Looking For Anything Specific?

ads header

ஒரு பிரபலத்தின் பரிதாப இறுதி நாட்கள்...

இந்தப் பிரபலத்தைப் பற்றி நான் அப்போது பெரிதாக அறிந்திருக்கவில்லை. இவரைப் பற்றிய எனது தேடலை  ஊக்கப்படுத்தியது இவருடைய மரணம் என்று தான் சொல்லவேண்டும்.
அந்தளவுக்கு மரணத்தின் பின் பெரிதும் பேசப்பட்ட பிரபலம்தான் இவர்.

இவர் மரணிக்கும் போது நான் சிறியவன். பின்வந்த நாட்களில் இவருடைய மரணமும் சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு முறை என்னுடைய பாடப் புத்தகத்தில் எயிட்ஸ் நோயாளி ஒருவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கொண்ட கட்டுரையொன்றினை வாசிக்கக் கிடைத்தது. அதன் பின் இவர் மேலான மரியாதை இன்னும் அதிகமாயிற்று.

என் மரியாதை தான் அதிமாயிற்று என்று நினைத்திருந்தேன் இவர் மரணித்த தினத்தை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவு கூறும் போது உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களுடைய உள்ளங்களையும் அள்ளிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.மிக இலகுவாக உலகில் இருக்கக் கூடிய சாதாரண மக்களின் மனதினை மட்டுமல்லாமல் உலகின் பல பிரபலங்களின் உள்ளங்களையும் கொள்ளையிட்டுள்ளார் என்பது பின்னர் நான் பார்த்த அவருடைய இறுதி ஊர்வல காணொளியின் மூலம் புலனானது.

இளவரசிதான் ஆனால் எங்கள் பக்கத்து வீட்டு பெண் என்று சொல்லுமளவுக்கு மிக எளிமையாக எல்லோரிடத்திலும் பழகியமைதான் அவரின் இழப்பின் பின்னும் அவரை மக்கள் மறக்காமல் இருப்பதற்கு காரணம் என்று கூட சொல்லலாம்.

ஒரு பாலர் பாடசாலையை நோக்கியவாறு புகைப்படக் கருவிகளுடன் தொலைக் காட்சி மற்றும் பத்திரிகை நிரூபர்களின் கூட்டம்

எதற்காக வந்திருக்கிறீர்கள் புகைப்படக் காரர்களை நோக்கிய பாடசாலை நிருவாகத்தின் கேள்வி...

உங்கள் பாடசாலையில் கடமைபுரியும் டயானாவைப் பார்க்க வந்திருக்கிறோம் தயவு செய்து அவரை வெளியில் வரச் சொல்லுங்கள் இது புகைப்படக் காரர்களின் பதில்...

நிருவாகத்தினர் அதிர்ச்சியில்.....

அரச குடும்பத்தில் இளவரசியாகவிருக்கும் டயானாவினை வெளியில் வரச் சொல்லுங்கள் இளவரசரும் அவரும் காதலிக்கிறார்கள் என்றது ஊடகக் கூட்டம்...

கையில் ஒரு சிறிய குழந்தையுடன் சிறியதொரு ஸ்கேர்ட் எந்த வித பரபரப்பும் இல்லாமல் வெளியில் வந்தார் இளவரசி...

புகைப்படக் கருவிகள் ஆசை தீர அவரை கண்ணடித்துக் கொண்டன... பின்னர் காதலன் தன் காதலியிடம் தன் காதலைச் சொல்ல அவள் செல்லுமிடமெல்லாம் அலைந்து திரிவது போல் புகைப்படக் கருவிகளும் இளவரசியின் பின்னால் அலைந்துதிரிந்து கடைசியில் அவரின் இறப்புக்கும் அவைகளே காரணமாகிற்று...



டயானாவிற்கு இங்கிலாந்து அரச குடும்பம் புதிதல்ல... டயானாவின் இரண்டாவது அக்கா மகாராணியின் செயலாளரைத் தான் திருமணம் செய்திருந்தார். டயானாவின் அப்பாவோ அரச குடும்பத்தின் குதிரைகளைப் பராமரிப்பவராக இருந்தார். இதனால் அரச குடும்ப நிகழ்வுகளில் டயானாவும் பங்கு கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைத்தது. இவ்வாறான ஒரு விழாவிலே தான் சார்ள்சுக்கும் டயானாவுக்குமிடையினான காதல் உருவானது.

