தமிழ் சமூகமும் தலைவர்கள் தெரிவும்

பொதுவாக அரசியல் பதிவுகள் எனக்கு எழுத வராது ஆனாலும் இதை எழுதுகிறேன் ஒரு சில தெளிவுகளுக்காக. இலங்கையில் சில தினங்களுக்கு முன்னர் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்
நடாத்தி முடிக்கப்பட்டது. ஆளும் கட்சி இதில் வெற்றியீட்டியது என்றும் சொல்லபடுகிறது.

சென்ற தேர்தலோடு இதனை ஒப்பிடும் போது ஆளும் கட்சியின் வெற்றி வீதத்தில் சிறியதொரு சறிவும் எதிர்க்கட்சியின் வெற்றி வீதத்தில் சிறியதொரு உயர்வும் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் இந்தச் சறிவுதான் எதிர்காலத்தில் ஆளும் கட்சியின் முழு வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும் என சில அரசியல் விமர்சகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

எதிர்காலம் பற்றிய கருத்துக்களை சற்று புறம்தள்ளிவிட்டு நடந்து முடிக்கப்பட்ட தேர்தலில் மக்களின் தெரிவுகள் பற்றியும் அரசியல் விளையாட்டுக்கள் பற்றியும் சற்று நோக்குவோம்.

குறிப்பாக இப்பதிவு எம் தமிழ் சகோதரகள் தங்களின் வாக்குப் பலத்தின் மூலம் தெரிவு செய்திருக்கும் தலைவர்கள் பற்றியும் அவர்களின் தெரிவு உண்மையானதா என்பது பற்றியும் பார்க்கப் போனால் இங்கு தமிழ் மக்களின் தெரிவு சரியானதாக இல்லையெனவும் அவர்கள் தவறிழைத்துவிட்டார்கள் எனவும் அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்ல சாதாரண பொது மக்களும் பேசிக் கொள்வதை கேட்கக் கூடியதாக இருக்கிறது.

தேர்தல் முடிவுகளில் மிகவும் பிந்தி வெளியிடப்பட்ட முடிவுகளாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளின் முடிவுகளை சொல்லலாம். இவை இரண்டு தொகுதிகளிலும் இருந்து வெளியான முடிவுதான் கிழக்கு மாகாணத்தில்  ஆளும் கட்சியின் இருப்பினை தீர்மானிக்கும் முடிவாக அமைந்தது.

அம்பாறை தொகுதியை பார்க்கும் போது அங்கு பெரும்பாண்மை சமூகமே அதிகப்படியாக இருப்பதனால் அவர்களின் வாக்குகள் பற்றி நாம் பெரிதாக அலசிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் மட்டக்களப்பு மாவட்டமும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியும் முழுக்க முழுக்க சிறுபாண்மை மக்களை அதுவும் தமிழ் மக்களைக் கொண்டுள்ள பகுதியாக இருக்கின்றது. அதுவுமில்லாமல் தமிழ் சமூகத்தை தனித்து பிரதிநித்துவப் படுத்தும் வகையில் இலங்கை தமிழரசு  கட்சியும் இங்கே போட்டியிட்டமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காணப்படுகின்றது.

சென்ற முறை தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிட வில்லை அதனால் மக்கள் அனைவரும் ஆளும் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட தலைவர்களுக்கு வாக்களித்து அதில் பூரண திருப்தியும் பெற்றுக் கொள்ளும் விதமாக முதலமைச்சரையும் ஒரு தமிழராகவே பெற்றுக் கொண்டனர். இது அவர்களின் பலத்தைக் காட்டுகிறது.

