யாரிட்டையும் சொல்லிடாதேயுங்கோ......இது இரகசியம்

இன்றைய பதிவில் இணையத்தில் உலா வரும் போது என்னுடைய கண்களுக்கு புலப்பட்ட ஒரு சில புகைப்படங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளாம் என ஆசை கொள்கிறேன்.
எல்லாம் ஒரு ப்ளாக்கர் (சமூக) சேவை நன் நோக்கத்தில் தான் பகிர்ந்து கொள்கிறேன். பொது அறிவு தொடர்பான விடயங்களை தான் மட்டும் தெரிந்து வைத்திருப்பது மகா தப்பு என்னு எங்க அப்பத்தா சொல்லியிருக்கிறாவு அதனால இத உங்களுடன் பகிர்ந்துக்கிறேன் நீங்களும் உங்க ஜென்ரல் நொலேஜ நல்லா வளர்த்துக்கோங்க.........

உலகத்தின் முதலாவது மோட்டார் சைக்கிள் (1885)

டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப் படும் இந்த வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார் சைக்கிளாகவும் பெற்றோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகணமாகவும் காணப்பட்டது.

உலகத்தின் முதலாவது டிஜிடல் கமெரா (1975)


1975 டிசம்பர்களில் கொடக் (kodak) நிறுவனத்தின் தொழிநுட்பவியலாளர்களால் 0.01 மெகா பிக்ஸல் கொண்ட முதலாவது டிஜிடல் கெமரா அறிமுகப்படுத்தப் பட்டது.இதிலேயே வீடியோக்களையும் பதிவு செய்ய முடிந்தது மேலும் பிடிக்கப் பட்ட புகைப்படங்களை விரைவாக பிரிண்ட் செய்யக்கூடிய வசதியையும் இது கொண்டிருந்தமை அப்போதிருந்த தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சியைக் காட்டுகிறது.

உலகத்தின் அதிக விலையுயர்ந்த சைக்கிள் 2008

 
$ 114 464 (டொலர்) பெறுமதி கொண்ட சைக்கிளினை ஸ்கெண்டினேவியன் டிசைன் நிறுவனம் 2008 களில் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் விலையுயர்வுக்குக் காரணம் இதில் பயன்படுத்தப்ட்டுள்ள தட்டுக்கள் அணைத்தும் 24 கரட் தங்கமாகும். இந்த தயாரிப்புகளில் 5 மற்றுமே இதுவரை டுபாய்,ரஷ்யா,  இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உலகின் அதிக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்
$ 275 000 (டொலர்) பெறுமதியான இம் மோட்டார் சைக்கிள் முற்று முழுவதுமாக டைட்டேனியத்தினால் செய்யப்பட்டுள்ளது. 


40 கருத்துரைகள்

படம் 2, 4, 6 ம் காலி.., எனக்கு தெரியவில்லை நண்பரே! :(

Reply

அருமையான தகவல்.

Reply

அடேங்கப்பா......

அறிய வகை தகவல் எனக்கு - நன்றி

Reply

படங்களும் தகவலும் அருமை .. அந்த முதல் மோட்டர் சைக்கிளில் ஒரு முறை சென்னைவீதிகளை உலா வந்தால் போதும் எனக்கு !

Reply

நல்லதொரு தொகுப்பு.... பாராட்டுக்கள்...

நன்றி…
(த.ம. 1)

Reply

பார்க்கவே ஆச்சர்யப்பட வைக்கும்
படங்களும் தகவல்களும்...
எப்படியெல்லாம் மாறிப்போச்சு காலம்னு
பிரமிக்க வைக்குது..

Reply

தங்கத்தில் சைக்கிள் புதிய தகவல்!ம்ம்

Reply

சிறப்பான தகவல்களும் படன்களும்! பயனுள்ள பதிவு!வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

Reply

அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி விரைவில் இணைத்து விடுகிறேன்

Reply

என்ன தப்பு நடந்திருக்கிறது என்று தெரியவில்லை நண்பரே ...திருத்துவதற்கு முயற்சிக்கிறேன்
வருகைக்கும் குறையினை சொல்லிச் சென்றமைக்கும் மிக்க நன்றி

