காதல்களின் காதல்...!மஞ்சள் நிறத்திலான காதல் எனை காதலிப்பதாக கிசுகிசுக்கள்
கிசுகிசுக்கள் எனை உயிர்ப்பித்தது போன்று உணர்கிறேன்
என் இதயத்தில் இனம்புரியாத மாறுதல்களும் பதட்டங்களும்
காண்பெதல்லாம் மஞ்சள் நிறத்திலே காண்கிறேன்...


காதல், என் மீது கொண்ட காதல், காதல்களின் வரலாற்றில்
என்றும் நிகழா அரிய நிகழ்வாம் காதல்களிடமிருந்து
கிடைத்த தகவல்களின் மூலம் புலனாகிறது தகவலின் பின்
என் உள்ளத்தில் காதலின் மீது எனக்கும் காதல் புலர்ந்தது

 காதல்களின் வாழ்வு மிக வியப்புக்குறியதாகும் (நண்பன் சொன்னது)
ஒருவர் மீது காதல் கொண்டால் என்றுமே மறவாதாம்
ஆனாலும் அவைகள் காதலிப்பதை காதலர்களிடமும் சொல்லாதாம்
காதல்களுக்குள் முடிவெடுத்த பின்புதான் மற்றவைகள்...

ஆனால் என் காதல் தொடர்பில் இவ் விதி பலனளிக்கவில்லை
என்னை காதலித்ததோ காதல்களின் இளவரசி,இளவரசியின்
 காதலுக்கு சில சலுகைகளை வழங்கியது காதலரசு 
இளவரசியின் விண்ணப்பம் கண்டு காதலுலகினுள் நுழைகிறேன்

எனைக் கண்ட இளவரசியின் கண்ணங்கள் வெட்கிச் சிவந்தன
முக்காட்டின் மூலம் முகத்தை மூடிக் கொள்கிறாள்...
சொல்லமுடியா இன்பம் என் நெஞ்சத்தினுள் வையகத்தினில் நானில்லை
அவளின் வெட்கத்திலே புரிகிறது அவளின் ஆழமான காதல்...

ராஜா எனையழைத்து பல உறுதிமொழிகள் சொல்லித் தந்து எனை
நிச்சயிக்கிறார் இளவரசிக்கு, எங்குமே மேளமும் இசையுமொலித்தது
காதலை கண்ணியப்படுத்தும் காதலர்களைக் கண்கிறேன் இங்கே
காதலர்களை உயிர்ப்பிக்கும் ராஜாவைக் காண்கிறேன் இங்கே

இவைகளை என் உலகில் எங்குமே நான் கண்டதில்லை எனக்கு
இவைகள் பிடித்துவிட்டன தீர்க்கமாய் முடிவெடுக்கிறேன் 
தூய காதலை தூய்மைப்படுத்தும் காதல் சுயநலவாதியாய்
 இனிமேல் இங்கேயே நான் தங்கிவிடுவதாய்...


22 கருத்துரைகள்

தூய காதலை தூய்மைப்படுத்தும் காதல் சுயநலவாதியாய்
இனிமேல் இங்கேயே நான் தங்கிவிடுவதாய்...
உயிர் கொடுக்கும் வரிகள்.

Reply

ada...Chidukuruvi......manchal kamalai varama pathukopa...

superma...treat onnu vaikalae...

eppa tamil font work panala.!apurama varan. c u

Reply

அமர்க்களம் நண்பரே... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

Reply

அருமை நண்பா....

தொடருங்கள்...

Reply

அருமையான படைப்பு! நன்றி!
இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

Reply

அப்பாடா...வந்துட்டன்...பாஸ் கவிதையெல்லாம் கலக்கலகா வருது.இடையிடை மஞ்சள் என்றீங்க கவனம் பாஸ்....காமாலை ஏதும் வராம பாத்துக்கப்பா!!

நல்லாருக்கு சிட்டுக்குருவி.!அப்பிடியே அவங்க கஐ◌ானாவில ஒரு வேல பாத்து குடுங்கப்பா..!

அருமை.சந்திப்போம்.

Reply

என்ன இப்பவெல்லாம் ஜிட்டுவுக்கு கவிதையா வருதே..

மஞ்சள் நிறக் காதலா?:)
இல்லையே சிவப்பா எல்லோ இருக்கு..

அழகான கவிதை ஜிட்டு, படமும் அழகு.