இம்முறை தேர்தல் முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தமிழரசுக் கட்சி அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருக்கிறது. இதன் மூலம் தமிழ் மக்கள் அரசையோ அல்லது அரசு சார்ந்த கட்சிகளையோ ஆதரிக்க வில்லை என்பதுவும் தம் பலத்தைத் தனித்துக் காட்ட வேண்டும் எனும் அவர்களது தூய சிந்தனையும் புலனாகிறது. ஆகவே மக்கள் ஆதரிக்கும் இந்த கட்சியிலிருந்து ஒரு முதலமைச்சரோ அல்லது அவர்கள் முலமைச்சர் விடயத்தில் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதுவும் தெளிவாகிறது. (அண்மைக்கால தமிழரசு கட்சியின் செயற்பாடுகளின் படி)

இது இப்படியிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனும் இம்முறை போட்டியிட்டமை யாவரும் அறிந்ததே. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகுவதற்கு முன்னர் ஆளும் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர் ஒரு நிலையில் மட்டக்களப்பில் ஆளும் கட்சி மூன்று ஆசனங்களைத்தான் பெற்றுக் கொள்ளும் எனும் பதட்டமும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நிலவியது.

பின்னரான முடிவுகளின் படி அதாவது மட்டக்களப்புப் தேர்தல் தொகுதியின் முடிவுகளின் பின்னர் மட்டக்களப்பில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிட்டவர்கள் மத்தியில் சந்திரகாந்தன் அவர்களே அதிகப்படியான விருப்புவாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தார் அவருக்கு அடுத்தபடியாக அமீர் அலி இருந்தார்.

இங்கு என்னுடைய வினா என்னவெனில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆட்சியமைக்கக் (தமிழரசுக் கட்சி) கூடிய சக்தியிருந்தும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி மக்கள் அதனை விரும்பவில்லையா ? 

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதி முடிவுக்கு முன்னரிருந்தே தமிழரசுக் கட்சிக்கு ஆறு ஆசனங்கள் கிடைப்பது உறுதியாகியிருந்தது. ஆனால் ஆளும் கட்சிக்கு மூன்று ஆசனங்கள் தான் கிடைக்குமென்றிருந்தது. மட்டக்களப்பு தேர்தல் தொகுதி முடிவுகளின் பின்னர் ஆளும் கட்சிக்கு நான்கு ஆசனங்களும் தமிழரசுக்கு அதே ஆறு ஆசனங்களுமே கிடைத்திருந்தது. மேலதிகமாக கிடைத்த அந்த ஒரு ஆசனத்தையும் மட்டக்களப்பு மக்கள் ஏன் தமிழரசுக் கட்சிக்கு வழங்கவில்லை. தமிழரசு ஆட்சியமைப்பதை மட்டக்களப்பில் வசிக்கும் தமிழ் மக்கள் விரும்பவில்லையா ?

அப்படியில்லையாயின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனைத்தான் விருப்புகிறார்களா ? காரணம் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முடிவுகளின் பின்னர் அரசுக்கு கிடைத்த நான்காவது ஆசனமாக சந்திரகாந்தன் தான் இருக்கிறார் அதுவும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று.

இங்கு நகைச்சுவைக்குறிய விடயம் என்னவென்றால் சந்திரகாந்தனை விரும்பும் மக்கள் அனைவரும் வாக்களிப்பின் போது சந்திரகாந்தனுக்கு மட்டுமே வாக்களித்துள்ளார்கள் என்பதுதான். விருப்பு வாக்குகளின் பட்டியலைப் பார்க்கும் போது முதலாவதாக சந்திரகாந்தனும்(22,338) அடுத்து அமீரலியும்(21,271) அதற்கடுத்து ஷிப்லியும்(20,407) இறுதியாக சுபையிரும் (17,903) அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து புலப்படுவது என்ன ? தமிழ் மக்களுக்கு வாக்களிக்கும் முறை தெரியாதா ? அல்லது சந்திரகாந்தன் மீது மக்கள் அதிகளவான நம்பிக்கை வைத்துள்ளார்களா ?

சந்திரகாந்தனுக்கு வாக்களித்த மக்கள் ஏன் அவரோடு சேர்ந்து போட்டியிட்ட ஏனைய தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை. ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் மக்கள் மத்தியில் சந்திரகாந்தனுக்கு(22,338) அடுத்ததாக அதிகமாக விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பவர் நாகலிங்கம் திராவியம் (9143). இவருக்கும் சந்திரகாந்தனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகப் பெறிய இடைவெளியில் இருக்கிறது.

