரிய தவறிழைக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். 
சாதாரண மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் இளவரசர்கள் செய்கிறார். ஆனால் அவைகள் கொட்டை எழுத்துக்களில் செய்திகளாக வெளியாகிறன. இறுதியாக இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்தது வரை ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. இந்த செய்திகளினால் அல்லது இந்தக் காணொளிகளினால் இளவரசரின் உள்ளம் எவ்வளவு நிம்மதியிழந்திருக்கும் என்பதனை இந்த செய்திகளை வெளியிட்டவர்கள் சிறிதளவும் சிந்தித்திருப்பார்களா ? அல்லது இந்த செய்திகளுக்காக பகிரங்கமாக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையிலாவது அவரிடம் மன்னிப்புக் கேட்டிருப்பார்களா ? இருக்கவே இருக்காது.


இதற்கு முன்னர் இளவரசர் ஹரி நிர்வாணமாக தோன்றிய புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய மனதினில் வேதனையை ஊடகங்கள் உண்டு பண்ணின என்பதனையும் இவ்விடத்தில் சொல்லிக் கொள்ளவது பொருத்தமானதாகும்.

தனிமனிதருடைய சுதந்திரம் தொடர்பில் ஊடகங்கள்  தவறிழைக்கின்றன. ஊடக சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தனக்குக் கிடைக்கக் கூடிய அனைத்தையும் செய்திகளாக வெளியிடுவது என்பது மிகவும் பிழையான ஒன்றாக கருதப்படுகிறது என்னைப் பொருத்தவரையில்.

அதுவுமில்லாமல் ஒருவருடைய குறைகளை ஆழ ஆராய்தல் என்பது ஊடக தர்மமாக இருக்க முடியாது. இன்றைக்கு நாம் ஒருவருடைய குறைகளைக் தேடி அலைகிறோம், நாளைக்கு யாரோ ஒருவர் எம்முடைய குறைகளைத் தேடி அலைவார். உலக முடிவு வரையிலும் இது தொடர்ந்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதொன்றா ?


ஒருவருடைய அல்லது முக்கிய பிரமுகர் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை ஊடகங்கள் பின் தொடர்கிறது என்றால் அந்தப் பின் தொடர்தலில் சமூகத்துக்கு அல்லது அந்த ஊடகத்துக்காகவது நன்மை கிடைக்கிறது என்றால் அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் பரபரப்புக்காகவும் தன்னுடைய ஊடகத்தை முன்னிலைப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒருவருடைய தனிப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்துவதென்பது ?


அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளால் மனமுடைந்த இளவரசர்கள்  அல்லது மிஷல் ஒபாமா சில வேளைகளில் தற்கொலை செய்து கொண்டால் அவர்களின் இறப்பினை இந்த ஊடகங்கள் பிரதியீடு செய்திடுமா ? இவர்கள் பிரபலங்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது சில வேளைகளில் இவர்களுக்கு கோழைத்தனமாக தெரியலாம். ஆனால் சரியான தகவல்களை / உண்மைத் தன்மையினை அறியாமல் வெளியிடுப்படும் செய்திகளினால் சாதாரண மக்கள் தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். (தற்கொலைகள் தொடர்பாக முன்னர் நான் இட்ட பதிவினை நேரமிருப்பின் இங்கு சென்று படித்துக் கொள்ளுங்கள்)

இப்படி பிரபலங்கள் சாதாரண மக்கள் என அனைவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும்  ஊடகங்கள்
விளையாடி அனைவரையும் மன நோயாளிகளாகவும் தற்கொலைக்குத் துணிபவர்களாகவும் மாற்றிவிடக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. இதன் பின் உலக அழிவுக்கு விஞ்ஞானிகள் கூற்று ஒரு சத வீதமும் தேவைப்படாது. யாருமில்லா உலகில் அல்லது மன நோயாளிகள் நிறைந்த உலகில் இந்த ஊடகத்தினர் மட்டும் நன்றாக நலமுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் போல...

எதிர்வரும் காலங்களிலும் ஊடகங்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் எதிர்கால சந்ததிகளின் நிலைமை ? இங்கு எதிர்கால சந்ததிகளாக எனதும் உங்களதும் உறவுகளும் குழந்தைகளும் தான். இதனை இன்னுமொரு விதத்தில் பார்க்கப் போனால் ஊடகங்களின் மூலம் எமது குழந்தைகளை அழிவிற்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுவதிலும் தவறில்லை எனத் தோன்றுகிறது.