சார்ள்சின் பிடிவாத்துக்குப் பிறகு மகாராணியின் அனுமதியுடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் மூலம் பார்த்து ரசித்தார்கள்.

திருமண நிகழ்வின் போது


திருமணத்தின் பின்னும் அவர் தன்னுடைய வாழ்வை அரண்மனையுடன் சுருக்கிக் கொள்ளாமல் வழமை போன்று சாதாரண மக்களுடனும் அவர்களின் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டர் இதனால் இவருடைய புகழ் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது.

அரச குடும்பத்துப் புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் சாதாரணமாக ஊடகங்களில் வெளிவருவது மிகக் குறைவாக இருந்தது. ஆனால் இளவரசியின் வருகையின் பின் அரச குடும்பத்துச் செய்திகளே ஊடகங்களின் பிரதான செய்திகளாக இருந்தன.

ஒருமுறை மகாராணி அனைத்துப் ஊடகங்களினையும் அழைத்து இனிமேல் டயானா போகுமிடமெல்லாம் புகைப்படமெடுக்காதீர்கள் என்று கூட கூறியிருந்தார்.

திருமணமான அடுத்த வருடத்திலே மூத்த மகன் வில்லியம் அடுத்த இரண்டு வருடங்களின் பின் ஹென்றி பிறந்தார்கள்.

அரச குடுப்பத்தில் யாரும் பாடசாலைக்குச் சென்றதில்லை ஆசிரியர்களே அரண்மனைக்கு வந்து கற்பித்துக் கொடுப்பார்கள். ஆனால் டயானாவோ தன்னுடைய பிள்ளைகள் விடயத்தில் அவர்கள் பாடசாலை சென்று தான் கல்வி கற்கவேண்டும் எனும் விடயத்தில் உறுதியாக இருந்தார்.

குழந்தைகள் பிறந்ததிலிருந்து டயானா சார்ள்ஸ் இருவருக்குமிடையில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. பிரதான காரனமாக இக்காலப் பகுதியில் சார்ள்ஸ் கமிலாவுடன் கொண்டிருந்த திருட்டு உறவு டயானாவுக்கு தெரிய வந்தமையினையும் குறிப்பிடலாம்.

இதன் பின் இளவரசி தற்கொலைக்குக் கூட முயற்சி செய்துள்ளார். இதன் மூலம் சார்ள்ஸ் மீது அவர் கொண்டுள்ள அன்பு புனிதமானது என்பது புலனாகியது.

தன்னுடைய மனச் சுமைகளை மாகாரணியிடம் கூறி மன அழுத்தத்தைக் குறைந்துக் கொள்ளும் டயானா மீது மகாராணிக்கு மிகுந்த பாசமும் மரியாதையும் இருந்து வந்தது.

மேலும் பல சமூக நல நிறுவனங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் சென்று அங்கு சேவை செய்து தன்னுடைய மன வேதனைகளைக் குறைத்துக் கொண்டார் இளவரசி. நான் முன்னர் கூறியது போன்று எயிட்ஸ் நோயாளி ஒருவருடன் கைலாகு செய்தது போன்று எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அன்றை ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது.

சார்ள்ஸ் டாயானா இருவருக்குமான விரிசல் குறைந்ததாகவில்லை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர். இதில் இளவரசி சில அரண்மனை இரகசியங்களையும் வெளியிட்டார்.

நிலைமை மோசமாதைத் தொடர்ந்து மகாராணியின் தலையீட்டில் இருவருக்கும் விவாகரத்து இடம் பெற்றது. இவ்விடத்தில் இன்னுமொன்றும் சொல்லலாம் அதாவது இளவரசியாவதற்கு முன்பிருந்தே டயானாவிற்கு ஆடைகள் வாங்குவது பொழுது போக்காக இருந்தது. தன்னுடைய அப்பாவின் மூலம் பெறப்படும் காசுகளைக் கொண்டு விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார். இதனையே இளவரசியானபின்னும் அவர் தொடர்ந்தார்.

விவாகரத்தின் பின் தன்னுடைய விலையுயர்ந்த ஆடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தினையும் சமூக சேவைக்காக செலவிட்டார்.

