பிழையான தீர்வுகளை தமிழ் சமூகம் முன் வைக்கிறதா...?

வாழ்க்கையென்கிறது போராட்டமிகுந்தது என்று அனுபவப்பட்ட பெரியவங்க அடிக்கடி சொல்லுவது என் காதுகளில் விழாமலில்லை.இந்தப் இரத்தமில்லாப் போராட்டத்தில் (?) சந்தோஷங்களை எட்டமுடியாத மரக்
கொப்புகளில் வைத்துவிட்டு இன்னல்களை விரும்பியோ விரும்பாமலோ தனது செல்லப் பிள்ளைகளாக தத்தெடுத்து எட்டமுடியாத உயரத்தில் தன்னாலேயே வைக்கப்பட்ட சந்தோஷங்களை அடைவதற்கு தத்துப் பிள்ளைகளைக் கொண்டு முயற்சிக்கின்றனர் பலர்...

இந்த இன்னல்கள் மிகுந்த போராட்டம் ஏன் அவசியப்படுகிறது என்று சிந்திக்கும் போது அங்கு முதன்மையாக தென்படும் காரணம் பணமாகத்தான் இருக்கிறது. பணம் இல்லாமல் வாழ்க்கையில்லை என்று பணத்தினில் அதிக மோகம் கொண்ட சிலர் கூறுவதைக் கேட்டு பலரது உள்ளங்கள் பணத்தின் பக்கம் திரும்புகின்றன

உள்ளங்கள் திரும்புவதில் எந்த வித தவறுமில்லை காரணம் உள்ளம் (மனது) என்பது குரங்கைப் போல என பலர் திண்ணமாகச் சொல்லியுள்ளனர்.அலைபாயக் கூடிய தன்மையை வைத்தே மனதினை குரங்குடன் சேர்க்கின்றனர் போலும்.பணத்தின் மீது திருப்பப்பட்ட உள்ளங்கள் அந்த பணத்தினை அடைந்து கொள்வதற்காக பலவாறு முயற்சிக்கின்றனர்.

சிலர் தங்களுடைய அறிவினை மூலதனமாகக் கொண்டு பணமீட்டுகின்றனர். சிலர் பணத்தினை அடைய இன்னும் சில பணங்களினை மூலதனமாகவும் கொள்கின்றனர்.சிலர் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டு தன் இலட்சியத்தை அடைந்தும் கொள்கின்றனர். இங்கு நான் திருட்டோ அல்லது கொள்ளையடித்தலோ லஞ்சம் வாங்குதலோ சரி அல்லது தவறு என்று சொல்லவரவில்லை அப்படிப் பார்க்கப் போனால் உலகின் முதல் தர பணக்காரர்களில் பலர் திருடர்களே...

இப்போ இப்படிப்பட்ட செயல்களின் மூலம் தன் இலட்சியத்தை அடைந்து மிகவும் செல்வச் செழிப்போடு வாழ்கின்ற மனிதர்களில் சிலர் எவ்வளவுதான் புகழ்ச்சியின் மற்றும் செல்வத்தின் உச்சியில் இருந்தாலும் தன்னுடைய பழைய வாழ்வினை  மறக்காமலிருக்கின்றனர் பில்கேட்ஸைப் போல. சிலர் மறந்தும் விடுகின்றனர்.ஆனால் இவர்கள் பழைய நிலையினை மறந்தாலும் மறக்காவிட்டாலும் சமூகம் என்ற ஒன்று நிச்சயமாக இவர்களின் இரு நிலைமையினையும் மறக்காது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன.