ஆகவே எமக்குக் கிடைக்கும் இப்படிப்பட்ட பிறருடைய குறைகளை உள்வாங்கிய அல்லது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் பாதிப்புச் செலுத்தும் விடயங்களைத் தாங்கிவருகின்ற செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதனால் அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு எம்மையரியாமல் நாமும் உரமிடுகிறோம்.


பிறருடைய குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் .


27 கருத்துரைகள்

சூப்பர் நண்பா

Reply

ஊடகங்களை குறை சொல்லியும் தப்பில்லை.. இந்த மாதிரி 'மஞ்சள்' விசயங்களை வாசிக்கத்தான் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்!

முழுக்க முழுக்க பயனுள்ள விசயங்களை மட்டுமே வைத்து வெளிவரும் பத்திரிகைகள் சந்தையில் போனியாகாது!

சினிமா..கிசுகிசு...இதுபோன்ற மசாலா கலவைகள் சேர்ந்து வரும் பத்திரிகைகள் தான் மார்க்கெட்டில் நீடித்திருக்க முடியும்!

ஆனால் அதற்காக இவர்கள் செய்வதெல்லாம் நியாயம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது! இது போன்ற தனிமனித சுதந்திர எல்லைக்குள் மூக்கை நுழைப்பது வன்மையாக கண்டிக்கப்படகூடியது!

நல்ல பதிவு குருவியாரே!

Reply

எதிர்வரும் காலங்களிலும் ஊடகங்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டால் எதிர்கால சந்ததிகளின் நிலைமை ? இங்கு எதிர்கால சந்ததிகளாக எனதும் உங்களதும் உறவுகளும் குழந்தைகளும் தான். இதனை இன்னுமொரு விதத்தில் பார்க்கப் போனால் ஊடகங்களின் மூலம் எமது குழந்தைகளை அழிவிற்குத் தயாராக்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுவதிலும் தவறில்லை எனத் தோன்றுகிறது.
மிகச் சரியான உண்மையே சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கும் படி மக்கள் தான் விழிப்புணர்வுடன் உணர்த்த வேண்டும்.

Reply

நல்ல டீட்டெயிலான சிந்திக்க வைக்கும் பதிவு.

தனது வீட்டில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் அடுத்தவங்க பிரச்சினையை பற்றி நாம் தெரிந்து கொள்வதில் அதை மெல்லுவதில் அதிக அக்கறை காட்டுகிறோம் என்பதால்தான் ஊடகங்கள் இது போன்ற செய்திகளை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. யாருமே இதுபற்றி படிக்க முன்வரவில்லை என்றால் ஏன் வெளியிடப் போகிறார்கள்...? சிறு பத்திரிகைகள் எத்தனையோ நல்ல விஷயங்களை தாங்கி வருகின்றன. ஆனால் அவை கவனிப்பார் இன்று நின்று போய்விடுகின்றன.

தவறு மக்கள் மீதும் இருக்கிறது. மக்களும் திருந்த வேண்டும்.

Reply

நாமும் தனிமனித வாழ்க்கையில்
அதிக ஈடுபாடு கொள்ளாமலும்
பரபரப்பான செய்திகளுக்காக அலையாமலும்
இருக்கப் பழகிக் கொண்டால் நிச்சயம்
ஊடகங்கள் தன்னை மாற்ற்கி கொண்டுதானே
ஆகவேண்டும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Reply

இப்படித்துரத்தித் துரத்தித்தான் டயானாவை இழந்தார்கள்.. அத்துமீறும் ஊடகங்கள். அந்த ஊடகத்தின் தலைமை நிருவாகியை பணி நீக்கம் செய்துள்ளதால், இனி வருங்காலங்களில் இதுபோன்ற அபத்தங்கள் குறையலாம்..பார்ப்போம்.

Reply

மிக மிகச் சிந்திக்க வைக்கிறது பதிவு.ஊடகங்களால் நல்லதும் நடக்கிறதுதானே என்று வாதாட வைக்க நினைத்தாலும் குறைந்த அளவேதான் !

Reply

நாமும் இது மாதிரி செய்திகளுக்கு அதிக அக்கறை காட்டுவதனால் தான், அவர்களும் அதிககமாக இது போன்று செய்தியை வெளியிடுகிறார்கள்...

சிந்திக்க வைக்கும் பதிவு...

