ஆஹா...! உலகத்துல இப்படியும் இருக்கா...?

மேற்கு அவுஸ்திரேலியாவில் Goldfields-Esperance எனும் பகுதியில் உலகத்திலே எங்கும் இல்லாத ஒரு வித புதுமையான ஏரி ஒன்று உள்ளது. சுமார் மூன்று கிலோ மீற்றர் அகலம் கொண்ட இந்த
ஏரியின் சிறப்பம்சம் என்னவெனில் ஏரி முழுவதும் இளஞ்சிவப்பு நீரினால் சூழப்பட்டு இருப்பதுவேயாகும்.

இதுல இன்னுமொரு முக்கிய விடயம் இருக்குது அதாவது இந்த ஏரி எப்போதுமே இளஞ்சிவப்பு நீரினைக் கொண்டிருப்பதில்லை.குறிப்பிட்ட சில காலத்துக்கு மட்டுமே அது இளஞ்சிப்பாக காட்சியளிக்கிறது. உவர் தன்மையின் அதிகளவான செறிவு மற்றும் அக்காலங்களில் அவ் ஏரியில் வளரக்கூடிய ஒரு வித பச்சை நிற பாசிகளின் பக்களிப்பு என்பவறின் காரணமாக இவ் ஏரி இவ்வாறு மாற்றமளிக்கிறது

அவுஸ்திரேலியாவில் இருக்கும் நண்பர்களே ஒரு முறை இங்கு சென்று பார்த்து புது வித அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மேட்டர் அண்மைய சில தினங்களாக மின்சாரப் பிரச்சனை மற்றும் இணைய இணைப்பின் குறைந்த வேகம் இன்னும் சில தனிப்பட்ட வேலைகளின்  காரணமாக சில நண்பர்களின் தளங்களுக்கு செல்லமுடியாமல் இருந்தமைக்கு வருந்துகிறேன். விரைவில் நிலைமை சரிவரும் அப்போது உங்களின் பக்கம் திரும்புகிறேன். அதற்காக என்னை மன்னிச்சூசூசூசூசூசூசூசூசூசூ..........


44 கருத்துரைகள்

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

Reply

புது வித தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி..
"விடை தேடும் காதல்" .......
காதலிக்கும் அனைவருக்காகவும்,காதலை நேசிப்பவருக்கும்...
காதலின் விடை தேடும் காதலி எழுதும் கவிதை இது....
உங்களை என் வலைக்கு அன்புடன் வரவேற்கிறேன்...

Reply

அசத்திட்டீங்க... பாராட்டுக்கள்... நன்றி...

Reply

அருமையான தகவல்! சிவப்பு ஏரி பார்க்கப் பார்க்க வியப்பா இருக்கு! பதிவைப் படிக்கும் போது, தலைப்பிலே என்ன சொல்லியிருக்கிறீர்களோ,அதே உணர்வுதான் எமக்கும் ஏற்படுகிறது!

Reply

பிங்கி பிங்கியா அழகா இருக்கு படமெல்லாம்.ஆனாலும் புதுசா இருக்கு.தெரியாத விஷயமும் கூட.நன்றி சிட்டு !

Reply

நல்ல தகவல் நண்பா, பகிர்வுக்கு நன்றி (TM 4)

Reply

சிட்டுக்குருவி எண்டு என்று சரியாத்தான்யா பேர் வச்சுருக்கீங்க......!எங்கப்பா புடிச்ச இந்த தகவல??ஃ??வாழ்த்துக்கள் சொந்தமே அருமை...!

Reply

படத்தில் பார்க்கவே எவ்வளவு அழகு!
நன்றி

Reply

அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்

Reply

அருமையான தகவல் பகிர்வு! அசத்தல்!

இன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

Reply

புதிய தகவல்... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

Reply

அழகான பதிவு.
குளுகுளுப்பாக இருந்தது...
நன்றிங்க சிட்டு.