அண்மையில் பஸ் பிரயாணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன் மதிய நேரமாகவிருந்தது கொளுத்தும் வெயிலும் கூட அதுவுமில்லாமல் பஸ்ஸினுள் நிறையக் கூட்டம் வேற...இப்படியான இன்னலினை நான் மட்டுமல்ல பஸ்ஸில் பயணித்த அனைவரும் அனுபவித்துக் கொண்டு வருகின்றனர் இந்த நிலையிலும் என் அருகிலிருக்கும் இருவர் உரையாடுவதை நான் கவனிக்கத் தவறவில்லை

அவர்களின் பேச்சு இப்படியாகவிருந்தது " இந்த பஸ் முதலாளி இருக்கிறானே ஆரம்பத்தில எங்கயாவது பிரயாணம் போகனும்னா என்கிட்ட வந்து சேர்ட் சாரம் வாங்கி கொண்டுதான் போவான்.வீட்டுச் செலவுக்கு காசில்லாம மரங்களில் ஏறி காய்கள் பறித்துப் பிழைப்பு நடத்தினவன் இன்றைக்கு எப்படியிருக்கிறான் பாரு எல்லாம் குழப்ப நேரத்தில எடுத்த காசை வச்சித்தான் " என்பதாக இன்னும் அந்த முதலாளியைப் பற்றி அவருடைய கடந்தகால வாழ்வு பற்றி மிகவும் சுவாரஷ்யாமாக பேசிக்கொண்டிருந்தனர்.

எனதூரின் சில பிரபலங்களைப் பற்றிய பேச்சுக்கள் என் வீட்டில் எடுபட்டாலும் கூட அவர் இப்படிப் பட்டவர் இவர் அப்படிப்பட்டவர் ஆரம்பத்தில இப்படியெல்லாம் இருந்தார்கள் என்ற வார்த்தைப் பிரயோகங்களும் என் வீட்டுப் பெரியவர்களின் நாவிலிருந்து வெளிப்படுவதை நான் கேட்டுள்ளேன்.

இந்த பேச்சுக்கள் தொடர்புடையவர்களின் செவிகளுக்கு கிடைக்குமாயின் அவர்களின் உள்ளத்தின் நிலை என்னவாயிருக்கும் ...?

போராட்டமிகுந்த வாழ்வில் வெற்றிபெற பல்வேறு யுக்திகளை  கையாளுவது மனித இயல்புதான். ஒருகட்டத்தில் அவன் திருடனாக கொலை கொள்ளைக்காரனாக இருந்தான். அதன் பின் அவ்விடயங்களை அவன் தொடரவில்லை (?) அதன் மூலம் கிடைத்த பயனை தன்னுடைய அறிவைக் கொண்டு சிறந்த முறையில் பயன்படுத்தி இன்று பல மடங்குகளாக அதிகரித்துள்ளான்.

இந்த நிலையில் அவனுடைய சிறந்த அறிவினைப் பாராட்டிப் அவனைப் புகழ்ந்து பேசுவதா..? அல்லது அவனால் மேற்கொள்ளப் பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி அவனுடைய முதுகுக்குப் பின்னால் புறம் பேசுவதா..? இதில் எந்த  நிலையில் சமூகமிருப்பது எதிர்கால சந்ததிகளுக்கு ஆரோக்கியமானது...

என்னுடைய நெஞ்சத்தின் நிலையினையும் இங்கு சொல்கிறேன் இதில் சரியான தெளிவினைப் பெறுவது எனக்குக் கடினமாக இருக்கிறது

புகழ்ந்து பேசும் நிலையினை சமூகம் கையிலெடுக்குமாயின் எதிர்காலத்தில் அவனைப் போன்ற குற்ற செயல்களில் ஈடு படும் பலரிற்கு விதையிடுவதாக அமைந்துவிடும்.மேலும் குற்றங்கள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் சந்தோஷம் என்பது ஒரு சிலரின் உள்ளங்களில் மட்டுமே விளையாடித்திரியும் நிலையும் ஏற்படும். சமூகத்தின்  சில ஓட்டைகளை தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் ஒரு சிலருக்கு இச் செயற்பாடு மேலும் வலுவூட்டும்

புறம்பேசும் நிலையில் சமூகம் இருக்குமேயானால் அவனுடய சந்ததிகள் எதிர்காலத்தில் சமூகத்தின் மத்தியில் கௌரவமாக வாழ்வதற்கு சிறந்த களம் இல்லாமல் போகும் இதனால் அவனுடைய சந்ததிகளில் சிலவற்றினை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி பல வித இன்னல்களுக்கு ஆளாக்கிய குற்றத்தினை சமூகம் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்...