Reply

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே!
நன்று.
இன்று என் தளத்தில் “பைத்தியம் தெளிவதில்லை”

Replyஅனைவரும் படித்து சிந்திக்க வேண்டியது மட்டுமல்ல செயல் படுத்த வேண்டிய பதிவு
அருமை!

Reply

எல்லா ஊடகங்களும் போட்டியாளர்களுக்கு முதலில் முந்திக்கொண்டு ஏதாவது ஒரு வகையில் புதிதாக ஒரு தகவலை வெளியிட்டு மக்களை தம் வசம் ஈர்க்க நினைக்கிறார்கள். சில ஊடகங்கள் மட்டுமே உண்மையாக செயல்பட்டு மக்களை அடைகின்றன.

ஆனால் சாதாரணமாக மக்கள் அதிகமாக விரும்புவது கிசுகிசு செய்திகளை தானே? அதனால் தான் ஊடகங்களும் தனியாக இதற்கென்றே வேலைக்கு ஆள்வைத்து பிரபலங்களைத் தொடர்ந்து இந்த மாதிரி படங்களையும் வதந்திகளையும் வெளியிடுகிறார்கள். மக்களும் விழுந்தடித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் நாம் திருந்தவேண்டும்.

Reply

எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் சிட்டுக்குருவி.
இப்படிப்பட்ட ஊடககங்களால் தனக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைக்காதா என்றே அலையும் நாட்டவர்கள் தாம் இவர்கள.

பிறந்தது முதல் பெரிய இடம்... எது செய்தாலும் வெளியே தெரிந்து விடும் என்றுத் தெரிந்தும் பப்ளிக்கில் நிர்வாணமாக குளித்தது யார் உடைய தவறு..?

வதந்தி என்றால் ஊடககங்களைக் குறை சொல்லலாம். உண்மை எனும் போது...?

விடுங்கள் சிட்டு.

Reply

@ asa asath

சூப்பர் நண்பா

///////////////////////////////

சூடான முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ வரலாற்று சுவடுகள்

ஆனால் அதற்காக இவர்கள் செய்வதெல்லாம் நியாயம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது! இது போன்ற தனிமனித சுதந்திர எல்லைக்குள் மூக்கை நுழைப்பது வன்மையாக கண்டிக்கப்படகூடியது!

///////////////////////////////////////////////

மிகவும் அழகான முறையில் அர்த்தமுள்ள கருத்தினைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள் சார்... வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ Sasi Kala

மிகச் சரியான உண்மையே சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கும் படி மக்கள் தான் விழிப்புணர்வுடன் உணர்த்த வேண்டும்.

////////////////////////////////

அழகான முறையில் உற்சாகமூட்டக் கூடிய கருத்தினைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்... அக்கா
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ HOTLINKSIN.com திரட்டி

தவறு மக்கள் மீதும் இருக்கிறது. மக்களும் திருந்த வேண்டும்
/////////////////////////////

அடிப்படையில் மக்களின் ஆசையினைத் தூண்டியவர்கள் யாராக இருப்பார்கள் ? ஊடகத்தினராகத்தான் இருப்பார்கள் 21 நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய பத்திரிகைகள் அந்தரங்கங்கள் தொடர்பான செய்திகளுடன் வெளிவந்தன. இந்த பத்திரிகைகள் வெளிவருவதற்கு முன்னர் வெளிவந்த பத்திரிகைகளை மக்கள் படிக்கவில்லையா ? விரும்ப வில்லையா ?

மக்களைத்தூண்டியது இவைகள்தான் சார்...

Reply

@ Ramani

அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

////////////////////////////

நிச்சயமாக சார் நல்ல கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனாலும் தனிமனித வாழ்க்கையின் சுவாரஷ்யத்தைத் தூண்டும் விதத்தில் செயற்படுவது ஊடகமாகத்தானே இருக்கிறது. இல்லாவிட்டால் ஹரி தொடர்பான செய்திகள் எனக்குக் கூட தெரிந்திருக்காமல் அல்லவா இருந்திருக்கும். பாலாய்ப்போன ஊடகத்தினை அவதானித்ததால் தான் ஹரியின் தகவல்கள் எனக்குக் கிட்டியது. அந்த தகவலில் எனக்கு ஒரு சதவீதமும் பிரயோஜனம் கூட இல்லையே..

நல்ல கருத்துக்கும் வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

இப்படித்துரத்தித் துரத்தித்தான் டயானாவை இழந்தார்கள்.. அத்துமீறும் ஊடகங்கள். அந்த ஊடகத்தின் தலைமை நிருவாகியை பணி நீக்கம் செய்துள்ளதால், இனி வருங்காலங்களில் இதுபோன்ற அபத்தங்கள் குறையலாம்..பார்ப்போம்.