இதிலிருந்து நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் ஏதோ சதித்திட்டம் நடத்தப்பட்டிருப்பது புலனாகிறது இப்படியான ஒரு தேர்தல் எதிர்காலத்திலும் தேவையா ? பெயரளவில் மட்டும் தேர்தல் நடாத்துவதென்றால் அந்தத் தேர்தலில் என்ன பலன் கிட்டப் போகிறது. பண விரயமும் மற்றவர்களின் சாபத்தை பெற்றுக் கொண்டதுமே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

ஆகவே மக்களின் தெரிவுகளிலே விளையாடும் அரசியல் தலைவர்கள் இன்னுமின்னும் எமக்குத் தேவைதானா ?

இந்த விளையாட்டில் அரசு தொடர்புபட்டிருக்குமென்றால் சந்திரகாந்தனிடமிருந்து அரசு எதிர்பார்ப்பது என்ன ?

இங்கு சந்திரகாந்தனின் செயற்பாடுகள் பற்றியும் நாம் அலச வேண்டும். இவரின் மூலம் தமிழ் சமூகம் பெற்றுக் கொண்ட நலன்கள் எவ்வளவு என்பதினையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே சிறு பிள்ளையிடம் கொடுக்கப்பட்ட இனிப்புப் பொருளைப் போல தலைமைத்துவத்தைத் தெரிவு செய்யும் பொருப்பை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள் அரசியல் தலைவர்களாயிருந்தவர்கள். இவர்களே தலைமைத்துவத்தை சர்வாதிகாரமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் அப்போ மக்கள் எதற்கு ?


24 கருத்துரைகள்

அருமை அருமை இதைவிட
எப்படிச் சிறப்பாக இருக்கும் அரசியல் கட்டுரை
அருமையான அலசல்
தொடர வாழ்த்துக்கள்

Reply

குருவியாரே என்று நான் அழைப்பதை நீருபித்து விட்டீர்களே...அரசியல் கட்டுரை எழுதி.

Reply
This comment has been removed by the author.

நல்ல ஆக்கம் சகோ.. சிந்திக்க வைக்கிறது!

Reply

நன்கு விளக்கமான அரசியல் கட்டுரை!நன்று

Reply

@ Ramani

அருமை அருமை இதைவிட
எப்படிச் சிறப்பாக இருக்கும் அரசியல் கட்டுரை
அருமையான அலசல்
தொடர வாழ்த்துக்கள்

//////////////////////////////////

சூடான முதல் வருகைக்கும் அழகாக எண்ணத்தி பதிந்து சென்றமைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்
உங்கள் பின்னூட்டங்கள் மேலும் உற்சாகமளிக்கிறது

Reply

@ மனசாட்சி™

குருவியாரே என்று நான் அழைப்பதை நீருபித்து விட்டீர்களே...அரசியல் கட்டுரை எழுதி.
////////////////////////////////////////////////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வளவுக்கு மொக்கையாவா எழுதியிருக்கிறேன் ஏதோ நம்மலால முடிந்ததப்பா..

வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி பாஸ்

Reply

@ வரலாற்று சுவடுகள்

நல்ல ஆக்கம் சகோ.. சிந்திக்க வைக்கிறது!

//////////////////////////////////////////

வருகைக்கும் அழகான எண்ணப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ குட்டன்

நன்கு விளக்கமான அரசியல் கட்டுரை!நன்று

////////////////////////////////////////////

அழகான எண்ணப்பகிர்வுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ...

Reply

அரசியல் கட்டுரையா....?

நான் பறந்திடுறேன் சிட்டுக்குருவி.