எந்த நிலையில் நோக்கினாலும் கடைசியாக சமூகமே குற்றமிழைப்பதாக முடிகிறது. ஆகவே தன்னுடைய ஆசைகளை வளர்த்துக் கொண்ட ஒருவன் தன் ஆசைகளை அடைவதற்கு முயற்சிக்காமலிருக்க வேண்டுமென்று சமூகம் முடிவெடுக்கிறதா..?அவனுடைய ஆசைகள் அவனுள் புதைந்து மக்கி மறைந்து போவதற்கு சமூகம் உரமிடுகிறதா...? சில வேளைகளில் அவனுடைய ஆசைகளில் சமூகத்துக்குப் பிரயோசனமான சிலதுகளும் கிடைக்கலாமல்லவா..?

நிச்சயமாக சமூகத்துக்குப் பிரயோசனமான சிலதுகளை ஆசைகளை எய்திய பின் அவன் செய்தாலும் அவனால் பாதிக்கப் பட்டவர்கள் அவன் மீது வெறுப்புக் கொண்ட நிலையிலேயே இருப்பார்கள் இவர்களும் சமூகத்தினுள் அடங்குகிறார்களே ..!

இதில் சமூகம் எந்த நிலையில் இருப்பது ஆரோக்கியமானது என்பது பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாருங்கள்35 கருத்துரைகள்

சமூகம் பத்தின பார்வை...அருமை..

Reply

// அவனால் பாதிக்கப் பட்டவர்கள் அவன் மீது வெறுப்புக் கொண்ட நிலையிலேயே இருப்பார்கள்// இந்தக் கருத்துகளுடன் முழுவதும் ஒத்துப் போகிறேன்... அருமையான படைப்பு

Reply

ஆழமான பார்வை... பதிவு...

Reply

ஆசை அவரவர் மனதைப் பொறுத்து மாறும்... அதற்கு அளவேது...?

அடுத்தவர்களை புகழ்வதோ, பிறகு புறம் பேசுவதோ, etc, etc, இவையெல்லாம் நாம் ஏன் செய்ய வேண்டும்...?

மனிதனுக்கு வேண்டிய மூன்று முத்துக்கள் என்ன ? அலசி உள்ளேன்...
தனி மனித ஒழுக்கம் முக்கியம்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
(த.ம. 1)

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Reply

எனக்கு பிடித்தது உங்களுக்கும் பிடிக்கும் என எப்படி கூற முடியும்?

அதுக்கு இருக்கவே இருக்கு சமூகம். எனக்கு பிடிக்காதை நீங்கள் செய்தால் பலியை தூக்கி சமூகத்தில் போட்டு தடையை உருவாக்கு...

என்ன புரியுதா..

Reply

சிட்டுக்குருவி....

சமுகம் என்பது ஒருவனை
வாழ்ந்தாலும் ஏசும்.
தாழ்ந்தாலும் ஏசும் தான்.

அதைப்பற்றிக் கவலைப்படாமல் மனிதன்
மனிதாபத்தோடு வாழ்ந்தால் சமுதாயத்திற்கு
பயப்படாமல் என்றைக்குமே
தலைநிமிர்ந்து வாழலாம்.

மனிதன் கவலை அடையும் பொழுது பணம்என்பது
ஆறுதல் அளிக்காது. அங்கே இன்னொறு மனித மனம்தான்
அவனுக்கு ஆறுதல்.
நல்ல விசயத்தை அலசினீர்கள்.
வாழ்த்துக்கள் சிட்டுக்குருவி.

Reply

மனிதன்
மனிதாபத்தோடு வாழ்ந்தால் சமுதாயத்திற்கு
பயப்படாமல் என்றைக்குமே
தலைநிமிர்ந்து வாழலாம்./// உண்மையா?

மனிதாபத்தோடு வாழ இந்த சமுகம் ஒத்துழைப்பது இல்லை நண்பரே..

Reply

வணக்கம் கருண் அவர்களே...

சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல்
மனிதாபத்துடன் வாழ்ந்து பாருங்கள்.
உண்மை புரியும்.