///////////////////////////////////////////

அழகான முறையில் நல்லதொரு தகவலுடன் கூடிய கருத்தினை சொல்லிச் சென்றுள்ளமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ ஹேமா

மிக மிகச் சிந்திக்க வைக்கிறது பதிவு.ஊடகங்களால் நல்லதும் நடக்கிறதுதானே என்று வாதாட வைக்க நினைத்தாலும் குறைந்த அளவேதான் !
/////////////////////////////////////////////////////

நிச்சயமாக நல்லதும் நடக்கிறதுதான். ம்ம்ம்ம் அதுவும் குறைந்தளவுதான் அதனையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

@ இரவின் புன்னகை

நாமும் இது மாதிரி செய்திகளுக்கு அதிக அக்கறை காட்டுவதனால் தான், அவர்களும் அதிககமாக இது போன்று செய்தியை வெளியிடுகிறார்கள்...

////////////////////////////////////////////////////

ஒட்டுமொத்தமாக எல்லோரையும் சொல்ல முடியாது நண்பரே இவ்வாறான செய்திகளை நிறையப் பேர் வெறுக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்...

இருந்தாலும் செய்திகளை அறிய ஆவலாய் இருப்பவர்களை விட செய்திகளை வெளியிட்டு தன்னை முதல் நிலைப்படுத்தி அடையாளப்படுத்துபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்..

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ குட்டன்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே!

//////////////////////////////////////////

சட்டனெ ஒரு வரியில் அழகான கருத்தினைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள் சகோ..
வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி

Reply

@ புலவர் சா இராமாநுசம்

அனைவரும் படித்து சிந்திக்க வேண்டியது மட்டுமல்ல செயல் படுத்த வேண்டிய பதிவு
அருமை!
////////////////////////////////////

உங்கள் கருத்துக் கண்டதில் மிக்க சந்தோஷம் ஐயா..
உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

Reply

@ ஹாலிவுட்ரசிகன்

மக்களும் விழுந்தடித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் நாம் திருந்தவேண்டும்.

///////////////////////////////////////////

இரவின் புன்னகைக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். எல்லா மக்களுக் கிசு கிசுக்களை விரும்புவர்களா இருக்க மாட்டார்கள்...

முதலில் நாம் திருந்த வேண்டுமென்றால் நாம் ஏற்கனேவே மோசமாக இருக்கிறோம் என பொருள் படுகிறது. நம்மளை இந்த மோசமான செயலுக்கு துணை போக வைத்தது யாரோ...?

ஊடகங்கள் தான் ஆரம்பத்தில் எமக்கு இந்த கிசுகிசு ஆர்வத்தைத் தூண்டையவைகள் என்பது என் தாழ்மையான கருத்து

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ அருணா செல்வம்

எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் சிட்டுக்குருவி.
இப்படிப்பட்ட ஊடககங்களால் தனக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைக்காதா என்றே அலையும் நாட்டவர்கள் தாம் இவர்கள.

/////////////////////////////////////////////

பிறந்தது முதல் பெரிய இடம் இப்படிப்பட்டவர்கள் ஏன் பிரபல்யம் அடைய நினைக்க வேண்டும் ஏற்கனவே அவர்கள் பிரபலம் தானே...

உண்மைதான் நிர்வாணமாக குளித்தார்கள். மேற்கத்தேய உலகில் நிர்வாணமாக குளித்தலென்பது ஒன்றும் புதிதில்லையே... ஆசியாவில் என்றால் இதுவொரு வித்தியாசமான செய்தியாக இருந்திருக்கும். இப்போது ஆசியாவிலும் கூட நிர்வாணமாக குளிக்க ஆரம்பித்துவிட்டார்களே...

அப்படியென்றால் எவ்வளவே பேர் நிர்வாணமாக குளிக்கிரார்கள் அவர்கள் பற்றியும் இவர்கள் செய்தி வெளியிட்டிருக்க வேண்டுமே.. இளவரசர்கள் செய்தால் மாத்திரம் அது நிர்வாணம் ஏனையவர்களுக்கு ?

Reply

அருமை..

சிந்திக்க தக்க பதிவு.............

Reply

@ esther sabi

அருமை..

சிந்திக்க தக்க பதிவு.............

/////////////////////////////////////////

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

Post a Comment