Reply

அருமையான அரசியல் பதிவு மக்கள் சந்திரகாந்தனிடம் ஏதோ எதிர்பார்க்கின்றார்கள் தொடர்ந்து ஊடகம் சொல்வதை விட மக்கள் யாதார்த்தம் புரிந்தவர்கள் போல!ம்ம்ம்

Reply

**இவர்களே தலைமைத்துவத்தை சர்வாதிகாரமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் அப்போ மக்கள் எதற்கு ?**

நம் அரசியல்.முழுமையாக அலசிவிட்டு முத்தாய்ப்பாய் நீங்களே முடிவும் சொல்லிவிட்டீர்கள் சிட்டு....அருமை !

Reply

எதுவும் செய்ய இயலாதநிலையில் தான் மக்களும் வாக்கு தெரிவினை பயன்படுத்துகிறார்கள் ....அதிலும் மோசடி செய்கிறது அரசு.சந்திரகாந்தனை முன் நிறுத்துவதன் காரணம்
1 )கருணாவுக்கு ஒரு சிறிய அழுத்தம்
2 )முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆப்பு
3)உலக நாடுகளுக்கு தங்கள் கட்சியில் ஒரு தமிழன் அதிக விருப்பு வாக்கில் தெரிவு செய்யப்பட்டதை சொல்லுதல்
போன்ற பல காரணிகளை குறிப்பிடலாம்.
அண்மையில் கருணா கூட படிப்பறிவில்லாத முட்டாளுக்கு (பிள்ளையான் )வாக்களிக்கவேண்டாம் என்று கூறி இருந்தான்.
அரசின் கபடத்தனங்கள் இனி வரும் காலங்களில் தெரியவரும் .......

Reply

இலங்கை அரசியல் எனக்குப் புரியாததால் சில கருத்துகள் புரிபடாமல் போகிறது...

Reply

அரசியல் கட்டுரை நன்று.உண்மையை தெரிந்தது.

Reply

@ AROUNA SELVAME

அரசியல் கட்டுரையா....?

நான் பறந்திடுறேன் சிட்டுக்குருவி.

/////////////////////////////////////////

ஐயோ மாட்டிக்காம எஸ் ஆகிட்டீங்களே..
சரி வந்து போனதுக்கு மிக்க நன்றி

Reply

@ தனிமரம்

அருமையான அரசியல் பதிவு மக்கள் சந்திரகாந்தனிடம் ஏதோ எதிர்பார்க்கின்றார்கள் தொடர்ந்து ஊடகம் சொல்வதை விட மக்கள் யாதார்த்தம் புரிந்தவர்கள் போல!ம்ம்ம்
/////////////////////////////////////

வருகைக்கும் எண்ணத்தை அழகாக பதிந்து சென்றமைக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ ஹேமா

நம் அரசியல்.முழுமையாக அலசிவிட்டு முத்தாய்ப்பாய் நீங்களே முடிவும் சொல்லிவிட்டீர்கள் சிட்டு....அருமை !
///////////////////////////////////////

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

@ நெற்கொழுதாசன்

அரசின் கபடத்தனங்கள் இனி வரும் காலங்களில் தெரியவரும் .......

//////////////////////////////

எண்ணத்தைப் பதிந்து சென்றமைக்கு மிக்க நன்றி சகோ

Reply

@ சீனு

இலங்கை அரசியல் எனக்குப் புரியாததால் சில கருத்துகள் புரிபடாமல் போகிறது...

///////////////////////////////////////////

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..
ஆமா இலங்கை அரசியல் இலங்கையில இருக்கிற எங்களுக்கே புரியல்ல உங்களுக்கு எப்பிடி... :)

Reply

@ indrayavanam.blogspot.com

அரசியல் கட்டுரை நன்று.உண்மையை தெரிந்தது.

//////////////////////////////

வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..
உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

வடக்கு மாகாணத்துக்கும் தேர்தல் நடந்து முதலமைச்சர் தெரிவாி ஆட்சி நடந்தால் சந்தோசம்...........

Reply

நன்றாக அலசி, முடிவையும் தாங்களே கூறி விட்டீர்கள்... நல்லது....

Reply

Post a Comment