(உங்கள் வலையைத் திறக்க முடியவில்லை. துள்ளுகிறது நண்பரே... கவனியுங்கள். நன்றி)

Reply

வணக்கம் சொந்தமே!நியாயமான அலசல்.இலட்சியங்களை எட்டிப்பிடிக்க எவ்வளவோ போராட வேண்டியுள்ளது.அதன் பின்னணியும் நேர்மையானதா இருந்தால் அந்த வெற்றி அர்த்தப்படும்.அடுத்தவன் வயிற்றிலடித்து,தான் கனவு கோர்தால் அழிவே ககதி.சமுதாயம் ஒருதரம் பேசும்,மறுதரம் மௌனிக்கும்.இது அதன் சாயல்.நாம் நம்பணியை செய்வோம்.அவரவர் வினை அவரவர் வாசலில் தான் சுற்றியபடி நிற்கும்.
சந்திப்போம் சொந்தமே!பொதுக்கண்ணோட்டம் சார் இப்பதிவிற்காய் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Reply

ரொம்ப நாளைக்கப்புறமா உங்கள் பின்னூட்டம் காண்பது மிக்க சந்தோஷம் சகோ..
அழகான உங்கள் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள முதன் முதலில் வருகைதந்தமைக்கு மிக்க நன்றி சந்திப்போம்

Reply

உங்கள் எண்ணங்களை அழகான பின்னூட்டமாக இட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி சகோ...

Reply

ஒரே வார்த்தையில் ஆழமான பின்னூட்டமிட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி சகோ

Reply

ம்ம்ம்ம்ம்ம்ம் சமூகம் குறித்த உங்கள் எண்ணப்பகிர்வு சிந்திக்க தூண்டுகிறது அடுத்தவரை புகழ்வது எதற்கு என்ற வினா உன்மையில் சரியானதாக எனக்கு தென்படவில்லை சில வேளைகளில் நாம் புகழ்வதன் மூலம் சமூகத்துக்கு சாதகமான ஒருவராக அவர் மாறினால் அது நல்லதொரு செயற்பாடாகிற்றே
வாக்களிப்புக்கும் எண்ணத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி சார்

Reply

மனிதன் கவலை அடையும் பொழுது பணம்என்பது
ஆறுதல் அளிக்காது/////////

ஆனால் இங்கு மனிதனுக்கு கவலையே பணம் பற்றித்தானே பணமிருந்தால் தானே மனித மனம் தேடிவருகிறது என்பதற்காகத்தானே அவன் தவறுகளின் பக்கம் திரும்ம்பி பணமீட்ட முயலுகிறான்...?

Reply

ரொம்ப நாளைக்கப்புறமா உங்கள் பின்னூட்டம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி கருண் சார்....
இங்கு கருண்சாரின் வினாவுக்கு நானும் உரமிடுகிறேன்.
சமூதாயத்தைப் பற்றி கவலைப்படாமல் மனிதாபத்துடன் வாழ்தலென்பது சிரமமான விடயமாச்சே.....:(

சரி சமூகத்தின் ஒரு அங்கமான உறவுகள் கூட மனிதாபத்துடன் வாழ்பவர்களை கேலியாக பார்க்கின்றனரே.......

Reply

அவரவர் வினை அவரவர் வாசலில் தான் சுற்றியபடி நிற்கும்.////////

இதன்மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கு இது பொருந்தும் ஆனாலும் குறிப்பிட்ட நபரால் பாதிக்கப் பட்டவர்களின் நிலை அது மீள முடியாத பாதிப்பாகவிருந்தால்...?

அலசலுக்கு உரமிட்டமைக்கு மிக்க நன்றி சந்திப்போம்

Reply

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஏசும் சமூகம் இது! நம் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டியதுதான்! சிறப்பான அலசல்! நன்றி!

இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

Reply

அது சரி..பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் வலி புரியும்.

Reply

அநேகமாக இந்தக் கதை பெரிசுகள் கூடும் நேரத்தில் வரும். என்ன தான் பிரச்சினை நேரத்தில் கையில் லட்சக்கணக்கில் காசு கிடைத்தாலும், திறமையிருந்தால் தான் அது கையில் நீடித்திருக்கும். எனவே அவனை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

மற்றவன் வாழ்க்கையில் மூக்கை நுழைத்து ஆராய்ச்சி பண்ணுவதை விட்டுவிட்டு தன் வாழ்க்கையை ஒவ்வொருவனும் செதுக்க ஆரம்பித்தால் பிரச்சினை எதுவுமில்லை.