Reply

@ திரட்டு.கொம்

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
/////////////////////////

நிச்சயமாக உங்களுடன் இணைந்து கொள்கிறேன் ஆலோசனைக்கு மிக்க நன்றி

Reply

@ Ayesha Farook

புது வித தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி..
///////////////////////

நல்லதொரு கருத்தினை சொல்லியுள்ளிர்கள் மிக்க நன்றி நிச்சயமாக உங்களின் தளம் வருகிறேன் இங்கீ இணைய இணைப்பு சற்று பிரச்சனையாக உள்ளது சீக்கிரம் வந்து விடுகிறேன்

Reply

@ திண்டுக்கல் தனபாலன்

அசத்திட்டீங்க... பாராட்டுக்கள்... நன்றி...
/////////////////////////

வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ கவிதை வீதி... // சௌந்தர் //

அற்புதம்...
///////////////////

ஒரே வார்த்தையில் அழமான கருத்தினை தெரிவித்து சென்றமைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ மாத்தியோசி - மணி

அருமையான தகவல்! சிவப்பு ஏரி பார்க்கப் பார்க்க வியப்பா இருக்கு! பதிவைப் படிக்கும் போது, தலைப்பிலே என்ன சொல்லியிருக்கிறீர்களோ,அதே உணர்வுதான் எமக்கும் ஏற்படுகிறது!
//////////////////////////

ஆய்........மணியன்ன நம்ம பக்கமெல்லாம் வந்திருக்கிறீங்க ரொம்ப சந்தோஷம்...

அப்புறம் இன்னைக்கு பிறந்த நாளாமே வாழ்த்துக்கள்...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணி அண்ணே

Reply

@ ஹேமா

பிங்கி பிங்கியா அழகா இருக்கு படமெல்லாம்.ஆனாலும் புதுசா இருக்கு.தெரியாத விஷயமும் கூட.நன்றி சிட்டு !
///////////////////////

சும்மாவா அவுஸ்திரேலியா போய் பிடிச்சுக்கொண்டு வந்த மேட்டரில்லோ இது...
சரி யாராச்சும் வீசா பணமாவது தாரீங்களா எவ்வளவு முக்கியமான விடயத்தை சொந்த பணத்தை செலவழிச்சி உங்களுக்கெல்லாம் சொல்லியிருக்கிறேன்..

அழகான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி அக்கா

Reply

@ கவி அழகன்

Aha alaku
Rammiyama irukku
/////////////////////

அழகான பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ...

Reply

@ வரலாற்று சுவடுகள்

நல்ல தகவல் நண்பா, பகிர்வுக்கு நன்றி (TM 4)
///////////////////
என்ன நண்பா நீங்க பதிவிடுகிற தகவல்களை விடவா வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி நண்பா

Reply

@ Athisaya

சிட்டுக்குருவி எண்டு என்று சரியாத்தான்யா பேர் வச்சுருக்கீங்க......!எங்கப்பா புடிச்ச இந்த தகவல??ஃ??வாழ்த்துக்கள் சொந்தமே அருமை...!
////////////////////////

ஆமாயில்ல...... எவ்வளவு கஷ்டப் பட்டு இந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கிறேன் என்று பாருங்க ஆவுஸ்திரேலியா பறந்து போய் கண்டு பிடிச்சி வந்திருக்கிறேன் ஒரே களைப்பாயிருக்கு... மாஸ்டர் ஒரு டீ

Reply

@ சென்னை பித்தன்

படத்தில் பார்க்கவே எவ்வளவு அழகு!
நன்றி
///////////////////////

வாங்க ஐயா உங்கள் பின்னூட்டம் காண்பதில் மிக்க சந்தோஷம் உங்களின் அழகான எண்ணப் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

Reply

@ இராஜராஜேஸ்வரி

அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்
/////////////////////

அடிக்கடியான உங்கள் பின்னூட்டம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி சகோ,,, அழகான எண்ணப் பகிர்வுக்கு மிக்க நன்றி

Reply

@ s suresh

அருமையான தகவல் பகிர்வு! அசத்தல்!
/////////////////

அழகான எண்ணப்பகிர்வுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்

Reply

@ HOTLINKSIN.COM திரட்டி

புதிய தகவல்... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
///////////////////