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

அரியவகைத் தகவலை அறிய்வைத்த பெருமை நான் தொகுத்த இணையத்தளங்களின் உரிமையாளருக்கே சேரட்டும்.....
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி பாஸ்

Reply

உங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்
உங்கள் ஆசையை நிறைவேற்ற இந்தப் பூமியில் ஒருவன் பிறக்காமலா போயிடுவான்

முதல் வருகை தொடர்வருகையானால் மேலும் சந்தோஷம்

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

இப்பிடி எல்லாமா இருந்திச்சு????வாழ்த்துக்கள் சிட்டுஃ..:)

Reply

அரிய படங்கள்
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
படத்திலாவது பார்த்துவைப்போம்

Reply

படங்களுடன் சேர்த்துக் கொடுத்த விளக்கமும் அருமை நண்பா

// அரிய படங்கள்
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி // ரமணி சார் சொல்லியது முற்றிலும் சரியே

Reply

உங்கட அப்பத்தா நல்லாத்தான் சொல்லியிருக்கிறா...:).

படங்கள் நன்றாக இருக்கே.... இதில, நீங்க எதை வாங்குவதாக யோசித்திருக்கிறீங்க சிட்டு?:)

Reply

உண்மைதான் சார் காலம் ரொம்ப மாறிப் போச்சு
அழகான பிரம்மிப்பான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்

Reply

புதிய தகவலை புதுப்பித்த பெருமை நான் சுட்ட வலைத்தளத்துக்கே போய் சேர வேண்டும்.....
வருகைக்கும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ

Reply

ஆசையாக வந்து ஆர்வத்தோடு கருத்துக்களை பரிமாறிக் கொண்ட நண்பருக்கு நன்றிகள்

Reply

வருகைக்கும் கருத்தினை ஜாடையில் பரிமாரியமைக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

ஆமா இப்பிடியெல்லாம் இருந்துச்சு இனிமேல் எப்பிடியெல்லாம் இருக்கப் போகுதோ தெரியல்ல...
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Reply

அரிய படங்களை ஆர்வத்தோடு அறிந்து அதன் பலன் பெற்று கருத்த்ட்டமைக்கு மிக்க நன்றி சார்

Reply

அரிய படங்களை ஆர்வத்தோடு அறிந்து அதன் பலன் பெற்று கருத்த்ட்டமைக்கு மிக்க நன்றி நண்பா

Reply

நல்லாச் சொன்னாத்தான் அவவுக்கு பேரு அப்பத்தா....:)
எல்லாத்தையுமே வாங்கலாம் என்னு ஐடியா வச்சிருக்கிறேன் அதற்கு முதல் ஒரு வேலை இருக்கு..........உலக வங்கிய ஆட்டயைப் போடனும் ....

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மெடம்

Reply

அரிய படங்களை அறிந்து கொள்ள வந்தமைக்கு மிக்க நன்றி சகோ...

Reply

அறிய படங்கள். அனைத்து தகவல்களும் புதிது நண்பரே...

Reply

அரிய புகைப்படங்கள். அறிய என்று பிழையாக எழுதிவிட்டேன்...

Reply

நண்பரே, நாம் பதிவை பதிவேற்றும் போதோ அல்லது படிக்கும் போதோ நெட்வொர்க் இணைப்பு மெதுவாக இருந்தால் இப்படி பிழை ஏற்ப்படுகிறது நண்பரே...

Reply

நல்லதொரு திரட்டல் சகோ... பல படங்கள் காலப் பொக்கிசமானவை..

Reply

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா..
நாங்கெல்லாம் தமிழ தமிழாத்தான் படிப்போம் டமிழா படிக்க மாட்டோம்//

Reply

பொக்கிஷங்கங்கள் பேணிப் பாதுகாக்கப் பட வேண்டியவைகள் தான்...
அதற்கான சிறு முயற்சியாக இது அமைந்தால் சந்தோஷம்

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ

Reply

karrrrrrrrrrrr for medam:).

Reply

இவ்வளவு விஷயத்தைச் சொல்லிப்போட்டு ஆரிட்டயும் சொல்லாதேங்கோ எண்டால் எப்பிடியப்பு.நெஞ்சு வெடிச்சுப்போடும்.எல்லாரிட்டயும் இண்டைக்கே சொல்லி வைக்கிறன் !

Reply

Post a Comment