Reply

உண்மை உண்மை குருவியாரே! புகழ்ச்சி பற்றிய இங்கல் கருத்தை ஆமோதிக்கிறேன்!

Reply

pirachanaikal alasiya vitham-
nantru!

aanaal kettaseyalkal enpathu-
manitha iyalpu!

athileye iruppathu-
miruka seyal!

thirunthuvom!
thirunthalaam!

Reply

ஒன்னுமே புரியல்ல.......
ஆனா ஒன்னு புரியுது ஏமாளிகாளாக சமூகத்தை வைத்துக் கொள்ளலான் என்பதுதான்...
எண்ணப்பகிருவ்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாஸ்

Reply

மனிதாபிமானத்தோடு வாழ்ந்தால் பைத்தியக்காரப்பட்டம்தான் கிடைக்கிறது.உங்கள் ஆழமான தேடல் யோசிக்கவைக்கிறது !

Reply

அழகான எண்ணப்பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.....

Reply

ஆணித்தரமாக சொல்லவேண்டியதொன்றுதான்......அடுத்தவன் பிரச்சனை நமக்கு தேவையில்லை என்றிருப்பது.......

அழகான எண்ணப்பகிர்வுக்கு மிக்க நன்றி ரசிகா

Reply

மனித இயல்புதான் கெட்டசெயல் ....திருந்த முயற்சிக்க வேண்டும் திருந்த முயற்சிப்பவனை சமூகம் திருந்த விடுகிறாதா....

அழகான எண்ணப்பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே

Reply

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மனிதாபிமானம் என்பது மிகவும் கெட்டதொன்றாகத்தான் இந்த காலத்தில் கருதப்படுகிறது அப்போ நடுநிலையான சமூகத்தினை காண்பது இந்த சந்ததியினருக்கு சிரமம் தான்.....

அழகான எண்ணப்பகிர்வுக்கு மிக்க நன்றி

Reply

வருகைக்கும் என் கருத்துக்கு உரமிட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே...

Reply

சபாஸ் சிட்டு.. முதலில் இந்த பதிவிற்கு..

அடுத்து
இன்னொரு பிரபலம் ஆக சர்ச்சையான வழியை தேர்ந்தெடுத்த சில பதிவர்களின் பதிவிற்கு நீங்க போட்ட கமேண்டிட்கு.. சபாஸ் சபாஸ்.. சகிக்க முடியாத சில கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு சாட்டையடி கொடுத்து விட்டு வந்து விட்டீர்கள்.. நண்பா இன்னொரு வேண்டுகோள் உன்னையும் வீம்புக்குள் இழுப்பார்கள் இனியும் பின்னூட்டம் இட வேண்டாம்.. சமுக பார்வை என்ற பெயரில் சாக்கடைக்கு போகும் வழி அது நமக்கு வேண்டாம்..

Reply

நல்ல பதிவு. வாழ்த்துக்கள் உள்ளமே. எனது தளத்தில்:
http://newsigaram.blogspot.com/2012/08/ulagaalivu-02.html#.UCEwevYgeKK

Reply

அருமையான பதிவு நுகர்வு கலாச்சரத்திற்கு மனிதன் கொடுக்கின்ற விலைகளின் பட்டியல் நீளம்

பகிர்வுக்கு நன்றி சகோதரரே

தமிழ்மணம் 5

Reply

@ ஹாரி பாட்டர்....
அழகான எண்ணப்பகிர்விற்கு மிக்க நன்றி நண்பா....
அவர்களுக்கு பித்துப் பிடித்துவிட்டது போல் தோன்றுகிறது... பதிவிடுவதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன அவைகள் இவர்களின் கண்களுக்கு புலப்படாது போல....

வருகைக்கும் அழகான எண்ணப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ sigaram bharathi
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி உறவே சந்திப்போம்

Reply

@ ஹைதர் அலி
அழகான எண்ணப்பகிர்வுக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சகோ..

Reply

Post a Comment