ஏலத்தில் விடப்பட்ட ஆடைகள்


அரபுலகின் கோடிஸ்வரரான முகம்மது ஹல் என்பவரின் மகன் டோடி அல் பயாட் உடனான  தனிப்பட்ட தொடர்பு விவாகரத்தின் பின் டயானாவுக்கு பெரிதும் துணையாகவிருந்தது. இருவரும் மோதிரங்கள் மாற்றிக் கொண்டார்கள் திருமணம் செய்து கொள்வதற்காக. இந்த செய்தி கூட ஊடகங்களில் வெளியாகியது. இப்படி டயானாவின் வாழ்வில் ஒவ்வொரு விடயத்திலும் ஊடகங்கள் பெரிய பங்களிப்புச் செய்தது...

இறுதியாக அவருடைய இறப்பிற்கும் இந்த ஊடகங்களே காரணமாக அமைந்தது. டோடியும் டயானாவும் உணவகம் ஒன்றில் இருப்பதாக அறிந்த ஊடகத்தினர் அவர்களை தங்களுடைய புகைப்படக் கருவியினுள் எப்படியாவது உள்வாங்கிவிட வேண்டும் எனும் நப்பாசையில் அவர்களைத் தொடர...

ஊடகங்கள் தொடர்வதை அறிந்த டயானா காரனினை வேகமாகச் செலுத்த சாரதியைச் பணிக்க 150 கிலோமீற்றர் வேகத்தையும் தாண்டி  கார் பயணிக்க இறுதியில் விபத்துக்குள்ளாகி சாரதி டோடி டயானா மூன்று பேரும் மரணித்துப் போயினர்...:(

மரணிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன் டயானா டோடி


டயானாவிற்கு வைத்தியம் செய்த மருத்துவர்கள் தாதிகள் என அனைவரும் அலங்கோலமாய் உருமாரிக் கிடந்த டயானாவின் தோற்றத்தைப் பார்த்து அழுதேவிட்டனர்.

டயானாவின் இறப்பு விபத்துத் தான் என்று வெளியில் பேசப்பட்டாலும் அது ஒரு கொலை முயற்சி என்று கூட இன்று வரை ஒரு சிலரால் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது...

எது எவ்வாறாயினும் உலகத்தில் யாராலும் மறக்க முடியாத அளவுக்கு சேவைகள் செய்துள்ளார் என்பதற்கு அவர் இறந்த இன்றைய தினத்தில் அவர் கல்லறையில் வந்து விழும் கண்ணீர் துளிகளே சாட்சி...

கல்லறையில் அஞ்சலி செலுத்தும் போது

மேட்டர் ... இணைய இணைப்பின் குறைவான வேகம் காரணமாக சிலருடைய தளங்களிற்கு சென்றும் பின்னூட்டமிட முடியாமைக்கும் எனது பதிவுகளுக்கு இடப்படும் பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் எழுத முடியாமைக்கும் வருந்துகிறேன்...விரைவில் நிலைமை சரிவரும்

Post a Comment

29 Comments

  1. யாராலும் மறக்க முடியாதவர்...

    நீங்கள் சொன்னது போல் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்டவர்... ஆனால் அதனாலேயே இறந்த சம்பவம் வேதனைக்குரியது...

    ReplyDelete
  2. மறக்க முடியாத உலகமே அதிர்ந்த சம்பவம்....

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதிலே இருப்பவர் யார்... இவர்களை போன்றவர்கள் தான்... நல்ல பதிவு.. டயானா அனைவருக்கும் பிடித்தமான இளவரசி உண்மை தான்..

    ReplyDelete
  4. amazing persanaly Dayana.
    thanks chidukuruvi to post and share these..my passion lady....!

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு சிட்டு! டயானா இறந்தது இங்கு பாரிஸில் தானே! அவர் விபத்துக்கு உள்ளானா இடத்தை நான் பல முறை புகைப்படம் எடுத்துள்ளேன்! உங்களுக்கு போட்டோ வெண்டும் என்றால் சொல்லுங்கோ அனுப்புறன்!