அடடா இது புதிய தகவலா நான் ரொம்ப பழசா இருக்குமோ என்னு பயந்துட்டேன்...
பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி

Reply

@ AROUNA SELVAME

அழகான பதிவு.
குளுகுளுப்பாக இருந்தது...
நன்றிங்க சிட்டு.
/////////////////////

ஐயோ ஏ சி ய off பண்ணிட்டு படியுங்கோ இல்லாட்டி அப்படியே உறைஞ்சு போயிடுவீங்க...

அழகான பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி

Reply
This comment has been removed by the author.

புதுமைத்தகவல் !ம்ம் படங்கள் அருமை.

Reply

ஆஹா சூப்பர்.. அருமையான தகவல்...

//அதற்காக என்னை மன்னிச்சூசூசூசூசூசூசூசூசூசூ..........//

ஏன் சூ சூ என்று விரட்டுறீங்க?:))

Reply

இப்படியான நிறங்களுடைய ஏரியகள் பல உலகெங்கும் உள்ளன - பிரான்சிலும் இப்படி ஒன்று இருக்கின்றது -

http://iqbalselvan.tumblr.com/post/29929487184/this-red-lake-in-camargue-france-caught

Reply

அன்புடன் சிட்டுக்குருவிக்கு!
நீங்கள் இட்டுள்ள மேற்கு அவுஸ்ரேலியாவில் Goldfields-Esperance உள்ள இந்த ஏரியை பற்றிய செய்தியைப் பார்த்ததும், எனக்கு இதைப் போல் வேறு எங்கோ பார்த்ததாக ஞாபகம் வந்தது. கூகிள் வரை பட உதவியுடன் தேடிய போது அவுஸ்ரேலியாவில் நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் இருக்கச் சாத்தியமிருக்கவில்லை.
பின்பு படங்களைத் தேடிய போது கடைசிக்கு முதல் படம் இந்த ஏரி ஒரு கடலோரம் உள்ளது.
அதைவைத்து தேடியபோது இது செனகலில் உள்ளது. தெளிவானது.
கடைசி இரண்டு படமும் செனகல் Rose lakeரோஸ் லேக்கின் படங்கள், அவுஸ்ரேலியாவில் பல ஏரிகள் உண்டு.
இப்படி ஒன்று ஒன்று நீங்கள் சொன்ன பகுதியில் உண்டா? தெளிவு படுத்தவும்.
கடைசி படத்துக்கு அப் படத்தைப் பிடித்தவர் விளக்கம்.
Lake Retba or Lac Rose lies north of the Cap Vert peninsula of Senegal, north east of Dakar. It is so named for its pink waters, caused by cyanobacteria in the water. The color is particularly visible during the dry season. The lake is also known for its high salt content, which, like that of the Dead Sea, allows people to float easily. The lake also has a small salt collecting industry and is often the finishing point of the Dakar Rally.
இக்பால் செல்வன் கூறுகிறார் பிரான்சிலும்camargue உள்ளதாக , இவை பொதுவாக கடும் வெய்யிலால் உப்பேரிகளின் உப்பில் செறிவு அதிகரிக்கும் போது இந்த நிறமாற்றம் உருவாகிறதாக இருக்கலாம்.
உப்பளங்களை அண்டிய பகுதிகளில் இருக்க வாய்ப்புண்டு.camargueல் உப்பளங்கள் உண்டு. அதன் காரணமாக இருக்கலாம்.

Reply

மேலும் தேடியபோது, இப்படி நீங்கள் கூறியது போல் அவுஸ்ரேலியாவிலும் உள்ளது. இக்பால் செல்வன் கூறியது போல் பல நாடுகளில் வரட்சி கூடிய ஏரிகளில் இந்த நிறம் வர வாய்ப்பு அதிகம் போலுள்ளது.

Reply

நல்ல பகிர்வு.

ஏனையோரின் விளக்கங்களும் அறிந்துகொண்டோம்.