Reply

படைப்பும் படமும் பிரமாதம்

Reply

கவிதையிலும் கலக்குறீங்க நண்பரே! (TM 3)

Reply

@ Sasi Kala

தூய காதலை தூய்மைப்படுத்தும் காதல் சுயநலவாதியாய்
இனிமேல் இங்கேயே நான் தங்கிவிடுவதாய்...
உயிர் கொடுக்கும் வரிகள்.
///////////////////

முதல் வருகைக்கும் அழகான உற்சாகமூட்டம் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

@ Athisaya

ada...Chidukuruvi......manchal kamalai varama pathukopa...

superma...treat onnu vaikalae...

eppa tamil font work panala.!apurama varan. c u
////////////

ஹா ஹா மஞ்சள் காமாலையா... :) அட நம்மள விடமாட்டீங்க போல எப்படியோ சாகடிக்கனும் என்னுதான் சுத்தித் திரியிரீங்க...

ரீட்டா அப்பிடியெண்டா என்னாது...:0
.................................................

அப்பாடா...வந்துட்டன்...பாஸ் கவிதையெல்லாம் கலக்கலகா வருது.இடையிடை மஞ்சள் என்றீங்க கவனம் பாஸ்....காமாலை ஏதும் வராம பாத்துக்கப்பா!!

நல்லாருக்கு சிட்டுக்குருவி.!அப்பிடியே அவங்க கஐ◌ானாவில ஒரு வேல பாத்து குடுங்கப்பா..!

அருமை.சந்திப்போம்.
//////////////////////////////

கஜானாவுல வேலையா அதுக்கு நீங்க சைட்டால நம்மளையும் கவணிக்க வேனும் ...

அழகான கலக்கலான எண்ணப்பகிர்வுக்கு மிக்க நன்றி சந்திப்போம்

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

அமர்க்களம் நண்பரே... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)
////////////////////////////////

அழகான எண்ணக் பகிர்வுக்கும் வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பரே

Reply

@ இரவின் புன்னகை

அருமை நண்பா....

தொடருங்கள்...
////////////////////////
வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ s suresh

அருமையான படைப்பு! நன்றி!
//////////////////////

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

அழகான ஒரு காதல் கதை கேட்டதுபோல இருக்கு சிட்டு....இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாமோ !

Reply

அழகானதும் வித்தியாசமானதுமான காதல் கவிதை! நன்றாக இருந்தது சிட்டு! வாழ்த்துக்கள்!

Reply

ஒருவர் மீது காதல் கொண்டால் என்றுமே மறவாதாம் //////

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! இது உண்மையா சிட்டு? எனக்கு அப்படித் தோன்றவில்லையே?

Reply

@ athira

என்ன இப்பவெல்லாம் ஜிட்டுவுக்கு கவிதையா வருதே..

மஞ்சள் நிறக் காதலா?:)
இல்லையே சிவப்பா எல்லோ இருக்கு..

அழகான கவிதை ஜிட்டு, படமும் அழகு.
////////////////////////////////////

ஆமா கவிதையாத்தான் வருகுது ஜவ்வுல கிவ்வுல விழுந்துட்டேனோ தெரியல்ல.....

ஐயோ இது பழுத்த காதல் மஞ்சள் நிறத்திலதான் தெரியும்...சிவப்புல தெரிவது கொலைவெறிக்காதல்...

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி...தொடர்வோம்

Reply

@ கவி அழகன்

படைப்பும் படமும் பிரமாதம்
/////////////////////////////

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ...

Reply

@ வரலாற்று சுவடுகள்

கவிதையிலும் கலக்குறீங்க நண்பரே! (TM 3)
//////////////////////////////

வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ ஹேமா

அழகான ஒரு காதல் கதை கேட்டதுபோல இருக்கு சிட்டு....இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாமோ !
/////////////////////////////

உங்களைப் போன்ற கவிதைக் காரர்களின் ஆலோசனை எனக்கு மேலும் உற்சாகமூட்டுகிறது...

வருகைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி அக்கா

Reply

@ மாத்தியோசி - மணி

அழகானதும் வித்தியாசமானதுமான காதல் கவிதை! நன்றாக இருந்தது சிட்டு! வாழ்த்துக்கள்!
////////////////////////

தொடர்ச்சியான உங்கள் பின்னூட்டம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி....

மாத்தியோசி - மணிAugust 27, 2012 11:35 AM

ஒருவர் மீது காதல் கொண்டால் என்றுமே மறவாதாம் //////

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! இது உண்மையா சிட்டு? எனக்கு அப்படித் தோன்றவில்லையே?
///////////////////////////////////////

உங்கள் யாரு சொன்னா....:( நான் காதலைச் சொன்னேன் ...

வருகைக்குக் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மணியன்னே

Reply

Post a Comment