    மேலும் அவர் விபத்துக்குள்ளான இடத்தின் கூகுள் மப் தேவை என்றால் ஃபேஸ்புக்கில் கேளுங்கோ அனுப்புறேன்!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. எனக்கும் பிடித்த இளவரசி டயானா! அவர் இறப்பு என்னையும் பாதித்தது அப்போது! என்னுடைய கைஎழுத்து பிரதியில் அஞ்சலி வெளியிட்டேன்! நல்ல உள்ளம் கொண்டவர் பற்றிய சிறப்பான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ருத்திராட்சம் சில தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_31.html

    ReplyDelete
  9. அருமை பாஸ் மீள நினைவுருத்திவிட்டிங்க .............எனது பதிவில் நீங்கள் இட்ட கருத்து மெயில் இல் வந்திருக்கு .நன்றி பாஸ் எதோ எங்கோயோ பிழை இருக்கு தேடிப்பார்க்கிறேன் .நன்றி பாஸ்

    ReplyDelete
  10. அருமையான மீள்நினைவுகளை கோர்வை படுத்தி உள்ளீர்கள்.. டயானா மக்களுக்கும் பிடித்த இளவரசியாக இருந்தார்..

    ReplyDelete
  11. ம் அவர் சாவைக்கூட நேரடி ஒளிபரப்பு செய்து சம்பாதித்தார்கள்.. :-((

    ReplyDelete
  12. டயானா,,, என்றைக்கும் இளவரசி!!

    ReplyDelete
  13. மறக்க முடியுமா?

    விரிவான நினைவூட்டளுக்கு மிக்க நன்றி குருவியாரே!

    ReplyDelete
  14. டயானா ஒரு தேவதை!ம்ம் அருமையான பகிர்வு சகோ!

    ReplyDelete
  15. நிறைய விடயங்கள் திரட்டி உள்ளீர்கள் நண்பா.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. i guess cheating on your huband and having a boy from thatis famous then this artickle is amazing

    ReplyDelete
  17. பொது சேவையில் அதிக கவனம் எடுத்தவர்.

    ReplyDelete
  18. எப்பவுமே மனம் நெகிழும் டயானாவை நினைத்தால்.தங்களின் கௌரவதுக்காகக் கொன்றுவிட்டு நல்லாத்தானே இருக்கிறார்கள் !

    ReplyDelete
  19. இது வரை நான் எந்த பதிவையும் முழுவதும் படித்தது இல்லை இந்த பதிவை தவிர டயனா பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் இன்று தான் முழுவதும் அறிந்து கொண்டேன் (எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பது முக்கியம் அல்ல எப்படி வாழ்ந்தோம் என்பது தான் வாழ்கை )பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  20. பெரும் புகழோடு வாழ்ந்தவர்

    ReplyDelete
  21. @ திண்டுக்கல் தனபாலன்
    @ கவிதை வீதி... // சௌந்தர் //
    @ Ayesha Farook
    @ மாத்தியோசி - மணி
    @ s suresh
    @ நெற்கொழுதாசன்
    @ காட்டான்
    @ Riyas
    @ வரலாற்று சுவடுகள்
    @ தனிமரம்
    @ ஹாரி பாட்டர்
    @ சுவனப் பிரியன்
    @ ஹேமா
    @ asa asath

    அனைவரும் தங்களது எண்ணங்களை பதிந்து சென்றமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

    ReplyDelete
  22. @ glynee

    உங்கள் முதல் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

    ReplyDelete
  23. @ பழூர் கார்த்தி

    மிகவும் அழகான கருத்திட்டுச் சென்றமைக்கு மிக்க நன்றி சகோ..
    உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

    ReplyDelete
  24. @ Anonymous

    மிக்க நன்றி முகம் தெரியாத உறவே......

    ReplyDelete
  25. @ Prem Kumar.s

    உங்கள் பின்னூட்டம் கண்டதில் மிக்க சந்தோஷம் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும்

    ReplyDelete
  26. டயானா பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், தங்கள் தளம் மூலம் அதிகம் அறிந்து கொண்டேன்... நன்றி நண்பா. தொடருங்கள்...

    ReplyDelete
  27. @ இரவின் புன்னகை

    டயானா பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், தங்கள் தளம் மூலம் அதிகம் அறிந்து கொண்டேன்... நன்றி நண்பா. தொடருங்கள்...

    //////////////////////////////////////

    வருகைக்கும் எண்ணத்தைப் பதிந்து சென்றமைக்கும் மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  28. nice.......
    avarukku maranamum oru address dhan......

    ReplyDelete
  29. nice.......
    avarukku maranamum oru address dhan......

    ReplyDelete