Reply

@ தனிமரம்

புதுமைத்தகவல் !ம்ம் படங்கள் அருமை.
//////////////////////

தகவல் பற்றி அறிந்துகொள்ள நம்ம பக்கம் வந்தமைக்கும் அறிந்ததை சொல்லிச் சென்றமைக்கும் மிக்க நன்றி சகோ

Reply

@ athira

ஆஹா சூப்பர்.. அருமையான தகவல்...

//அதற்காக என்னை மன்னிச்சூசூசூசூசூசூசூசூசூசூ..........//

ஏன் சூ சூ என்று விரட்டுறீங்க?:))
//////////////////////////////////

அழகான எண்ணத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
சூ என்று விரட்டாவிட்டால் கொஞ்சப் பேர் நமக்கு ஆப்பு வைச்சிடுவாங்க எல்லாம் ஒரு முன்னேற்பாட்டுக்குத்தான்

Reply

@ இக்பால் செல்வன்

இப்படியான நிறங்களுடைய ஏரியகள் பல உலகெங்கும் உள்ளன - பிரான்சிலும் இப்படி ஒன்று இருக்கின்றது -
/////////////////////////

ம்ம்ம்ம்ம்ம்ம் புதுமையான தகவல் தான் நான் இணையத்தில் உலாவும் போது கண்களில் தென்பட்டவைதான் இவைகள் பல்வேறு இடங்களிலும் இருக்கலாம்.

ஆனால் இது எனக்குப் புதிது..

அழகாக எண்ணத்தை சொல்லிச் சென்றமைக்கு மிக்க நன்றி

Reply

@ ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி

அடடா....
/////////////////

அடடா... நான் ஏதும் தப்பு பண்ணி விட்டேனோ...?
சும்மா...:) நீண்ட இடைவெளியின் பின் உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க சந்தோசம்

Reply

@ யோகன் பாரிஸ்(Johan-Paris)

மேலும் தேடியபோது, இப்படி நீங்கள் கூறியது போல் அவுஸ்ரேலியாவிலும் உள்ளது. இக்பால் செல்வன் கூறியது போல் பல நாடுகளில் வரட்சி கூடிய ஏரிகளில் இந்த நிறம் வர வாய்ப்பு அதிகம் போலுள்ளது.
///////////////////////

அழகாக தெளிவாக உங்கள் கருத்தினை சொல்லிச் சென்றமைக்கு முதலில் நன்றிகள்...

நான் இணையத்தில் உலாவும் போது என் கண்களில் தென்பட்டவைகள் தான் அவைகள் அதனையே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் இக்பால் செல்வன் கூறியது போன்றும் நீங்கள் கூறியது போன்றும் இது பல இடங்களில் இருக்கலாம்...

ஆனால் எனக்கு இது புதிய விடயமாக தென்பட்டது அது பற்றி நான் மேலும் தேடவுமில்லை. இது பற்றிய உங்களின் கூகுள் தேடுதல் மிகவும் பிரயோசனமானது தான் சில வேலைகளில் கூகுளில் இவ்விடம் இணைக்கப் படாமல் இருக்கலாம்...

மேலும் செனகல் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது நானும் இது தொடர்பாக தேடிப் பார்க்கிறேன்

முதல் வருகை என நினைக்கிறேன் வருகைக்கும் அழகாக கருத்துனை எடுத்துச் சொன்னமைக்கும் மிக்க நன்றிகள் உங்கள் வருகை தொடர்ந்தால் இன்னும் சந்தோஷம்

Reply

@ மாதேவி

நல்ல பகிர்வு.

ஏனையோரின் விளக்கங்களும் அறிந்துகொண்டோம்.
//////////////////////
வருகைக்கும் எண்ணத்தை அழகாக பதிந்து சென்றமைக்கும் மிக்க நன்றி

Reply

புதிய தகவல்கள் மற்றும் அறியாத தகவல்களை படங்களுடன் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் நண்பா...

தொடருங்கள்...

Reply

Post a Comment